ரிசாட் புஹாரியை அடுத்த NPP சிராஜ் மசூரும் தூக்கி வீசப்பட்டாரா?
அக்கரைப்பற்று மாநகரசபை தேர்தலில் வட்டாரத்தில் போட்டியிட்டவர்களில் NPP கட்சி சார்பாக அதிக வாக்குகளை (622 வாக்குகள்) பெற்றவர் வேட்பாளர் சிராஜ் மசூர்.
அதிக வாக்குகளை பெற்ற சிராஜ் மசூர் போன்றோர் புறக்கணிக்கப்பட்டு குறைந்த வாக்குகளைப் பெற்று வட்டாரங்களில் படுதோல்வியடைந்த மக்கள் செல்வாக்கில்லாத வேட்பாளர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளதால் சிராஜ் மசூரின் ஆதரவாளர்கள் பலர் அக்கரைப்பற்று NPPயின் தீர்மானங்களுக்கு எதிராக அதிருப்தியான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிந்திய தகவல்களின்படி ருஸ்திக்காக குரல் கொடுத்ததனாலேயே சிராஜ் மஸுருக்கு ஆப்பு சொருகியுள்ளது NPP. என்கின்றனர் உண்மை விடயம் அறிந்தவர்கள்.
இவ்வாறே சம்மாந்துறையில் அதிக வாக்குகளை பெற்ற புகாரி ரிஷாட் ஏற்கனவே திட்டமிடப்படு புரக்கணிக்கப்பட்டுள்ளதால் அரசியல் செயற்பாட்டில் அதிருப்தியடைந்த அவர் அரசியல் செயற்பாடில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Boomudeen
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/4KNAbrT
via Kalasam
Comments
Post a Comment