SLMCயின் முதலமைச்சர் வேட்பாளராக அதாவுல்லாஹ்
நடைபெறப்போகும் மாகாண சபைத்தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லா களமிறங்கவுள்ளதாக தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் பீட உறுப்பினர்கள் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.
கடந்த வாரம் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பானது எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றியதானதெனவும் தெரிவித்தனர்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பொதுச்சின்னத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான முஸ்தீபுகள் இடம்பெறுவதாக அரசியல் பீட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ் எம்.எம். முஷாரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவது குறித்து பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் நம்பத் தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்குப் பலம் சரிவிலிருந்து பாராளுமன்றத் தேர்தலில் பின் உயர்வடைந்துள்ளது. அதுவேளை,நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் முஸ்லிம் கட்சிகளின் வாக்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Ofj1p7h
via Kalasam
Comments
Post a Comment