நிந்தவூரில் நடந்த கேவலமான அரசியல்! ரவூப் ஹக்கீமின் நடவடிக்கைக்கு விமர்சனம்
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பிரதேச சபையில், பெரும்பான்மை உறுப்பினர்களை பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் 01 ஆசனத்தோடு ஆட்சியமைக்க இருந்த நிலையில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சபையை கையகப்படுத்திக்கொள்ளும் நோக்கில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஒரு உறுப்பினருக்கு தவிசாளர் ஆசை காட்டி, தம் வசப்படுத்தி, அந்த நபரை (அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்) தவிசாளராக்கிய கீழ்தர அரசியல் கலச்சாரம் ஒன்றை அரங்கேற்றிய சம்பவம் நிந்தவூர் பிரதேச சபையில் அரங்கேறியுள்ளது.
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகள், இன்று (02) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.
இத்தெரிவின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் அஸ்பர் தவிசாளராகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இர்பான் உப தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நிந்தவூர் பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது 06 உறுப்பினர்களைக் கொண்டிருந்த நிலையில், 04 உறுப்பினர்களை மாத்திரம் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினரான அஸ்பருக்கு தவிசாளர் ஆசை காட்டி, அவரை கையக்கப்படுத்தி, அவரை தவிசாளராக்கி தங்களின் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், இதனூடாக தவிசாளர் பதவிக்கு தகுதியான ஒருவர் தமது மு.கா கட்சிக்குள் இல்லாத நிலையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
அண்மைக்காலமாக, நிந்தவூர் பிரதேசத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்துவரும் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸை வீழ்த்துவதற்காக கடும் பிரயத்தனம் எடுத்து வந்த நிலையில், மக்கள் காங்கிரஸின் நீண்டகால போராளி அஸ்பர் சிக்கிக்கொண்டதுடன், முஸ்லிம் காங்கிரஸ் தனது தில்லுமுல்லு அரசியலை தொடர்ந்தும் வெளிப்படுத்தியுள்ளது.
இதற்கு உடந்தையையாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமும், பாராளுமன்ற உறுப்பினர்களான உதுமாலெப்பையும், ஹிஸ்புல்லாஹ்வும் செயற்பட்டாதாக தெரியவருவதுடன், எதிர்கால சந்ததியினருக்கான நல்ல அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும் தகுதியை முஸ்லிம் காங்கிரஸ் இழந்து நிற்கின்றது.
ஏலவே, இதே போன்றதொரு சம்பவத்தை, ஹிஸ்புல்லாஹ் தலைமையில் ஓட்டமாவடியிலும் அரங்கேற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/EIFi5SO
via Kalasam
Comments
Post a Comment