Posts

ரணில் விக்ரமசிங்ஹவின் மனம் வேதனைப்படும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கோருகிறேன் ; ஜனாதிபதி

Image
  பெரும்பாலான கட்சிகள் நிராகரித்த சூழ்நிலையில், நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்வதற்காகவே தான் சர்வகட்சி மாநாட்டிற்கு சமூகமளித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு கடந்த அரசாங்கமே காரணம் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மாநாடு ஆரம்பத்திலேயே குற்றஞ்சுமத்தியதாக கூறிய ரணில் விக்ரமசிங்க, அதற்கு தான் முன்னரே உரிய பதிலை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இதன்போது குறுக்கிட்டு பேசிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மனம் வேதனைப்படும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருக்குமானால் தான் மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/MN13VJ9 via Kalasam

எதிர்காலத்தில் சந்தை தேவைக்கு ஏற்ப முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்க முடியாது- கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம்

Image
எதிர்காலத்தில் சந்தை தேவைக்கு ஏற்ப முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்க முடியாது என அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கால்நடை உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்புக்கு காரணமாக உள்ளதாக  அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். தொழில்துறைக்கான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நீடித்தால் எதிர்காலத்தில் சந்தையின் தேவைக்கு ஏற்ப முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். /chat.whatsapp.com/Fq4TfCPtVKE5nGJCKsOvF8 from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/BRmKLJa via Kalasam

சர்வகட்சி மாநாட்டில் நல்லாட்சி அரசை விமர்சித்த அஜித் நிவாட் கப்ராலை கடுமையாக சாடிய ரணில்.

Image
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று கூடிய சர்வகட்சி மாநாட்டில் அரசியல் பேசியதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார். மாநாட்டில் உரையாற்றிய கப்ரால், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து அரசியல் கட்சிகளுக்கு விளக்கமளித்ததுடன், தற்போதைய நிலைமைக்கு முன்னாள் அரசாங்கம் மீது பழி சுமத்தியிருந்தார். கப்ராலின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இந்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, மாநாட்டில் அரசியல் பேசியதற்காக கப்ராலை கடுமையாக சாடினார். பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிக்கவே இந்த மாநாடு கூட்டப்பட்டதாக கூறியுள்ள முன்னாள் பிரதமர், இது பழி விளையாடும் இடம் அல்ல என்றார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், “முன்னாள் அரசாங்கத்தின் தவறுகளினால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது” என தனது உரையை ஆரம்பித்துள்ளமை வருத்தமளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். “முன்னாள் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு தெரியும். அரசியல் வேறுபாடுகளுக்காக மீண்டும் ஒருமுறை சண்டையிட்டு ஒருவரையொ...

PTAவை முழுமையாக நீக்க மக்கள் ஆணை அவசியம்

Image
பயங்கரவாத தடைச் சட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற திருத்தங்கள், மனித உரிமைகள் மற்றும் மனித சுதந்திரத்தை இது உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்றால் அதற்கு மக்கள் ஆணை அவசியம் என்றும் தெரிவித்தார். பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், பராளுமன்றத்தில் நேற்று (22) இடம்பெற்றது. அங்கு உரையாற்றியபோதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் எவரும் அநாவசியமாக கைதுசெய்யப்படக்கூடாது என ஜனாதிபதி பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 43 ஆண்டுகளாக இப்போதும் இந்த சட்டம் நடைமுறையிலுள்ள சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால் அதற்கு நீண்ட காலம் எடுக்கும், முதலில் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடம் மக்களின் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். சட்டத்தை முழுமையாக நீக்குவது என்றாலும் அதற்கு மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும...

இன்று இடம்பெறும் சர்வ கட்சி மாநாட்டில் ரிஷாட் பதியுதீனின் கட்சி கலந்து கொள்வதில்லை - ACMC

Image
ஊடகப்பிரிவு- இன்று இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகாரசபைக் கூட்டம் இடம்பெற்ற போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. Zoom தொழில்நுட்பத்தினூடாகவே இந்த அரசியல் அதிகாரசபைக் கூட்டம் இடம்பெற்றதாக கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், கடந்த காலங்களில் சர்வகட்சி மாநாட்டின் அவசியம் தொடர்பில் இந்த அரசாங்கத்திற்கு சிறுபான்மைக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுருத்தி வந்த போதும், இந்த அரசாங்கம் இது தொடர்பில் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அரசாங்கம் தன்னுடைய பிரச்சினைகளை இந்த சந்தர்ப்பத்தில் மூடி மறைத்துக்கொள்வதற்காகவே, இந்த சர்வகட்சி மாநாட்டை கூட்டுவதற்கு முனைந்திருப்பது தொடர்பிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது. அந்தவகையில் நாளைய சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/l6LyWUT via Kalasam

பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலம் நிறைவேறியது – பிள்ளையான், திலீபன் ஆதரவு !

Image
சிவநேசதுரை சந்திரகாந்தன், திலீபன் ஆகியோரின் ஆதரவுடன் பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேறியது. குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் நாடாளுமன்றில் கிடைத்தன. இதனை அடுத்து பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததுடன் அச்சட்டம் குறித்து இன்று நாடாளுமன்றில் கடும் அதிருப்தியும் வெளியிட்டன. இருப்பினும் குறித்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பங்குபற்றவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/zEHnfQK via Kalasam

இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள 3 ஒப்பந்தங்களை மக்களுக்கும் பாராளுமன்றத்துக்கும் அம்பலப்படுத்தவும் - எல்லே குணவன்ச தேரர்

Image
சொற்பத் தொகை பணத்துக்காக வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் வேறு மாகாணங்களிலுள்ள தேசிய வளங்களை கொள்ளையிடுவதற்கு அல்லது தாரை வார்ப்பதற்கான சதிகள், திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு தாம் தயார் என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு, தேரரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்தின் கடல் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியா இடையே கைச்சாத்திடப்படவுள்ள 3 ஒப்பந்தங்கள் தொடர்பில் உடனடியாக மக்களுக்கும் பாராளுமன்றத்துக்கும் அம்பலப்படுத்துமாறு எல்லே குணவன்ச தேரர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக இந்திய பத்திரிகை ஒன்றில் செய்தி வௌியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் பெறப்பட்ட போது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாகவும் இதுவரை நாட்டுகு அறிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இலங்கை – சீனா இடையே திடீரென வர்த்தக உடன்படிக்கையொன்று கைச்சாத்திட...