Posts

நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் அறிக்கைகளின் பக்கங்களை குறைக்க தீர்மானம்

Image
அமைச்சுக்கள், திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால், நாடாளுமன்றிற்கு முன்வைக்கவுள்ள அறிக்கைகளின் பக்கங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கடதாசி தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி செலவினம் அதகரித்துள்ளமையே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/V7yXJ9Q via Kalasam

எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் தலைக்கவசமொன்றை தீ மூட்டி வீசிய சம்பவம்

Image
தலைக்கவசமொன்றை தீ மூட்டி, அதனை எரிபொருள் நிலையத்தை நோக்கி வீசிய சம்பவமொன்று கந்தானையில் அமைந்துள்ள கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளும், எரிபொருள் நிலைய ஊழியர்களும் விரைந்து செயற்பட்டு தலைக்கவசத்தில் இருந்த தீயை அணைத்தனர். இதனால், அங்கு ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் கிடைத்ததன் பின்னர், மக்களுக்கு விநியோகிக்கும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்காக பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/vEZlAq7 via Kalasam

ஓகஸ்ட், டிசம்பர் பாடசாலை விடுமுறைகள் குறுகியதாக இருக்கும்- கல்வி அமைச்சர்

Image
விடுபட்ட பாடத்திட்டத்தை ஈடுசெய்யும் வகையில் ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுநோய் காலத்தில் இருந்த நிலைமையில் இருந்து இன்றைய நிலைமை வேறுபட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஆரம்ப தரங்களுக்கான ஆசிரியர்களுக்கு ஜூலை மற்றும் செப்டெம்பர் மாதங்களில் மேலதிக அமர்வுகள் இருக்கும் என்றும் உயர்தர மாணவர்களுக்கு செப்டெம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மேலதிக நிகழ்ச்சிகள் உட்பட மீட்டல் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். வார இறுதிக்குள் எரிபொருள் நெருக்கடி ஓரளவுக்குத் தீர்க்கப்படும் என கல்வி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/govuk3G via Kalasam

விசேட வர்த்தமானி அறிவிப்பு வௌியானது

Image
  பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  அத்துடன் அனைத்து மின்சார விநியோக சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3xhSNd4 via Kalasam

வெளிநாடு செல்லும் இலங்கைப் பெண்களின் குறைந்தபட்ச வயதை 21ஆக மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி!

Image
வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் இலங்கைப் பெண்களின் குறைந்தபட்ச வயதை 21 ஆக திருத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இலங்கைப் பெண்கள் வெளிநாடுகளில் வீட்டு வேலைகளில் ஈடுபடுவதற்கான தற்போதைய குறைந்தபட்ச வயதாக சவூதி அரேபியாவிற்கு 25 ஆகவும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு 23 ஆகவும் ஏனைய நாடுகளுக்கு 21ஆகவும் காண்படுகிறது. இந்த நிலையில், தொழிலாளர் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் வயது வரம்பை திருத்துவது குறித்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்க நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமைச்சர் தலைமையில் அமைச்சரவை உபகுழு ஜூன் 6ஆம் திகதி நியமிக்கப்பட்டது. குறித்த உபகுழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை கருத்திற்கொண்டு இலங்கைப் பெண்களை வெளிநாடுகளில் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவதற்கான ஆகக்குறைந்த வயதை 21ஆக மாற்றியமைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/sZ4EY7d via Kalasam

8 இலட்சம் முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்து

Image
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக 850,000 முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எரிபொருள் நெருக்கடிக்கு உடனடி தீர்வை முன்வைக்காவிட்டால் 3 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுடில் ஜயரூக் தெரிவித்துள்ளார். போதியளவு எரிபொருள் இல்லாததால் தங்கள் தொழிலை தொடரமுடியாத நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/hd7MeyV via Kalasam

இப்போதைக்கு எனக்கு எம்.பி பதவியோ, அமைச்சர் பதவியோ வேண்டாம்.. தம்மிக்க பெரேரா அறிவிப்பு.

Image
தனது நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தொடர அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை தாம் எம்.பியாகவோ அமைச்சராகவோ பதவிப் பிரமாணம் செய்யப் போவதில்லை என பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தம்மிக்க பெரேராவின் சட்டத்தரணி இன்று உயர் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவை நியமிப்பதற்கான வர்த்தமானி ஜூன் 10ஆம் திகதி வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தம்மிக்க பெரேராவின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தம்மிக்க பெரேராவின் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம் இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயலாகும் என்று கூறி இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/EXZpOAV via Kalasam