Posts

பேக்கரி உற்பத்திகளின் விலைகள் மேலும் அதிகரிக்குமா?

Image
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி இன்று முதல் அமுலுக்கு வரும் நிலையில், பேக்கரி உற்பத்திகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பாண் உள்ளிட்ட தமது உற்பத்திப் பொருட்களுக்கு புதிய வரி விதிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார். கோதுமை மாவுக்கு வரி விதிக்கப்படவுள்ளதுடன், பிரதான கோதுமை மா இறக்குமதியாளர்கள் தமது விலைகளை அதிகரித்தால் அது தானாகவே பேக்கரி தொழிலை பாதிக்கும். மேற்கூறிய அனைத்து காரணிகளின் விளைவாக பேக்கரி பொருட்களின் விலைகள் உயரும், ஆனால் அவை எந்த விகிதத்தில் அதிகரிக்கப்படும் என்பதை தீர்மானிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/r81b2Xe via Kalasam

காது சிகிச்சைக்காக சென்ற இளம் பெண் கையை இழந்த கொடுமை

Image
  பீகாரில் காது சிகிச்சைக்காக சென்ற இளம் பெண் ஒருவர் தவறான சிகிச்சையின் காரணமாக ஒரு கையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா, பீகாரில் பாட்னாவில் உள்ள மகாவீர் ஆரோக்கிய சன்ஸ்தானில் செவிலியர் ஒருவரின் அலட்சியத்தில் இளம்பெண் ஒருவரின் கை துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 11ம் திகதி காது அறுவை சிகிச்சைக்கு வந்த ரேகாவுக்கு நரம்புக்கு பதிலாக தமனியில் ஊசி போடப்பட்டது.  இதனால் ரேகாவின் கை மெதுவாக பச்சை நிறமாக மாற ஆரம்பித்தது. ரேகா உடனடியாக கையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் வலி குறித்து மருத்துவமனையில் புகார் அளித்தார்,  ஆனால் அந்த நேரத்தில் பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கவனம் செலுத்தவில்லை.  மாறாக அவரை மருத்துவமனையில் இருந்து வெளியேறுமாறு மிரட்டினர். தவறான சிகிச்சையின் காரணமாக ஒரு கையை அவர் இழந்தார். கையை இழந்தது மட்டுமின்றி, நவம்பரில் அவருக்கு நடக்கவிருந்த திருமணமும் நிறுத்தப்பட்டது.  இதனால், அவரது குடும்ப உறுப்பினர்கள் பொலிஸில் புகார் அளித்தனர்.  ஆனால், பொலிஸார் இதனை வழக்குப்பதிவு செ...

ஆப்கானில் தற்கொலைப்படைத் தாக்குதல்-19 பேர் பலி; 27 பேர் காயம்

Image
  ஆப்கானிஸ்தானின் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறுபான்மையினராகக் கருதப்படும் ஹசாராக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/pvME9Gn via Kalasam

கொட்டகலை – போகாவத்த மாணவி தாக்குதல் சம்பவம் – அதிபர் கைது

Image
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தவிடயம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் திம்புள்ள பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் தின நிகழ்வுக்காக தனது சகோதரன் 300 ரூபாய் செலுத்தவில்லை என தெரிவித்து, குறித்த அதிபர் மாணவியின் சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனையடுத்து “சேர் எனது சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்ட வேண்டாம் என்றும் தனது தந்தை அருகில் வேலை செய்வதால் அவரிமிருந்து பணத்தை வாங்கி தருவதாக” குறித்த மாணவி தெரிவித்துள்ளார். இதனையடுத்தே அதிபர் குறித்த மாணவியை பிரம்பால் அமானுஷ்யமாக தாக்கியதாகவும் இதனையடுத்து பாடசாலைக்கு அருகில் வேலை செய்துக்கொண்டிருந்த மாணவியின் தந்தை, மக...

நீதிமன்றம் சென்ற முன்னாள் ஜனாதிபதி!

Image
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை இடைநிறுத்துமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/bzPdTmL via Kalasam

39,896 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர்

Image
மஹேஸ்வரி விஜயனந்தன் 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மோசமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு 30,896 சிறுவர்கள் உள்ளாகியுள்ளனர் என தெரிவித்த முன்னாள் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி, நாளொன்று 8.7 சதவீதமான சிறுவர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர் என்றார். இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இன்று  (29)  “சிறுவர் வன்முறையை நிறுத்துங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இவை தவிர குழந்தைகயின் எதிர்காலம், பாடசாலை ,சிறுவர்கள் தமக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் குறித்து வெளி சொல்லாமை காரணமாக, அறிக்கையிடப்படாத சம்பவங்கள் இதனைவிட அதிகமாக இருக்கலாம் என்றார். இதற்கமையவே எப்பாவெல பிரதேசத்தில் பெற்ற தகப்பன் உள்ளிட்ட உறவினர்கள்  30 பேரால் தொடர்ச்சியாக 6 வருடங்கள்  சிறுமியொருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகத் தெரிவித்த அவர், 18,377பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டாலும்  இந்த 9 வருடங்கள...

அமெரிக்கா சென்ற பசிலுக்கு நேர்ந்த கதி!

Image
அமெரிக்கா சென்ற முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கையுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து விதமாக இலங்கை தொடர்பான செயற்பாடுகளையும் விட்டு விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது தொலைபேசி எண்ணை மாற்றி அமெரிக்காவில் தனியாக வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பசில் ராஜபக்சவுடன் நெருக்கமாக பணியாற்றுபவர்கள் கூட அவரைத் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபய ராஜபக்ச பதவியை விட்டு வெளியேறி புதிய ஜனாதிபதியை நியமித்ததன் மூலம் ராஜபக்ச குடும்பத்திலும், பசில் ராஜபக்சவின் கட்சியாக இருந்த பொதுஜன பெரமுனவிலும் சில நெருக்கடிகள் உருவாகியது. பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் பெற்றுக் கொடுப்பதற்காக பசில் ராஜபக்ச கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. தற்போதைய அமைச்சரவையில் பெரும்பான்மையானவர்கள் பசில் ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்கள் அல்ல. அமெரிக்கா செல்வதற்கு முன், பசிலும் மிக நெருக்கமான குழுவை அமைச்சரவையில் சேர்க்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்நிலைமையின் அடிப்படையில் க...