Posts

Showing posts from December, 2018

புத்தர் சிலை உடைப்பு : சிங்கள ஆர்ப்பாட்டவர்களை சந்தித்த முஸ்லிம்கள்

Image
மாவனெல்லையில் புத்தர் சிலை உடைப்புக்கு எதிராக, மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை சிங்கள அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன. எனினும் நீதிமன்றம் இதற்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தை, முன்நின்று நடாத்த ஏற்பாடு செய்திருந்த பௌத்த பிக்குவை முஸ்லிம்களில் ஒரு தரப்பினர் போய் சந்தித்துள்ளனர். இதையடுத்து இரு தரப்பாருக்கும் இடையில் ஓரளவு சமரசம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2Vlq4HW via Kalasam

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

றஸ்மின், ராசிக் பணதிற்காக பிரிந்தவர்கள் - BBS சந்திப்பு தொடர்பில் அசாத் சாலி

Image
பணத்திற்காக இயக்கங்களாக பிரிந்து சென்றவர்களே றஸ்மின் மற்றும் ராசிக் இவர்கள் எம்மை பற்றி விமர்சிப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை. புதிதாக பணத்தினை பிரித்துக்கொள்ள முடியாமல் மார்க்க அமைப்புக்களை உருவாக்கிய இவர்கள் பற்றி முழு இலங்கை முஸ்லிம்களுக்கும் நன்றாகவே தெரியும். இவர்களுக்கு பணம்கிடைத்தால் எப்படி ஆடுவார்கள், பணம் கிடைக்காவிட்டால் எப்படி ஆடுவார்கள் என மக்களுக்கு நன்றாகவே தெரியும் ஆகவே இவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டிய தேவை எனக்கில்லை. என அசாத் சாலி தெரிவித்தார்.  அண்மையில் பொதுபல சேனாவின் பொதுச் செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை சிறைச்சாலை சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டமை தொடர்பில் சிலோன் முஸ்லிம் இணையதளத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; நாங்கள் எந்த வேலையை எடுத்தாலும் அது இந்த நாட்டு முஸ்லிம்களின் நண்மைக்காவே செயற்படுவோம். பொதுபல சேனாவை நாங்கள் விமர்சித்து போல் வேறு எவறும் விமர்சிக்கவில்லை. பிற்பாடு நாங்களாகவே 05தடவைகள் சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் வீட்டில் ஞனசாரவை சந்தித்து இஸ்லாத்தை அவர் எவ்வாறு புரி

அட்டாளைச்சேனை பிரதேசசபையின் பிரதி தவிசாளர் பதவி விலகுகிறார்

ஒரு வருடம் கடப்பதற்குள் தற்போதைய அரசாங்கத்தை மாற்றியமைக்க முடியும்

Image
ஒரு வருடம் கடப்பதற்குள் தற்போதைய அரசாங்கத்தை மாற்றியமைக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  தற்காலத்தில் மக்கள் பல்வேறு சிக்கல்களுடன் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  மொரட்டுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2EKrPIv via Kalasam

கொலை சதி விபரம் வெளியானது : ஜனாதிபதி, கோட்டா தொடர்பில் தகவல் இல்லை

Image
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் தொடர்பிலான கொலை சதி முயற்சியை வெளிப்படுத்திய நாமல் குமார முன்வைத்த குரல் ஒலி பதிவுகளில் ஜனாதிபதியையோ வேறு நபர்களையோ கொலை செய்வது தொடர்பில் எந்தவித தகவல்களும் காணப்படவில்லையென தெரியவந்துள்ளது. சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூவரிடையே இடம்பெற்ற கலந்துரையாடல்களே அந்த குரல் பதிவுகளில் காணப்படுவதாக மேலதிக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. நாமல் குமாரவின் குரல் பல பதிவுகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பரிசோதிக்கப்பட்டதாகவும் இதனடிப்படையிலேயே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன. இதேவேளை, தனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை உறுப்பினர்களின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக நாமல் குமார நேற்று (23) அறிவித்திருந்தார். இருப்பினும், அவருக்கு எந்தவித எஸ்.டி.எப். பாதுகாப்பும் வழங்கப்பட்டிருக்க வில்லையென தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.  from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2EMOOU

கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் : வெள்ளம் காரணமாக 60,345 பேர் பாதிப்பு

Image
கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 60 ஆயிரத்து 345 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட மக்களுக்காக விரைவாக நிவாரணத்தை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். வெள்ள அனர்த்தம் நீங்கும் வகையில், அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  தேவையான நிதியை செயலாளர்களுக்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்டு அனைத்துப் பிரிவினருக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். கடந்த தினங்களில் 300 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழையின் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டள்ளது.  10 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. ஓரளவுக்கு சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 224 52 நலன்புரி நிலையங்களில் 3 ஆயிரத்து 332 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 332 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக ஆரம்ப கட்ட

இந்தோனேசியாவில் சுனாமி – 168 பேர் பலி

Image
இந்தோனேசியாவின் Sunda Strait சுற்றிய கடற்கரைகளைச் சுனாமி தாக்கியதில் குறைந்தது 168 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 165 காயமுற்றுள்ளதாகவும் அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. LINK: http://bit.ly/2T9aiOp from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2V5PIQH via Kalasam

முஸ்லிம்களுக்கு, UNF அரசில் நான்கு கேபினட், நான்கு இராஜாங்க அமைச்சு

Image
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நான்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் நான்கு இராஜாங்க அமைச்சர்களும் இதுவரையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், ரிஷாட் பத்தியுத்தீன், கபீர் ஹாஷிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். நேற்றிரவு ஜனாதிபதி வழங்கிய பிரதி, அமைச்சரவை அந்தஸ்தற்ற, இராஜாங்க அமைச்சர்களில் நான்கு பேர் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த வகையில், பைசல் காசிம் சுகாதார போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சராகவும், எச்.எம்.எம். ஹரீஸ் மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராகவும், அமீர் அலி விவசாய, நீர்ப்பாசன, கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சராகவும், அலி சாஹிர் மௌலானா சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராகவும் நியமனம் பெற்றுள்ளனர். குறைந்த அமைச்சுக்களுக்கு மத்தியில் பெற்றுள்ள இந்தப் பதவிகள் ஓர் அமானிதம் என்ற உணர்வுடனும

சாய்ந்தமருது - மாளிகைக்காடு சுயேற்சை அணியினரின் பகிரங்க அறிக்கை

ஒரே நாளில் மூன்று தேர்தலை நடாத்த வேண்டிவரும் :அமைச்சர் வஜிர அபேவர்தன

Image
நாட்டிலுள்ள சகல மாகாண சபைகளினதும் தேர்தலை ஒரே நாளில் நடாத்த எதிர்பார்த்துள்ளதாக மாகாண சபைகள் மற்று உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை வெவ்வேறு தினங்களில் நடாத்தி அரசாங்கத்தின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து அதிக செலவை ஏற்படுத்தும் முறைமையை இல்லாதொழிக்க வேண்டும். இதற்கு முன்னைய அரசாங்கங்கள் இதனைத் தான் செய்தன. இந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை மாத்திரமல்ல, முடியுமானால் ஜனாதிபதித் தேர்தலையும், பொதுத் தேர்தலையும் கூட ஒரே தினத்தில் நடாத்த நடவடிக்கை எடுக்கும். இதனால், நாட்டுக்கு ஏற்படும் செலவும் குறைகின்றது. நாம் இந்த இடத்துக்கே வர வேண்டியுள்ளோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். அமைச்சின் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2EDCW66 via Kalasam

பாபரி மஸ்ஜிதை தகர்த்த முதல் நபர் இன்று 100 பள்ளிகளை நிர்மாணிக்கிறார் ALLAHU AKBER

Image
Q உங்­களைப் பற்­றியும் உங்­க­ளது குடும்பம் பற்­றியும் தெரிந்து கொள்ள முடி­யுமா? நான் மொஹமட் ஆமிர் (பல்பிர் சிங்). 1970 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி ராஜ்புத் பரம்­ப­ரையில் பிறந்தேன். ஹரி­யானா மாநி­லத்தின் பனிபட் மாவட்­டத்தில் உள்ள ஒரு கிரா­மமே என்­னு­டைய ஊர் ஆகும். எனது தந்தை ஒரு வள­மான விவ­சாயி. அத்­துடன் ஒரு ஆரம்பப் பாட­சா­லையின் தலைமை ஆசி­ரி­யரும் கூட. எப்­போதும் அநீ­திக்கும் கொடுங்­கோண்­மைக்கும் கடும் எதிர்ப்பு தெரி­விக்கும் அவர் மனித நேயப் பண்பு கொண்ட மிகச்­சி­றந்த மனிதர் ஆவார். 1947 ஆம் ஆண்டு தேசிய ரீதி­யாக களங்­கத்தை ஏற்­ப­டுத்­திய பயங்­க­ர­மான கல­வரம் ஒன்றை அவர் கண்டார். பெருந்­தொ­கை­யான முஸ்­லிம்கள் அதில் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள். அந்­நேரம் மனம் கலங்­கிய எனது தந்தை முஸ்­லிம்­க­ளு­டைய புனர்­வாழ்­வுக்­காக வேண்டி உதவ முன்­வந்தார். தனது பாட­சா­லை­யி­லுள்ள முஸ்லிம் சிறு­வர்கள் கல்­வியை நோக்கி பய­ணிக்க முக்­கிய கவனம் செலுத்­தி­ய­தோடு விஷேட சலு­கை­க­ளையும் வழங்­கினார். என்­னு­டைய பாட­சாலைக் கல்­வியின் பின்னர் பனி­பட்டின் இடை­நிலைக் கல்­லூ­ரி­யொன்றில் அனு­மதி பெ

SLMCயை, தேசிய அரசாங்கமாக கணக்கிலெடுத்து அரசியலமைப்பை மீறிய ரணில்

Image
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசமைப்பை மீறிவிட்டார் என குற்றஞ்சாட்டிய ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எம்.பி., அமைச்சரவையில் அங்கம் வகிக்கவேண்டியவர்களின் எண்ணிக்கை 30 ஆகும் எனும், 35 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலே ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலை அம்பலப்படுத்துமாறு அப்போது கோரிநின்றார். நாடாளுமன்றத்தில்  நேற்று நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை, தேசிய அரசாங்கமாக கணக்கிலெடுத்தே, அரசமைப்பை பிரதமரும் மீறியுள்ளார். அரசமைப்பை பாதுகாப்பதற்காக நாங்கள் கடந்த சில நாள்களாக பல்வேறான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2Semqxj via Kalasam

ஜனாதிபதியினால் ஒரே ஒரு முஸ்லிம் செயலாளர் நியமனம் :நிறைவேற்று அதிகாரம்

Image
புதிய அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (21) மாலை நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியினால் 30 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வகையில் தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சுக்கு திருமதி எஸ்.எம். முஹம்மத் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகின்றது. சகல அமைச்சுக்களின் செயற்பாடுகளும் ஜனாதிபதியினூடாக இடம்பெறச் செய்வதற்கே இந்த ஏற்பாடாகும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களுள் இதுவும் ஒன்றாக கருதப்படுகின்றது. சகல அமைச்சுக்களுக்கும் நேரடியாக செயலாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டுள்ளார். செயலாளர்களின் இறுதி ஒப்பத்துடனேயே அமைச்சுக்களின் அத்தனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2A8upoz via Kalasam

எனது முதற்­பணி ஹஜ்­கோட்­டாவை அதி­க­ரிப்பதே - ஹலீம்

Image
எனது முதற்­பணி அடுத்த வரு­டத்­துக்­கான ஹஜ்­கோட்­டாவை அதி­க­ரித்­துப்­பெற்றுக் கொள்­வ­தாகும். சவூதி ஹஜ் அமைச்சு அடுத்த வரு­டத்­துக்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு அழைப்பு விடுத்­துள்­ளது. எதிர்­வரும் 27 ஆம் திகதி மக்­காவில் நடை­பெ­ற­வுள்ள இக்­க­லந்­து­ரை­யா­டலில் ஹஜ் கோட்டா அதி­க­ரிப்பை வலி­யு­றுத்­துவேன் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­ச­ராக மீண்டும் பத­வி­யேற்­றுள்ள அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில் முஸ்லிம் சமய விவ­கா­ரங்கள் கடந்த இரண்டு மாதங்­க­ளாகத் தடைப்­பட்­டி­ருந்­தன. ஹஜ் ஏற்­பா­டு­க­ளிலும் தாம­தங்கள் நில­வின. ஜன­நா­ய­கத்­துக்கு கிடைத்த வெற்றி அல்­லாஹ்வின் ஏற்­பா­டாகும். ஏற்­க­னவே திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த ஹஜ் விவ­கா­ரங்­க­ளுக்கு ஒரு புதிய சட்­ட­மூலம் மற்றும் வக்பு சட்­டத்தில் திருத்­தங்கள் என்­பன துள­ள­ரி­தப்­ப­டுத்­தப்­படும். ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டு­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய அனை­வ­ருக்கும் நன்­றி­களைத் தெரி­வித்துக் கொள்­கிறேன் என்றார். அமைச்சர் ஹலீம் தனது

ரிசாத்தின் அமைச்சு இடம் பெயர்ந்த முஸ்­லிம்­க­ளுக்கு வரப்­பி­ர­சா­த­மாகும்

Image
ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் இணைந்து நீண்­ட­காலம் இடம் பெயர்ந்தோர் மீள்­கு­டி­யேற்றம் என்றோர் அமைச்சை உரு­வாக்­கி­யி­ருப்­பது 1990 களில் இடம் பெயர்ந்த முஸ்­லிம்­க­ளுக்கு கிடைத்­துள்ள வரப்­பி­ர­சா­த­மாகும். அவர்­க­ளது மீள்­கு­டி­யேற்­றத்­தி­லுள்ள தடைகள் அனைத்தும் துரி­த­க­தியில் நிவர்த்தி செய்­யப்­படும் என புதி­தாக அமைச்சுப் பத­வியைப் பொறுப்­பேற்­றுள்ள அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிசாத்­ப­தி­யுதீன் தெரி­வித்தார். புதிய அமைச்­சுப்­ப­தவி தொடர்பில் வின­வி­ய­போதே அவர் விடி­வெள்­ளிக்கு இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் நீண்­ட­கா­ல­மாக இடம் பெயர்ந்­துள்ள முஸ்­லிம்­களை மீள் குடி­யேற்­று­வ­தற்­காக நான் முன்பு அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினைச் சமர்ப்­பித்­தி­ருந்தேன். அதற்­கி­ணங்க மீள்­கு­டி­யேற்றச் செய­லணி ஒன்று நிறு­வப்­பட்­டது. அதன் இணைத்­த­லை­வர்­க­ளாக நான் உட்­பட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பைசர் முஸ்­தபா, துமிந்த திசா­நா­யக்க மற்றும் சுவா­மி­நாதன் ஆகியோர் செயற்­பட்டோம். தற்­போது நீண்­ட­காலம் இடம் பெயர்ந்­தோர்­களை மீள்­கு­டி­யேற்­று­வ­தற்­

மகிந்தவை விரட்ட ஹக்கீம், சுமந்திரன் தீவிரம்- பந்துல

Image
மஹிந்த ராஜபக் ஷவை பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து நீக்க சுமந்­திரன், ஹக்கீம் முயற்­சிக்­கின்­றனர். இவர்­களின் இன­வாத நட­வ­டிக்கை நாட்டின் நல்­லி­ணக்கம் மற்றும் அமை­திக்கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­விடும் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்தார். கொழும்பில் அமைந்­துள்ள ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சுதந்­திர ஊடக கேந்­திர நிலை­யத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், 2015ஆம் ஆண்டு பொதுத்­தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் போட்­டி­யிட்ட அனை­வரும் தொடர்ந்தும் அந்தக் கூட்­டணில் இருக்­கின்­றனர். எவரும் அதி­லி­ருந்து விலக்­கப்­ப­டவோ நீக்­கப்­ப­டவோ இல்லை. அத்­துடன் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக் ஷ உட்­பட அனை­வரும் இன்னும் கட்சி அங்­கத்­துவ கட்­ட­ண­மான 3ஆயிரம் ரூபாவை செலுத்தி வரு­கின்­றனர். அத்­துடன் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்­சியில் அங்­கத்­துவம் பெற்­ற­தாக தெரி­வித்து ம

The wire cutter

The wire cutter

அலி சாகிர் மெளலானா சமூக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.

Image
புதிய அரசாங்கத்தில் மேலும் பல பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் இன்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தற்பொழுது சத்தியப்பிரமாணம் செய்து கொள்கின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மெளலானா  சமூக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2Lt7MQh via Kalasam

இராஜாங்க அமைச்சர் அமீர் அலி;விவசாயம் கிராமிய பொருளாதார அலுவல்கள்.....

Image
புதிய அரசாங்கத்தில் மேலும் பல பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் இன்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தற்பொழுது சத்தியப்பிரமாணம் செய்து கொள்கின்றனர். அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அமீர் அலி  விவசாயம் கிராமிய பொருளாதார அலுவல்கள் கால்நடைகள் மேம்பாடு நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார். M.S. Ameer Ali - State Minister of Agriculture, Rural Economic Affairs, Livestock Development, Irrigation and Fisheries & Aquatic Resources Development. #lka — SRILANKA News 🇱🇰 (@CeylonMuslim) December 21, 2018 from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2rOwHVl via Kalasam

ஹரீஸ் : இராஜாங்க உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக பதவியேற்றார்.

Image
புதிய அரசாங்கத்தில் மேலும் பல பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் இன்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தற்பொழுது சத்தியப்பிரமாணம் செய்து கொள்கின்றனர். இதில்  முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க  அமைச்சராக பதவியேற்றார். CORRECTION: JC Alawathuwaya - State Minister for Home affaires #lka #SriLanka #SLMC MP H.M.M. Harres - State Minister of Local Government and Provincial Councils #lka #SriLanka — SRILANKA News 🇱🇰 (@CeylonMuslim) December 21, 2018 from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2LBdoZ3 via Kalasam

பைசல் காசீம் இராஜாங்க சுகாதார அமைச்சராக பதையேற்றார்.

Image
புதிய அரசாங்கத்தில் மேலும் பல பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் இன்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தற்பொழுது சத்தியப்பிரமாணம் செய்து கொள்கின்றனர். இதில்  முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம் இராஜாங்க சுகாதார அமைச்சராக பதையேற்றார்.  from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2BDKjr0 via Kalasam

இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்னும் சில நேரத்தில்

Image
புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் இன்னும் சில நேரத்தில்  சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்ஹேரிஸ் டி சில்வா தனதுடுவிட்டர் தளத்தில் உறுதிப்படுதினார்  புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் 28 பேர் நேற்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2CrmpAF via Kalasam

The wire cutter

The wire cutter

The wire cutter

புதிய அமைச்சரவை விபரம்!

Image
ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் புதிய அரசாங்கத்திற்கான அமைச்சுப் பதவிகள் இன்று (20) காலை வழங்கப்பட்டன.  ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.  அதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு,  பிரதமர் ரணில் விக்ரமசிங்க - தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்  ஜோன் அமரதுங்க - சுற்றுலாத் துறை, வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்துவ மத விவகார அமைச்சர்  காமினி ஜயவிக்ரம பெரேரா - புத்த சாசனம் மற்றும் வட மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்  மங்கள சமரவீர - நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்  லக்ஷ்மன் கிரியெல்ல - பொது முயற்சியான்மை, மலைநாட்டுப் பாரம்பரியம் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்  ரவூப் ஹக்கீம் - நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் திலக் மாரப்பன - வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சர்  ராஜித சேனாரத்ன - சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்  ரவி கருணாநாயக்க - மின் சக

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

நாமலின் தொலைபேசியில் அழிக்கப்பட்டவை எடுக்க சென்ற குழு நாடு திரும்பியது!

Image
நாமல் குமாரவின் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை மீள பெற்றுக்கொள்வதற்காக ஹொங்கொங் நோக்கி சென்ற குழுவினர் கடந்த 14 ஆம் திகதி இலங்கைக்கு திரும்பி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  கடந்த 8 ஆம் திகதி இரவு குறித்த மூவரடங்கிய குழுவினர் ஹொங்கொங் நோக்கி சென்றிருந்தனர்.  இந்த குழுவில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட அரச இராசயன பகுப்பாய்வாளர் ஒருவரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்டிருந்த பல்வேறு ஒலிப்பதிவுகள் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  குறித்த ஒலிப்பதிவுகள் அடங்கிய பென் டிரைவ் (Pen Drive) இன்று (19) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறித்த ஒலிப்பதிவுகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2SSzoAW via Kalasam

அமைச்சு பதவி இல்லாவிட்டாலும், நாம் ரணில் அரசுக்கே ஆதரவு - ஹக்கீம்

பொன்சேகாவுக்கு அமைச்சு இல்லை - உறுதியாக ஜனாதிபதி

Image
முன்னாள் இராணுவதளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகாவிற்கு அமைச்சர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன அரசியல் நெருக்கடி ஆரம்பமானதன் பின்னர் சரத்பொன்சேகா தனது நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார் என்பதை காரணம் காட்டி சிறிசேன சரத்பொன்சேகாவை அமைச்சராக நியமிக்க மறுக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன ஜனாதிபதியிடம் ஐக்கிய தேசிய முன்னணி சமர்ப்பித்துள்ள அமைச்சர்கள் பட்டியலில் சரத்பொன்சேகாவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இந்நிலையிலேயே சிறிசேன அதனை நிராகரித்துள்ளார்.எனினும் ஐக்கியதேசிய கட்சி சிறிசேனவின் நிராகரிப்பை ஏற்க மறுத்துள்ளது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2CmELD1 via Kalasam

இன்று, 20 பேர் அமைச்சராகின்றனர்

Image
20 புதிய அமைச்சர்கள் இன்றைய தினம் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக் அபேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.எஞ்சிய அமைச்சர்கள் நாளைய தினம் சத்திய பிரமாணம் செய்து கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று பதவிப் பிராணம் செய்துக் கொள்ளவுள்ள அமைச்சர்களது பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவை, 30 அமைச்சர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேநேரம், 40 பேர் கொண்ட பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்களும் இதற்குப் பின்னர் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2ExNvrz via Kalasam

ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும் - மஹித தேசப்பிரிய

Image
அடுத்த வருடத்தின் ஜனவரி மாதம் 9 ஆம் திகதிக்கு பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதிக்கு பலம் இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.  காலி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2ED7C8f via Kalasam

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

ரிசாத் அமைச்சை விட்டுக்கொடுக்கிறார்..?

Image
புதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இதேவேளை, தேவை ஏற்படின் தானும் அமைச்சு பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் , ரிசாத் பதியுதீன் இன்று காலை கட்சிக்கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ஆனால் இதுவரை உறுதியான செய்தி தெளிவாயகவில்லை.  ஆனால் இதற்கிடையில் மனோ கனேசன் இவ்வாறு  தனது டுவிட்டர் தளத்தில்கருத்து தெரிவித்தார்.  from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2SSBXCU via Kalasam

மலிக் , மனோ அமைச்சுக்களை பெறுவதில்லை..?

Image
புதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இதேவேளை, தேவை ஏற்படின் தானும் அமைச்சு பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இன்று (18) காலை ஐக்கிய தேசிய முன்னணியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டத்தின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.  புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பெரும்பாலும் இன்று அல்லது நாளை நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  அரசியலமைப்பின் படி தேசிய அரசாங்கம் இல்லாத போது அமைச்சரவை 30 பேராக வரையறுக்கப்பட வேண்டும்.  புதிய அமைச்சரவையில் சிலருக்கு ஏற்கனவே தாங்கள் பதவி வகித்த அமைச்சுக்களையே வழங்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2Bphvm8 via Kalasam

Three UPFA MPs crossover to govt

Image
The United People’s Freedom Alliance (UPFA) parliamentarians Wijith Wijayamuni Zoysa, Lakshman Seneviratne and Indika Bandaranayake have crossed over to the Government side. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2PKxSPs via Kalasam

03வர் ஐக்கிய தேசிய கட்சியின் அரசுடன் இணைவு : மகிந்த எதிர்கட்சி தலைவரானார்

Image
ஐக்கிய மக்கள்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயமுனி சொய்சா, இண்டிக பண்டார மற்றும் லக்‌ஷம் சேனவிரத்ன ஆகியோ ஐக்கிய தேசிய கட்சியின் அரசுடன் சற்றுமுன்னர் இணைந்துகொண்டனர். பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டனர். அத்துடன் எதிர்கட்சி தலைவராக மஹிந்த ,எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளராக மஹிந்த அமரவீர ; சபாநாயகர் அறிவித்துள்ளார்.  from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2rGhyFN via Kalasam

பாராளுமன்றம் மீண்டும் இன்று கூடுகிறது!

Image
கடந்த இரு மாதங்களாக நீடித்த அரசியல் நெருக்கடிக்குப் பின்னர் மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின் இன்று பாராளுமன்றம் கூடுகின்றது. இதேவேளை, கடந்த சில பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்து வந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்றைய அமர்வில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளது. இந்நிலையிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவி சம்பந்தமாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ள நிலையில் கட்சித்தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாராளுமன்றின் பார்வையாளர் கலரி இன்றையதினம் திறக்கப்படுமென படைக்கல சேவிதர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://

எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த - ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு

Image
எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரேரிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி இதனை தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2LpEUbF via Kalasam

அரசியலுக்காக : அல்­குர்­ஆனை இழி­வு­ப­டுத்தாதே - டளஸுக்கு முஜீபுர்

Image
அல்­குர்­ஆனின் போத­னைகள் குறித்து அறி­யாத பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டலஸ் அழ­கப்­பெ­ரும, வெறும் அர­சியல் இலாபம் அடைந்­து­கொள்­வ­தற்­காக அல்­குர்­ஆனை இழி­வு­ப­டுத்தக் கூடாது என கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார். நேற்­று­முன்­தினம் அலரி மாளி­கையில் இடம்­பெற்ற விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், அன்­மையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்­றின்­போது உரை­யாற்­றிய டளஸ் அல­கப்­பெ­ரும அல்­குர்­ஆ­னையும் ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்­பையும் தொடர்­பு­ப­டுத்தி குறிப்­பிட்­டி­ருந்தார். இந்த கருத்­தா­னது கண்­டிக்­கத்­தக்க வகையில் அமைந்­தி­ருக்­கி­றது. ஐ.எஸ். அமைப்­பா­னது தீவி­ர­வாத செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டைய அமைப்பு. அந்த அமைப்பு இஸ்­லாத்­துடன் தொடர்­பு­பட்ட அமைப்­பாக கருத முடி­யாது. இலங்கை முஸ்­லிம்கள் அவ்­வ­மைப்பை ஏற்­க­வில்லை. அத்­தோடு அதற்கும் இல்­லாத்­திற்கும் தொடர்­பில்லை என நாம் தெட்டத் தெளி­வாக இதற்கு முன்னர் கூறி­யி­ருக்­

Presidential Task Force for North & Eastern Provinces met under President’s patronage

Image
The Presidential Task Force to monitor the development projects conducted in Northern and Eastern provinces met under the patronage of President Maithripala Sirisena for the 5th time today (17) at the Presidential Secretariat . During the meeting, The Task Force reviewed the progress of the development projects implemented so far in the Northern and Eastern Provinces and the ways to accelerate the development process. Opposition Leader R. Sampanthan, Governors of the Northern and Eastern provinces , Secretary to the President Udaya R Seneviratne, public servants, Ministry Secretaries, Inspector General of Police, Pujitha Jayasundara and others participated in this meeting. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2Lmw12A via Kalasam

வடகிழக்கு பிரச்சினைகளை புதிய அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரும் ஜனாதிபதி

Image
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இனங்காணப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை பெற்றுத்தரக்கூடிய வகையில் அவற்றை புதிய அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (17) நடைபெற்றது. வட, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், அவற்றின் சாதகத் தன்மைகள் தொடர்பாகவும் அத்தீர்மானங்களை நிறைவேற்றுவதில் காணப்படுகின்ற தடைகள் பற்றியும் மக்களுக்கு சிறந்த பலனைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய விதத்தில் குறித்த அபிவிருத்தி பணிகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றியும் கடந்த அமர்வுகளில் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது. வட, கிழக்கு பிரதேசங்களின் நில விடுவிப்பு, பாதைகள் மற்றும் பாடசாலைகள் விடுவிப்பு, ஆனையிறவு உப்பளம், குறிஞ்சைத்தீவு உப்பளம், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலை, முல்லைத்தீவு ஓட்டுத் தொழிற்சாலை, வட, கிழக்கு பிரதேச