Posts

Showing posts from April, 2019

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

இலங்கையில் பல்வேறு பரீட்சைகள் ஒத்திவைப்பு

Image
இலங்கை பரீட்சை திணைக்களம், நாட்டில் தற்பொழுது நிலவும் நிலைமையை கருத்திற் கொண்டு பின்வரும் பரீட்சைகளை ஒத்தி வைத்துள்ளது.  இந்த பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் தினங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.  இலங்கை மொழிப் புலமை பரீட்சை 2018 - (2019) ஆரம்பம் மத்திய மற்றும் இறுதி  இலங்கை கணிதப் போட்டி (ஒலிம்பியாட் 2019)  மதீப்பீட்டு முகாமையாளர் உதவி தொழில் நுட்ப சேவையில் இராசாயன உதவியாளர்  தரம் 111 க்கு ஆட்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை 2018 - (2019) from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2USPJLo via Kalasam

தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 139 பேர் அடையாளம்: ஜனாதிபதி

Image
கடந்த 21 ஆம் திகதி நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக 139 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வ கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். நாடு முழுவதுக்குமான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாளை (26) முதல் பாதுகாப்பு அமைச்சில் கூட்டு பாதுகாப்பு நடவடிக்கை மத்திய நிலையமொன்று செயற்படவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.  from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2GKUVXZ via Kalasam

ஞாயிறுக்கிழமை கிறிஸ்தவர்களை , முஸ்லிம்கள் பாதுகாக்கின்றோம்- ACJU

Image
“ இஸ்லாமியர்கள் என்ற ரீதியில் நாங்கள் தீவிரவாதிகளின் உடல்களை கூட ஏற்கமாட்டோம். கிறிஸ்தவர்கள் வரும் ஞாயிறுக்கிழமை பிரார்த்தனைக்கு தேவாலயங்களுக்கு செல்லுங்கள் . பாதுகாப்பு இல்லை என்று நீங்கள் கருதினால் இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய நாங்கள் வந்து உங்களுடன் நிற்கிறோம்.” from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2USPFeC via Kalasam

வெசாக் பண்டிகை தின கொண்டாட்டம் இரத்து

Image
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை நாக விகாரை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநாகர சபை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை செயலக காரியாலயம் ஆகியன ஒன்றிணைந்து வருடந்தோறும் நடத்திவரும் வெசாக் பண்டிகை தின கொண்டாட்டத்தை இம்மறை இரத்துசெய்துள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தaனபுர கோட்டை நாக விகாரையின் தலைவர், பண்டிதர் தர்ஷனபதி பூஜிய வதுருவில சிறி சுஜாத தெரிவித்துள்ளார். குறித்த விகாரையில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்துரையாற்றுகையில், கோட்டை சந்தியிலிருந்து ஜூபிலி பகுதி வரையில் முன்னெடுக்கப்படும் வெசாக் தின நிகழ்வுகள் அனைத்தும் தற்பொழுது கைவிடப்பட்டுள்ளதென்றும், விசேட ஆன்மீக உரைகள் மற்றும் போதனைகள் மட்டுமே இடம்பெறுமென்றும் அவர் மேலும் கூறினார். அத்துடன் நாட்டில் கடந்த சில நாள்களுக்க முன்னர் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களால் நாடு தற்சமயம் அசாதாரண நிலையில் இருந்துவருவதானாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2GzdOg...

கொழும்பு மோதரை பிரதேசத்தில் 21 கைக்குண்டுகளுடன் சிலர் கைது

Image
கொழும்பு மோதரை பிரதேசத்தில் 21 கைக்குண்டுகள் மற்றும் 06 வாள்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.  பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இணைந்து நடத்திய தேடுதலில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.  குறித்த கைக்குண்டுகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய அளவில வெடிக்கக் கூடியவை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2L4SDrR via Kalasam

பொத்துவிலில் மூன்று பாகிஸ்தான் பிரஜைகள் கைது #EasterSundayAttacksSL

Image
பொத்துவில் பகுதியில் சட்ட விரோதமான முறையில் இந்நாட்டில் தங்கியிருந்த மூன்று பாகிஸ்தான் பிரஜைகள் கைது.  பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் அருகம்பே முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சந்தேகநபர்களான பாகிஸ்தான் நாட்டவர்களிடம் அனுமதிக்கப்பட்ட வீசா அல்லது கடவுச்சீட்டு இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள சந்தேக நபர்களை பொத்துவில் விமான நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2W44GXq via Kalasam

வழமை போல் பள்ளிவாயல்கள் இயங்கும்... அசாத் சாலி

Image
சியாரங்களுடனான பள்ளிவாசல்கள் ஐ.எஸ் ஆதரவு உள்நாட்டு அமைப்பினரின் தாக்குதலுக்குள்ளாகக் கூடும் எனும் ஊர்ஜிதப்படுத்தப்படாத பொலிஸ் எச்சரிக்கை ஆவணம் ஒன்று சமூக வலைத்தளங்களில் உலவி வருகிறது. எனினும், இது தொடர்பில் எவ்வித அச்சமும் தேவையில்லையென தெரிவிக்கிறார் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி. நாளை வெள்ளிக்கிழமை உட்பட அனைத்து பள்ளிவாசல்களிலும் வழமை போன்று தொழுகைகள் இடம்பெறும் எனவும் பொலிஸ், இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்புடன் பள்ளி நிர்வாகங்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் பொது மக்கள் இது தொடர்பில் அச்சப்படத் தேவையில்லையெனவும் இது தொடர்பில் சோனகர்.கொம் வினவியபோது ஆளுனர் விளக்கமளித்திருந்தார். சியாரங்களுடனான பள்ளிவாசல்களை விபரிக்க தவ்ஹீத் கொள்கைவாதிகள் உபயோகிக்கும் வார்த்தைப் பிரயோகங்களுடன் பொலிஸ் மா அதிபர் அலுவலக கடிதத் தலைப்பில் குறித்த எச்சரிக்கை கடிதம் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2J14BQu via Kalasam

தர்கொலையாளிகளின் சடலங்களை முஸ்லிம்கள் பொறுப்பேற்கப் போவதில்லை : ACJU

Image
ஞாயிறு தினம் பயங்கரவாத தாக்குதல்களை நடாத்தியவர்களுடைய சடலங்களை இலங்கை முஸ்லிம்கள் பொறுப்பேற்கப் போவதில்லையென தெரிவிக்கிறது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா. இன்றைய தினம் ஜம்மியா ஏற்பாட்டில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டதோடு இலங்கை முஸ்லிம்கள் குறித்த பயங்கரவாத குழுவின் தலைவர் பற்றி 2017ம் ஆண்டே தகவல் வழங்கியிருக்கும் நிலையில் அதன் பின் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியவர்களே சம்பவங்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டும் எனவும் விளக்கமளித்திருந்தது. இதேவேளை, நாட்டின் பல இடங்களிலும் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் முகம் மூடுவதைத் தவிர்த்துக் கொள்வதற்கும் ஆலோசனை வழங்குவதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சார்பில் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2GGbzZK via Kalasam

அவசரகால சட்டம் அமுல்; இலங்கையர் தெரிய வேண்டிய முக்கிய விடயம்

Image
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் அவசரகால சட்ட சரத்துக்களை அமல்படுத்த பாராளுமன்றம் நேற்று ஏகமனதாக அனுமதி வழங்கியது.  இந்நிலையில், அவசரகால சட்டம் எப்போது இலங்கையில் முதன்முதலாக கொண்டு வரப்பட்டது என்று பார்ப்போம்.  காலணித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்ததன் பின்னர் 1953 ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முறையாக அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டது.  ஒரு கிலோ அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையினால் 29 நாட்களுக்கு இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  அதனைத் தொடர்ந்து, நாட்டில் ஏற்பட்ட இன கலவரங்கள், உள்நாட்டு போர் போன்ற காரணிகளினால் அவசரகால சட்டம் தொடர்ந்தும் பல தடவைகள் அமல்படுத்தப்பட்டிருந்தன.  இந்த நிலையில், இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அவசர கால சட்டத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ரத்து செய்திருந்தது.  எனினும், கடந்த 9 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் அவசர கால சட்ட சரத்துக்களை அமல்படுத்த அரசாங்கம் தீர்மானித்து...

பயங்கரவாதிகளுடன் என்னை தொடர்புபடுத்தி, கேவல அரசியல் செய்யாதீர்-ரிஷாட் பதியுதீன்

Image
கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும் இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும் இந்த கயவர் கூட்டத்தை கூட்டத்தை பூண்டோடு அழித்தொழிக்க வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார். இன்று (24) மாலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது; புனித ஈஸ்டர் தினத்தை கரி நாளாக்கிய இந்த சம்பவத்தை நாங்கள் சிறியதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதே போன்று இதனை வைத்து யாரும் அரசியல் செய்வார்களாயின் அதை விட கேவலமான ஒன்றாக இருக்க முடியாது. புலிகள் இயக்கத்தில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய கரும்புலிகளுக்கு இதனை செயற்படுத்த சுமார் 20 வருடங்கள் எடுத்தது. ஆனால் இந்த மோசமான கயவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இவ்வாறான ஒரு ஈனச்செயலை மேற்கொண்டு ஒரே நாளில் இத்தனை அழிவுகளை உண்டு பண்ணியிருக்கின்றன. இதன் மூலம் உயிர்களைப் பலி கொண்டது மாத்திரமன்றி எதிர்கால சந்ததியினரின் வாழ்வை சீரழ...

எனக்கும் ஸஹ்ரானின் இயக்கத்திற்கும் எவ்விதத் தொடர்புகளும் கிடையாது : ஹிஸ்புல்லாஹ்

Image
எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் சமூக வலைத்தளங்களில் எழுதி வருவதை தான் முற்றிலும் மறுப்பதாகவும், எனக்கும் குண்டு வெடிப்பின் சூத்திரதாரியான ஸஹ்ரான் என்பவரின் இயக்கத்திற்கும் எவ்விதத் தொடர்புகளும் கிடையாது எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, குண்டு வெடிப்பின் சூத்திரதாரி எனக் கருதப்படும் “ஸஹ்ரான்” என்பவருடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பிரசுரித்து, என் மீது மிக மோசமாகவும் அபாண்டமாகவும் பழி சுமத்தி, என்னுடைய நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், சமூக வலைத்தளங்களில் எழுதி வருவதை அவதானித்தேன் . கடந்த 2015 ஆம் ஆண்டு இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நான் வேட்பாளராக இருந்த போது, சகல வேட்பாளர்களையும் அவர் அழைத்து கலந்துரையாடினார். அந்தச் சந்தர்ப்பத்தில் “ஒரு வேட்பாளர்” என்ற அடிப்படையில் நானும் அதில் கலந்துகொண்டேன். இந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஏனைய சகல முஸ்லிம் வேட்பாளர்களும் அங்கு கலந்து கொண்ட...

பாராளுமன்ற தகவலுடன், அம்பாறை ஒருவரின் வாகனமும் சிக்கியது

Image
பலங்கொட, கிரிமொட்டிதென்ன பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது பாராளுமன்றத்திற்கு நுழைவதற்கான வீதி வரைபடம் ஒன்று, பாராளுமன்றத்திற்கு நுழைவதற்கான அனுமதிப்பத்திரங்கள் ஆறு மற்றும் கெப் ரக வாகனம் ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  பலங்கொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த வீட்டில் இருந்து டெப் ஒன்றும், 3 தொலைபேசிகளும், 13 சிம் கார்ட்களும், ரி 56 ரக தோட்டக்கள் இரண்டு மற்றும் கெரடிட் கார்ட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  குறித்த கெப் வாகனத்தின் உரிமையாளர் அம்பாறை பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் குறித்த நபர் கொள்ளுபிட்டியவில் உள்ள சிற்றூண்டிசாலை ஒன்றில் கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  கைது செய்யப்பட்ட குறித்த நபரை இன்று (25) பலங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2GvfCqA via Kalasam

பையத்து செய்த போது பெண்ணொருவரும் இருந்தார்...

Image
ஞாயிறு தினத்தன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகள் தொடர்பில் இணையத்தில் வௌியிடப்பட்டிருந்த காணொளியில் பெண்ணொருவரும் உள்ளதாக கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வௌியிட்டுள்ளது. https://www.khaleejtimes.com/international/rest-of-asia/one-of-nine-bombers-a-woman-says-sri-lanka-minister1-- குறித்த காணொளியில் ஆண்களுக்கு பின்னால் குறித்த பெண் உள்ளதாக அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. காணொளியின் இறுதியில் தற்கொலை குண்டுதாரிகள் ஒவ்வொருவரும் ஒருவரின் கை மீது கை வைத்து உறுதிமொழி வழங்கிய போது குறித்த பெண்ணின் கையை அங்கு தௌிவாக காணக்கூடியதாய் உள்ளது என அந்த பத்திரிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இலங்கையினுள் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட குறித்த பயங்கரவாதிகள் பொருளாதார ரீதியில் உயர் அல்லது நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்களை சேர்ந்தவர்கள் என கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கை மேலும் தெரிவித்துள்ளது. மேலும் , அவர்கள் உயர் கல்வியறிவினை பெற்றவர்கள் எனவும் கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. from Ceylon Muslim -...

பயங்கரவாதிகளினால் பள்ளிவாசல்கள் தாக்கப்படலாம் - அவதானமாய் இருக்க பொலிஸ் எச்சரிக்கை

Image
பயங்கரவாதிகளினால் பள்ளிவாசல்கள் தாக்கப்படலாம் - அவதானமாய் இருக்க பொலிஸ் எச்சரிக்கை from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2GFBgcV via Kalasam

மாதம்பை அரபுக் கல்லூரியில் கடமையாற்றிய எகிப்தினருக்கு விளக்கமறியல்

Image
மாதம்பை அரபுக் கல்லூரியில் கடமையாற்றிய எகிப்து நாட்டு ஆசிரியரை நாளை (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று (25) உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர் தற்பொழுது நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அக்கல்லூரியின் நிருவாகி  தெரிவித்தார். வீசா நிறைவடைந்த பின்னர் நாட்டில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த எகிப்து நாட்டு ஆசிரியர் மாதம்பை பொலிஸாரினால் நேற்று (24) கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2XHR7xu via Kalasam

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

நாங்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தோம்: பொதுபலசேனா

Image
நாட்டில் வாழும் முஸ்லிம்கள் ஏனைய இனத்தவர்களுடன் நல்லுறவைப் பேணிவருபவர்கள் என்பதுடன், ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயலாற்றி வருகின்ற இனத்தவர்களாவர். ஆனால் முஸ்லிம் சமூகத்திற்குள்ளே அடிப்படைவாதத்தைப் புகுத்தி, தீவிரவாதத்தை பரப்பும் நோக்கிலே சிலர் செயற்பட்டு வருவதாக நாங்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தோம். அதனைக் கருத்திற்கொள்ளாமல் நாங்கள் இனவாதக் கருத்துக்களை வெளியிடுவதாகக் குற்றஞ்சாட்டினார்கள். அந்த அலட்சியத்தின் விளைவால் இன்று அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன என்று பொதுபலசேனா அமைப்பினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் தேவாலயங்களையும், நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை அடுத்து பொதுபலசேனா அமைப்பினர் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் விதாரந்தெனியே நந்த தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,  நாங்கள் பொதுபலசேனா அமைப்பை ஸ்தாபித்த போது சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பில் மாத்திரமே குரல் எழுப்பி வந்தோம். ஆனால்...

சந்தேகத்திற்கிடமான முறையில் கொழும்பிற்குள் நுழைந்துள்ள லொறி மற்றும் வேன்

Image
சந்தேகத்திற்கிடமான முறையில் கொழும்பு நகரிற்குள் நுழைந்துள்ள லொறி ஒன்று மற்றும் வேன் ஒன்று தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இந்த விடயம் தொடர்பில் கொழும்பு வலயத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரினால் கொழும்பு வலயத்திற்குள் உள்ள அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2IBxuUb via Kalasam

இரவு 9 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் - பொலிஸ்

Image
இன்று (23) இரவு 9 மணி முதல் நாளை (24) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2KWXI5G via Kalasam

இலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு

Image
இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி முகவர் நிறுவனத்தை மேற்கோள் காட்டி ரொய்ட்ர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இந்த தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏற்றமைக்கான காரணங்களை அவர்கள் வௌிப்படுத்தவில்லை எனவும் ரொய்ட்ர்ஸ் குறிப்பிட்டுள்ளது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2L0Hzfo via Kalasam

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை தடை செய்ய பிரேரணை

Image
இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், அவர்கள் JMI என்ற அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் எனவும்,  இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன மேலும் தெரிவித்தார்.  இன்றைய தினம் பாராளுமன்றில் ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார். தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை தடை செய்ய பாராளுமன்றில் பிரேரணையும் சமர்பிக்கப்பட்டது  Special Announcement From Parliament: Making a special statement in #SriLanka Parliament State Minister of Defence @RWijewardene proposes the banning of terrorist organization National Thowheeth Jama’ath. @HarshadeSilvaMP #lka SRILANKA #EasterSundayAttacksLK — CEYLON MUSLIM MEDIA 🇱🇰 (@CeylonMuslim) April 23, 2019 from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2GBAYno via Kalasam

நொச்சியாகம வர்த்தகர் வீட்டில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

Image
நொச்சியாகம பிரதேசத்தில் ( அனுராதபுர மாவட்டம்) பிரபல வியாபாரியொருவரின் வீடொன்றிலிருந்து வெடிப்பொருள்கள் தொகையொன்று நொச்சியாகம பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (23) காலை 9.30 நொச்சியாகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நொச்சியாகம எரிபொருள் நிலையத்தின் முன்னால் அமைந்துள்ள இரு மாடி வீட்டுக்குச் சென்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதே, வெடிப்பொருள்கள் பெருமளவிலான தொகையுடன் சந்தேகநபர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு ஜெலான்ட்டின் குச்சிகள் 1000அமோனியா 500 கிலோ மற்றும் வெடிகுண்டுக்கு பயன்படுத்தப்படும் வயர்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளன. வீட்டில் இருந்த ஆறு பேருடன் அங்கு வேனில் வந்த 2 பேரும் சேர்த்து கைதாகி உள்ளனர். குறிப்பிட்ட வீட்டு உரிமையாளர் முன்னரும் வெடிபொருட்கள் வைத்திருந்த விவாகரத்தில் கைதாகி விடுவிக்கப்பட்டவர் ஆவார். Source: MadaNews from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2XI9fr5 via Kalasam

நியுசிலாந்து பள்ளிவாசல் தாக்குதலுக்காகவே, இலங்கை தற்கொலை தாக்குதல்

Image
நியுசிலாந்து முஸ்லிம் பள்ளிவாசலுக்கு மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பழிதீர்க்கும் வகையிலேயே இலங்கையிலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார். இன்றைய தினம் பாராளுமன்றில் ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார். இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், அவர்கள் JMI என்ற அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன மேலும் தெரிவித்தார். ( from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2GwJouY via Kalasam

தாக்குதலை ஒரு இனத்தின் மீது திணிக்க வேண்டாம்- சபையில் மஹிந்த உரை #SriLankaAttacks

Image
ஜனாதிபதி ஒரு பக்கத்திலும் பிரதமர் இன்னுமொரு பக்கத்திலும் இருந்து செயற்படும் இந்த அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்புப் பிரச்சியைனைத் தீர்க்க முடியாது என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமை தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு இன்று (23) பிற்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஆகியோர் உரையாற்றியதன் பின்னர் எதிர்க் கட்சித் தலைவருக்கு உரையாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதன்போது விசேட உரையாற்றுகையிலேயே மஹிந்த ராஜபக்ஸ இதனைக் கூறினார். நாட்டின் அண்மையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை விளையாட்டாகக் கொள்ளக் கூடாது. கடந்த அரசாங்க காலத்தில் நாட்டிலுள்ள யுத்தத்துக்கு முகம்கொடுக்க பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஒவ்வொரு வாரமும் கூடி ஆராய்ந்ததன் பின்னர், அது பாதுகாப்பு உயர் சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இது எமது நாட்டு மக்களின் பிரச்சினை. இந்தப் பிர...

நீர்கொழும்பில் சற்றுமுன் பாகிஸ்தான் பிரஜைகள் ஆறு பேர் கைது

Image
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்நிவுஸ் வீதியில் மற்றும் பெரியமுல்லை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இந்நாட்டில் தங்கியிருந்த பாகிஸ்தான் நாட்டு பிரஜைகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நீர்கொழும்பு பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர்கள் நேற்று ()22 கைது செய்யப்பட்டுள்ளனர்.  18, 23, 24 மற்றும் 25 வயதுடைய பாகிஸ்தான் நாட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2viOUMA via Kalasam

தற்கொலை தாக்குதலால் பலியானோர் 321 , வைத்தியசாலையில் 375 பேர்

Image
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.  பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் விஷேட அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  உயிரிழந்தவர்களில் 38 வெளிநாட்டு பிரஜைகளும் உள்ளடங்குவதாக தெரிவித்த அவர், 500 மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  இதுவரையில் 375 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2Vj2GgW via Kalasam

ISIS : பாராளுமன்றில் முஸ்லிம்களை வெளுத்து கட்டிய விஜேதாச

Image
நாட்டில் தவ்பீக் ஜமாத்தின் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் சென்று பயிற்சி எடுத்துவிட்டு வந்ததாக அன்று பாராளுமன்றத்தில் நான் கூறிய போது ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் எம்.பிக்களும், அமைச்சர்களும் தனக்கு எதிராக ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தியதாக முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி இந்த செய்தியை வெளியிட்டோம். இந்த செய்தியை வெளியிட்ட என்னை சில முஸ்லிம் எம்.பி.க்கள் சபித்தனர். பலருடைய மனித உயிர்களைப் பறித்த இந்த பயங்கரவாத சம்பவத்துக்குரிய பொறுப்பை இந்த முஸ்லிம் எம்.பி.க்களும், அமைச்சர்களும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஸ சற்று முன்னர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.  from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2UNmYj4 via Kalasam

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

ஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்

Image
ஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் தொழிற்சாலை உரிமையாளர் எனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரியப்படுத்தியுள்ளனர். கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 9 பேரும் இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் பொலிஸார் வழங்கிய அறிக்கையின் பிரகாரம் அவர்களை மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2INZ6ES via Kalasam

கொழும்பில் சற்றுமுன் பாரிய வெடிப்பு ; வேன் ஒன்றில் குண்டு வெடிப்பு

Image
கொட்டஞ்சேனை கிருஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் சற்று முன்னர் மற்றுமொரு குண்டு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  குண்டு செயலிழப்பு செய்யும் அணியினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர், தேவாலயத்திற்கு அருகில் இருந்த வேன் ஒன்றை சோதனையிடும் போது, குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2GoLD3w via Kalasam

வெடிப்பு சம்பவம் :9 பேர், 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

Image
நேற்றைய தினம் நாட்டின் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 9 பேரை மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபர்களை இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோதே இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2vibqFk via Kalasam

நள்ளிரவு 12.00 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்- ஜனாதிபதி

Image
பயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம் இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பாக வர்த்தமாணி அறிவித்​தலை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேசிய பாதுகாப்புச் சபை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (22) முற்பகல் ஒன்று கூடியபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும்தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதேவேளை நேற்று இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடைய அமைப்புக்கள், அதுதொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் மற்றும் அதற்கு அனுசரணை வழங்கிய அனைத்து நாசகார சக்திகளையும் முழுமையாக அழிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2Dn5T4H v...

புறகோட்டை தனியார் பஸ் தரிப்பிடத்திலிருந்து வெடிப்பொருள்கள் மீட்பு

Image
புறகோட்டை – பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்திலிருந்து வெடிப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் குப்பைகள் இடப்படும் பையொன்றும் மற்றும் அதற்கருகிலிருந்து 87 டெடனேடர்களும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் பேச்சாளர், ருவன் குணசேகர தெரிவித்தார்.  from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2Vn05T0 via Kalasam

மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் - அமைச்சர் ரிஷாட்

Image
மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் - அமைச்சர் ரிஷாட் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில்  வன்முறையை தோற்றுவித்து இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை குலைக்கும் சக்திகள் எந்தவிதமான பாரபட்சமுமின்றி தண்டிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் ஞாயிற்றுக் கிழமைமேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தைநாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.இதே வேளை இந்தகுண்டுத்தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்களுக்கும்மற்றும் காயமடைந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த துயரத்தைதெரிவிக்கின்றேன். இந்த சம்பவத்தை யார் செய்தாலும் அவர்களுக்கு எதிரானஅனைத்து கடுமையான நடவடிக்கைகளையும் அரசாங்கம்எடுக்க வேண்டியதுடன்,இவ்வாறான மிலேச்சத்தனமானசம்பவங்களின் பின்னணி தொடர்பில் கண்டறிந்து இந்தநாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சக்திகளை இனம் கண்டுஅவற்றை துடைத்தெறிந்து மக்களின் பாதுகாப்பினைஉறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். கத்தோலிக்க மக்களின...

இலங்கை தாக்குதல் பின்னணியில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் – CID தகவல்

Image
நேற்றைய தாக்குதலின் பின்னணியில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் இருப்பது குறித்து புலனாய்வுப் பிரிவு தேசியப் பாதுகாப்புச் சபை அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பயங்கரவாத அமைப்புக்களை ஒழிக்க, சர்வதேச ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசியப் பாதுகாப்புச் சபை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (22) முற்பகல் ஒன்று கூடியபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கமைய இலங்கையில் உள்ள சகல வெளிநாட்டுத் தூதுவர்களையும், உயர் ஸ்தானிகர்களையும் அழைத்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிப்பதற்கும் ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதுடன், இச்சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு அவர்கள் அனைவருடைய சர்வதேச ஒத்துழைப்பையும் கோரவுள்ளதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரம் கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தேவையான அனைத்து இடங்களுக்கும் முறையான பாதுகாப்பு திட்டமொன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி பாதுகாப்புத் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைக் கருத்திற்...

இதுவரை 7 பேர் கைது, தற்கொலை தாக்குதலும் கண்டுபிடிப்பு

Image
இன்றைய வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 7 பேர் கைதாகி உள்ளதாக தெரிவிக்கப்படு கிறது. நீர் கொழும்பு, கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளில் தொடர்பு என சந்தேகத்தி லேயே 7 பேர் இதுவரை கைதாகி உள்ளனர். அதிகமான தாக்குதல்கள் தற்கொலை தாக்குதலாக இருக்கும் எனவும் ஒரு குழுவினரால் இது அனைத்தும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இராஜாங்க அமைச்சர் ருவன் வி​​ஜேவர்தன தெரிவித்தார். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2ZlPasd via Kalasam

நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன

Image
மீள அறிவிக்கும் வரை, நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவங்கள் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலையை கருத்திற்கொண்டு, நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2IM1BHI via Kalasam

ஒன்பது குண்டுவெடிப்பு; 192 பேர் பலி; 500 இற்கும் மேற்பட்டோர் காயம் #SRILANKA

Image
நாட்டில் காலை முதல் இதுவரையில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 192 பேர் பலியாகியுள்ள தாக வைத்தியசாலை மற்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எட்டு இடங்களில் 9 வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இச்சம்பவங்களில் சுமார் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் கூறியுள்ளன. மூன்று தேவாலயங்கள், 3 ஹோட்டல்கள், தெஹிவளை மற்றும் தெமட்டகொட ஆகிய இடங்களிலேயே வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2XsQQhB via Kalasam

உடனடியாக பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்

Image
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பொது மக்கள் வீடுகளில் தங்கியிருக்குமாறும், பாதைகளில் ஒன்று கூடி கூட்டமாக இருப்பதை தவிர்ந்து கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.  from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2Gwct9Q via Kalasam

தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்

Image
நாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன. முப்படையினரும் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதோடு சந்தேக நபர்களை விரைவில் கைது செய்வார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஏலவே சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை இனவாத பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ருவன் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. SONKAR from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2ULKihp via Kalasam

தெமட்டகொட வெடிப்பு ஒரு பொலிசார் பலி: இதுவரை 185 பேர் பலி

Image
8வது குண்டுவெடிப்பான, தெமட்டகொட வெடிப்பு சம்பவத்தில் ஒரு பொலிசார் மரணித்ததுடன் பலருக்கு காயம் என அங்கிருந்து வரும் தகவல் கிடைத்துள்ளது.  இதுவரை 185 பேர் பலி  from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2IG5wWC via Kalasam

இரவு 6 மணி முதல் முழு இலங்கையிலும் ஊரடங்கு சட்டம் அமுலில்

Image
இன்று மாலை முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வுள்ளது.  from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2Dr2Ecz via Kalasam