Posts
Showing posts from May, 2019
முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ் ஊடகங்கள்- மக்கள் அவதானம்
- Get link
- X
- Other Apps
பாறுக் ஷிஹான் ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் அதற்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்றுவரும் இனவாத தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு எதிராக நாம் மனிதர்கள் என்றவகையிலும் தமிழ் பேசும் மக்கள் என்றவையிலும் இலங்கையர் என்ற வகையிலும் இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் ஒன்றாக எழுந்து நிற்கவேண்டும் என்றும் இதன் மூலமாக மட்டுமே இலங்கை நாட்டை அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் அபிவிருத்தியும் சுபிட்சமும் கொண்ட நாடாக கட்டியெழுப்ப முடியும் என்றும் அதற்காக நாம் அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணையவேண்டும் என யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கிளை தலைவர் அஷ்-ஷெய்க் பி .ஏ .எஸ் சுபியான் தெரிவித்தார். யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் ஊடகவியலாளர் மாநாடு மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள மொஹிதீன் ஜும்மா பள்ளிவாசலில் சனிக்கிழமை(25) நடைபெற்றபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது நமது நாட்டை சாந்தியும் ,சமாதானமும் , அபிவிருத்தியும் , சுபிட்சமும் கொண்ட நாடாக கட்டியெழுப்புவதில் சமூகங்களுக்கிடையிலான சுமூகமான உறவு மிக முக்கிய பங்கை வகிக்கின்றது, எ...
”என் புதிய கருத்தால் பதற்றம் ஏற்படலாம்” எச்சரித்த ஞானசார
- Get link
- X
- Other Apps
இன்னும் நாளையும் விசேட ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தி முக்கியமான பல தகவல்களை வெளியிட எதிர்பார்த்துள்ளோம், அந்த தகவல்களினால் சில சமயம் பதற்றமான சூழல் ஏற்படலாம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நேற்று 26- கண்டியில் நடைபெற்ற பூஜை வழிபாடொன்றின் பின்னர் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார். அங்குத் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்; குறித்த தகவல்களை மிகவும் பொறுப்புடன் வெளியிடவுள்ளோம், என்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும், பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளாமல், பொறுமையுடன், தூரநோக்குடன் செயற்படுமாறு விசேடமாக இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். பிரச்சினைகள் ஏற்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் எங்களுக்கே நஷ்டம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். டெய்லிசிலோன் from Ceylon Muslim - http://bit.ly/2X7nHsv via Kalasam
இன்று, முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து முக்கிய பேச்சு
- Get link
- X
- Other Apps
பயங்கரவாத நடவடிக்கைகளோடு நேரடியாக சம்பந்தப்படாமல், போதிய ஆதாரங்களின்றி அவசரகாலச் சட்டத்தின் கீழும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் விடுத்த வேண்டுகோளை சாதகமாக பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பதில் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவிடம் தொலைபேசி ஊடாக பணிப்புரை விடுத்தார்கள். அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்களில் குற்றமிழைக்காதவர்கள் என இனம்காணப்பட்டவர்களை விடுக்குமாறு, மூன்று வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற பாதுகாப்பு பேரவைக் கூட்டத்திலும் தாம் கூறியிருந்தாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் இனவாத செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் தொடர்பில், முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று சனிக்கிழமை (25) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை அவரது இல்லத்தில் சந்தித்து நீண்டநேரம் கலந்துரையா...
குர்ஆனின் பெயரில், தீவிரவாதம் பிரச்சாரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் - சம்பிக்க
- Get link
- X
- Other Apps
முஸ்லிம்கள் மக்காவை நோக்கி வழிபட்டால் பிரச்சினையில்லை. ஆனால் அவர்கள் எமது மண்ணில் காலூன்றி நிற்கவேண்டும். எமக்கு இவ்வாறான முஸ்லிம் சமூகமே தேவைப்படுகிறது. எந்தவோர் சமயத்துக்கும் வேறு மதங்களை நிந்தனைக்கு உட்படுத்த முடியாது. குர்ஆனின் பெயரில் ஏனைய மதங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தீவிரவாத பிரசாரங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். இதற்கென சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இதேபோன்று பௌத்தத்தின் பெயரால் ஏனைய சமயங்களை துன்பங்களுக்குட்படுத்தும் வகையில் எவருக்கும் செயற்பட உரிமையில்லை என பாரிய நகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக தெரிவித்தார். மாதிவெல, கிம்புலாவெலயில் நிர்மாணிக்கப்பட்ட தேசிய பௌத்த மத்திய நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ‘‘எமக்குத் தேவை அரோபிய கலாசாரங்களைப் பின்பற்றும் முஸ்லிம்களல்ல. இலங்கைக்கான முஸ்லிம் சமூகம...
ரமழானின் இறுதிப்பத்தில் இக்திகாப் விவகாரம், பிரதமரின் கவனத்திற்கு போனது - ஊர் மக்களை மட்டுமே அனுமதிக்க ஹலீம் கோரிக்கை..!!
- Get link
- X
- Other Apps
ரமழானின் இறுதிப்பத்தில் இக்திகாப் இருப்பவர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கெடுபிடிகளில் இருந்து தவிர்ந்து கொள்வது பற்றிய விவகாரம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுவிடயத்தில் உடனடிக் கவனம் செலுத்தியுள்ள பிரதமர் ரணில், இதுகுறித்து உடனடியாக பொலிமா அதிபருக்கு அறிவித்துள்ளார். இந்நிலையில் இறுதிப் பத்தில் பள்ளிவாசல்களில் இக்திகாப் இருப்பவர்கள், அந்த மஹல்லா வாசிகளாக மாத்திரம் இருப்பது சிறந்ததென அமைச்சர் ஹலீம் சுட்டிக்காட்டியுள்ளார். இது பள்ளிவாசல்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக அமைவதுடன், ஊருக்கும் பாதுகாப்பாக இருக்கும். பாதுகாப்பு பிரிவினரின் தேவையற்ற கெடுபிடிகளில் இருந்து விடுபட உதவுமெனவும் ஹலீம் மேலும் தெரிவிததுள்ளார். from Ceylon Muslim - http://bit.ly/2weliAz via Kalasam
ரமழான் கடைசிப் 10 நாட்களில் நடந்துகொள்ளும் முறைகள் ACJU..!
- Get link
- X
- Other Apps
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கவனத்திற் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களுக்கு பின்வரும் வழிகாட்டல்களை வழங்க விரும்புகின்றது. ரமழானின் இறுதிப் பத்தில் நல்லமல்களில் முனைப்புடன் ஈடுபடுமாறும் நாட்டின் நிலைமை சீராக துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் வேண்டுகிறோம். ரமழானில் எஞ்சியுள்ள நாட்களில் தத்தமது மஸ்ஜித் மற்றும் பிரதேசங்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மஸ்ஜித் நிர்வாகிகளும் ஊர் முக்கியஸ்தர்களும் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இரவு நேரங்களில் விளையாட்டுக்களில் ஈடுபடுவதையும் பிறருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதையும் முற்றாக தவிர்க்கவும். ஒற்றைப்படை இரவில் குறிப்பாக 27ஆம் நாள் இரவு வணக்க வழிபாடுகளை ஏற்பாடு செய்யும்போது அவ்வப் பிரதேச நிலைமைகளைக் கவனத்திற் கொண்டு குறுகிய நேரத்தில் அமல்களை முடித்துக் கொள்ள ஆவன செய்யவும். இரவுத் தொழுகை தொழுவதற்கு ஆரோக்கியமான சூழல் இருக்கும் பகுதிகளில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் உதவியுடன் தொழுது கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். இஃ...
முஸ்லிம் ஆசிரியரை இடமாற்றுமாறு கோரி, பொலிசாரும் சேர்ந்து ஆர்ப்பாட்டம் - ஹம்பாந்தோட்டையில்..!!
- Get link
- X
- Other Apps
அம்பலாந்தோட்டை - மல்பெத்தாவ மஹா வித்தியாலயத்தில் பணியாற்றிவரும் முஸ்லிம் ஆசிரியரை இடமாற்றுமாறு கோரி, அந்தப் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களால், இன்றைய தினம் (23), ஆர்ப்பாட்டமொன்று மேற்கொண்டனர். ஹம்பாந்தோட்டை வலயக் கல்விப் பணிமனைக்கு முன்னால், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலைக்கு வருகைதரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் என அனைவரும், பெற்றோர்ப் பாதுகாப்புக் குழுக்களினால், பாடசாலை வாயிலுக்கு முன்னால் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்ற போதிலும், மேற்படி ஆசிரியர், தன்னைப் பரிசோதிக்க வேண்டாமெனக் கூறுவதாகவும் சோதனை செய்ய இடமளிப்பதில்லை என்றும், பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர். from Ceylon Muslim - http://bit.ly/30FQBSD via Kalasam
தாக்குதலுக்குள்ளான அனைத்து பள்ளிவாசல்களும் புனரமைத்து தரப்படுமென அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்..!!
- Get link
- X
- Other Apps
குருநாகல், புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் கடந்த வாரம் இனவாதிகளால் தாக்கப்பட்டு பகுதியளவில் அல்லது முழுமையாக சேதமடைந்த அனைத்து பள்ளிவாசல்களும் புனரமைத்து தரப்படுமென வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார விவகார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அத்துடன் சேதமடைந்த பள்ளிவாசல்களின் விபரங்களை தருமாறு முஸ்லிம் சமய விவகார அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பவற்றிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார விவகார அமைச்சின் அதிகாரிகளுக்கிடையே நேற்றைய தினம் அமைச்சில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போது, மத்திய கலாசார நிதியத்தின் ஒதுக்கீட்டில் வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல்களை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான யோசனையை அமைச்சர் சஜித் பிரேமதாஸ முன்வைத்துள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் தொடர்பிலான விபரங்களை திரட்டும...
ஹிஜாப் அணிய எந்தத் தடையும் இல்லை, கல்வி அமைச்சு..!
- Get link
- X
- Other Apps
முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகள் மற்றும் பாதுகாப்பு தலைக்கவசங்களுடன் எவரேனும் பாடசாலைகளுக்கு பிரவேசிக்க முற்படும் சந்தர்ப்பங்களில் பாடசாலை பிரதானிகள் செயற்படவேண்டிய முறை தொடர்பில் விசேட கடிதமொன்றை பாடசாலை பிரதானிகளுக்கு அனுப்பி வைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கல்வித்துறை செயலாளருக்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முகத்தை மூடுவது தொடர்பில் அவசர கால சட்ட சரத்துக்களுக்கு கீழ் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் தொடர்பில் அறியாமை காரணமாக முகத்தை முழுவதுமாக மூடும் தலைக்கவசத்துடனும் , சில ஆசிரியைகள் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடையுடன் வருவதன் காரணமாக கடந்த தினங்களில் சில பாடசாலைகளில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பில் அவதானம் செலுத்தி குறித்த சந்தர்ப்பங்களின் போது பாடசாலை பிரதானிகள் செயற்பட வேண்டிய முறை தொடர்பிலும் மற்றும் பாடசாலைகளுக்கு பிரவேசிக்கும் போது ஆடை மற்றும் தலைக்கவசம் அணிந்து வருதல் தொடர்பிலான உத்தரவுடன் குறித்த விசேட கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.. இதில் , மனித உரிமைகள் ஆணைக்...
எக்காரணத்திற்காகவும் தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டாது..!
- Get link
- X
- Other Apps
பாதுகாப்புக் காரணங்களால் பாடசாலைகள் மூடப்பட்டபோது தவறவிடப்பட்டிருந்த கற்றல் செயற்பாடுகளை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு, அதிபர்களை அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, எக்காரணத்திற்காகவும் தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டாது என அமைச்சின் மேலதிக செயலாளர் M.M. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இதனால் தவறவிடப்பட்ட கற்றல் செயற்பாடுகளை பூர்த்திசெய்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தத் தடவை தவணைப் பரீட்சைகள் நடாத்தப்படுமா என பலர் வினவுவதாக சுட்டிக்காட்டியுள்ள M.M. ரத்னாயக்க, தவணைப் பரீட்சைகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவை வழமைபோன்று இடம்பெறும் எனக் கூறியுள்ளார். from Ceylon Muslim - http://bit.ly/2YD1h2G via Kalasam
மு.கா ஷாபி ரஹீம், விளக்கமறியல் நீடிப்பு!
- Get link
- X
- Other Apps
தொலைத் தொடர்பு சாதனங்களின் தொடர்பை முடக்கும் சாதனங்கள், வாகனத்தின் வேகத்தை கணிக்க முடியாமல் செய்யும் சாதனங்கள் ஆகியவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண சபையின் முன்னாள் (முஸ்லிம் காங்கிரஸ்) உறுப்பினர் ஷாபி ரஹீமை எதிர்வரும் ஜுன் மாதம் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய உத்தரவிட்டார். கடந்த 7 ஆம் திகதி நீர்கொழும்பு பெரியமுல்லையில் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பொதுமக்கள் பாவனைக்கு தடைசெய்யப்பட்ட முப்படைகள் மற்றும் பொலிஸாரின் தொடர்பாடலை இடையூறு செய்யக்கூடிய அதிசக்திவாய்ந்த இலத்திரனியல் உபகரணங்கள் (ஜேமர்) மற்றும் வாகனத்தின் வேகத்தை கணிக்க முடியாமல் செய்யும் சாதனங்கள் ஆகியவற்றுடன் மேல்மாகாண சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து மறுநாள் சந்தேக நபர் நீர்கொழும்பு பொலிஸாரால் நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது இந்த மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று (22 ) ஆம் திகதி ம...
மன்னாரில் குண்டுகள் மீட்பு!
- Get link
- X
- Other Apps
மன்னார் கல்லாறுப் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு அருகில் சில வெடிபொருட்கள் இருக்கலாம் என இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலுக்கு அமைவாகக் குறித்த வீட்டினை இன்று காலை சோதனை செய்தபொழுது குறித்த வீட்டிலிருந்து 2 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டின் வேலிப்பகுதியில் கடதாசிப் பெட்டி ஒன்றிலிருந்து தமிழன் குண்டு எனச் சொல்லப்படுகின்ற விடுதலைப்புலிகளின் தயாரிப்புக் குண்டு ஒன்றும் ஆர்.பி.யி குண்டு ஒன்றுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. குறித்த குண்டை வெடிக்கவைப்பதற்கு தர்மபுரம் பொலிஸாரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டு குண்டை வெடிக்க வைக்கும் பணியில் கிளிநொச்சி மாவட்ட விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த இரண்டு குண்டுகளும் பழையவை எனவும் இவற்றை இனந்தெரியாத நபர்கள் குறித்த இடத்தில் வைத்திருக்கலாம் என படைத்தரப்பு சந்தேகிக்கின்றது குறித்த இடத்திற்கு ஊடகவியலாளர் செல்வதற்கோ புகைப்படம், ,காணொளி எடுப்பதற்கோ படையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது மேலதிக விசாரணைகளை தர்மபு...
NTJ வைத்தியரால் “பௌத்த தாய்மார்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு” சர்ச்சை செய்தி
- Get link
- X
- Other Apps
இன்றைய திவயின சகோதர மொழி பத்திரிகையில் வெளியாகியிருந்த “பௌத்த தாய்மார்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு” தொடர்பான செய்தியின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி இன்று பாராளுமன்றில் வலியுறுத்தியுள்ளது. தௌஹீத் அமைப்பைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர், சுமார் 4000 பௌத்த தாய்மார்களுக்குச் செய்துள்ளதாக இன்றைய திவயின பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை குறித்த செய்தி தொடர்பில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவைத் தொடர்புகொண்டு விபரம் கேட்டதாகவும், அவ்வாறு எந்தவொரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறியதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றில் தெரிவித்தார். அத்துடன் குறித்த செய்தி தொடர்பான உண்மைத் தன்மையை நாளையதினம் பாராளுமன்றில் முன்வைக்குமாறும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார். from Ceylon Muslim - http://bit.ly/2X0DitT via Kalasam
ரிஷாத்திற்கு எதிராக சிங்கள ஊர்களில் பிரச்சாரம் !
- Get link
- X
- Other Apps
பாரிய சதித் திட்டம் அரங்கேறுவது போல்தான் தெரிகிறது., அழ்ழாஹ்வே போதுமானவன் அவனே எங்களுக்கு சிறந்த பாதுகாவலன்.,.....,..,....... அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்காமல் ஊருக்கு வந்துவிடவேண்டாமென பாராளுமன்ற உறுப்பினர்களான அரசியல்வாதிகளை வலியுறுத்தி நாட்டின் பல இடங்களிலும் பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊருபொக்க, பொலனறுவை ,பொரலஸ்கமுவ ,வெலிவிட்ட , அனுராதபுரம், கடுவெல,மாலபே ஆகிய பகுதிகளில் இவ்வாறான பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் முழுமையான இனவாத்தை விதைக்கும் இந்த செயலை ஒரு குழு முன்னின்று செயற்படுவதும் குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - http://bit.ly/2wec6wb via Kalasam
ஞானசார விடுவிக்கும் ஜனாதிபதிக்கு எதிராக சட்டத்தரணிகள் குழு..!
- Get link
- X
- Other Apps
ஞானசார தேரர் விடுதலையை ஆட்சேபித்து ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்ல சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழுவொன்று தயாராகி வருகிறது.ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ளார் ஞானசார தேரர்.அதற்கான ஆவணங்கள் தயாராகியுள்ளன. இந்நிலையில் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை பெற்ற ஞானசார தேரரை விடுவித்தமை தவறான முன்னுதாரணம் என தெரிவித்து சிரேஷ்ட சட்டத்தரணிகள் பலர் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளனர்.இது தொடர்பிலான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனால் நிறைவேற்று அதிகாரத்திற்கும் நீதித்துறைக்குமிடையில் மீண்டுமொரு மோதல் ஏற்படும் நிலை உருவாகவுள்ளது. from Ceylon Muslim - http://bit.ly/2EuJDGW via Kalasam
முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை, விதைக்கும் ஆசிரியர்கள்..!!
- Get link
- X
- Other Apps
பொறாமைத்தீ அணையட்டும். முஸ்லிம்களின் மீது காழ்ப்புணர்ச்சியை நெல்லைப்போல சிறுவர்களின் மனதில் விதைக்கின்றார்கள்.அவை முற்செடிகளாக வளர்ந்து மரமாகும் என்பதை எத்தனை பெற்றோர் ஆசிரியர்கள்,பாதுகாவலர்கள் உணர்வார்கள்?. பொய்,களவு,கொலை போன்றன மாபாதகச்செயல்கள் போன்றே இனவாதமும் பாதகச்செயல் என்பதை கற்றுக்கொடுக்கக்கூடாதா? அன்றாட வாழ்வில் மனிதன் அற்பமான புழுவைப்போல நடந்து கொள்வதனை காணும்போது உள்ளம் பதைக்கின்றது.தான் பெற்ற மகளை வன்புணர்வு செய்யும் தந்தை,தன் தாய் தந்தையர்,உடன்பிறப்புக்களை கொலை செய்யும் பாதகர்கள் உள்ள சமூகத்தில் அடுத்த சமூகத்தின் நலம் எம்மாத்திரம்? ஒரு ஆசிரியன் எவ்வாறு மாணவர்கள் மத்தியில் இனவாதத்தை விதைக்கின்றான் என்பதற்கு சான்றொன்றை இணைத்திருக்கின்றேன். அட்லஸ் எனப்படும் உபகரணப்பெட்டி வியாபாரம் முஸ்லிம் வியாபாரி ஒருவருக்கு சொந்தமானது, இனிமேல் வகுப்பறைக்கு அட்லஸ் பொருட்களை கொண்டுவரவேண்டாம் என மாணவர்களுக்கு எச்சரிக்கும் ஆசான் ,ஏனையவர்களையும் அதனை தொடருமாறு கேட்டிருக்கின்றான் என்பதனைத்தான் நீங்கள் பார்க்கின்றீர்கள். முஸ்லிம் மக்களின் முதுகெலும்பான பொருளாதாரத்தை அழிப்பதற்காக தி...
ஞானசார தேரரை விடுவித்தமை தவறானது .!
- Get link
- X
- Other Apps
ஞானசார தேரரை விடுவித்தமை தவறானது .! நீதிமன்றம் செல்லத் தயாராகும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழு..!! ஞானசார தேரர் விடுதலையை ஆட்சேபித்து ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்ல சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழுவொன்று தயாராகி வருகிறது. ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ளார் ஞானசார தேரர்.அதற்கான ஆவணங்கள் தயாராகியுள்ளன. இந்நிலையில் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை பெற்ற ஞானசார தேரரை விடுவித்தமை தவறான முன்னுதாரணம் என தெரிவித்து சிரேஷ்ட சட்டத்தரணிகள் பலர் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளனர்.இது தொடர்பிலான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனால் நிறைவேற்று அதிகாரத்திற்கும் நீதித்துறைக்குமிடையில் மீண்டுமொரு மோதல் ஏற்படும் நிலை உருவாகவுள்ளது. from Ceylon Muslim - http://bit.ly/2WiWJAZ via Kalasam
அதிர்வில் கண்ணீர் விட்டழுதார் அமைச்சர் ரிஷாத்..!!
- Get link
- X
- Other Apps
நா ட்டில் இடம்பெறும் அசாதாரண சூழ்நிலையில் இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களை அடிமைத்தனமாகப் பார்க்கும் பெரும்பன்மை இனத்தவர்கள் சிலரின் இன்றய நிலைப்பாட்டினைப் பார்க்கின்றபோது மிக வேதனையாக இருக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் இன்று தொலைக் காட்சி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டார். வசந்தம் தொலைக் காட்சியின் அதிர்வு என்னும் அரசியல்வாதிகளின் வாராந்த கருத்துப் பரிமாறல் நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்ச்சி அறிவிப்பாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாற...
கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களின் துயரில், துஆக்களோடு பங்குகொள்வோம் (ஒரு உருக்கமான பதிவு)
- Get link
- X
- Other Apps
- Rauf Hazeer - கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுதலை செய்வதற்கான தகவல் திரட்டலை சில தினங்களாக செய்து வருகிறோம். இன்றைய சம்பவம் : 1 தனது மகனது கைது சம்பந்தமான விபரங்களுடன் இன்று அக்குறனையை சேர்ந்த ஒருவர் வந்தார் . SLTJ அங்கத்தவறான 22 வயதேயான அந்த இளைஞன், SLTJ பயிற்சி முகாம்களில் தான் பெற்ற நற்சான்றிதழ்கள் , வெளியீடுகள் போன்றவற்றை வீட்டில் வைத்திருப்பதன் ஆபத்தை உணர்ந்து அவற்றை இயக்கக் காரியாலயத்தில் வைக்க எடுத்துக் கொண்டு போயுள்ளார். வழியில் , அவருக்கான விதி காத்துக்கொண்டிருந்திருக்கிறது. சோதனைக்காக இடைவழியில் மறிக்கப்பட்ட அவர் ஆவணங்களுடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு இப்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். போலீசாரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வாசித்துப் பார்த்தேன். தான் தௌஹீத் ஜமாஅத் அங்கத்தவர் , பல பயிற்சி முகாம்களில பங்கேற்றுள்ளேன் , என்பதுடன் தற்போது மாவனல்லையில் பிரத்யேக நிறுவனம் ஒன்றில் தொழிற்பயிற்சி பெறுவதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இங்கே தான் பிரச்சினை சிக்கலாகி உள்ளது. அவர் ...
”அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை” இராணுவத்தளபதி
- Get link
- X
- Other Apps
ஊடகப்பிரிவு அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தொலைபேசியில் தன்னுடன் தொடர்புகொண்டு கைது செய்யபட்ட ஒருவர் தொடர்பிலான கோரிக்கை ஒன்றை மட்டுமே தன்னிடம் விடுத்தாகவும், அவர் தனக்கு எந்த அழுத்ததையும் பிரயோகிக்கவில்லை எனவும் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தன்னிடம் கூறியதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க, பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். அமைச்சர் ரிஷாத் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (22) இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே ஆசு மாரசிங்க இவ்வாறு கூறினார். இராணுவத்தளபதியுடன் தான் தொலைபேசியில் தொடர்புகொண்டு நடந்தவை பற்றி கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக ஆசு மாரசிங்க குறிப்பிட்டார். இதேவேளை, பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள அத்தனை குற்றச்சாட்டுக்களும் சுத்தப்பொய் எனவும் தன்னை பழி வாங்குவதற்காக இவ்வாறான போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி தமது அரசியல் தேவையை சில எம்.பிக்கள் அடைந்து கொள்வதற்கு முயற்சிப்பதற்காகவும் தெரிவித்தார். தனக்கு ஆலோசகராக மெளலவி எ...
கிரேண்பாஸ் பகுதியில் இரு குழுவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழப்பு..!
- Get link
- X
- Other Apps
கிரேண்பாஸ் - வெஹெரகொடல்லே – கம்பித்தொட்டுவ பகுதியில் இரு குழுவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு குழுக்களுக்கு இடையில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் 46 வயதுடைய ஒருகொடபுர பகுதியை சேர்ந்த சுகத் இந்தரஜித் என்பவரே உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்றை விற்பனை செய்யும்போது ஏற்பட்ட முறுகல் நிலையே மோதலாக மாறி உள்ளதுடன், பிரதான சந்தேக நபரான டேனி கிளாஸ் என்பவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். from Ceylon Muslim - http://bit.ly/2VVU3d8 v...
பாடகர் மதுமாதவ அரவிந் குழுவினர் பயணித்த வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது..!
- Get link
- X
- Other Apps
அண்மையில் மினுவாங்கொட பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபரின் வாகனத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். பாடகர் மதுமாதவ அரவிந்த உட்பட குழுவினர் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் வாகனத்தையே பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கிரில்லவல பிரதேசத்தில் குறித்த வாகனத்தை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். HJ 4747 என்ற இலக்கத்தை கொண்ட வாகனமே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வாகனத்தின் உரிமையாளர் அந்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. from Ceylon Muslim - http://bit.ly/2Wdp9fV via Kalasam