Posts
Showing posts from July, 2019
உலமா சபையையுடன் பேச்சு நடாத்திய உலக முஸ்லீம் லீக் அமைப்பின் செயலாளர்
- Get link
- X
- Other Apps
உலக முஸ்லீம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் அஷ்-ஷைக் முஹமத் பின் அப்துல்கரீம் அல்-ஈசா அவர்கள் இன்று(31.07.2019) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டு பேச்சுவார்தைகளில் ஈடுபட்டார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2GQz3v9 via Kalasam
புர்கா வுக்கு முழுமையாக தடை: அமைச்சரவை பத்திரம் தயார்
- Get link
- X
- Other Apps
பொது இடங்களில் புர்கா அணிதலை தடை செய்யும் வகையில் நீதியமைச்சர் தலதா அத்துகோறள நேற்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் விவாதிக்கப்படவுள்ளது. எனினும், இதனை நேற்றைய தினமே உடனடியாக நிறைவேற்றிக் கொள்ள முயற்சி இடம்பெற்றிருப்பதாக அறியமுடிகிறது. குறித்த பத்திரத்தில் உள்ள விபரங்களை புரிந்து கொள்ள சற்று கால அவகாசம் தேவையென அமைச்சர் ரவுப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்த போதிலும் அதற்கு மறுப்பு தெரிவித்த சில அமைச்சர்கள், நேற்றே உடனடியாக அதனை நிறைவேற்ற வேண்டும் என அழுத்தம் பிரயோகித்துள்ளனர். இந்நிலையிலேயே, ஈற்றில் ஒரு வார காலம் மாத்திரம் அவகாசம் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2YwCn4z via Kalasam
ஹக்கீம் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்வது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது - ஹரீஸ்
- Get link
- X
- Other Apps
கல்முனை, தோப்பூர் மற்றும் வாழைச்சேனை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரையில் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் அமைச்சு பதவிகளை ஏற்கப் போவதில்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பில் நேற்று முன்தினம் (29) இரவு கல்முனையில் கூட்டமொன்று இடம்பெற்றதோடு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு அமைச்சு பொறுப்புக்களை ஏற்க கூடாது என தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அமைச்சர் வஜிர அபேவர்தனவுடன் சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறினார். கல்முனை, தோப்பூர், வாழைச்சேனை பிரதேச செயலகம் தொடர்பில் இறுதித் தீர்வு காணப்பட வேண்டும். திகன, மினுவாங்கொட, குருநாகல் பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவது போன்று விடயங்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் பட்சத்திலே அமைச்சுப் பதவிகளை ஏற்போம் எனவும் குறிப்பிட்டார். கல்முனை விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படும் விட...
முபீனின் ஒப்பந்த மீறல் : SLMC ஆதரவாளர்கள் எதிர்ப்பு வலுக்கிறது
- Get link
- X
- Other Apps
ஆரம்பகால அரசியல் என்பது பெரும்பாண்மைக் கட்சிகளோடு முஸ்லிம்கள் இணைந்ததாக இருந்தாலும், வட-கிழக்கில் தமிழர்களின் கட்சிகளோடு இணைந்ததாக முஸ்லிம்களின் அரசியல் நகர்வுகள் இருந்தது. காலத்திற்குக்காலம் தமிழ் பேசும் மக்கள் என்ற வாசகத்திற்குள் முஸ்லிம்களின் தனித்துவம் மறைக்கப்பட்டு, தமிழர்களுக்கான தீர்வுகள், நிலப்பங்கீடு, அபிவிருத்திகளில் தமிழர்களிடம் எஞ்சியதையே முஸ்லிம்கள் அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையிருந்தது. கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முஸ்லிம் தலைமைகள் தேர்தல் காலங்களில் கிழக்குக்கு வருகை தருவதும், அதன் பின்னர் அவர்களுக்கு வாக்களித்த மக்கள் தமது தேவைகளை நிறைவேற்ற கொழும்புக்கு அலைவதுமான ஒரு காலம் இருந்தது. இது மாற்றப்பட வேண்டும். எமது உரிமைகளை நாம் வெல்ல வேண்டுமென்ற சிந்தனை மறைந்த அஷ்ரப் அவர்களுக்கு உருவாகி அஷ்ஷஹீட் அஹமட் லெப்பையின் ஆலோசனையில் கருக்கட்டியது முஸ்லிம் காங்கிரஸ். காலத்தின் தேவை, முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கேற்பட்ட நெருக்குவாரங்கள் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற விருட்சம் காத்தான்குடியில் உதயமானது. அம்பாரை மாவட்டத்தில் பெரும்பான்மைக் கட்சிகளின் முஸ்ல...
தேர்தல்களை இலக்காகக் கொண்டே தன் மீது தொடர்ந்தேர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் : பதவியேற்பில் ரிஷாத்
- Get link
- X
- Other Apps
ஊடகப்பிரிவு தேர்தல்களை இலக்காக கொண்டும், அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் இனவாதக் கூட்டம் என் மீது தொடர்ச்சியான குற்றாச்சாட்டுக்களை சுமத்தி, தாம் அரசியல் ஆதாயம் பெற முயல்வதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் இன்று (30) காலை கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் கடமைகளை பெறுப்பேற்ற பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் என்னை தொடர்புபடுத்தி சில இனவாதிகள் பல்வேறு குற்றாச்சாட்டுக்களை சுமத்தினர். ஊடகங்களில் பிரமாண்டமான பிரசாரங்களை மேற்கொண்டனர். நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தனர். இதனால் என் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு பொலிஸ் திணைக்களம் உயர்மட்ட பொலிஸ் குழு ஒன்றை அமைத்து குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை எனவும் பொய்யானவை எனவும் விசாரணைகளிலிருந்து வெளிப்படுத்தப்பட்டது. தெரிவுக்குழுவிலும் சாட்சியாளார்கள் இதனை மீண்டும் தெளிவுபடுத்தினர். அதுமாத்திரமின்றி இந்த தாக்குதலின் விளைவாக முஸ்லிம் சமூகத்தின் மீதும் கைவிரல...
5 மில்லியனை இலங்கைக்கு வழங்கிய உலக முஸ்லீம் லீக்
- Get link
- X
- Other Apps
நேற்று (30) கொழும்பில் உள்ள தாமரைத் தடாகத்தில் நடைபெற்ற உலக சமாதான இஸ்லாமிய மாநாடு ஆளுனா் ஏ.ஜே.எம். முசம்மில் மற்றும் ஜனாதிபதி உலக முஸ்லிம் லீக்செயலாளா் நாயகம் மற்றும் அவருடன் வருகை தந்த பிரநிதிகள் முஸ்லிம் வெளிநாட்டுத் துாதுவா்களும் கலந்து கொண்டனா். இங்கு வருகை தந்திருந்த உலக முஸ்லிம் லீக் செயலாளா் நாயகம் அமேரிக்க டொலா் 500 மில்லியன் ஆதவாது 100 கோடிருபாவை உயிா்நீத்த மக்களுக்கு வழங்குவதாக அவா் உறுதியளித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2LQC0j9 via Kalasam
சர்வத மத மாநாட்டில் சோபித தேரருக்கு தக்க பதில் கொடுத்த ரிஸ்வி முப்தி
- Get link
- X
- Other Apps
அரசை 7 நாட்களுக்குள் வீழ்த்தினால் நான் அரசியலிருந்து ஓய்வு : ரதன தேரவுக்கு சாலி சவால்
- Get link
- X
- Other Apps
வணக்கத்திற்குரிய அத்துரலியே ரத்ன தேரர் 7 நாட்களுக்குள் அரசாங்கத்தை தோல்வியடைய செய்தால் தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக மேல் மாகாண முன்னாள் ஆளுனர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். அவர் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக கொண்டுவரும் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரத்ன தேரர் தலதா மாளிகை முன்னிலையில் உண்ணாவிரதத்தில் இருந்ததும் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஒரு சூழ்ச்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2yo0A2d via Kalasam
ஹக்கீம், ரிஷாத் உள்ளிட்ட 4வர் அமைச்சராக பதவியேற்றனர்
- Get link
- X
- Other Apps
அமைச்சுப் பதவிகளைத் துறந்த அமைச்சர்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரைத் தவிர ஏனையோர் மீண்டும் அமைச்சர்களாக மற்றும் இராஜாங்க பிரயமைச்சர்களாகப் பதவிப் பிரமாணஞ் செய்து கொண்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர்கள் .இன்று (29) சத்தியப் பிரமாணஞ் செய்து கொண்டனர். இதன்படி நகர திட்டமிடல். நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சராக ரவூப் ஹக்கீமும் கைத்தொழில், வர்த்தகம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் நீண்ட காலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல் அமைச்சராக ரிஷாத் பதியுதீனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அமீர் அலியும் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சராக அப்துல்லாஹ் மஹ்ரூபும் பதவியேற்றனர். இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எச்.எம்.எம். ஹரீஸ், அலி ஸாஹிர் மௌலானா, பைசல் காசிம் ஆகியோர் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்கவில்லை. ...
நிந்தவூரில் 10 மாத இரட்டைக் குழந்தைகள் வெட்டிக் கொலை
- Get link
- X
- Other Apps
நிந்தவூரில் 10 மாத வயதான இரட்டைக் குழந்தைகள் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளன. இக்குழந்தைகளின் உடல்கள் வீடொன்றின் குளியலறையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரான, இக்குழந்தைகளின் தாய் (26) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2Mmu2xR via Kalasam
முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் பொறுப்புக்களை ஏற்குமாறு பௌசி வேண்டுகோள்
- Get link
- X
- Other Apps
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டிலும், முஸ்லிம் சமூகத்தின் மீதும் ஏற்பட விருந்த பேராபத்தை தவிர்க்கும் வகையில் பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள், மீண்டும் தங்களது பதவியை பொறுப்பேற்குமாறு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம். பௌசி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தனது வேண்டுகோளில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டினதும், சமூகத்தினதும் பாதுகாப்பைக் கருதி தமது பதவிகளை துறந்த முஸ்லிம் அமைச்சர்களின் செயற்பாடு குறித்து இந்த சந்தர்ப்பத்தில் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்கொள்கின்றேன். மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுக்கள் என பொலிஸ் திணைக்களம், குற்றத்தடுப்பு பிரிவு ஆகியன விசாரணைகளின் பின்னர் வெளிப்படுத்தி இருக்கின்றது. அது மத்திரமின்ற பாராளுமன்ற தெரிவுக்குழுவிலின் தலைவரின் அறிவிப்பும் அதனை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் தெரிவுக்குழுவில் தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு அவர் பூரண விளக்கமளித்துள்ளதோடு தெரிவுக்குழுவி...
சஹ்ரானின் ஆள் என முஸ்லிம் ஒருவரை திட்டிய சண்டியர் மேர்வின்!
- Get link
- X
- Other Apps
சஹரானின் ஆக்கிரமிப்பை விடவும் மிகப் பெரிய ஆக்கிரமிப்பையே மேற்கொண்டுள்ளதாகவும், இன்று அவர் இந்த இடத்தில் இருக்குமாயின் மரத்தில் கட்டி வைத்திருப்பேன் எனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கெகிராவ, கலாவெவ, விஜிதபுர பிரதேசத்தில் ஒரு பகுதியில் காணப்படும் புராதன நினைச்சின்னங்கள் உள்ள பிரதேசத்தை, பெக்கோ இயந்திரத்தைப் பிரயோகித்து அழித்து, அங்கு மாங்காய் மற்றும் தென்னை மரங்களை நாட்டியுள்ளதாக கூறப்படும் இடத்தை நேற்று மாலை மேர்வின் சில்வா நேரில் சென்று கண்காணிப்புச் செய்துள்ளார். இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். புராதன பிரதேசங்களை பாதுகாப்பதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் அரசாங்கத்திடமும், எதிர்க் கட்சியினரிடமும் இல்லை. இதனாலேயே இவ்வாறு நடைபெறுகின்றது. நான் வருவதை கேள்வியுற்று இந்த சேதத்தை விளைவித்தவர் தலைமறைவாகியுள்ளார். அவர் இந்த இடத்தில் இருந்திருந்தால் மரத்தில் கட்டியிருப்பேன். இந்த காணியை ஒரு சிங்களவர் தான் எடுத்துள்ளார். இதன் பின்னர்தான் சஹரானின் பரம்பரையில் உள்ள முஸ்லிம் ஒருவர் எடுத்துள்ளார். நான் அந்தப் பேய்க்கும் ச...
முஸ்லிம் எம்.பிக்கள் அமைச்சு பதவிகளை ஏற்க தயார் : முஜிபுர் ரஹ்மான்
- Get link
- X
- Other Apps
இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்பது என ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளதாகவும், இந்த நியமனத்தை பெற்றுக் கொள்வதற்கான நேரத்தை ஜனாதிபதி அறிவிப்பதே எஞ்சியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று மாலை அலரி மாளிகையில் நடாத்திய விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார். பெரும்பாலும் நாளை அல்லது நாளை மறுதினம் இந்த பதவி ஏற்பு நிகழ்வு நடைபெறலாம் எனவும், பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனும் அன்றைய தினம் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2yjrwA5 via Kalasam
புதிய அரசியலமைப்பு: சென்ற பஸ்ஸுக்கு கை காட்டும் ஹக்கீம் : முஸ்லிம் உலமா கட்சி
- Get link
- X
- Other Apps
புதிய அரசியலமைப்பு திருத்தம் மக்கள் வழங்கிய ஆணையை அரசு நிறைவேற்றவில்லை என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சொல்வது பேருந்தை போகவிட்டுவிட்டு கையை காட்டும் ஹக்கீமின் வழமையான பேச்சாகும் என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது. முஸ்லிம் உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவ் அறிக்கையில், இந்த ரணில் அரசாங்கம் என்பது 99 வீதம் முஸ்லிம்கள் ஆதரவளித்து கொண்டு வந்த அரசாங்கமாகும். இலங்கை வரலாற்றில் எந்த அரச காலத்திலும் அனுபவிக்காத கொடுமைகளை இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாக தென்னிலங்கை முஸ்லிம்கள் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு முன்பும் பின்பும் அனுபவித்து விட்டனர். இந்த ஆட்சியை கொண்டு வந்த முஸ்லிம் காங்கிரஸ் எப்போதோ முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால், தமக்கு பதவிகள் பெற்றுக்கொண்டு உல்லாசம் அனுபவித்தார்களே தவிர சமூகத்தின் எந்தவொரு நன்மையையும் பெற்றுத்தரவில்லை. இடையில் பிரதமர் குழப்பம் வந்த போதாவது இவர...
Dr.ஷாபி விவகாரம்: குருணாகல் வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக நீதிமன்றில் முறைப்பாடு
- Get link
- X
- Other Apps
குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு எதிராக நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் சஹாப்டீன் சாபி தொடர்பில் விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர். குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளர் சரத் ரணவீர பண்டார என்பவருக்கு எதிராகவே இவ்வாறு நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் சாபீ கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டதாகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மிகவும் பக்கச்சார்பாகவும் உண்மைக்கு புறம்பான வகையிலும் பணிப்பாளர் தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2ylvesU via Kalasam
தனது பெயரை மாற்றிய இனவாதி ஞானசார
- Get link
- X
- Other Apps
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தனது மாற்றிக்கொள்ள நேரிட்டுள்ளதாக அந்த அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். பேஸ்புக் நிறுவனம் ஞானசார தேரரின் பெயரை தடை செய்துள்ளதே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். கலகொட அத்தே ஞானசார என்ற பெயரை பேஸ்புக்கில் பதிவிடும் போது அது தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக அவரது பெயரை மாற்ற தீர்மானித்துள்ளோம். இதனால், இனிவரும் காலங்களில் ஞானசார தேரர், எமது பிக்கு என்ற புனைப் பெயரில் அழைக்கப்படுவார் எனவும் டிலந்த விதானகே குறிப்பிட்டுள்ளார். ஆத்திரமூட்டும் பதிவுகளை பேஸ்புக் நிறுவனம் தடை செய்துள்ளது. கலகொட அத்தே ஞானசார என்ற வார்த்தை ஆத்திரமூட்டும் வார்த்தை என பேஸ்புக் நிறுவனத்திற்கு இலங்கையில் உள்ள இணைப்பதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். இதன் காரணமாகவே அவரது பெயர் பதிவிடும் போது அதனை பேஸ்புக் வலைத்தளம் ஏற்றுக்கொள்ளாது தடுப்பதாக தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2MkautS via Kalasam
ரத்ன தேரர் சட்டத்தைக் கையில் எடுக்கப் போவதாக எச்சரிக்கை
- Get link
- X
- Other Apps
கர்ப்பப்பையை பரிசோதிக்க போதிய உபகரணங்கள் அரசிடம் இல்லாது போனால் பொது மக்கள் பணத்திலிருந்து அதனைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார். வைத்தியர் சாபி தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை உரிய தரப்புக்கு கண்டறிய முடியாவிடின், தானும் குருணாகல் மக்களும் இணைந்து அவற்றை வெளிப்படுத்த தயாராகவுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார். வைத்தியர் சாபியினால் பாதிக்கப்பட்டவர்களை மேற்கொண்ட பரிசோதனை தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் திருப்பதிப்படவில்லை. இருப்பினும், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் இதில் தமது திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். மருத்துவம் தொடர்பான விடயத்தில் அரச மருத்துவ அதிகாரிகளை விடவும், சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு என்ன ஞானம் இருக்கின்றது எனவும் தேரர் கேள்வி எழுப்பினார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift....
ரணிலை சந்தித்த முஸ்லிம் எம்.பிக்கள்
- Get link
- X
- Other Apps
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று (28) மாலை அலரிமாளிகையில் வைத்து சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீது அடர்ந்தேறிய இனவாத வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டைப் பெற்றுக் கொடுப்பது இச்சந்திப்பின் நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார். இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை மீண்டும் ஏற்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் ஒன்று எட்டப்படவில்லையெனவும் அவர் கூறியுள்ளார். ஆனால் விரைவில் பதவியேற்றக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/32VDldX via Kalasam
ஹக்கீம் டயஸ்போராவின் கைக்கூலி : அதாவுல்லா சாடல்
- Get link
- X
- Other Apps
தமிழர்கள் கல்முனை பிரதேச செயலகம் தான் கேட்கிறார்கள் ஆனால் தமிழ் மக்களுக்கு தேவை பிரதேச சபை அவர்கள் அதைக் கேட்கவில்லை. மஹிந்த ஒரு காலத்தில் ஜனாதிபதியாக வருவார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒரு காலகட்டத்தில் தீர்க்கதரிசனமாக தெரிவித்திருந்தார் என தேசிய காங்கிரஸ் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் தெரிவித்துள்ளார். தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை புதிய உறுப்பினராக தெரிவாகிய சப்றாஸ் மன்சூர் கௌரவிப்பு விழா நேற்றைய தினம் மாலை 8 மணியளவில் கல்முனை பிரதான வீதி நகர மண்டபத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தனது கருத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒரு காலகட்டத்தில் தீர்க்கதரிசனமாக மஹிந்த ஒரு காலத்தில் ஜனாதிபதியாக வருவார் என தெரிவித்திருந்தார். அது எப்போது என்றால் இந்தப் பகுதியிலே இருக்கின்ற தொழில்நுட்பக் கல்வி பயிற்சி கல்லூரிகளை மஹிந்த ராஜபக்ஷ அமைச்சராக இருந்து திறந்து வைக்க வந்த போது இவ்வாறு கூறினார். அது போன்று ...
முஸ்லிம் திருமண சட்டம் : எச்சரிக்கும் முஸ்லிம் பெண்கள் அமைப்பு
- Get link
- X
- Other Apps
முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் ஆக்கபூர்வ மறுசீரமைப்பு இடம்பெறாமல் போகக்கூடிய ஆபத்து இருப்பதாக நான்கு முஸ்லிம் அமைப்புகள் எச்சரித்துள்ளன. மறுசீரமைப்பு இடம் பெறாமல் போகுமேயானால் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் மற்றும் காதி நீதிமன்ற முறைமைகளின் கீழ் முஸ்லிம் பெண்கள் அநீதியையும் பாரபட்சத்தையும் தொடர்ந்தும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவை வருத்தம் தெரிவித்திருக்கின்றது. கொழும்பு – இலங்கை மன்றக் கல்லூரியல் இன்று (26) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே நான்கு அமைப்புக்களினதும் பிரதிநிதிகள் அவ்வாறு இவ்வாறு தெரிவித்தனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பேரியல் அஷ்ரஃப் உட்பட முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நிதியம் (புத்தளம்) , ஆராய்ச்சிக்கும் , வலுவூட்டலுக்குமான பெண்கள் அமைப்பு (மட்டக்களப்பு), முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்தக் குழு, பெண்கள் நடவடிக்கை வலையமைப்பு (வடக்கு – கிழக்கு ) ஆகிய நான்கு அமைப்புகளையும் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர். இதன்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் வருமாறு:- முஸ்...
மஹிந்த கட்சியின் அம்பாறை அமைப்பாளராகிறார் ஜெமீல்.?
- Get link
- X
- Other Apps
அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் தனது அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாய்ந்தமருதைச் சேர்ந்த கலாநிதி.ஏ.எம்.ஜெமீல் விரைவில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராக பதவியேற்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. வியூகம் from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2ypqq69 via Kalasam
ரிசாத் பதியுதீன் பற்றி போலி செய்திகளை சமூக வலைத்தளங்களிள் வெளியிட வேண்டாம் : ஹரீஸ்
- Get link
- X
- Other Apps
சமூக வலைத்தளங்களில் பொய்யான குற்றச்சாட்டுக்களையும், இட்டுக்கட்டப்பட்ட கட்டுகதைகளையும் கொண்டு முஸ்லிம் தலைவர்களை விமர்சனம் செய்வதை அரசியல் கட்சி சார்பு ஆதரவாளர்கள் தவிர்க்க வேண்டும். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும், முஸ்லிம் சமூகத்தின் மீது இடம்பெற்ற அநீதிகளுக்கு எதிராகவும், சமூகத்தின் ஒற்றுமைக்காகவும் கடந்த ஜூன் மாதம் 03ம் திகதி எடுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்தல் முடிவின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக சமூகத்தின் நலனுக்காக குரல்கொடுத்து வருகின்றோம். முஸ்லிங்களின் நிம்மதியான இருப்பு, பாதுகாப்பு, போன்ற பல விடயங்களுக்கு இந்த ஒற்றுமை மிகப்பெரும் சக்தியாக உள்ளது. கடந்த கால சம்பவங்களின் போது சந்தேகத்தில் கைதான அப்பாவி முஸ்லிம் மக்களின் விடுதலை, குருநாகல் போன்ற இடங்களில் இடம்பெற்ற வன்முறை ...
பலோப்பியன் குழாய் நிபுணராக ரத்ன தேரர்!
- Get link
- X
- Other Apps
இஸ்லாமியர்களுக்கான சட்டமான ஷரியா சட்டத்தில் மாற்றங்களை செய்ய எவருக்கும் இடமளிக்க போவதில்லை என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில், ஷரியா சட்டம் குறித்து புரிந்து கொள்ள வேண்டும். அதனை தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. அந்த சட்டம் என்பது முஸ்லிம் மக்களுக்குரிய சட்டம். அதனை வேறு இனத்தவர்களுக்கு அமுல்படுத்துவதில்லை. அந்த சட்டம், வேறு எவரையும் பாதிக்காது.அந்த சட்டத்தை நாங்கள் பின்பற்ற வேண்டுமே அன்றி, அரசாங்கமோ, அமைச்சர்களோ பின்பற்ற வேண்டிய சட்டமல்ல. இதனால், ஷரியா சட்டத்தில் கைவைக்க நாங்கள் இடமளிக்க மாட்டோம். மருத்துவர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக குருணாகல் நகரசபை ஊழியர்களை பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அத்துடன் பெண்களின் கர்ப்பப்பையின் பலோப்பியன் குழாய் தொடர்பான நிபுணராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் மாறியுள்ளார்.பலோப்பியன் குழாய் எப்படி முறுக்கப்பட்டது என்பதை அவர் அறிவார். அத்துடன் விமல் வீரவங்ச பலோப்பியன் சம்பந்தமான விடயத்தில் பி.எச்....
ACMC கட்சியிலிருந்து விலகுவதாக ஜெமீல் அறிவிப்பு !
- Get link
- X
- Other Apps
அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இருந்து ஜெமீல் விலகினார்; கட்சியின் தலைவருக்கு வரைந்த இராஜினாமா கடிதம் வெளிவந்துள்ளது... அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் நான் வகித்து வருகின்ற அனைத்து பதவிகளில் இருந்தும் உறுப்புரிமையில் இருந்தும் இராஜினாமா செய்வதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை மிகவும் வருத்தத்துடன் தங்களுக்கு அறியத்தருகின்றேன். முஸ்லிம் சமூகத்திற்கான ஒரு விடுதலை இயக்கமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகழ வேண்டும் என்ற எனது பெரும் எதிர்பார்ப்பை சமகால கட்சியின் செயற்பாடுகளில் என்னால் கண்டுகொள்ள முடியவில்லை. இந்த விடயத்தில் கட்சியின் கீழ் மட்டத்தில் உள்ளவர்களின் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக எனக்குத் தெரியவில்லை. கட்சி செயற்பாடுகள் மற்றும் சமூகம் சார்ந்த விடயங்களில் கட்சியின் உயர்மட்டத்தினரிடையே மஷூரா செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்படாதிருப்பதானது எனக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நான் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவனாக இருந்த போதிலும் இவ்விடயங்களில் எனது வகிபாகம் கேள்விக்குறியாக இருப்பதை உணர்கின்றேன். மேலும், கட்சியின் சாய்ந்தமருது...
இன்று பதவி ஏற்கவில்லை என்பதை ஜனாதிபதியை சந்தித்து தெளிவுபடுத்திய ரிஷாத் : பெளசி
- Get link
- X
- Other Apps
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது அமைச்சு பொறுப்புக்களை ஏற்பதற்கு இன்று (26) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அங்கிருந்து அழைப்புக்கள் வந்திருந்த போதும், சமூகத்தின் அபிலாசைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடனும், ஜனாதிபதியுடனும் மீண்டும் சந்தித்து பேசிய பின்னரே, அமைச்சு பதவிகளை பொறுப்பேற்பது என்று நாம் நேற்று மாலை முடிவு செய்திருந்தோம் என்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிய தலைவர் ஏ.எச்.எம் பெளசி (எம்.பி) தெரிவித்தார். எனது இல்லத்தில் நேற்று (25) மாலை நானும் முன்னாள் அமைச்சர்களான ஹக்கீம், ரிஷாத் ஆகியோர் அரசாங்கத்தின் இந்த அழைப்பு தொடர்பில் சந்தித்து விரிவாக பேசியதை அடுத்தே இவ்வாறு ஒருமித்த முடிவை மேற்கொண்டோம். . அந்த வகையில் இன்று காலை அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க முடியாத நிலைமையை ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்துவதெனவும் அது தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து எமது ஒட்டுமொத்த முடிவை தெளிவு படுத்துமாறும் நானும் ஹக்கீமும் நேற்று (25) இரவு ரிஷாத் பதியுதீனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். எமது வேண்டு...
மருதமுனை முகம்மத் ஷர்மில் இன்று அதிகாலை வபாத்தானார்.
- Get link
- X
- Other Apps
மருதமுனையை சேர்ந்த முகம்மத் ஷர்மில் (34 வயது) இன்று அதிகாலை வபாத்தானார். இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் . குடும்பஸ்தரான இவர் ( இரு பிள்ளைகளின் தந்தை ) நேற்று இரவு கை வலிப்பதாக கூறி வைத்தியசாலை சென்று சிகிச்சை பெற்று திரும்பி உள்ளார். அவ்வேளை சிறு மாரடைப்பு ஏற்பட்டு இருந்துள்ளது. மீண்டும் பின்னிரவு நெஞ்சு வலிப்பதாக கூறி மருதமுனை வைத்தியசாலை நோக்கி செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வல்ல இறைவன் அன்னாரை ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்ப்பாயாக . ஆமீன். ஜனாஸா நல்லடக்க விபரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. - M.I.இயாஸ்தீன் -. from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2MhhOqm via Kalasam
அரபு மத்ரஸாக்களுக்குப் பொருத்தமான புதிய பாடத்திட்டம்!
- Get link
- X
- Other Apps
நாட்டில் இயங்கிவரும் அரபு மத்ரஸாக்களுக்குப் பொருத்தமான புதிய பாடத்திட்டமொன்று வடிவமைக்கப்படவுள்ளது. இந்தப் பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கு பங்களாதேஷின் மத்ரஸா கல்விச் சபையின் உதவி பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.பங்களாதேஷிலிருந்து வருகை தரவுள்ள மத்ரஸா கல்விச் சபையின் நிபுணர்கள் இருவர் இலங்கையின் முஸ்லிம் சமய விவகார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர். கல்வி அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன. இந்தப் பணிகளுக்காக பங்களாதேஷ் மத்ரஸா கல்விச் சபையைச் சேர்ந்த கலாநிதி மொஹமட் ஹுசைன் மஹ்மூத் பாரூக் மற்றும் கலாநிதி மஹ்சூம் பில்லா ஆகிய இருவரும் நாளை 27 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். அவர்கள் இருவரும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து இந்தப் பணிகளில் ஈடுபடவுள்ளனர். நாளை இலங்கை வருகை தரும் பங்களாதேஷ் மத்ரஸா கல்விச்...
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், ஷாபி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டும்
- Get link
- X
- Other Apps
குருநாகல் வைத்தியசாலையில் கடமையாற்றிய மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இரண்டரை இலட்சம் ரூபா பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள மருத்துவர் சாஃபி, பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் முற்பகல் 10 மணி தொடக்கம் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டுமென குருநாகல் நீதவான் உத்தரவிட்டுள்ளார். குருநாகல் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய வைத்தியர் சாஃபி மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். பயங்கரவாதக் குழுவொன்றிடம் நிதியைப் பெற்று, அந்தக் குழுவின் நோக்கங்களை நிறைவேற்றியமை மற்றும் அந்நிதியில் சொத்துக்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. மருத்துவர் சாஃபி கடந்த 11 ஆம் திகதி குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift....
இன்று பொதுஜன பெரமுனவுடன் இணையவுள்ள 10 கட்சிகள்..!
- Get link
- X
- Other Apps
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் புதிய அரசியல் கட்சிகள் இணைந்து அமைக்கும் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று(26) காலை 9.00 மணிக்கு கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் உள்ள, பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத 10 அரசியல் கட்சிகள் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளன. இதன்படி, மவ்பிம ஜனதா கட்சி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈழவர் ஜனநாயக முன்னணி, முஸ்லிம் உலமா கட்சி, லிபரல் கட்சி, நவ சிகல உறுமய, ஜனநாயக தேசிய கட்சி, ஐக்கிய இலங்கை மகா சபை, புமிபுத்ர கட்சி உட்பட அரசியல் கட்சிகள் பல ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளன. புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் 29 அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், இவற்றில் 10 அரசியல் கட்சிகளுடன் நாளை முதல் கட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் அறிவித்துள்ளன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA http...