ஜனாஸா வழக்கு; நீதிமன்றம் தலையிடக்கூடாது: சட்டமா அதிபர்
ஜனாஸா எரிப்புக்கு எதிரான அடிப்படை உரிமை வழக்குகள் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டின் சுகாதாரம் சம்பந்தப்பட்ட விடயத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என வாதிட்டுள்ளார் பிரதி சட்டமா அதிபர் நெரின் புள்ளே. முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க சமூகத்தினர் கொரோனா தாக்கத்தினால் உயிரிழக்கும் உடலங்களை அடக்கம் செய்யும் அடிப்படை உரிமையை நிராகரித்து அரசாங்கம் வெளியிட்ட சுற்றுநிரூபத்தை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இதில் நேற்றைய தினம் ஆஜராகி தமது தரப்பு வாதத்தினை முன் வைத்த நிலையிலேயே நெரின் புள்ளே இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும், வழக்குத் தொடுனர்கள் சார்பில் இவரது வாதம் பலவீனமானது என எடுத்துக் கூறப்பட்டுள்ளதுடன் சமய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என விரிவான விளக்கங்கள் முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2VlkRRv via Kalasam