அனைத்து தபால் நிலையங்களும் இன்றும், நாளையும் திறக்கப்படும்
நாடு முழுவதுமுள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் இன்றும் நாளையும் திறக்கப்படவுள்ளன. ஒகஸ்ட் மாதத்திற்காக வயது முதிர்ந்தோர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுப்பதற்கு வசதியாகவே இன்றும், நாளையும் தபால் நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக அஞ்சல் தலைமையகம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தலால் நாடு முழுவதுமுள்ள தபால் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் பொதுமக்களுக்கான நிவாரண உதவி நிதி, வயது முதிர்ந்தோருக்கான கொடுப்பனவு உள்ளிட்ட கொடுப்பனவுகளை வழங்குவதற்காகவே இந்த இரண்டு தினங்களிலும் நாடளாவிய ரீதியில் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. கொடுப்பனவுகளை தபால் நிலையங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அஞ்சல் தலைமையகம் தெரிவித்துள்ளது. கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள வரும் நபர்கள் முழுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தபால் நிலையங்களுக்கு வருகை தருமாறும் அஞ்சல் தலைமையகம் சம்பந்தப்பட்ட மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. லோரன்ஸ் செல்வநாயகம் from Ceylon Muslim - N...