Posts

Showing posts from January, 2022

நள்ளிரவு முதல் வருகிறது தடை

Image
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பயிற்சி வகுப்புகள் இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை முடியும் வரை பரீட்சார்த்திகளுக்கான டியூஷன் வகுப்புகள் நடத்துவது, வகுப்புகள் நடத்துவது, விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடத்துவது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இம்மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு மருத்துவமனைகளில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/VZDecIh2v via Kalasam

வடக்கு நடுகடலில் பதற்றம்: 21 மீனவர்கள் கைது

Image
தமிழக மீன்பிடி விசைப்படகுகளை வடமராட்சி மீனவர்கள் நடுக்கடலில் வைத்து சுற்றிவளைத்ததால் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதன்போது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளுடன் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். மீனவர்கள் நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது யாழ்பாணம் மாவட்டம் கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் கைது செய்து மயிலட்டி துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் - வடமராட்சியில் இருந்து பைபர் படகில் கடந்த 27ம் திகதி மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகின் மீது தமிழக மீனவர்களின் மீன்பிடி விசைப்படகு மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கியது. அதிலிருந்த இலங்கை மீனவர் மாயமானதாக இலங்கை மீனவர்கள் தரப்பில் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் படகு மூழ்கி மாயமான இரண்டு மீனவர்களில் ஒருவர் நேற்று (31) மாலை சடலமாக கரை ஒதுங்கினார். ...

பசில் ராஜபக்ஷ விடுதலை

Image
அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர், வழக்கொன்றில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(01) பிறப்பித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிக அரச நிதியைச் செலவிட்டு 5 மில்லியன் நாட்காட்டிகளை அச்சிட்ட சம்பவம் தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/eqH2mPaO6 via Kalasam

ஈஸ்டர் தாக்குதலை மூடி மறைக்கும் ஊடகங்கள்... உண்மை வெளிவரும் போது அவை அழியும் என்கிறார் கர்தினால்

Image
ஈஸ்டர் தாக்குதலை மூடி மறைக்கின்ற ஊடகங்கள் உண்மை நிலவரம் வெளிவரும்போது அழிந்து போகும் என்று பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். சில ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு தேவையான விதத்தில் தமது ஊடகங்களை கையாண்டு வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/V2MLD6sYF via Kalasam

12 மாவட்டங்களுக்கு டெங்கு அபாயம்...

Image
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு 12 மாவட்டங்கள் டெங்கு அபாயத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு 81 சுகாதார மருத்துவ உத்தியோகத்தர்கள் ஆளுகை பிரதேசம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், புத்தளம், காலி, யாழ்ப்பாணம், கண்டி, இரத்தினபுரி, அம்பாறை, திருகோணமலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களே இவ்வாறு அபாயமான பகுதிகளாக குறிப்பிடப்படுவதுடன், ஜனவரி மாதத்தில் மாத்திரம் 7000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/EYVeGsB53 via Kalasam

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயலிழந்த மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டது : மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் இன்று மீளாய்வு

Image
நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் செயலிழந்த மின் பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு தற்போது 160 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 900 மெகாவோட் உற்பத்தி செய்யும் குறித்த மின் உற்பத்தி நிலையத்தின் 300 மெகாவோட் மின்சாரத்தை வழங்கும் மின் பிறப்பாக்கி கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி செயலிழந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தேவையான எரிபொருள் இன்மை காரணமாக மின் வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் கடந்த வியாழக்கிழமை (27) இறுதியாக மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுக்கு அமைய இன்று (31) வரை மின் வெட்டு அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் (PUCSL) எடுக்கப்பட்ட குறித்த தீர்மானத்திற்கு அமைய, இன்றையதினம் மீண்டும் மீளாய்வு நடாத்தப்படவுள்ளதாக, அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நாட்டில் திட்டமிட்ட வகையிலான...

இலங்கையில் மீண்டும் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

Image
(ஜெ.அனோஜன்) இலங்கையில் மீண்டும் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிமான கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி நேற்றைதினம் மேலும் 1,056 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சுமார் மூன்று மாதங்களுக்கு பின்னர் ஒரே நாளில் பதிவான அதிகபடியான தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும். சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒமிக்ரோன் மாறுபாடு இப்போது இலங்கையில் பெரும்பாலான கொவிட் தொற்றாள்கள் தோற்றுவிக்கும் முக்கிய மாறுபாடாக மாறி வருகிறது. தற்சமயம் நாட்டில் உறுதிபடுத்தப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 610,103 ஆக உயர்வடைந்துள்ளது. இவற்றில் 578,051 பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர், நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 16,632 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொவிட் பாதிப்பினால் 15,420 உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, தற்ப...

கொவிட் தொற்றை வட்டார நோயாக கருதி பல நாடுகள் செயற்பட ஆரம்பம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Image
கொவிட்-19 நோய்த் தொற்று ஒரு பெருந்தொற்றாக (பெண்டெமிக்) பரவி சுமார் இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில் அதனை பருவகால காய்ச்சல் போன்ற ஒரு வட்டார நோயாக (எண்டெமிக்) கருதி பல நாடுகளும் செயற்பட ஆரம்பித்துள்ளன. ஒமிக்ரோன் வைரஸ் திரிபு வேகமாக பரவி வருகின்றபோதும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகள் பொது வாழ்வில் கட்டுப்பாடுகளை தளர்த்த ஆரம்பித்துள்ளன. இந்த வாரத்தில் கட்டுப்பாடுகளையும் தளர்த்தும் அறிவிப்பை டென்மார்க் வெளியிட்டுள்ளது. “கொவிட் தொடர்ந்தும் சமூகத்திற்கு ஆபத்தானதாக கருதப்படமாட்டாது” என்று டென்மார்க் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த வைரஸுடன் வாழ்வதற்கு சமூகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் சில நாடுகளின் அரசியல் தலைமைகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன. “கொவிட் அழிந்துவிடாது. அது பல ஆண்டுகளுக்கு சில நேரம் எப்போதும் எம்முடனேயே இருந்துவிடும். அதனுடன் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும்” என்று பிரிட்டன் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவிட் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார். “பெண்்டெமிக்கில் இருந்து எண்டெமிக் நிலைக்கு ஐரோப்பாவை நாம் வழிநடத்துக...

வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற ஐவர் கைது

Image
சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு, வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, டுபாய் நோக்கி நேற்று (29) பயணிக்க முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களில், 95000 அமெரிக்க டொலர், 18000 யூரோ, 37000 சவூதி ரியால் அடங்குவதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/8b5Dit1uJ via Kalasam

தங்கத்தின் விலை சரிந்தது

Image
உலக சந்தையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. இதற்கமைய, நாட்டில் 22 கரட் தங்கத்தின் விலை 114,300 ரூபாயாகவும், 24 கரட் தங்கத்தின் விலை 123,500 ரூபாயாகவும் காணப்படுகின்றது. உலக சந்தையில் தற்போது தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தாலும், எதிர்வரும் காலங்களில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/rZ76bM8Gs via Kalasam

தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரம் கொள்வனவு

Image
தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து குறுகிய காலத்திற்கு மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். இது தொடர்பான யோசனை நாளை அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். லங்கா ஐஓசி நிறுவனத்தின் ஊடாக மின்சார சபைக்கு நேரடியாக எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/TAWmxt9Ro via Kalasam

வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியவர் விளக்கமறியலில்!

Image
வீட்டின் மீது தாக்குதல் நடாத்தியதுடன், வீட்டில் இருந்தவர் மீதும் தாக்குதல் நடாத்தி அவருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 03 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை, குறித்த சம்பவம் பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர்களால் சமாதானமாக முடிக்க முற்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைக்கபெற்றதன் அடிப்படையில் பொறுப்பதிகாரி நேரடியாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேக நபரை கைது செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உரும்பிராய் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கோண்டாவிலில் உள்ள வீடொன்றினுள் புகுந்து வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டு, வீட்டில் இருந்தவர் மீதும் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார். குறித்த தாக்குதலில் தலையில் காயமடைந்த நபர் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது காயத்துக்கு 16 இழைகள...

சுகாதார வழிகாட்டுதல்களை திருத்துவதற்கு தீர்மானம் – சுகாதார அமைச்சு.!

Image
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு, தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை திருத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள அவர், பெரும்பான்மையான மக்கள் சுகாதார விதிமுறைகளை கவனமாகக் கடைப்பிடித்து வந்தாலும், சிலர் இந்த வழிகாட்டுதல்களை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர் என்றும் இது வழக்கு எண்ணிக்கையில் மற்றொரு எழுச்சிக்கு வழிவகுத்தது என்றும் கூறினார். அடுத்த இரண்டு வாரங்களில் பதிவாகும் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை இன்றைய நடத்தையைப் பொறுத்தே அமையும் என்பதால், பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் கொவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை 22 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் தொழில்நுட்ப சேவை இயக்குன...

சிங்கள நோயாளிகளினதும் எனது சமூகத்தினதும் பிரார்த்தனைகளால் அல்லாஹ் என்னைப் பாதுகாத்தான் : முதன் முறையாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டார் டாக்டர் ­சாபி

Image
“சிறைக் ­கூ­டத்தில் 1.5 லீற்றர் பிளாஸ்ரிக் தண்ணீர் போத்­த­லொன்­றினை வைத்­தி­ருப்­ப­தற்கு அனு­ம­தித்­தார்கள். அங்கு எவ­ருக்கும் தலை­யணை வழங்­கப்­ப­ட­வில்லை. என்னால் தரை­யி­ல் தலையை வைத்து தூங்க முடி­யாது. அதனால் பிளாஸ்ரிக் போத்­தலில் தண்­ணீரை நிரப்பி பின்பு சிறிது தண்­ணீரை குறைத்­து­விட்டால் அந்தப் போத்தல் நெகிழக் கூடி­ய­தாக இருக்கும். நான் இந்த பிளாஸ்ரிக் தண்ணீர் போத்­த­லையே தலை­ய­ணை­யாகப் பாவித்து 46 நாட்கள் சி.ஐ.டி.யில் உறங்­கி­யி­ருக்­கிறேன். அது எனக்கு பழக்­கப்­பட்­டு­விட்­டது.” டாக்டர் சாபி சிஹாப்­தீ­னுக்கு கடும் சோதனை 2019 மே மாதம் 23 ஆம் திகதி ஆரம்­ப­மா­னது. டாக்டர் சாபிக்கு எதி­ராக சிங்­கள மொழி பத்­தி­ரி­கை­யொன்று முன்­பக்­கத்தில் தலைப்புச் செய்­தி­யொன்­றினை வெளி­யிட்­டது. டாக்டர் சாபி சிஹாப்தீன் தேசிய தௌஹீத் ஜமா­அத்தின் உறுப்­பினர் எனவும் அச்­செய்தி குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­தது. இந்த தேசிய தௌஹீத் ஜமாஅத் குழு­வி­னரே உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தலை நடத்­தினர். அத்­தோடு டாக்டர் சாபி 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு சிகிச்­சை­யின்­போது கருத்­தடை செய்­த­தா­கவும் ...

அர்ப்பணிப்பணித்தால் புத்தாண்டைக் கொண்டாடலாம்

Image
சுகாதார கட்டுப்பாடுகள் இன்றி, இம்முறை தமிழ், சிங்களப் புத்தாண்டை கொண்டாட வேண்டுமெனில், மக்கள் இன்றிலிருந்தே அதற்கான அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும் என சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது. தமிழ்- சிங்களப் புத்தாண்டு கொண்டாடப்பட வேண்டுமா? இல்லையா என்பதை மக்களது செயற்பாடுகளுக்கு அமையவே தீர்மானிக்கப்படும் என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/FdgMKewSJ via Kalasam

சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் விரைவில் தீர்மானிக்கப்படும்

Image
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும் என  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார் from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://bit.ly/3IN4tjr via Kalasam

கொழும்பு, கம்பஹாவை அடுத்து மட்டக்களப்பில் அதிக ஆபத்து

Image
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 22 வயதுடைய யுவதி ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே.சுகுணன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பால் 40 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 1300 பேருக்கு நோய் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். கொழும்பு கம்பஹா, தவிர்ந்து கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒமிக்ரோன் தொற்று அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று 100க்கு மேற்பட்ட நோயாளிகளும் 20 க்கு மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களும் கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, மாவட்டத்தில் 40 க்கு அதிகமான கர்ப்பிணி தாய்மார்கள் ஒமிக்ரோன் வைரஸ் தாக்கத்தினால் பீடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 தினங்களில் 500 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து 1300 பேருக்கு நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் இந்த அபாயத்தை உணர்ந்தவர்களாக சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம் என்றார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://bit.ly/34hU7...

டொலர் கொள்ளையின் பிரதிபலனையே நாட்டு மக்கள் இன்று அனுபவித்து வருகின்றனர்.

Image
அபிவிருத்தி என்ற போர்வையில் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பாரிய டொலர் கொள்ளையின் பிரதிபலனையே நாட்டு மக்கள் இன்று அனுபவித்து வருகின்றனர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, இந்த பாவத்தை மென்மேலும் சுமக்காமல் அதற்கெதிராக முன்வாருங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுத்தார். “இல்லை, இல்லை, இல்லை” என்பதற்கு கொள்ளையே பிரதான காரணமாகும் எனத் தெரிவித்த அவர், தட்டுப்பாடுகளுக்கு பஞ்சமே இல்லை என்றார். நல்லாட்சியின் ஊழல் ஒழிப்பு குழுவால் அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சம்பிக்க ரணவக்க நேற்று (28) வாக்குமூலமளித்தார். அதன்பின்னர், அங்கிருந்து வெளியேறும் போதே, ஊடகங்களிடம் மேற்​கண்டவாறு தெரிவித்தார். எம்மை தண்டித்து, எமது ஜனநாயக உரிமைகளை பறிப்பதற்காக புதிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த ஆணைக்குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் இங்கு அழைக்கப்படவில்லை என்பதுதான் இதிலிருக்கும் பெரிய நகைச்சுவையாகும். சட்டமா திணைக்களத்தின் நீதிமன்றத்துக்கு பொறுப்பானவர்கள் இங்கு அழைக்கப்ப...

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கொரோனா தொற்று உறுதி!

Image
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இரண்டு உயர்மட்ட அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் பின்னர், சபாநாயகருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. சபாநாயகர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.  நன்றி -iftamil.com from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://bit.ly/3AE4KlX via Kalasam

இலங்கையில் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி!

Image
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி ஏற்றும் பணி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. நெருக்கடியான இக்கால கட்டத்தில் இது தொடர்பில் நாம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்ப்பதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவிக்கையில், கர்ப்பிணி தாய்மார் மற்றும் சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணியில் உயர் நிலையை கொண்ட நாடாக இலங்கை விளங்குகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதுவரையில் பொது மக்களின் 60 வீதமானோருக்கு 2 தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளன. ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக் கொண்டவர்ளின் எண்ணிக்கை 70 வீதமாகும். 3 தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்கள் 50 வீதம் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார். தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பிரதேச மட்டத்திலும், சுகாதார அதிகாரி பிரிவுகளிலும் இது தொடர்பான நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சில் அமைச்சரின் ...

க.பொ.த உயர்தரப் பரீட்சையை பிற்போடக்கோரி நீதிமன்றில் மனுத்தாக்கல்

Image
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பாக நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையை பிற்போடுமாறு கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கோரப்பட்டுள்ளது. சிவில் செயற்பாட்டாளர் நாகாநந்த கொடித்துவக்கினால் இன்று(வெள்ளிக்கிழமை) குறித்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவின் பிரதிவாதிகளாக கல்வி அமைச்சர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். நிலவும் கொரோனா சூழ்நிலை காரணமாக உயர்தர மாணவர்கள் தங்களது கற்றல் செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். கல்வி நிபுணர்களாலும் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி...

வாடகை முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அறிவிப்பு...

Image
  வாடகை முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் வேலைத்திட்டத்தை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவை திணைக்களம் தெரிவிக்கின்றது. மேலும் தமது திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களுக்கு மாத்திரமே, மீற்றர் விநியோகிப்பதற்கும், பொருத்துவதற்கும் அனுமதி வழங்கப்படும் என திணைக்களத்தின் பணிப்பாளர் S.N.அக்குரண்திலக்க தெரிவிக்கின்றார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3sheeQr via Kalasam

இலங்கைக்கு வந்த துருக்கி வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர்..

Image
  துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் ‘Mevlut Cavusoglu’ மற்றும் அவருடன் 13 பேர் கொண்ட குழுவும் ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர். இதன்படி ,துருக்கியில் இருந்து விசேட விமானம் மூலம் வருகை தந்த குழுவினர் இன்று காலை 6.00 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் துருக்கி  வெளிவிவகார அமைச்சர் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் இலங்கையிலிருந்து புறப்படவுள்ளனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3G2qzg4 via Kalasam

காத்தான்குடி நகர சபை அமர்வில் ஹிஸ்புள்ளாஹ்வின் சேவைகளுக்கு பாராட்டுக்கள்

Image
நூருல் ஹுதா உமர் காத்தான்குடி நகர சபையின் 46 வது சபை அமர்வு வியாழக்கிழமை காத்தான்குடி நகரமுதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காத்தான்குடி நகருக்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாகவும், அவர்களுக்கான சில அடிப்படை மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளை ஏற்பாடு செய்து கொடுப்பது தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டது. குறிப்பாக 'காத்தான்குடி' என்ற அழகிய நகரை பார்ப்பதற்காகவே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருவதும் அப்பயணிகளை கவரும் வகையில் இந்த மண்ணில் ஒரு அழகிய புராதன நூதனசாலை, பலஸ்தீன அல்-அக்ஸா வடிவைப்போன்ற பள்ளிவாயல், அறபு தேசம் போல் பிரதான வீதியில் நடப்பட்டுள்ள ஈச்ச மரங்கள் மற்றும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ள வீதி வளைவுகள் என காத்தான்குடியில் அமையப் பெற்றுள்ள சகல இடங்களையும் (Landmarks) கலை நயத்துடனும் அழகிய முறையிலும் இந்த மண்ணை நோக்கி அதிகளவான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தர வேண்டும் அதனூடாக இந்த மண்ணில் உள்ள வியாபார சமூகம் வளர்ச்சி கண்டு முன்னேற வேண்டும் என்ற தூர நோக்கோடு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்ட முன்னாள் ஆளுநர் கலா...

கொரோனா பாதிப்பை உணர்ந்ததால் தனிமைப்படுத்திக் கொண்ட கனடா பிரதமர்

Image
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், இம்மாத தொடக்கத்தில் ஜஸ்டின் ட்ரூடோ தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். கனடா நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னை 5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டார். இது தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நேற்று எனது கொரோனா தொற்று பரிசோதனை முடிவு வந்தது. அதில் எனக்கு தொற்று இல்லையென தெரிந்தது. எனது ரேபிட் கிட் சோதனை முடிவு எதிர்மறையாக வந்தபோதிலும், நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவே உணர்கிறேன். ஆகவே சுகாதாரத் துறையின் விதிகளைப் பின்பற்றி 5 நாட்களுக்கு என்னை தனிமைப்படுத்திக் கொள்கிறேன். நான் தற்போது ஆரோக்கியமான உடல்நிலையுடன் உள்ளேன். அதனால் வீட்டிலிருந்து பணி புரிய உள்ளேன் என பதிவிட்டுள்ளார் from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3L1HG5s via Kalasam

முன்னால் ஆளுநர் ஆஸாத் சாலி மற்றும் அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு!

Image
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னால் ஆளுநருமான ஆஸாத் சாலி மற்றும் அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, தான் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டமை மற்றும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் பல புத்திஜீவிகள் கைது செய்யப்பட்டு இன்னும் சிறையில் உள்ளமை குறித்து ஆஸாத் சாலி அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளிடம் விரிவாக எடுத்துறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 800 வருடங்களாக முஸ்லிம் மக்களால் பாதுகாக்கப்பட்டு வந்த கூரஹல ஜெய்லானி கட்டிடங்கள் தகர்க்கப்பட்டமை மற்றும் பல விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. குறித்த சந்திப்பில் அமெரிக்க தூதரக அதிகாரிகளான மாட்டின் கெலி, ரூபி வூட் சேட், அரசியல் பொறுப்பாளர் நஸ்ரின் மரைக்கார் ஆகியோர் கலந்து கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3L2i7RR via Kalasam

மின்வெட்டு தொடருமா? – வெளியானது அறிவிப்பு

Image
நாட்டில் எதிரவரும் திங்கட்கிழமை வரை மின்வெட்டு இடம்பெறாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அந்த ஆணைக்குழு இதனை தெரிவிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3IICpNY via Kalasam

வறட்சியான காலநிலை ஏற்பட்டால் மின்னுற்பத்திக்கு நீரை வழங்கக்கூடிய இயலுமை இல்லை – சமல் ராஜபக்ஷ!

Image
வறட்சியான காலநிலை ஏற்பட்டால், மின்னுற்பத்திக்கு நீரை வழங்கக்கூடிய இயலுமை இல்லை என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் – நீர் முகாமைத்துவத்தை நாங்கள் செய்கின்றோம். அனைத்தையும் அவதானித்தே, விவசாயம் மற்றும் மின்சாரம் என்பனவற்றுக்கு நீர் விநியோகிக்கப்படுகிறது. எனினும், விவசாயத்துக்கே முன்னுரிமை வழங்கப்படும். இந்த நிலையில், வறட்சியான காலநிலையுடன் நீர்மட்டம் குறைவடைந்தால், மின்னுற்பத்திற்கு நீரை வழங்க முடியாது எனத் தாம் அறியப்படுத்தியுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளர் பயிரிடப்பட்ட நிலங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/35thLDo via Kalasam

எரிமலையால் பாதிக்கப்பட்ட டோங்கோவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்

Image
(ஜெ.அனோஜன்) டோங்கோவின் பங்காய்க்கு வடமேற்கில் 219 கிலோ மீற்றர் தொலைவில் 6.2 ரிச்டெர் அளவிலான நில நடுக்கம் வியாழனன்று ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நில நடுக்கம் 14.5 கிலோ மீற்றர் ஆழத்தில் பதிவானதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஜனவரி 15 அன்று, 170 க்கும் மேற்பட்ட தென் பசிபிக் தீவுகளை உள்ளடக்கிய ஓசியானியாவில் உள்ள ஒரு சிறிய நாடான டோங்கோ அருகே கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடிப்பினால் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை, ஹவாய் மற்றும் அலாஸ்காவின் பெரும்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது 20 கிலோ மீட்டர் உயரத்திற்கு பெரிய சாம்பல் மேகங்களை ஏற்படுத்தியது மற்றும் மிகவும் தொலைதூர பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை பாதித்தது. அதேநேரம் டோங்கோவில் சுனாமி அலைகளையும் ஏற்படுத்தி பாதிப்படையச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/32GDire via Kalasam

பாராளுமன்றம் பெப்ரவரி 08 - 11 கூடும் : நடவடிக்கைகள் விபரம் வெளியீடு

Image
பாராளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 08ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக தெரிவித்தார். கடந்த ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய பெப்ரவரி 08ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை தினமும் முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 08ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி மணி வரை 2015ஆம் ஆண்டு 05ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்கு விதிகளும், மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. அன்றையதினம் அரசாங்கத்தின் தினப்பணிகளின் பின்னர் ஸ்ரீ சாக்கிய சிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான (கூட்டிணைத்தல்) சட்ட மூலம் இரண்டாவது வாசிப்பைத் தொடர்ந்து சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவிருப்பதாகவும் செயலாளர் நாயகம் ...

சோளம் இன்மையால் திரிபோஷாக்கு தட்டுப்பாடு!

Image
போதுமான அளவில் சோளம் கிடைக்காத காரணத்தினால், ஜா-எலவில் உள்ள திரிபோஷா தொழிற்சாலையில் திரிபோஷாவை தயாரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலைமை தொடர்பாக அந்த நிறுவனம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதுடன் விநியோகஸ்தர்கள் ஊடாக வெளிநாடுகளில் இருந்து சோளத்தை இறக்குமதி செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஆயிரத்து 500 மெற்றி தொன் சோளம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சோளத்திற்கு தேவையான இரசாயன பசளை மற்றும் கிருமி நாசனிகள் கிடைக்காத காரணத்தினால், இம்முறை பெரும் போகத்தின் போது சோள அறுவடை பெருமளவில் குறைந்துள்ளது from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3nYVP9u via Kalasam

பங்காளி கட்சிகளின் அதிரடி தீர்மானம்

Image
நாடு எதிர்நோக்கும் பாரிய நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கத்தின் பத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் கடந்த 25ஆம் திகதி அரசாங்கப் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தீர்மானத்தை இன்று அல்லது நாளை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளித்த பின்னர், மக்கள் தெரிந்து கொள்வதற்காக அதை பகிரங்கப்படுத்தவும் கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். நாடு எதிர்நோக்கும் பாரதூரமான நெருக்கடியை மக்களிடம் இருந்து மறைக்காமல் உண்மை நிலையை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்றும் குறித்த கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். இந்த கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர், அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர்களான வீரசுமண வீரசிங்க, டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி வீரசிங்க, முன்னாள் பொதுச் செயலாளர் டியூ குணசேகர உள்ளி...

மன்னாரில் இருந்து சர்வமத குழு திருகோணமலைக்கு விஜயம்-சர்வ மத தலைவர்களுடன் சந்திப்பு!

Image
மன்னார் கறிற்றாஸ் -வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்தந்தை செ.அன்ரன் அடிகளாரின் வழிகாட்டலின் கீழ் மன்னார் வாழ்வுதய சர்வமத குழுவினர் நேற்றைய தினம் புதன்கிழமை (26) காலை திருகோணமலைக்கான நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற் கொண்டனர். குறித்த விஜயத்தின் போது திருகோணமலை எகெட் கறிற்றாஸ் நிறுவனத்துடன் இணைந்து திருகோணமலையில் உள்ள சர்வமத தலங்களை பார்வையிட்டதோடு, மத தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சமய நல்லிணக்கமும்,சமாதானமும் எனும் தொனிப்பொருளில் சர்வ மத தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடல் ஊடாக ஒவ்வொரு சமய விழுமியங்களை கற்றுக் கொள்ளவும்,மதத் தலைவர்கள் மற்றும் சமய பிரதிநிதிகளுடனான உறவை வலுப்படுத்துவதாகவும் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. -இதன் போது திருகோணமலை சர்வமத செயற்திட்டத்தின் அனுபவப்பகிர்வும் இடம் பெற்ற நிலையில் நேற்று புதன்கிழமை மாலை குறித்த குழுவினர் மீண்டும் மன்னாரை வந்தடைந்தனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/32zTavs via Kalasam

2 இலட்சம் சீமெந்து மூடைகள் நாளை நாட்டிற்கு!

Image
2 இலட்சம் சீமெந்து மூடைகளைத் தாங்கிய மற்றுமொரு கப்பல் நாளைய தினம் நாட்டை வந்தடைய உள்ளதாக, சீமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 6 இலட்சம் சீமெந்து மூடைகளைத் தாங்கிய இரண்டு கப்பல்கள் கடந்த வாரம் நாட்டை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், சந்தையில் அதிகரித்துள்ள கேள்வி காரணமாக, சில பகுதிகளில் சீமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மத்திய அதிவேக நெடுஞ்சாலை, துறைமுக நகர் மற்றும் நகர வீடமைப்புத் திட்ட நிர்மாணம் உள்ளிட்ட ஏனைய தனியார்த் துறை கட்டுமானப் பணிகளுக்காக அதிக கேள்வி உள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3fXx754 via Kalasam

பாகிஸ்தானுடன் கொடுக்கல், வாங்கல்களை மேலும் வலுப்படுத்த அந்நாட்டுக்கு விஜயம் செய்தோம் - பந்துல

Image
பாகிஸ்தானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பந்துல குணவர்தன, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேசியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், “இலங்கை – பாகிஸ்தான் வர்த்தக உடன்படிக்கையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது அவசியம்” என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். இதன்போது, பாகிஸ்தானுடனான கொடுக்கல், வாங்கல்களை மேலும் வலுப்படுத்துவதற்காக அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தாம் உள்ளிட்ட வர்த்தக குழுவினருக்கு வழங்கிய வரவேற்புக்கு வர்த்தக அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன நன்றி கூறியுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3gf6bhr via Kalasam

மின்சார உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் எண்ணெய் இன்றுடன் நிறைவடைவதாக மின்சார சபை தெரிவிப்பு!

Image
மின்சார உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் எண்ணெய் என்பன இன்றைய தினத்திற்கு (புதன்கிழமை) மாத்திரமே போதுமானதாக உள்ளதென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்காக களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு வழங்கப்பட்ட டீசல் கையிருப்பு இன்றுடன் நிறைவடைவதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார். சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக மிதக்கும் மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் இன்றைய தினத்திற்கு மாத்திரமே போதுமானதாக உள்ளதாகவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் முற்பதிவு செய்யப்பட்ட டீசல் மற்றும் எண்ணெய் இன்றைய தினம் கிடைக்காவிடின், மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3H2dODj via Kalasam