நபி அவர்களின் வாரிசுகளே உலமாக்கள்: அவர்களின் நுபுவத் அவர்களிடம் இருக்கும்.
( ஐ. ஏ. காதிர் கான்) "கம்பஹா மாவட்ட உலமாக்களாக இருக்கலாம். ஏனைய பகுதிகளைச் சேர்ந்த உலமாக்களாக இருக்கலாம். இந்த நாட்டிலே வாழுகின்ற நமது உலமாக்களுடைய வரலாற்றுப் பங்களிப்புக்கள், நம்மால் கண்டிப்பாக கௌரவிக்கப்பட்டு பாராட்டப்பட வேண்டும். அந்த வகையில், கம்பஹா மாவட்டத்தின் ஜம் இய்யத்துல் உலமா, இந்த உயர் மனிதப் பண்பை புரிந்து கொண்டு, இஸ்லாமிய வழி முறையைத் தயார் படுத்தியுள்ளது. அதுமாத்திரமல்ல, மூத்த ஆலிம்கள் கௌரவிப்பு நிகழ்வை, மிக கண்ணியமாக ஏற்பாடு செய்திருப்பதையும் பாராட்ட வேண்டும்". இவ்வாறு, அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் செயற்குழு உறுப்பினரும், பேருவளை ஜாமிஆ நழீமிய்யா கலாபீடத்தின் முதல்வருமான அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் புகழாரம் சூட்டினார். கம்பஹா மாவட்ட ஜம் இய்யத்துல் உலமாவினால், மாவட்டத்தின் 56 மூத்த ஆலிம்கள், வத்தளை - ஹுணுப்பிட்டிய, "ஹெவன்'ஸ் கேட் பென்கட் ஹோல்" ( Heaven's Gate Banquet Hall ) வரவேற்பு மண்டபத்தில், (23/05/2024) வியாழக்கிழமை கௌரவிக்கப்பட்டு பாராட்டப்பட்டனர். கம்பஹா மாவட்டத்தில் இயங்கும் மினுவாங்கொடை, நீர்கொழும்பு, திஹாரிய, கஹட்டோவிட்...