Posts

Showing posts from August, 2024

தலைவர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் ; இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிரடி தீர்மானம்!

Image
  ஜனாதிபதியின் சட்டத்தரணியான கௌசல்ய நவரத்ன இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.  இது தொடர்பாக இன்று (31) பொதுச்சபை கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.  பெருமளவு நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கௌசல்ய நவரத்னவுக்கு எதிராக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/zMOBo9W via Kalasam

இப்போதைக்கு சஜித்துக்கு ஆதரவு: முடிவில் மாற்றம் வரலாம்? மு.கா கூட்டத்தில் முடிவு

Image
ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவு.... ! முகா உயர்பீடக் கூட்டத்தில் முடிவு ! ஜனாதிபதி தேர்தலில் - சஜித்துக்கு ஆதரவு வழங்குவதென இன்று காலை கூடிய முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடக் கூட்டத்தில் கொள்கையளவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சஜித் அணியில் - முகா , தற்போது அங்கம் வகிப்பதன் காரணமாக - சஜித்துக்கே ஆதரவு வழங்க வேண்டும் என்ற பெரும்பாலான உயர்பீட உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முகா எம்பீக்ள் - இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போதிலும் அவர்கள் எவருமே எந்தவொரு கருத்தினையும் முன்வைக்கவில்லை. முகாவின் - இன்றைய தீர்மானம் கொள்கையளவில் எடுக்கப்பட்டுள்ள போதிலும் - தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதினால் - கட்சியின் முடிவில் மாற்றம் வரலாம் என நம்பப்படுகின்றது. தபால் மூல வாக்களிப்பின் பின்னர் - மஹிந்தவுக்கு கடிதம் அனுப்பிவிட்டு மைத்திரிக்கி ஆதரவளிக்க முடிவு எடுத்ததைப் போன்று - ரணிலுக்கு ஆதரவு வழங்கும் முடிவையும் அவ்வாறே தலைவர் எடுப்பார் என உயர்பீட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுக் காட்டினார். பாராளுமன்ற ஹரீஸ், பைஷால் காசீம் ஆகியோர் ரணிலு

“ எனது தலையை அடமானம் வைத்து போராடுகிறேன் ” கல்முனையில் ஹரீஸின் முக்கிய உரை

Image
பெரியதம்பி முதலாளியின் மகனை பணம் கொடுத்து வாங்க முடியாது .! கல்முனை மண்ணை அடிமையாக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்...!! கல்முனையில் ஹரீஸ் எம்.பி  காரசார உரை ! கல்முனை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எதிர்கால சந்ததிகளையும், இந்த மண்ணின் மக்களையும் நாங்கள் அடிமையாக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எமது மார்க்கத்தை இழக்க முடியாது, எமது மைதானத்தை இழக்க முடியாது, ஏன் இந்த கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் உரிமையைக் கூட இழக்க முடியாது, உரிமைகளை உடமைகளை பறிகொடுக்க முடியாது என்பதற்காக எனது தலையை அடமானம் வைத்து போராடிக் கொண்டிருக்கின்றேன்.  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  கல்முனையில் நடைபெற்ற முஸ்லிம் சமூகத்தின் சமகால அரசியல் வகிபாகம் மற்றும் கல்முனையின் எதிர்கால நகர்வுகள் தொடர்பான பொதுக் கூட்டத்தில் பிரதான பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றிய அவர் - தொடர்ந்து பேசுகையில் ,  கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பிலு

அதிபரை தாக்கிய காதர் மஸ்தானின் இணைப்பாளர்!

Image
கண்ணியமாக மதிக்க வேண்டிய பாடசாலையின் அதிபர் மீது தாக்குதல் நடாத்தி அடாவடி செய்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் இணைப்பாளர் கைது செய்யபடாமல் அதிகார துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்படுகின்றதா என வன்னி மாவட்ட கல்விச்சமூகம் கேள்வியெழுப்பியுள்ளது. 31/07/ 2024 புதன்கிழமை காலை 9 மணி அளவில் மண்/பண்டாரவெளி முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலைக்குள் புகுந்து காதர் மஸ்தான் ராஜாங்க அமைச்சரின் முசலி இணைப்பாளர் முகமது தன்சீம் கடமை யிலிருந்த பாடசாலை அதிபரை , ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னிலையில் சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இவ் அடாவடித்தனம் தொடர்பில் சிலாபத்துறை காவல் நிலையம் மற்றும் வலய கல்வி பணிமனையில் முறைப்பாடு செய்த போதும் இதுவரை எந்தவித கைது நடவடிக்கையும் நடைபெறவில்லை. அரசியல் சித்துவிளையாட்டு காப்பாற்றுகின்றது என குறித்த அதிபர் கவலையடைந்துள்ளார். இச் செயல்பாட்டால் முசலி பிரதேச அதிபர்களும் ஆசிரியர்களும் பெரும் அச்சத்தில் உள்ளதுடன், குறித்த நபர் வலய கல்விப் பணிப்பாளர் உதவியுடன் ஆசிரியர் அதிபர் இடமாற்றம் போன்ற பழிவாங்கல்களை தொடர

ஜனாஸா எரிப்பு: மன்­னிப்பு போதாது, ஆணைக்குழு அவசியல் : ரணிலுக்கு பைசர் முஸ்தபா கடிதம்

Image
கொவிட் – 19 பெருந்­தொற்­றுப்­ப­ரவல் காலத்தில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட கட்­டா­யத்­த­கனக் கொள்­கை­யினால் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரிடம் அர­சாங்கம் மன்­னிப்­புக்­கோ­ரி­யி­ருப்­பினும், தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­களைக் கட்­டா­யத்­த­கனம் செய்­த­மை­யினால் குடும்­பங்கள் முகங்­கொ­டுத்த உள­வியல் பாதிப்­பையும், துன்­பத்­தையும் சரி­செய்­வ­தற்கு இந்த மன்­னிப்பு போது­மா­னது அல்ல என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பைஸர் முஸ்­தபா ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். அது­மாத்­தி­ர­மன்றி கட்­டா­யத்­த­க­னக்­கொள்கை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டமை தொடர்பில் முறை­யான விசா­ர­ணையை முன்­னெ­டுப்­ப­தற்கு விசா­ரணை ஆணைக்­கு­ழு­வொன்றை நிய­மிக்­கு­மாறும், அத­னூ­டாக இக்­கொள்கை அமு­லாக்­கத்­துக்குக் அரச, தனி­யார்­துறை சார்ந்த நபர்கள் மற்றும் அர­சி­யல்­வா­திகள் உள்­ளிட்­டோரை அடை­யா­ளங்­கா­ணு­மாறும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார். இவ்­வி­டயம் தொடர்பில் தனது நிலைப்­பாட்டைத் தெளி­வு­ப­டுத்தி ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்குக் கடி­த­மொன்றை அனுப்­பி­வைத

மத்திய கிழக்கு பதற்ற நிலையால் இலங்கைக்கு ஆபத்து? நடவடிக்கை தீவிரம் என்கிறார் அலி சப்ரி

Image
மத்திய கிழக்கில் நிலவும் பதட்ட நிலை தொடர்ந்தால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் முன்கூட்டிய தயார்நிலைக்காக மூன்று விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம், மிகவும் சரியானதாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார். சர்வதேச செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், அதன் காரணமாக நாடு வீழ்ச்சியடையும் வரை பார்த்துக்கொண்டிருக்கத் தேவையில்லை எனத் தெரிவித்த அமைச்சர், ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வையால்தான் இலங்கை இன்னொரு வெனிசுலாவாக மாறாமல் பொருளாதார ரீதியில் ஸ்திரமான நிலைக்கு கொண்டுவர முடிந்தது என்றும், எனவே கட்சி அரசியலை புறந்தள்ளிவிட்டு நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என அமைச்சர் வலியுறுத்தினார். இங்கு

ஈரானில், ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்!

Image
இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். ஹமாஸ்தலைவர் இஸ்மாயில் ஹனியேயின் உடலிற்கான பிரார்த்தனைகளிற்கு ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயதொல்லா அலி கமேனி தலைமை தாங்குகின்றார். ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலம் அசாடி சதுக்கத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது என ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பின்னர் ஹமாஸ் தலைவரின் உடல் கட்டார் தலைநகர் டோகாவிற்கு கொண்டு செல்லப்படும் அங்கு இறுதிநிகழ்வுகள் இடம்பெறும். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/c1PhDYI via Kalasam

இறக்காமம் : ஐஸ் போதைப் பொருளுடன் கைதான தாய் மற்றும் மகன்

Image
ஐஸ் போதைப் பொருளுடன் கைதான தாய் மற்றும் மகன் உள்ளிட்டோரிடம் மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட வரிப்பத்தான் சேனை பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை(30) மாலை ஐஸ் போதை பொருளுடன் தாயும் மகனும் கைது செய்யப்பட்டிருந்தனர். இறக்காமம் விசேட புலனாய்வு போலீஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இறக்காமம் பொலீஸ் பெறுப்பதிகாரி ஜே. எம்.மஹிந்த சேனரத்ன வழிகாட்டலுக்கு அமைவாக விசேட புலனாய்வு பொறுப்பதிகாரி ஜே.எம். பி.கலந்த சூரிய தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 6 மில்லி 200 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்களான தாய் மற்றும் மகன் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இறக்காமம் பொலீஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பாறுக் ஷிஹான் from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/y9M4QTk .html via Kalasam