Posts

Showing posts from October, 2024

அறுகம்பே சம்பவத்தில் தொடர்ப்புப்பட்ட கும்பல் அம்பலம்

Image
அறுகம்பே பிரதேசத்தில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது தீவிரவாத குழுவினால் திட்டமிடப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க பிரதிநிதிகள் அமெரிக்க பிரதிநிதிகளிடம் இதனை தெரிவித்துள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா மற்றும் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைவர்களை சந்தித்து இது குறித்து கலந்துரையாடினர். தீவிரவாத வலையமைப்பு இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேர் உட்பட தலைவர்கள் மற்றும் குழுவை வழிநடத்திய ஈரான் பிரஜை உள்ளிட்ட தலைவர்கள் இந்த வலையமைப்பு தீவிரவாத வலையமைப்புடன் இணைக்கப்படவில்லை என பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான பிரதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவாக செயற்பட்ட ஒரு கும்பலின் முயற்சியே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பயண ஆலோசனை இந்த விவாதத்தில் கலந்து கொண்ட இலங்கைப் பிரதிநிதிகள் அமெரிக்கப் பிரதிநிதிகளிடம், தீவிரவாதக்

காத்தான்குடி பள்ளிவாசல் மீண்டும் மூடல்!

Image
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் அவசர அவசரமாக திறக்கப்பட்ட காத்தான்குடி ஜாமிஉல் அதர் பள்ளிவாசல், மீண்டும் மூடப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து இப்பள்ளிவாசல் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிற்குள் எடுக்கப்பட்டது. அதேவேளை, 11 அமைப்புக்கள் நாட்டில் செயற்பட்ட அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 2021.04.10ஆம் திகதி விதிக்கப்பட்ட தடைப் பட்டியலில் காத்தான்குடி ஜாமிஉல் அதர் பள்ளிவாசலும் உள்ளடக்கப்பட்டிருந்தது. எனினும், இப்பள்ளிவாசலை மக்கள் பாவனைக்காக வழங்குமாறு நீண்ட நாட்களாக பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்த முன்னாள் அமைச்சர் அலி சாஹிர் மௌலானாவின் வேண்டுகோளிற்கமைய இப்பள்ளிவாசலை திறப்பதற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 6ஆம் திகதி திறக்கப்பட்ட இந்தப் பள்ளிவாசலை வெள்ளிக்கிழமைகளில் மாத்திரமே திறக்க அனுமதிக்கப்பட்டதாக இப்பள்ளிவாசலுக்கு அருகில் வாழும் மக்கள் தெரிவித்தன

சோதனைகள் கண்டு துவண்டு விடாதே..!

Image
சோதனைகள் இறைவன் எம்மீது கொண்ட பாசத்தின் வெளிப்பாடன்றி வேறில்லை..! இறைவன் நம்மை சோதிக்கும் ஒவ்வொரு முறையும் அந்த சோதனைகளை முறையாக கையாண்டு வெற்றி காண முயற்சி செய்..! ஒவ்வொரு சோதனைக்குப் பின்னும் சந்தோஷங்கள் நமக்காகவே காத்திருக்கின்றன..! சோதனைகளின் போது ஒரு நம்பிக்கை ,  நம் அனைவரது உள்ளத்திலும் எம்மை அறியாமலேயே குடிகொண்டு விடும்..! அது ,படைத்த இறைவன் நிச்சயமாக எம்மை கைவிட மாட்டான்...! இறைவன் நம்மை சோதிக்கும் போது ஏன் எனக்கு மாத்திரம் இப்படி இருக்கிறது?  வாழ்வில் ஒவ்வொரு நிமிடங்களுமே  சோதனையாக கழிகிறதே என்று பிறரிடம் கூறி புலம்பித் திரியாதே..!  இறைவன் நம்மை மாத்திரமல்ல, அத்தனை மனிதர்களையும் சோதித்துக் கொண்டு தான் இருக்கிறான்...  வெவ்வேறு வழிகளில் ‌ நாம் வாழும் வாழ்க்கை கூட நமக்கு சோதனையாகத் தான் இருக்கிறது.  இந்த வாழ்வில் நாம் சிறப்பாக நன்மைகளை செய்து, தீமைகளை புறக்கணித்தால்  மறுமை வாழ்வு சிறக்கும் ... சோதனைகளை பொறுமையாக எதிர் கொள்வோம். இன்ஷா அல்லாஹ். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/mq2UNud via Kalasam

2024 இலங்கை பொதுத் தேர்தல் - தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

Image
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (30) ஆரம்பமாகியுள்ளது. அனைத்து பொலிஸ் நிலையங்கள், மாவட்ட செயலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர் அலுவலகங்களில் இன்று தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும், நவம்பர் 4 ஆம் திகதி இந்த அலுவலகங்களில் தபால் ஓட்டுகளை பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயுதப்படை மற்றும் பிற அரசு நிறுவனங்களுக்கு நவம்பர் 1 மற்றும் நவம்பர் 4 ஆகிய திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நாட்களுக்குள் வாக்களிக்க முடியாத தபால்மூல வாக்காளர்கள் அவர்கள் பணிபுரியும் மாவட்டச் செயலகத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். தபால் மூல வாக்களிப்பதற்காக உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளுடன் பயன்படுத்தப்பட்ட ஒதுக்கப்பட்ட பொதிகளை இன்று முதல் ஏற்றுக் கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயா

ஜேர்மானியருக்கு மரண தண்டனை வழங்கிய ஈரான் - கண்டனம் தெரிவித்த ஜேர்மன்

Image
ஜேர்மன் ஈரானிய இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒருவருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. ஜேர்மன் ஈரானிய இரட்டைக் குடியுரிமை கொண்டவரான ஜம்ஷிட் ஷர்மாட் (Jamshid Sharmahd, 69) என்பவரை துபாயிலிருந்து கடத்திவந்து சிறையிலடைத்திருந்தது ஈரான் அரசு. 2008ஆம் ஆண்டு, ஈரானிலுள்ள Shiraz என்னுமிடத்திலுள்ள மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், அந்த சம்பவத்துக்கும் ஜம்ஷிடுக்கும் தொடர்பு இருப்பதாக அவர் மீது குற்றம் சாட்டி, அவருக்கு 2023ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஜம்ஷிடின் மகளான Gazelle, தனது தந்தைக்கு மரணதண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு தொடர்ந்து கோரிவந்தார். ஆனாலும், நேற்று, திங்கட்கிழமை, ஜம்ஷிடுக்கு ஈரான் மரண தண்டனையை நிறவேற்றியுள்ளது. ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் ஜம்ஷிடுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான அனலேனா பேர்பாக் ஜேர்மன் இரட்டைக்குடியுரிமை கொண்டவராக ஜம்ஷிடுக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஜம்ஷிட் தனது தரப்பு நியாத்தை எட

அறுகம் வளைகுடா பகுதியில் பொலிஸார் விசேட விசாரணை

Image
அறுகம் வளைகுடா (Arugam Bay) பகுதியில் உள்ள இஸ்ரேலியர்கள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா விசாவில் இருக்கும் போது வியாபாரம் அல்லது மதம் சார்பான நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடுகின்றார்களா என்பதை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இன்று (29) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) இதனைக் கூறியுள்ளார். சுற்றுலா விசாவில் சுற்றுலாப் பயணிகள் வியாபாரம், மதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கடந்த காலங்களில் இருந்து செய்திகள் வந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி, அறுகம் வடைகுடா பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகளும் குறிப்பாக இஸ்ரேலியர்கள் சுற்றுலா விசாவில் உள்ளனர். விடுமுறையில் சுற்றுலாப்பயணிகள் ஏதேனும் வியாபாரம், மதம் அல்லது வேறு சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அது குறித்து முறைப்பாடு அளிக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.  இதேவேளை, இந்த செய்தி வெளிவருவதற்கு முன்னரே இலங்கை

3000 முறைப்பாடுகள் இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவிற்கு பதிவு!

Image
இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு  இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 3000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 3,045 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குநிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 81 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 20 பொலிஸ் அதிகாரிகள், மூன்று கிராம உத்தியோகத்தர்கள், 3 காதி நீதிபதிகள், இரண்டு வருமான பரிசோதகர்கள் உட்பட 45 அரசு அதிகாரிகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், குறித்த சுற்றிவளைப்புக்களில் 22 பொது மக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 68 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதேகாலப்பகுதியில் 56 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான 237 வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும்,

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் 108 வாகனங்கள் காணவில்லை - தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவிப்பு

Image
இலங்கை சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான 108 வாகனங்கள் தற்போது அங்கு இல்லை என இலங்கைத் தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் வெளிவந்துள்ளது. மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 128 வாகனங்கள் காணப்படும் நிலையில், அதில் 108 வாகனங்கள் தொடர்பில் எதுவித ஆதாரங்களும் தணிக்கை அலுவலகத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. இதேவேளை, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் போக்குவரத்து மற்றும் கணக்குப் பிரிவு ஆகியவற்றில் உள்ள 444 வாகனங்களில் 82 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை. அவ்வாறு பதிவு செய்யப்படாத வாகனங்களின் மதிப்பு 140,135,000 ரூபாய் ஆகும். சிவில் பாதுகாப்பு திணைக்களம் தொடர்பாக 2023 ஆம் ஆண்டுக்கான செயல்திறன் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்தத் தகவல் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/y4vd6TK via Kalasam

நாமல் ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ள ப்ளஸ் வன் அமைப்பு

Image
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்யுமாறு ப்ளஸ் வன் என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த அமைப்பின் அழைப்பாளர் வின்சத யஸஸ்மினி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். ராஜபக்சக்கள் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மீட்டு எடுக்கும் நோக்கிலேயே, மக்கள் அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கொள்ளையிடப்பட்ட மக்கள் பணத்தை முடிந்தால் தேடிக்கொள்ளுமாறு அண்மையில் நாமல் ராஜபக்ச டுவிட்டரில் சவால் விடுத்திருந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் இவ்வாறு பிரசாரம் செய்வதினை விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெறுமதியற்ற நாமலை இந்த தேர்தலில் பூச்சியமாக்கி கொள்ளையிட்ட மக்கள் பணத்தை மீள கைப்பற்றிக்கொள்ள வேண்டுமென யசஸ்மினி ஜனாதிபதியிடம் கோரியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Osb0wW1 via Kalasam

மாத்தறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Image
  மாத்தறை – ருவன்வெல்ல பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். காரில் வந்த அடையாளம் தெரியாத‌ துப்பாக்கிதாரிகள் நேற்று மாலை குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மாத்தறை – கோட்டை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவரெனத் தெரியவந்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/XKHGgDr via Kalasam

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஓர் நற்செய்தி!

Image
அடுத்த மாதம் முதல் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுடன் 3,000 ரூபா சேர்க்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை அங்கீகாரம் இந்த தொகையை ஒக்டோபர் மாதத்திற்கான இடைக்கால கொடுப்பனவாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த மாதத்திற்கான இந்த மேலதிக கொடுப்பனவை எதிர்வரும் நாட்களில் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார் from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/zV7Dfrh via Kalasam

ஊழல் மோசடிகளுக்கு இடமில்லை;ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்த அரசாங்கம் - விஜித ஹேரத் தெரிவிப்பு

Image
நாம் வழங்கியுள்ள உறுதிமொழிகளுக்கேற்ப இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு சிறிதளவும் இடம் வழங்கப்படாது. இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடிகளை பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, ஏற்கனவே ஊழல் பற்றிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பை தளமாக கொண்ட வெளிநாட்டு இராஜதந்திரிகள் மத்தியில், உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- இவ்விடயங்கள் குறித்து அரசாங்கம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. நெறிமுறையான நிர்வாகம்,ஊழலை ஒழித்தல், அரச சேவையில் வினைத்திறன், சட்டத்தின் ஆட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் நேர்மை ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய கலாசாரத்தை வளர்ப்பதற்கு ஜனாதிபதி அதிக முக்கியத்துவத்தை அளித்துள்ளார். பொருளாதார வெற்றியுடன், இந்த முக்கியமான தூண்கள் இணைந்திருக்க வேண்டுமென நாங்கள் கருதுகிறோம். நாங்கள் வழங்கியுள்ள உறுதிமொழிகளுக்கு ஏற்ப, இலஞ்சம் ஊழலை சிறிதளவும் சகித்துக்கொள்ள இடமளிக்கப்படாது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https:/

அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளராக சந்தியா நியமனம்

Image
  அம்னா இர்ஷாத் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளராக சந்தியா குமுதினி ராஜபக்ஷவை நியமிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளராக கடமையாற்றிய தீபிகா செனவிரத்ன 2024.10.11 ஆம் திகதி ஓய்வுபெற்றுள்ளார். இந் நிலையிலேயே ஏற்பட்ட வெற்றிடத்துக்கு சந்தியா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை விஞ்ஞான சேவையின் விசேட தர அதிகாரிகளின் மூப்புப் பட்டியலின் படி முன்னிலையில் இருக்கும், தற்போது அரசாங்க மேலதிக இரசாயன பகுப்பாய்வாளர் பதவியில் கடமையாற்றி வரும் பத்திரகே சந்தியா குமுதுனி ராஜபக்ஷவை நியமிக்க உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் எனற‌ ரீதியில் பிரதமர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/lcjobSh via Kalasam

நிராகரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள்!

Image
முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பனர்கள் பலருக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சயின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவுக்கு இம்முறை வேட்புமனு வழங்கப்படவில்லை. முன்னாள் அமைச்சரான பெஸ்டஸ் பெரேராவின் மகன் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா, முன்னாள் அமைச்சர் எஸ்.டீ.ஆர். ஜயரதன்வின் மகன் முன்னாள் துணை சபாநாயகர் மற்றும் முன்னாள் அமைச்சரவை உறுப்பினர் பிரியங்கர ஜயரத்னவுக்கும் இம்முறை எந்தவொர கட்சியிலும் வேட்புமனுவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரியங்கர ஜயரத்ன புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதற்காக புத்தளம் மாவட்டத்தில் தலைமைத்துவத்துடன் செயற்பட்டார். பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்தை பிரநிதித்துவப்படுத்திய தயாஸ்ரீத திசேரா, சாந்த அபேசேகர மற்றும் விக்டர் அன்டணி ஆகியோரும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவு வழங்கிய வடமேற்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்

ஹரீஸுக்கு தேசியப்பட்டியல்: உறுதியளித்த ரவூப் ஹக்கீம்

முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் பெயரை, முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டிலில் முதலாவதாக உள்வாங்குவது தொடர்பில் சாதகமாக பரிசீலித்து வருவதாக, முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டியில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார். முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்துக்கான வேட்புமனுவில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உள்வாங்கப்படாமை குறித்து, தேவையற்ற விஷமத்தனமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை கவலைக்குரியது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; “ஹரீஸை வேட்புமனுவில் உள்ளடக்குவதற்கு என்னால் எடுக்கக் கூடிய உச்சகட்ட முயற்சிகளை இறுதி நேரம் வரை நான் எடுத்தேன். ஆனால்ஏனைய வேட்பாளர்கள் இந்த விவகாரத்தில் விட்டுக்கொடுப்பை செய்யாத காரணத்தினால், இறுதி நேரத்தில் ஹரீஸுடைய பெயரை உள்வாங்கப்படுவதில் தடங்கல் ஏற்பட்டது என்பது கவலைக்குரியது. இருந்தபோதிலும், கட்சியின் தேசிய பட்டியலில் அவருடைய பெயர் முதலாவதாக உள்வாங்கப்பட வேண்டும் என்ற பிரேரணையும் முன்வை

முன்னாள் அமைச்சர் ஏகநாயக்க குளியலறையில் விழுந்து திடீர் மரணம்

Image
ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட முன்னாள் பிரதம அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான  டபிள்யூ.பி.ஏகநாயக்க காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று பிற்பகல் அவர் தனது வீட்டின் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழக்கும் போது அவர் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/KUN7V6h via Kalasam

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பஸ்குவலின் வங்கிக் கணக்குகளை முடக்கியது நீதிமன்றம்

Image
அம்னா இர்ஷாத் ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக‌ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுப பஸ்குவலின் சில வங்கிக் கணக்குகளை 3 மாதங்களுக்கு இடைநிறுத்த மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே நேற்று (10) உத்தரவிட்டார். அதன்படி எதிர்வரும் 2025 ஜனவரி 4ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 53 (4) சரத்திற்கமைய குறித்த வங்கிக் கணக்குகளின் ஊடாக எந்தவொரு கொடுக்கல் – வாங்கலையும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மேற்கொள்ள முடியாது என நீதிபதி இதன்போது உத்தரவிட்டார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/dWUrA9o via Kalasam

ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதோடு மலர் அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

Image
ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் நேற்று  (06) நீர்க்கொழும்பு, கட்டுவாபிட்டிய சென். செபஸ்தியன் தேவாலயத்தில் கலந்துரையாடியதோடு, கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கும் மலர் அஞ்சலி ஜனாதிபதி அனுர குமார திசா நாயகவால் செலுத்தப்பட்டது  இந்நாட்டில் அண்மைய காலத்தின் மிக மோசமான அழிவு 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியே நிகழ்ந்தது என்றும் அந்த விடயங்கள் மண்ணுக்குள் புதையுண்டு அழிவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று அவர் உறுதியளித்ததோடு, ஜனாதிபதி தேர்தலில் மக்கள் எனக்கு வாக்களித்ததன் பின்னணியில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்ததென நம்புகிறேன். என்றும் தெரிவித்தார்  இந்நாட்டு மக்களின் நோக்கங்களும், எதிர்பார்ப்புக்களும் தான் கொண்டிருக்கும் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்களுக்கு மாறுபட்டவை அல்லவெனவும், ஈஸ்டர் தாக்குதல் குறித்து மக்கள் எதிர்பார்க்கும் நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படும் என்றும் எதிர் பார்க்க

திடீர் அடை மழைக்கு காரணம் என்ன?; தாழ் நிலங்களில் வசிப்போருக்கு எச்சரிக்கை!

Image
  அம்னா இர்ஷாத் இலங்கையின் பல பகுதிகளில்  நேற்று ( 7) அதிகாலை முதல் மழை வீழ்ச்சி அதிகரித்துள்ளது. அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயம் இந்த தொடர் மழை வீழ்ச்சிக்கு பிரதான காரணம் என கால நிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு இத்தகைய மழை வீழ்ச்சியை எதிர்ப்பார்ப்பதாக கால நிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்தார்.   இந்த மழையின் விஷேட அம்சம் என்னவென்றால், குறுகிய நேரத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும். அதே நேரம் திடீரென தற்காலிக கடும் காற்று வீசும். இடி, மின்னல் ஏற்படும். சுமார் 100 மில்லி மீற்றர் வரை மழை வீழ்ச்சியை இவ்வகையான சந்தர்ப்பங்களில் எதிர்ப்பார்க்கலாம்.’ என கால நிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்தார். மழைக்கான காரணம் என்ன? அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக் கோளத்திலிருந்தும் வீசும் வணிகக் காற்றுகள் ஒடுங்கும் பிரதேசம்) நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கால நிலை அவதான நிலையம் இன்றைய தினத்துக்கான ( 8) கால நிலை அறிக்கையில் கூறியுள்ளது. வண

இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி

Image
இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் (WBG) சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் (IDA) மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவான ஒப்பந்தத்தில் கைசாத்திடும் நிகழ்வு இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதோடு, இந்த ஒப்பந்தத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இலங்கை அரசாங்கத்தின் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் ஆகியோர் கையொப்பமிட்டனர். இந்த நிதி வசதியானது இலங்கையின் முன்னெடுக்கப்படும் விரிவான மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு உலக வங்கியின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை காண்பிக்கிறது. இலங்கையின் மறுசீரமைப்பு, நிலைப்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை சுமூக நிலைக்கு கொண்டு வருவதற்கான (RESET) அபிவிருத்தி கொள்கைகளுக்கு நிதியளிக்கும் (DPF) வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த நிதி உதவி இலங்கைக்கு கிடைத்துள்ளது. இந்த இரு வருட வேலைத்திட்டம் (2023-2024), வறுமை மற

ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறிய நிலந்த ஜயவர்தன - உச்ச நீதி மன்றம் விடுத்துள்ள உத்தரவு

Image
புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் தற்போது உச்ச நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார. அவருக்கு 75 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறும் முன்னர் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் நட்ட ஈட்டை முழுமையாகச் செலுத்தத் தவறியதால், நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு எதிராக சட்டமா அதிபர் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டைத் தாக்கல் செய்திருந்தார். அது தொடர்பான உண்மைகளை முன்வைக்க இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் முன்னர் விடுத்த அறிவித்தலின் பிரகாரம் நிலந்த ஜயவர்தன நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/UgX5D8m via Kalasam

20க்கு ஆதரவளித்தோர் உள்ள அணியில் சேரமாட்டோம்; அம்பாறையில் இழுபறி நிலவ இதுவே காரணம்" - ரிஷாட்!

Image
கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள் உள்ள கூட்டணியில் இணையப்போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் இன்று (06) மன்னார், மாந்தை பிரதேசத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். கிண்ணியாவைச் சேர்ந்த கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் கட்சியிலிருந்து விலகிவிட்டதாகவும் இவ்வாறு பலர் உங்களது கட்சியிலிருந்து விலகிச் செல்வதற்கு காரணம் என்ன? எனவும் மற்றும் தனித்தா அல்லது இணைந்தா போட்டியிடுவது? எனக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த தலைவர் ரிஷாட் தெரிவித்ததாவது, "தவறு செய்தமைக்காக கட்சியிலிருந்து விலக்கப்பட்ட சிலர், இன்று தாமாகவே கட்சியிலிருந்து வௌியேறியதாகக் கூறித்திரிகின்றனர். தவறு செய்தவர்கள் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவர். இவ்வாறு தவறு செய்த மூன்று எம்.பிக்களை எமது கட்சி நீக்கியுள்ளது. இதுபோலவே, கிண்