Posts

Showing posts from November, 2024

மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப்

Image
ஜனநாயக கட்சியின் கமலா ஹரிசினை தோற்கடித்து குடியரசுகட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாகின்றார் என பொக்ஸ் நியுஸ் தெரிவித்துள்ளது. கமலா ஹரிசினை தோற்கடித்து டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி வெற்றியை பெற்றுள்ளார் என பொக்ஸ் நியுஸ் தெரிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Oe6jCtd via Kalasam

விரைவில் வாகன இறக்குமதி - மூன்று கட்டமாக இறக்குமதி செய்யவுள்ளதாக தெரிவித்த விஜித ஹேரத்

Image
வாகன இறக்குமதிக்கான முதல் கட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவிந்துள்ளது.  வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு என்பன இருப்பதாகவும் மூன்று கட்டங்களாக வாகன இறக்குமதியை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.  சுற்றுலாத் துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் வாகன இறக்குமதியாளர்களுடன் இதுதொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே  அவர் இவ்வாறு குறிப்பிட்டர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/BXb9Du2 via Kalasam

பல குற்றச்சாட்டுகளில் இருந்த மருத்துவர் ஷாபி இன்று விடுதலை

Image
  விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஷாபி சிஹாப்தீன் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.   சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக் குவித்தமை, சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்தல், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் டாக்டர் ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.   முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த குருநாகல் நீதவான், வழக்குக்கான போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், பிரதிவாதியான டாக்டர் ஷாபியை தொடர்புடைய அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.   மேலும், கலாநிதி ஷாபி சிஹாப்தீனுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீதிமன்றம் நீக்கியுள்ளது.   2019 ஆம் ஆண்டில், சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக் குவித்ததாகக் கூறி டாக்டர் ஷஃபி கைதுசெய்யப்பட்டார். அவர் அறுவைசிகிச்சை பிரசவத்தின்போது சிகிச்சை பெற்ற பெண்களுக்கு சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக பல்வேறு தரப்பினரும் அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்

இந்திய அணிக்கு நெருக்கடி : தயார் நிலையில் களமிறங்கும் நியூசிலாந்து - சாம்பியன்ஷிப் யாருக்கு

Image
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிகுந்த அழுத்தம், நெருக்கடிக்கு மத்தியில் இன்று (நவம்பர்1) மும்பை வான்ஹடே மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணிக்கு அடுத்துவரக்கூடிய 6 டெஸ்ட் போட்டிகளும் முக்கியம். ஆகவே, வெற்றி அவசியம் என்ற நிர்பந்தத்துடன் இன்று களமிறங்குகிறது. இந்திய அணிக்கு நெருக்கடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு 2 முறை தகுதி பெற்றுள்ள இந்திய அணி 3வது முறையாக முன்னேறிவிடலாம் என்று எண்ணியிருந்தது. ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை இழந்தது, 12 ஆண்டுகளுக்குப் பின் உள்நாட்டில் டெஸ்ட் தொடரைப் பறிகொடுத்தது என அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைச் சந்தித்த பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கனவு தள்ளிப்போயுள்ளது. இன்று நடக்கவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டி தவிர்த்து, ஆஸ்திரேலியா சென்று அந்த அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/fpqWb7s via Kalasam