Posts

Showing posts from June, 2025

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் புதிய நடைமுறை!

Image
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை, பாஸ்போர்ட் சேவைகளுக்கான டோக்கன்களை வழங்குவதற்கான திருத்தப்பட்ட நடைமுறையை அறிவித்துள்ளது, இது ஜூலை 2, 2025 திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. புதிய முறையின்படி, ஒரு நாள் மற்றும் சாதாரண பாஸ்போர்ட் சேவைகளுக்கான டோக்கன்கள் (Token) பத்தரமுல்லையில் உள்ள திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் காலை 6.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை வழங்கப்படும். அவசர அல்லது முன்பதிவு செய்யப்பட்ட ஒரு நாள் சேவை நியமனங்களைக் கொண்ட விண்ணப்பதாரர்களும் இந்த நேரத்தில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். சேவை நாளில் காலை 6.00 மணிக்குப் பிறகு வரும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் டோக்கன்கள் கிடைக்கும் என்பதால், முந்தைய நாள் இரவு பொதுமக்கள் வர வேண்டாம் என்று திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. தரகர்கள் அல்லது இடைத்தரகர்களுக்கு பணம் செலுத்துவதைத் தவிர்க்கவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர், அனைத்து கொடுப்பனவுகளும் அதிகாரப்பூர்வ ஷ்ராஃப் (Shroff's )கவுண்டரில் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்றும், பாஸ்போர்ட்டுகள் நியமிக்கப்பட்ட வழங்கும் கவுண்டர்களில் இருந்து சேகரிக்கப்பட வேண்டும் ...

9 மாதங்களாக சிறையில் வாடும் சுஹைல்: நீதி கேட்டு புலம்பும் பெற்றோர்

Image
  பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைதுசெய்யப்பட்டு, 9 மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஸுஹைலின் தந்தையை, சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு (Lawyers for Social Justice) நேற்று (28.06.2025) மாவனல்லையில் சந்தித்தது.  ஸுஹைல் PTA இன் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டது குறித்த முழு விவரங்களையும் இச்சந்திப்பின் போது சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். பெற்றுக்கொண்ட விவரங்களின் சுருக்கம் வருமாறு:  * 23.10.2024 -  மாவனல்லையைச் சேர்ந்த 20 வயதான ஸுஹைல், கொழும்பில் தனது வேலை நிமித்தம் தங்குவதற்காக ஒரு வாடகை அறையைப் பார்க்கச் சென்ற போது, தெஹிவளையில் உள்ள இஸ்ரேலிய Chabad House இன் அருகே வைத்து பகல் 2.30  - 3.00 மணியளவில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படுகிறார்.  கைது செய்யப்படும் போது அவரிடம் தேசிய அடையாள அட்டை இருக்கவில்லை. ஆனால் உடனடியாக கைத்தொலைபேசியில் உள்ள தேசிய அடையாள அட்டையின் பிரதி பொலிஸாருக்கு  காண்பிக்கப்படுகிறது.  * 24.10.2024 - காலை கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்தில் ஸுஹைல் ஆஜர்...

நாளை ரவூப் ஹக்கீமுடன் உத்தியோகபூர்வமாக இணைகின்றார் முஷாரப் !

Image
அகில இலங்கை மக்கள் காங்கிரசின், முன்னாள்  பாராளமன்ற உறுப்பினரும் தற்போது பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமான SMM. முஷர்ரப் அவர்களும் அவர்களுடைய பொத்துவில் பிரதேச சபையின்  எழு (07) உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய முக்கியஸ்தர்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் நாளை இணைவதாக அக்கட்சியின் மாவட்ட செயற்குழு செயலாளர் சமால்டீன் தெரிவித்துள்ளார்.  சிறிலங்க முஸ்லீம் காங்கிரஸின்   தேசியத் தலைவர் அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் ( MP) அவர்களின் முன்னிலையில் நாளை (25)  காலை 9.30 மணியளவில் மாளிகைக்காடு பிரதான வீதியில் அமைத்துள்ள வாவா திருமண மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெறும் என அவர் அறிவித்துள்ளார்.  இந் நிகழ்வில் பாராளமன்ற உறுப்பினர்கள், முன்னால் பாராளமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள் அத்தோடு.அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,தேர்தலில் போட்டியிட்ட , பட்டியல் வேட்பாளர்கள்,மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்  from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/LMlduQW...

இறக்காமம் பிரதித் தவிசாளர் ஆசிக் மு.காவிலிருந்து இடைநிறுத்தம்; கடிதம் அனுப்பிவைப்பு.!

Image
கட்சி முடிவுக்கு எதிராக இறக்காமம் பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியை பெற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் நசீர் முகம்மது ஆசிக்கிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைக்கான கடிதம் கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் எம்.பி அவர்களினால் இன்று சனிக்கிழமை (28) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடைய கட்சி அங்கத்துவம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் செயலாளர் அறிவித்துள்ளார். இறக்காமம் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பதவி தொடர்பில் சுயேட்சைக் குழு உறுப்பினரான கே.எல். சமீம் அவர்களுடன் கட்சி ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டிற்கு மாறாக தானும் அப்பதவிக்குப் போட்டியிட்டு, கட்சித் தீர்மானத்தை நசீர் முகம்மது ஆசிக் மீறிச் செயற்பட்டிருந்தார் என்று முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் எம்.பி குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு ஆசிக் அவர்களுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டாலும், தனது பக்க நிலைப்பாட்டுடன் நீதிமன்றத்தை ஆசிக் நாடும் சந்தர்ப்பத்தில் அவரை உடனடியாக நீக்க முடியாது என்பதுடன், வழ...

SLMCயின் எம்பியாகின்றார் வாசித்- தவிசாளராக முஷாரப் சற்றுமுன் உடன்பாடு எட்டப்பட்டது

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக நாளைய தினம் (27) இடம்பெறவுள்ள தவிசாளர் தெரிவின் போது முஸ்லிம் காங்கிரஸின் 5 உறுப்பினர்களின் ஆதரவோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரியவாகவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முன்னாள் தவிசாளர் வாசித் தெரிவாகவுள்ளதாக சிலோன் முஸ்லிம் தளத்திற்கு தெரியவருகின்றது இன்று (26) ஸ்ரீலங்ககா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு முன்னிலையில், முஷாரப் மற்றும் வாசித்த ஆகியோருக்கு நல்லிணக்கம் செய்து வைக்கப்ப பின்னர் இத்தீர்மானத்தை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் எடுக்கப்பட்டுள்ளதாக சிலோன் முஸ்லிம் தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பிப்பினர் முஷாரப் அவர்களை இணைத்துக்கொண்டதில் ஏற்பட்ட முரண்பாட்டால் பொத்துவில் முஸ்லிம் காங்கிரசின் போராளிகள் கொண்ட அதிருப்தியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் பெரும் சிரமத்திற்கு மத்தியில் இன்று தீர்த்து வைத்ததுடன் முஷாரப் -- வாசித் ஆகியோர் சமாதானத்திற்கு இணங்கிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.  நாளைய தவிசாளர் தெரிவில் வாச...

சற்றுமுன் தெரிவான முஸ்லிம் காங்கிரஸின் உபதவிசாளர் ஆசிக் கட்சியை விட்டு இடைநிறுத்தம் ! நிஸாம் காரியப்பர்

Image
இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளராக சற்றுமுன் தெரிவான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் ஆஷிக்கை கட்சியை விட்டு இடைநிறுத்தியாக அக்கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர் அறிவித்துள்ளனர்.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக தெரிவு செய்யப்பட முஸ்மி தவிசாளராக தெரியவானதுடன், உப தவிசாளராக சுயேற்சை உறுப்பினர் சமீம்முக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், சமீம் உப தவிசாளர் பதவிக்கு பெயர் மொழியப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆசிக் அவர்களும் பெயரை முன்மொழிந்தால், அதிருப்தியடைந்த சமீம் வெளியேறினார் அதனைத் தொடர்ந்து ஆசிக் தவிசாளராக தெரிவாகியதால் கட்சியின் தீர்மானத்தை மீறியதால் அடிப்படையில் கட்சியை விட்டு வெளியேறியாத நிஸாம் காரியப்பர் அறிவித்துள்ளார். VIDEO:  from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/dant0SL .html via Kalasam

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்த அரசாங்கத்தின் உயர்மட்ட கலந்துரையாடல்....!!

Image
முஸ்லிம் சமூகத்தில் பரவியுள்ள பல பிரச்சினைகளை, அரசாங்கத்திற்குத் தெரிவிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. மூடப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள், குர்ஆன், இஸ்லாமிய புத்தகங்கள், புத்தகங்களை துறைமுகத்திலிருந்து விடுவிக்கும்போது எழும் பிரச்சினைகள், முஸ்லிம் செவிலியர் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அரபுப் பள்ளிகளில் பாடங்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் வரும் ஆண்டில் ஹஜ் யாத்திரை போன்ற பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டுள்ளன. அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விஜித ஹேரத்துக்கு அமைச்சர் அமைச்சர் சுனில் செனவி, துணை சபாநாயகர் ரிஸ்வி சாலி, தேசிய ஒருங்கிணைப்பு துணை அமைச்சர் முனீர் முலாஃபர் எம்.கே.எம். அஸ்லம் Mp, சிவில் ஆர்வலர்கள், மருத்துவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், வணிகர்கள், ஜம்இய்யத்துல் உலமா அமைப்பு ஆகியோர் கலந்து கொண்டனர். எஸ் ஜே புஹாது from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/CAHUxjI via Kalasam

மக்கள் காங்கிரஸ் இதுவரை 16 சபைகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது!

Image
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று  26ஆம் திகதி வரை 16 சபைகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது  மன்னார் பிரதேச சபை -     ACMC வசம் சம்மாந்துறை பிரதேச சபை - ACMC வசம் கிண்ணியா பிரதேச சபை - ACMC வசம் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை - ACMC வசம் குருநாகல் மாநகர சபை - பிரதி முதல்வர் ACMC புத்தளம் மாநகர சபை - பிரதி முதல்வர் ACMC கிண்ணியா நகர சபை - உப தவிசாளர் ACMC மன்னார் நகர சபை - உப தவிசாளர் ACMC புத்தளம் பிரதேச சபை - உப தவிசாளர் ACMC குளியாபிட்டிய பிரதேச சபை - உப தவிசாளர் ACMC முசலி பிரதேச சபை - உப தவிசாளர் ACMC நானாட்டான் பிரதேச சபை - உப தவிசாளர் ACMC கரைதுறைப்பற்று பிரதேச சபை - உப தவிசாளர் ACMC வவுனியா மாநகர சபை - ACMC ஆதரவோடு ஆட்சியமைக்கப்பட்டது தம்பளகாமம் பிரதேச சபை - ACMC ஆதரவோடு ஆட்சியமைக்கப்பட்டது மாந்தை மேற்கு பிரதேச சபை - ACMC ஆதரவோடு ஆட்சியமைக்கப்பட்டது எதிர்வரும் 2ஆம் திகதி வரை இன்னும் பல சபைகளில் கைப்பற்றும் நிலையுள்ளது.   - Loading…  இதுவரை சம்மாந்துறை பிரதேச சபை உட்பட நான்கு பிரதேச சபைகள் முன்னால...

முஷாரப் இணைவு நிகழ்வை புறக்கணித்த அம்பாறை மாவட்ட கட்சி முக்கியஸ்தர்கள்!

Image
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபையில் சுயேட்சையாக களமிறங்கி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட முஷாரப், முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து கொள்ளும் நிகழ்வு இன்று (25) சாய்ந்தமருது தனியார் மண்டபம் ஒன்றில் கட்சியின் தேசிய தலைமை ரவுப் ஹக்கீம் முன்னிலையில் இடம்பெற்றது.  இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவில்லை எனவும், பலர் முஷாரப்பின் இணைவின் மூலம் அதிருப்பிடைந்த நிலையில் இருப்பதாகவும் தெரியவருகின்றது,  குறிப்பாக பொத்துவில் பிரதேசத்தின் மத்திய குழு அல்லது பொத்துவில் காட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவியவருகின்றது. முஷாரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  மீது அதிகமான விமர்சனங்களை முன்வைத்தது மாத்திரமின்றி றவூப் ஹக்கீமை தாறுமாறாக பேசி இருந்தமையும்,  கடந்த கோட்டாவின் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளின் போது, இவர் துணை நின்றதுதுடன்  முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அனைத்து செயற்பாடுகளின் போதும் அதிகமாக ராஜபக்ஷ தரப்புடன் இருந்து சுக போக...

மூதூர் சபை தமிழ் தரப்புக்கு: முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

Image
திருகோணமலை - மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி ஆதம்லெப்பை தலைமையில் இடம்பெற்றது. இதன் போது, மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்காக நடாத்தப்பட்ட பகிரங்க வாக்களிப்பில், தவிசாளர் வேட்பாளராக போட்டியிட்ட, இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் செல்வரத்தினம் பிரகலாதன் வெற்றி பெற்றுள்ளார். தவிசாளர் தெரிவின் போது, இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் செல்வரத்தினம் பிரகலாதன் மற்றும் தேசிய மக்கள் கட்சி உறுப்பினர் ஆர்.எம்.ரிபான் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதன் காரணமாக, தவிசாளரை வாக்களிப்பின் மூலம், தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக, பகிரங்க வாக்கடுப்பை சில கட்சிகளும், இரகசிய வாக்கெடுப்பை தேசிய மக்கள் சக்தியும் கோரின. இந்த நிலையில், தவிசாளரை இரகசியவாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதா? அல்லது பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதா? என்பதை அறிந்து கொள்வதற்காக, உள்ளூராட்சி ஆணையாளரினால், இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில், மொத்தம் 22 வாக்குகளு...

றிசானா ‘ஒரு கூண்டுக் கிளி’ | சவுதியில் வெளியாகும் திரைப்படம்

Image
இலங்கை பணிப்பெண் றிசானா நபீக் பற்றிய சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ‘றிசானா” எனும் திரைப்படத்தின் அறிமுக விழா இன்று (24) கொழும்பில் இடம்பெற்றது. சவூதி அரேபியாவில் தன் பராமரிப்பில் இருந்த குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, தூக்கிலிடப்பட்ட றிசானாவின் கதையை இத்திரைப்படம் எடுத்துக் காட்டுகிறது. இயக்குனர் சந்திரன் ரட்னம் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். றிசானா ‘ஒரு கூண்டுக் கிளி’ எனும் தலைப்பானது றிசானா சிறையில் அடைக்கப்பட்டதையும், அவருக்கு ஏற்பட்ட சுதந்திரமின்மையை குறிப்பதாக படக் குழுவினர் தெரிவிக்கின்றனர். றிசானாவின் கதாபாத்திரத்தில் விதூஷிகா ரெட்டி நடித்துள்ளதுடன், இந்திய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், பிரபல பிரித்தானிய நடிகர் ஜெரமி அயன்ஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். றிசானாவின் கதை என்பது வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்லும் பணிப்பெண்கள், குறிப்பாக இளம் பெண்கள் எதிர்நோக்கும் ஆபத்துகளையும், அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமை பற்றிய ஆழமான நினைவூட்டலாக அமைகின்றது. இந்த திரைப்படம், அந்த அனர்த்தமான சம்பவத்தை மட்டுமல்லாமல்,...

மத்திய கிழக்கில் 45,000 அமெரிக்க இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்

Image
 மத்திய கிழக்கில் 45,000 அமெரிக்க இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர் அமெரிக்கா சுமார் 45,000 இராணுவ வீரர்களையும், ஏராளமான தளங்களையும், சக்திவாய்ந்த விமான மற்றும் கடற்படைப் பிரிவுகளையும் மத்திய கிழக்கு முழுவதும் நிலைநிறுத்தியுள்ளது.  இதற்கமைய பின்வரும் எண்ணிக்கையில் அமெரிக்க இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். குவைத் 13,500 கத்தார் 10,000 பஹ்ரைன் 9,000 ஜோர்தான் 3,813 ஐ.அ.எமிரேட்ஸ் 3,500 சவூதி அரேபியா 2,700 ஈராக் 2,500 சிரியா 2,000 from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/XOEIH7T via Kalasam

மூதூர் சபை தமிழ் தரப்புக்கு: முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

Image
திருகோணமலை - மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி ஆதம்லெப்பை தலைமையில் இடம்பெற்றது. இதன் போது, மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்காக நடாத்தப்பட்ட பகிரங்க வாக்களிப்பில், தவிசாளர் வேட்பாளராக போட்டியிட்ட, இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் செல்வரத்தினம் பிரகலாதன் வெற்றி பெற்றுள்ளார். தவிசாளர் தெரிவின் போது, இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் செல்வரத்தினம் பிரகலாதன் மற்றும் தேசிய மக்கள் கட்சி உறுப்பினர் ஆர்.எம்.ரிபான் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதன் காரணமாக, தவிசாளரை வாக்களிப்பின் மூலம், தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக, பகிரங்க வாக்கடுப்பை சில கட்சிகளும், இரகசிய வாக்கெடுப்பை தேசிய மக்கள் சக்தியும் கோரின. இந்த நிலையில், தவிசாளரை இரகசியவாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதா? அல்லது பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதா? என்பதை அறிந்து கொள்வதற்காக, உள்ளூராட்சி ஆணையாளரினால், இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில், மொத்தம் 22 வாக்குகளு...

கடலுக்குச் சென்ற இஜாஸ் மீது துப்பாக்கிச்சூடு: பொலிஸ்மா அதிபரிடம் றிஷாட் வேண்டுகோள்

Image
- றிஷாட் பதியுதீன் பொலிஸ்மா அதிபரிடம் அவசர வேண்டுகோள் திருகோணமலை, குச்சவெளியிலிருந்து கடலுக்குச் சென்ற இஜாஸ் என்ற நபர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தினை கண்டிப்பதாகவும், துப்பாக்கிச்சூடு நடாத்திய நபர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  குச்சவெளி பிரதேசத்திலிருந்து திருகோணமலை கடலுக்குச் சென்ற இஜாஸ் என்ற மீனவர் மீது, கடற்படையினரால் இன்று (03)  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி  அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த றிஷாட் பதியுதீன், “மீனவத்தொழிலுக்காக கடலுக்குச் சென்ற அப்பாவி சமூகத்தினர் மீது, கடற்படை பாதுகாப்பு தரப்பினர் அத்துமீறு நடப்பதை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம்.  சந்தேக  நபர்களாக சந்தேகிக்கப்பட்டால் உரிய முறைப்படி விசாரித்து நடவடிக்களை மேற்கொள்ளாமல் இவ்வாறு தான்தோன்றித்தனமான முறையில் அப்பாவிகள் மீது துப்பாகிச்சூடு மேற்கொ...

நாபீரின் துரோகம்! வேட்பாளருக்கு பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கின்றது - துல்கர் நயீம் (VIDEO)

Image
பாறுக் ஷிஹான் தலைமை வேட்பாளரது துரோக செயல் எமக்கு ஆதரவளித்த மக்களையும் எமது தலைமை உட்பட சக வேட்பாளருக்கு பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கின்றது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான துல்கர் நயீம்  (துல்சான்) தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் ஈ.சி.எம் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்;  நடைபெற்று மடிந்த 2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தலில் எங்கள் கட்சி மாம்பழச் சின்னத்தில் சுயேட்சையாக சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தலில் களமிறங்கி இருந்தது.இந்த சுயேட்சைக்குழுவின் தலைமை வேட்பாளராக எமது நாபீர் பௌண்டேசனின் நீண்ட கால பணியாளராகவும் நிறுவன ஸ்தாபக பணிப்பாளர் உதுமான்கண்டு நாபீரின் உறவினருமான ஒருவரையும் ஏனைய 23 பேரையும் இணைத்து இத்தேர்தலில் போட்டியிட்டிருந்தோம்.நான் இத்தேர்தல் களமுனையில் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டேன். இத்தேர்தலில் எமது வேட்பாளர்கள் சிரமப்பட்டு தியாகத்துடன் ஒரு பட்டியல் (போனஸ்)ஆசனத்தை பெற்றுக்கொண்டோம்.ஆனால் ...

யாழ்ப்பாண மாநகர சபை - முஸ்லிம் பெண்ணுக்கு ஆசனம் வழங்கிய தமிழரசுக் கட்சி

Image
யா ழ்ப்பாண மாநகர சபையில் தனக்குக் கிடைத்த 3 (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ் முஸ்லிம் சமூகம் சார்பில், றிபைன் பாத்திமா றிஸ்லாக்கு தமிழரசு கட்சி வழங்கியுள்ளது.     2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தல் பற்றிய விசேட வர்த்தமானி இன்று (31) வெளியிடப்பட்டது. குறித்த அறிவித்தல் மூலம் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது.   யாழ் மாநகர சபையில் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் றிஸ்லா வேட்பாளராக களமிறங்கியிருந்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு நன்றிகள் சகோதரி றிஸ்லாக்கு வாழ்த்துக்கள்.  வடக்கில் தமிழரசு  கட்சிக்கு மக்கள்  நன்றிகளை தெரிவித்ததை போன்று, வன்னியில் அதிகமாக தமிழ் மக்களை பட்டியலில் இணைத்த ரிஷாட் பதியுதீனுக்கும் அம்மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.  from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/flAEGuL via Kalasam