Posts

The wire cutter

Image
Great workout leggings are a sartorial Swiss Army knife: a technical powerhouse while in motion and a comfortable go-to when pants don’t appeal. Performance wear is expected to do double duty, providing both support and comfort, on the go and at rest. We worked out (and worked from home) in numerous pairs, scrutinizing fabric, fit, performance, and style to find the best pair of workout leggings for however you choose to move. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3nUwefH via the wire cutter

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

Image
நூருள் ஹுதா உமர் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (28) கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இலவச கல்வியை பாதுகாத்தல், கல்வி இராணுவமயப்படுத்தலை தவிர்த்தல் எனும் தொனிப் பொருளில் வந்தாறுமூலையில் அமைந்துள்ள பிரதான வளாக முன்றலில் நடைபெற்றது. பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழு, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் என்பவற்றின் வழிகாட்டலில் நடைபெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் என்பவற்றின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டு பல்வேறு சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் கொவிட் தொற்று சுகாதார வழிமுறைகளைப் பேணி கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கத்தது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3rF8ZZN via Kalasam

ஒலிம்பிக்கிற்காக இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட பேஸ்போல்!

Image
  டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் பயன்படுத்தப்படும் பேஸ்போல் இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டது.   தற்பொழுது டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டித் தொடரின் பேஸ் போல் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பேஸ்போல் முழுக்க முழுக்க இலங்கையில் தயாரிக்கப்பட்டது.   பேஸ் போல் உற்பத்தி தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.   இலங்கையில் பேஸ்போல் போட்டிகள் இன்னமும் தொழில்முறை அடிப்படையில் நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3BO5vcc via Kalasam

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் மேலுமொரு தடை!

Image
நாட்டில் பொலித்தீன்களின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் உக்காத 'லன்ஸ் சீட்' வகைகளை விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3BQ5NPN via Kalasam

வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பில் தகவல் வழங்க விஷேட இலக்கம் இதோ!

Image
வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்க பொலிஸார் விஷேட இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதனடிப்படையில் கொழும்பில் அல்லது அதனை அண்டிய பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் 0112 433 333 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதேவேளை தீக்காயங்களுடன் ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் சடலம் அடக்கப்பட்ட பொது மயானத்திற்கு நேற்று (27) பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2THIuXi via Kalasam

இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரத்தினக்கல்லை வாங்க 50 வெளிநாட்டவர்களிடையே போட்டி

Image
இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரத்தினக்கல் தொகுதி Sapphire Cluster கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வங்காட்டியுள்ளனர். குருந்தம் வகைக்கு உட்பட்ட உலகின் மிகப்பெரிய நீலமணி - இரத்தினக்கல் எனக்கருத்தப்படும் இரத்தினக்கல் தொகுதி Sapphire Cluster, இரத்தினபுரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 510 கிலோகிராம் எடை கொண்ட Sapphire Cluster என்றழைக்கப்படும் இந்த இரத்தினக்கல் தொகுதி வீடொன்றிற்கு அருகில் கிணறு தோண்டும் போது கிடைத்திருப்பதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெரிவித்தது; இதன் பெறுமதி 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்படுகிறது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3zJ7aOy via Kalasam

நேற்று வாகன விபத்துக்களால் 10 பேர் பலி!

Image
நாட்டில் நேற்றைய தினம் வாகன விபத்துக்களினால் 10 பேர் மரணித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் 6 பேர் உந்துருளிகளில் பயணித்தவர்கள் என காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன், மூன்று பாதசாரிகளும், முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும் இவ்வாறு உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் அதிகளவில் உந்துருளிகள் மற்றும் முச்சக்கரவண்டிகளின் விபத்துக்கள் இடம்பெறுகின்றன. எனவே, சாரதிகள் வீதியில் பயணிக்கும் போது, மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3iUW6aj via Kalasam