நான் நல்லவன் என்றால், எனக்கு ஆதரவளியுங்கள் - ரிஷாத்திற்கு ரணில் அழைப்பு

செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்நோக்கி நகர்த்தும் வேலைத் திட்டத்தை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அடுத்த வருடம் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்பதுடன் சுயதொழில் பெறுவதற்காக 50 பேருக்கு நிதி நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார் தான் நல்லவராக இருந்த போதும் தன்னை சுற்றியிருப்பவர்கள் மோசமானவர்கள் என்று ரிஷாத் பதியூதீன் எம்.பி கூறியிருப்பதை நினைவுபடுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இம்முறை நடப்பது பாராளுமன்ற தேர்தல் அல்ல. மாறாக ஜனாதிபதி தேர்தலே நடக்கவுள்ளது என்றும் தெரிவித்தார். பாராளுமன்ற தேர்தலிலேயே என்னை சுற்றியிருப்பவர்கள் யார் என்பது குறித்து தெரிவு செய்ய வேண்டும். எனவே நான் நல்லவனாக இருந்தால் எனக்கு ஆதரவளியுங்கள் என ரிஷாத் பதியூதீன் உள்ளிட்ட தரப்பினருக்கும் முஸ்லிம் காங்கிரஸூக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். ரிஷாத் பதியூதீன் அமைச்சராக இருந்தபோது பொருட்களின் விலையை குறைக்க வேண்டுமென அழுத்தம் கொடுத்திருந்தாலும், ஒருபோதும்...