Posts

இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வரும் தேர்தல் பிரச்சாரம்

Image
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. குறித்த காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது குழுக்களோ வேட்பாளர்களை பிரச்சாரம் செய்வது, ஊக்குவிப்பது போன்றன தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் ஆணையாளர் தொடர்ந்து கருத்து வௌியிடுகையில், நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதற்காக கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. “பிரச்சார காலம் முடிவடைந்தவுடன் பொது பேரணிகள், விளம்பர பொருட்கள் விநியோகம் அல்லது வீடு வீடாக பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படாது.  எந்தவொரு பிரச்சாரத்திற்கும் எதிராக நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  இதேவேளை, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க,சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க,  நாமல் ராஜபக்ஷ,  திலித் ஜயவீர, நுவன் போககே ஆகியோர் தலைநகரில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை இன்று நடத்தவுள்ளனர். இதனால் கொழும்பு நகரின் பா...

வெளியான ஜேவிபியின் சுயரூபம்

Image
13வது திருத்தத்தை தற்போதைய வடிவில் மட்டுமே நடைமுறைப்படுத்துவோம் எனவும், மாகாண சபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை தேசிய மக்கள் சக்தி (NPP) வழங்காது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (vijitha herath) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்கள் மற்றும் பௌத்தம், சிங்கள கலாசாரம் மற்றும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழிகள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் (ACBC) ஒழுங்கு செய்த கூட்டத்தின் போதே தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த உறுதிமொழியை வழங்கினார். 13வது திருத்தம் தேசிய பிரச்சினை அல்லது மாகாண அபிவிருத்திக்கான தீர்வு அல்ல என்ற கருத்தை தாங்கள் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் நாட்டின் ஒற்றையாட்சி, இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்தும் அதேவேளை இலங்கைக் குடியரசு பௌத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை வழங்கும் என்று கூறுகின்ற அரசியலமைப்பின், 9 ஆவது சரத்தை எதிர்கால தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் மாற்றாது அதற்காக ஜே.வி.பி பெரும் பங்காற்றியுள்ளதாக...

இலங்கை கல்வி அமைச்சர் யார் என்ற கேள்விக்கு பாடசாலை மாணவன் அளித்த மிளிர வைக்கும் பதில்

Image
இலங்கையில் கல்வி அமைச்சு யார் என்று?  தவணை பரீட்சையில் இந்த கேள்வி இடம் பெற்றிருந்தது , இந்த பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் சரியான பதிலை வழங்க வில்லை. எனினும் ஒரு குறிப்பிட்ட மாணவனின் பதில் மாத்திரம்  பலரை மகிழ்வித்தது. அவர் இலங்கையின் கல்வி அமைச்சர் ஜோசப் ஸ்டாலின் என்று பதிலளித்திருந்தார். கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை விட ஆசிரியர் தொழிற்சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தொலைக்காட்சிகளிலும் ஏனைய ஊடகங்களிலும் அதிகம் தோன்றுகிறார் என்ற அடிப்படையில் குறித்த மாணவர் இந்த பதிலை வழங்கியுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/fycU7rj via Kalasam

வாக்காளர் அட்டை கிடைக்காதோர் அருகில் உள்ள தபால் நிலையத்தை நாடவும் !

Image
  வாக்காளர் அட்டை கிடைக்காதோர் அருகில் உள்ள தபால் நிலையத்தை நாடவும் ! ( அம்னா இர்ஷாத்) ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளில் 97 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு கோடியே 66 இலட்சத்து 50 ஆயிரம் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மாஅதிபர் ராஜித கே. ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்த் நிலையில் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்காதவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை அருகிலுள்ள தபால் நிலையங்களுக்கு சென்று அதனை பெற்றுக்கொள்ள முடியும் என சிரேஷ்ட பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க கூறினார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/ZIWbrPe via Kalasam

வாக்குப் பெட்டியில் வெளியான புதிய செய்தி

Image
நாடளாவிய ரீதியில் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குப் பெட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  இதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதி தேர்தல் அலுவலர்கள் உரிய வாக்குப்பெட்டிகளை வாக்குச் சாவடிகளுக்கு விடுவிப்பார்கள். இந்நிலையில், வாக்குச் சீட்டு பெரிய அளவில் இருப்பதால் இம்முறை மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதுடன் 3 அளவுகளில் அட்டைப் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், வாக்குப்பதிவு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், அரச அதிகாரிகளுக்கு அனைத்து அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.     மேலும், தேர்தல் பணிகளில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு அதற்கான ஏற்பாடுகளை தயார் செய்து, குறிப்பிட்ட நாளில் பணிகள் நடைபெறும் இடங்களுக்குச் செல்லுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.  from Ceylon Muslim - NEWS CASTING FROM SR...

கடந்த தவறுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத குழுவினரிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியாது - இந்த தேர்தல், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இறுதி வாய்ப்பு - ஜனாதிபதி தெரிவிப்பு

Image
  1987 கலவரத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று ஜே.வி.பி கூறுமானால், தமது பெயரை தவறாகப் பயன்படுத்தியதற்காக நஷ்டஈடு கோரி வழக்குத் தொடர வேண்டும். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி மீண்டும் மக்களை ஏமாற்றுகின்றனர்.  கடந்த காலத் தவறுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத ஒரு குழுவினரிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியாது. 2024 ஜனாதிபதித் தேர்தல், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இறுதி வாய்ப்பு. - 'புழுவன் பெரலிய' (புரட்சி செய்வோம்) நிகழ்ச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு நாட்டின் தற்போதைய நிலைக்கு தம்மைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் காரணம் என்றும், 1987 ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சிக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறி ஜே.வி.பி மக்களை ஏமாற்றி வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  சாத்தியமில்லாத வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி ஏமாற்றும் தவறை ஜே.வி.பி மீண்டும் செய்து வருவதாகவும் கடந்த காலத் தவறுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத குழுவிடம் நாட்டின் எதிர்காலத்தைக் கையளிக்க முடியுமா என்றும் ஜனாதிபதி வினவினார்.  Stables@ParkStreet ...

அமுல்படுத்தப்படுமா ஊரடங்கு சட்டம்...!

Image
ஜனாதிபதி விரும்பினால் நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார். எனினும், ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் காவல்துறை ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தத் திட்டமோ அல்லது தயாரிப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (Ministry of Defense Secretary) குறிப்பிட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க (Viyani Gunathilaka) கொழும்பு (colombo) ஆங்கில ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், ”இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கும் காவல்துறைக்கும் வழங்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் போராட்டம் வெடித்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற போதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ...