Posts

மூதூர் தமிழ் கூட்டமைப்புக்கு : குச்சவெளி முஸ்லீம் காங்கிரசுக்கு !

Image
குச்சவெளி மற்றும் மூதூர் பிரதேச சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (27) திருகோணமலையின் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவருமான சண்முகம் குகதாசன் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். எஸ். தௌபீக் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. குச்சவெளி பிரதேச சபையில், முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும், இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் பிரதி தவிசாளராகவும் செயற்படுவர். குச்சவெளி பிரதேச சபையில், அதற்கு அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும்...

சூரியன் கஃபதுல்லாஹ்வுக்கு உச்சம் கொடுக்கும் நாட்களில் சூரிய நிழலில் கிப்லாவை அமைத்துக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம்.

Image
- கொழும்பு பெரிய பள்ளி அறிவிப்பு  இன் ஷா அல்லாஹ் இம் மாதம் 27/05/2025 செவ்வாய்க்கிழமை மற்றும் 28/05/2025 புதன்கிழமை ஆகிய இரு தினங்களில் சூரியன் புனித கஃபதுல்லாஹ்வுக்கு உச்சம் கொடுக்கும் நாட்களாக  அமையப் பெறுகிறது. அந்த வகையில் இலங்கை நேரம் பகல் 2.48 மணிக்கு சூரியன் 27ஆம் திகதி   +89° 56' 25" என்ற பெருமானத்திலும், 28 ஆம் திகதிக்கு +89° 53' 53" என்ற பெருமானத்திலும் புனித கஃபதுல்லாஹ்வுக்கு உச்சம் கொடுக்கும்.  நம் நாட்டில் இக்குறிப்பிட்ட நேரத்தில் (பகல் 2.48 மணிக்கு) சூரியன் மேற்குப் பக்கமாக சாய்ந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு செங்குத்தான (90°) பொருளில் கிழக்குப் பக்கமாக விழும் நிழலை அடையாளப்படுத்தி அந் நிழலுக்கு எதிர்பக்கமாக ( மேற்குப் பக்கமாக) முன்னோக்கினால் அது கிப்லாவின் திசையாக அமையப்பெறும். எனவே காலநிலை சீராக இருந்தால் கிப்லாவின் திசையை இவ்விரு நாட்களில் துல்லியமாக  அடையாளப்படுத்தக்கூடிய சந்தர்ப்பத்தினை நழுவ விடாது நமது வீடுகள், தொழில் செய்யும் இடங்கள், பள்ளிவாசல்கள் போன்ற இபாதத் செய்யும் இடங்களில் கிப்லாவின் திசையை துல்லியமாக அடையாளப்படுத்துவது ஃபர்ழு கி...

விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு தெய்வாதீனமாக உயிர் தப்பிய பலாங்கொடை பள்ளிவாயல்கள் நஜீமுதீனின் திகில் அனுபவம்

Image
  35 வருடங்களுக்கு முன், 1990 ஜூன் மாதம் 11 ஆம் திகதி.. பொலிஸ் சார்ஜன்ட் ஆக இருந்த போது விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு தெய்வாதீனமாக உயிர் தப்பிய பலாங்கொடை பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின்  தலைவர்அல் ஹாஜ் நஜீமுதீனின் திகில் அனுபவம்  * தமிழ் சகோதரர் ஒருவர் உணவும் பாதுகாப்பும் தந்து உறங்க வைத்தார்.  * நெற்றியில் திருநீறு பூசி என்னை தமிழ் கிராமத்துக்கு அழைத்து சென்று பின் என்னை பள்ளிவாயலில் ஒப்படைத்தார்.  * இரத்தக் கறையுடன் காட்டில் பாய்ந்து விடியும் வரை புதருக்குள் மறைந்திருந்தேன்.  * ஜனாதிபதி ஆர். பிரேமதாச எங்களை சரணடையுமாறு அன்று எங்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.  * கருணா எங்களை கொன்று விடுமாறு உத்தரவு வழங்கியிருந்தார்.  * நான் இறந்து விட்டதாக பொலிஸ் அறிவித்திருந்ததால் வீடு திரும்பிய என்னை வீட்டார் அச்சமடைந்து வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.  * பொலிஸ் சேவையில் இருந்த அநேகமான தமிழ் அதிகாரிகள் விடுதலைப் புலிகளால்  கொலை செய்யப்பட்டனர். 1990 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளால் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இருந்து கடத்திச் செல்லப...

பொத்துவில் அறுகம் குடாவில் பொது இடங்களில் நீச்சல் உடை அணிய தடை..??

Image
இலங்கையின் பிரபல கடலோர சுற்றுலா தலமான அறுகம் குடாவில் பொது இடங்களில் பிகினி (நீச்சல் உடை) அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை பொலிஸார் மறுத்துள்ளனர். “அறுகம் குடாவில் உள்ள உள்ளூர் சமூக மக்கள்” என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு குழுவால் வெளியிடப்பட்ட ஒரு பதிவைத் தொடர்ந்து வார இறுதியில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்தப் பதிவு, “உள்ளூர் கலாச்சாரத்தை மதிக்க” பொது இடங்களில் பிகினி அணிவதைத் தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. “அறுகம் குடாவிற்கு வருக! உங்களை இங்கு சந்திப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் உங்கள் வருகையை உண்மையிலேயே மதிக்கிறோம். எங்கள் உள்ளூர் கலாச்சாரத்தை மதிக்க, பொது இடங்களில் பிகினி அணிவதைத் தவிர்க்குமாறு நாங்கள் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம். எங்கள் மரபுகளுக்கான உங்கள் மரியாதை எங்கள் சமூகத்திற்கு மிகவும் முக்கியமானது. உங்கள் புரிதலுக்கு நன்றி, மேலும் அழகான அறுகம் குடாவில் உங்கள் நேரத்தை நீங்கள் ...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக மருதமுனை ஜுனைதீன்!!

Image
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக மருதமுனையைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு இன்று (26) கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/aMA5j2k via Kalasam

மருதமுனை இளைஞர்களுக்கு விதிக்கப்பட்ட முக்கிய தடை! இனி அவதானம்

Image
பாறுக் ஷிஹான் மருதமுனை பிரதேச மக்களுக்கான அறிவித்தல் எனும் தலைப்பில் மருதமுனை அனைத்துப் பள்ளிவாசல்கள் அமையம் எனும் பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் வாழும் மக்களுக்கான குறித்த அறிவித்தல் தொடர்பில் பல்வேறு விடயங்கள் அத்துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.அத்துடன் மருதமுனை அனைத்துப் பள்ளிவாசல்கள் அமையம் அண்மையில் கூட  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது. மருதமுனையின் தற்போதைய நிலை - மாணவர்கள் நலன் - இளைஞர்களின் போக்கு, மருதமுனையின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. மருதமுனை பிரதேச மக்களுக்கான அறிவித்தல் அன்புடையீர்  அஸ்ஸலாமு அலைக்கும் கடந்த காலங்களில் நமது ஊரின் செயற்பாடுகள் பள்ளிவாசல்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டதாக இருந்ததனை தாங்கள் அறிவீர்கள். குடும்பப் பிரச்சினைகளும்இ மக்களுக்கிடையிலான பிணக்களும் குடும்பமட்டத்திலும்  பள்ளிவால்கள் மட்டத்திலும்...

ஞானசார தேரர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - முனீர் முளாபர்

Image
கலகொட அத்தே ஞானசார தேரர் ஊடக சந்திப்பொன்றைநடத்தி எனக்கு எதிராக தெரிவித்துள்ள பொய்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார். பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 20ஆம் திகதி கலகொட அத்தே ஞானசார தேரரினால் நடத்தப்பட்ட பொதுபல சேனா ஊடக சந்தி்ப்பின்போது முனீர் முளப்பர் ஆகிய என்னைப்பற்றி உண்மைக்கு புறம்பான அறிவிப்போன்றை மேற்கொண்டு ஊடகங்கள் ஊடாக அவதூறு பரப்பி இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியிடப்பட்ட அவமதிப்பு அறிக்கையின் பிரகாரம், நிட்டம்புவ திஹாரி  பிரதேசத்தில் அமைந்துள்ள தன்வீர் நிறுவனம், ஜமாத்-இ-இஸ்லாம் மற்றும் இஹ்வான் முஸ்லிம் ஆகிய அமைப்புகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.  அதேநேரம் கடவுளுக்காக மக்களைக் கொல்பவராகவோ அல்லது அதை ஆதரிப்பவராகவோ நான் ஒருபோதும் இருந்ததில்லை, மேலும் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நான் கடுமைய...