Posts

Showing posts from September, 2022

பேக்கரி உற்பத்திகளின் விலைகள் மேலும் அதிகரிக்குமா?

Image
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி இன்று முதல் அமுலுக்கு வரும் நிலையில், பேக்கரி உற்பத்திகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பாண் உள்ளிட்ட தமது உற்பத்திப் பொருட்களுக்கு புதிய வரி விதிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார். கோதுமை மாவுக்கு வரி விதிக்கப்படவுள்ளதுடன், பிரதான கோதுமை மா இறக்குமதியாளர்கள் தமது விலைகளை அதிகரித்தால் அது தானாகவே பேக்கரி தொழிலை பாதிக்கும். மேற்கூறிய அனைத்து காரணிகளின் விளைவாக பேக்கரி பொருட்களின் விலைகள் உயரும், ஆனால் அவை எந்த விகிதத்தில் அதிகரிக்கப்படும் என்பதை தீர்மானிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/r81b2Xe via Kalasam

காது சிகிச்சைக்காக சென்ற இளம் பெண் கையை இழந்த கொடுமை

Image
  பீகாரில் காது சிகிச்சைக்காக சென்ற இளம் பெண் ஒருவர் தவறான சிகிச்சையின் காரணமாக ஒரு கையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா, பீகாரில் பாட்னாவில் உள்ள மகாவீர் ஆரோக்கிய சன்ஸ்தானில் செவிலியர் ஒருவரின் அலட்சியத்தில் இளம்பெண் ஒருவரின் கை துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 11ம் திகதி காது அறுவை சிகிச்சைக்கு வந்த ரேகாவுக்கு நரம்புக்கு பதிலாக தமனியில் ஊசி போடப்பட்டது.  இதனால் ரேகாவின் கை மெதுவாக பச்சை நிறமாக மாற ஆரம்பித்தது. ரேகா உடனடியாக கையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் வலி குறித்து மருத்துவமனையில் புகார் அளித்தார்,  ஆனால் அந்த நேரத்தில் பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கவனம் செலுத்தவில்லை.  மாறாக அவரை மருத்துவமனையில் இருந்து வெளியேறுமாறு மிரட்டினர். தவறான சிகிச்சையின் காரணமாக ஒரு கையை அவர் இழந்தார். கையை இழந்தது மட்டுமின்றி, நவம்பரில் அவருக்கு நடக்கவிருந்த திருமணமும் நிறுத்தப்பட்டது.  இதனால், அவரது குடும்ப உறுப்பினர்கள் பொலிஸில் புகார் அளித்தனர்.  ஆனால், பொலிஸார் இதனை வழக்குப்பதிவு செ...

ஆப்கானில் தற்கொலைப்படைத் தாக்குதல்-19 பேர் பலி; 27 பேர் காயம்

Image
  ஆப்கானிஸ்தானின் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறுபான்மையினராகக் கருதப்படும் ஹசாராக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/pvME9Gn via Kalasam

கொட்டகலை – போகாவத்த மாணவி தாக்குதல் சம்பவம் – அதிபர் கைது

Image
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தவிடயம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் திம்புள்ள பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் தின நிகழ்வுக்காக தனது சகோதரன் 300 ரூபாய் செலுத்தவில்லை என தெரிவித்து, குறித்த அதிபர் மாணவியின் சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனையடுத்து “சேர் எனது சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்ட வேண்டாம் என்றும் தனது தந்தை அருகில் வேலை செய்வதால் அவரிமிருந்து பணத்தை வாங்கி தருவதாக” குறித்த மாணவி தெரிவித்துள்ளார். இதனையடுத்தே அதிபர் குறித்த மாணவியை பிரம்பால் அமானுஷ்யமாக தாக்கியதாகவும் இதனையடுத்து பாடசாலைக்கு அருகில் வேலை செய்துக்கொண்டிருந்த மாணவியின் தந்தை, மக...

நீதிமன்றம் சென்ற முன்னாள் ஜனாதிபதி!

Image
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை இடைநிறுத்துமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/bzPdTmL via Kalasam

39,896 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர்

Image
மஹேஸ்வரி விஜயனந்தன் 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மோசமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு 30,896 சிறுவர்கள் உள்ளாகியுள்ளனர் என தெரிவித்த முன்னாள் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி, நாளொன்று 8.7 சதவீதமான சிறுவர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர் என்றார். இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இன்று  (29)  “சிறுவர் வன்முறையை நிறுத்துங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இவை தவிர குழந்தைகயின் எதிர்காலம், பாடசாலை ,சிறுவர்கள் தமக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் குறித்து வெளி சொல்லாமை காரணமாக, அறிக்கையிடப்படாத சம்பவங்கள் இதனைவிட அதிகமாக இருக்கலாம் என்றார். இதற்கமையவே எப்பாவெல பிரதேசத்தில் பெற்ற தகப்பன் உள்ளிட்ட உறவினர்கள்  30 பேரால் தொடர்ச்சியாக 6 வருடங்கள்  சிறுமியொருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகத் தெரிவித்த அவர், 18,377பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டாலும்  இந்த 9 வருடங்கள...

அமெரிக்கா சென்ற பசிலுக்கு நேர்ந்த கதி!

Image
அமெரிக்கா சென்ற முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கையுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து விதமாக இலங்கை தொடர்பான செயற்பாடுகளையும் விட்டு விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது தொலைபேசி எண்ணை மாற்றி அமெரிக்காவில் தனியாக வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பசில் ராஜபக்சவுடன் நெருக்கமாக பணியாற்றுபவர்கள் கூட அவரைத் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபய ராஜபக்ச பதவியை விட்டு வெளியேறி புதிய ஜனாதிபதியை நியமித்ததன் மூலம் ராஜபக்ச குடும்பத்திலும், பசில் ராஜபக்சவின் கட்சியாக இருந்த பொதுஜன பெரமுனவிலும் சில நெருக்கடிகள் உருவாகியது. பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் பெற்றுக் கொடுப்பதற்காக பசில் ராஜபக்ச கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. தற்போதைய அமைச்சரவையில் பெரும்பான்மையானவர்கள் பசில் ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்கள் அல்ல. அமெரிக்கா செல்வதற்கு முன், பசிலும் மிக நெருக்கமான குழுவை அமைச்சரவையில் சேர்க்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்நிலைமையின் அடிப்படையில் க...

போதைப் பொருள் - விபச்சாரம் பெருகி விட்டது: மைத்ரிபால

Image
நாட்டின் பொருளாதார நெருக்கடி, ஒரு புறத்தில் விபச்சாரத்தை பாரிய அளவில் பெருக வைத்துள்ளதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. நல்ல நிலையில் இருந்ததாகக் கருதப்பட்ட பல முக்கிய குடும்பங்களிலிருந்தும் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு கைதாகிய சம்பவங்கள் தொடர்பில் பொலிசார் ஊடாகத் தாம் அறிந்து கொண்டுள்ளதாகவும் இன்னொரு புறத்தில் போதைப் பொருள் வர்த்தகம் கட்டின்றி வளர்ந்து வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். தற்போதைய சூழ்நிலை தொடர்ந்தால் 'வசதி வாய்ப்பை' பெருக்கிக் கொண்டவர்கள் மாத்திரமே உயிர் வாழ முடியும் என்ற நிலை உருவாகும் எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/fYcjK4X via Kalasam

பிலிப்பைன்ஸில் ஜனாதிபதி இன்று முக்கிய பேச்சுவார்த்தையில்!

Image
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங்பொங் மார்கஸ் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா ஆகியோருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜப்பானுக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்தப் பயணத்தை நிறைவுசெய்து, நேற்று பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை சென்றடைந்தார். அத்துடன், மணிலாவில் இடம்பெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55ஆவது ஆளுநர் கூட்டத்துக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்க உள்ளார். பிலிப்பைன்ஸ் விஜயத்தை நிறைவுசெய்து, ஜனாதிபதி மீண்டும் நாளை(30) நாடு திரும்பவுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/LmrufsO via Kalasam

ரூ. 650 கோடி கடனை செலுத்தியது லிட்ரோ

Image
எரிவாயு விநியோகத்தை பராமரிக்கப்பதற்காக உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 70 மில்லியன் டொலர் (ரூ. 2600 கோடி) கடனில் 650 கோடி ரூபாய் திறைசேரிக்கு செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், இன்று (28) தெரிவித்தார். கடன் தொகையின் மற்றுமொரு பகுதியான, 8 பில்லியன் ரூபாய் (800 கோடி) ஒக்டோபரில் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் முழுக் கடன் தொகையும் டிசெம்பர் மாதம் திறைசேரிக்கு செலுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். கடந்த ஜூலை மாதம் கடனின் முதல் பகுதியை பெற்ற லிட்ரோ, கடனின் நடுப்பகுதியில் இருந்து எரிவாயுவுக்கான கட்டணத்தை செலுத்தி வருவதாகவும் கடனின் இறுதிப் பகுதி பெறப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார். கடன் 10 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட கால கடனாக இருந்தாலும், திறைசேரிக்கு கடனை செலுத்தி வருவதாகவும் நாடு எதிர்நோக்கும் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் லிட்ரோ செயற்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/fh9ta6B via Kalasam

வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை!

Image
வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்தன தெரிவித்தார். பெறுமதி சேர் வரி மற்றும் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் வெதுப்பக உணவு பொருட்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நூற்றுக்கு 08 வீதமாக அறவிடப்பட்ட பெறுமதி சேர் வரியானது 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, நூற்றுக்கு இரண்டரை வீதம் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரி அறவிடப்படுவதாலும் இந்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அத்துடன் கோதுமை மா ஒரு மூடையின் விலையானது 21 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது. கோதுமைக்கு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் சந்தையில் கோதுமைக்கு பற்றாக்குறையே நிலவுகின்றது. வரி அறவீடுகள் அதிகரிப்பு மற்றும் கோதுமை விலை அதிகரிப்பு ஆகியனவற்றை அடிப்படையாக கொண்டு நோக்கும் போது பாண் ஒரு இறாத்தலை 500 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு வெதுப்பக உ...

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மகன் பிணையில் விடுதலை!

Image
கிரிபத்கொடை பகுதியில் பாடசாலை மாணவர்கள் இருவரை தாக்கியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் புதல்வர் உள்ளிட்ட சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 26 ஆம் திகதி கிரிபத்கொடை பகுதியில் வைத்து இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் புதல்வர், தனது ஆதரவாளர்களுடன் மாணவர்கள் இருவரை தாக்கியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அமைச்சிற்கு சொந்தமான WP KX 8472 என்ற இலக்கமுடைய வாகனத்தில் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/dAJw5jG via Kalasam

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள், அறபு மொழிப்பீடத்தின் 9வது சர்வதேச ஆய்வரங்கு

Image
  (நூருள் ஹுதா உமர்) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழிப்பீடத்தின் 9வது சர்வதேச ஆய்வரங்கு பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம்.மஸாஹிர் தலைமையில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள, முதுநிலை விரிவுரையாளர் எச்.எம்.ஏ.ஹில்மியின் ஒருங்கிணைப்பில் 28.09.2022 (புதன்) இன்று இணைய வழியிலாகவும் நேரடியாகவும் இடம்பெற்றது.  'இஸ்லாமிய மற்றும் அறபுக்கற்கைளூடாக சமூக-பொருளாதார அபிவிருத்தி' எனும் தொனிப்பொருளில் இவ்வாய்வரங்கு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.  இவ்வாய்வரங்கின் தொடக்க நிகழ்வின் பிரதம பேச்சாளராக மலாயா பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அகடமி துணைப்பேராசிரியர் கலாநிதி அஸ்மா அப்துர் றஹ்மான் கலந்து கொண்டு உரையாற்றினார்.  குறித்த ஆய்வரங்கில் 49 ஆய்வுக்கட்டுரைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.  இணைய வழியிலாகவும் நேரடியாகவும் இடம்பெற்ற இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் 9வது சர்வதேச ஆய்வரங்கில் ஆ...

அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட அறிவிப்பு!

Image
அரச உத்தியோகத்தர்கள் அலுவலகங்களுக்கு வருகை தந்து கடமைகளை நிறைவேற்றும் போது அரச சேவையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் பொருத்தமான அலுவலக உடைகளை அணிந்து வருகை தர அனுமதிக்குமாறு அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நிறுவனத் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார். அதன்படி, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். சுற்றறிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் சில நிறுவனங்களின் தலைவர்கள் பெண் உத்தியோகத்தர்களுக்கு சாரி அல்லது ஒசரியை மட்டுமே பயன்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான சுற்றறிக்கை கீழே, from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/v098Hbx via Kalasam

சீனியும் சிக்கியது இருவரும் சிக்கினர்

Image
பேலியகொடை பிரதேசத்​தில் களஞ்சிய சாலையொன்றில் வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு உதவாத 3,000 கிலோகிராம் சீனி, விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், நேற்று  (26) இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் போதே சீனி கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் பேலியகொடை பிரதேசத்தை சேர்ந்த 41 மற்றும் 48 வயதானவர்கள் என்றும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளது.  கைது செய்யப்பட்ட இவ்விருவரும் மேலதிக விசாரணைகளுக்காக, பேலியகொடை பொதுமக்கள் பரிசோதனை காரியாலய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அந்த களஞ்சியசாலை சீல் வைக்கப்பட்டுள்ளது.  from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/r1nyxqL via Kalasam

எனது காலத்தில் மக்கள் உண்டு, குடித்து மகிழ்ச்சியாக இருந்தார்கள்;அக்காலத்தில் பொருட்களின் விலை குறைவு-சம்பளம் அதிகம்: மைத்திரிபால சிறிசேன

Image
  தற்போதைய பிரச்சினைகள் எதுவும் தமது ஆட்சிக் காலத்தில் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “அப்போது பொருட்களின் விலை குறைவாகவும், சம்பளம் அதிகமாகவும் இருந்தது.  மக்கள் கடவுளின் உதவியால் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் அனைத்துக் கட்சி அரசுகள் உருவாகவில்லை.  எனவே, மிகவும் முற்போக்கான கட்சிகளை ஒன்று திரட்டி கூட்டமைப்பை உருவாக்கி மக்கள் நேய ஆட்சியை உருவாக்குவேன் என நம்புகிறேன். கொழும்பைச் சூழவுள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரிக்கப்படுவது நல்லதொரு சூழ்நிலை அல்ல. அதன் மூலம் அரசுக்கு எதிரான மக்களின் எழுச்சி அதிகரிக்கவே செய்யும்’’ என்றார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/BRCmWOa via Kalasam

அல்லாமா யூசுஃப் அல் கர்ளாவி அவர்களின் மறைவு இஸ்லாமிய சிந்தனைப்பெருவெளியில் பாரிய வெற்றிடம்!

Image
  அறிஞர் அல்லாமா யூசுஃப் அல் கர்ளாவி (Yusuf al-Qaradawi ) அவர்களின் இழப்பு, இஸ்லாமிய சமூகத்தின் பேரிழப்பாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  அன்னாரின் மறைவு குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  "அல்லாமா யூசுஃப் அல் கர்ளாவி அவர்கள் எகிப்தில் பிறந்த மிகப்பெரும் சிந்தனைவாதி. ஏழை குடும்பத்தில் பிறந்தாலும் மார்க்க கல்வியைத் தொடர்ந்து, பல்வேறு தடைகளைத் தாண்டி, இஸ்லாமிய கல்வியில் உச்சத்தை தொட்டவர். சமுதாயத்துக்கு பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டு வந்தவர்.  அவரது கருத்துக்கள் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. எனினும், அவரது கருத்துக்கு மாற்றமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதெல்லாம் அவற்றை ஏற்றுக்கொண்டு, தனது தவறை திருத்திக்கொள்ளும் மனப்பாங்கு உடையவராகவே அவர் இருந்திருக்கின்றார். எனவேதான், இஸ்லாமிய அறிஞர்களிடமும் இஸ்லாமிய மக்களிடமும் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார்.  10 வயதிலேயே அல் குர்ஆனை மனனம் செய்த அவர், எகிப்து அல் - அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் தமது கல்வியை தொடர்ந்தவர். அ...

இரண்டு கிலோ நிறையுடைய தங்க பிஸ்கட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியில் கடத்திவர முயற்சித்த சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி கைது.

Image
இரண்டு கிலோகிராம் நிறையுடைய 8 தங்க பிஸ்கட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியில் கொண்டுவந்த விமான நிலையத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியொருவரை இன்று (27) பகல் சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களின் மொத்த பெறுமதி சுமார் 2 கோடி ரூபா என தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் கைதான நபர் களனி பகுதியில் வசித்து வரும் 40 வயதுடைய விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று (27) காலை டுபாயில் இருந்து வந்த இந்திய பயணியொருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு பயணிகள் முனையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரியிடம் குறித்த தங்க பிஸ்கட்டுகளை வழங்கியிருக்கலாம் என சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி தனது காற்சட்டைப் பையில் தங்க பிஸ்கட்களை மறைத்து வைத்து விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள சுங்க வளாகத்தை கடக்க முற்பட்ட போது சுங்கப் பிரிவின் அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சந்தேக நபரிடம் தற்போது விரிவான விசாரணைகள் இடம்பெற்று ...

நுரைச்சோலை செயலிழப்பு... மின்வெட்டு நேரம் இன்று முதல் அதிகரிப்பு - வெளியானது அறிவிப்பு

Image
  செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கியை வழமைக்கு கொண்டு வர 3 அல்லது 5 நாட்கள் செல்லும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார். டுவிட்டர் பதிவொன்றின்  ஊடாக அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மின்உற்பத்தி நிலையங்களின் பயன்பாட்டு நிலைமை குறித்து முகாமைத்துவப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார் இதேவேளை, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 3வது மின் பிறப்பாக்கி செயலிழந்துள்ள நிலையில், இன்று (செப்.27) மின்சார தடையை மூன்று மணித்தியாலங்கள் வரை அதிகரிப்பதற்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, 2 மணித்தியாலங்களும், 20 நிமிடங்களுமாக காணப்பட்ட மின்வெட்டு நேரம், இன்று (27) முதல் மூன்று மணித்தியாலம் வரை அதிகரிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/V5AIGrl via Kalasam

தாமரை கோபுரத்தில் நாளாந்தம் 41 ஆயிரம் டொலர்கள் வருமானம்! ஐந்தே வருடங்களில் கடனை மீளச் செலுத்த முடியும்!

Image
நாளாந்தம் 41 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை ஐந்து வருடத்தில் மீள செலுத்த முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தனது டுவிட்டர் பக்கத்திலேயே இதனை தெரிவித்துள்ளார். தாமரை கோபுரத்தை நிர்மாணிக்க 105 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது. பாரியளவில் சுற்றுலா வருமானத்தினை ஈட்டும் நாடொன்றிலேயே இதுபோன்ற தாமரைக்கோபுரம் நிர்மாணிக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்த அந்நிய செலாவனியை பெறும் இலங்கை போன்ற நாடுகள் இதுபோன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக்க கூடாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கைக்கு எதிர்வரும் ஐந்து வருடங்களில் தாமரைக்கோபுரத்திற்கான கடனை எந்தவகையிலும் செலுத்துவதற்கான சாத்தியம் இல்லை எனவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://if...

சஹரானின் சாரதி உள்ளிட்ட 4 பேருக்க பிணை

Image
மட்டக்களப்பு, வவுணதீவில் பொலிஸார் இருவர் சுட்டுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் கீழ் பயங்கரவாத தடைச் சட்த்தில் கைது செய்யப்பட்ட சஹரானின் சாரதி உட்பட 4 பேரை நேற்று (26) மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம். அப்துல்லா ஒருவருக்கு தலா 35 ஆயிரம் ரூபா பணமும் 10 இலட்சம் ரூபா இருவர் கொண்ட சரீரப் பிணையிலும் கடவு சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு நிபந்தனையுடன் பிணையில் விடுவித்துள்ளார்.  கடந்த 2018-11-29 திகதி வவுணதீவு, வலையிறவு பொலிஸ் சோதனைச்சாவடியில் இரு பொலிஸாரை துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் 2019 ஆம் ஏப்பில் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2019 ஏப்பில் 29 ஆம் திகதி சஹரானின் கார் சாரதியான கபூர் மாமா என்று அழைக்கப்படும் சஹீர் ஆதம்லெப்பை, அப்துல் மனாப் மொஹொமட் பீர்தௌஸ், ஹம்சா மொஹொதீன் மொஹொமது இம்ரான், ஹய்யாது மொஹொமட் மில்ஹான் ஆகிய நான்கு பேரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.  இதில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவினர் (சிஜடி...

காட்டுக்கு தீ வைத்த மாணவர்களுக்கு மரங்களை நடும் படி உத்தரவிட்டது பண்டாரவளை நீதவான் நீதிமன்றம்.

Image
எல்ல பிரதேசத்தில் காட்டுப் பகுதிக்கு தீ வைத்து சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 பாடசாலை மாணவர்களுக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் வழக்கத்திற்கு மாறான தண்டனை வழங்கியுள்ளது. சந்தேகநபர்களை  தலா 100,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் முதலில் உத்தரவிட்டது. . அதனையடுத்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எல்ல பொலிஸாரால் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் தலா 10 மரக்கன்றுகளை நடும் படி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. சனிக்கிழமை (24) எல்ல பிரதேசத்தில் உள்ள காப்புக்காடு ஒன்றிற்கு தீ வைத்த 16 மாணவர்களும் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 16 வயதுடைய சந்தேகநபர்கள் பதுளை மற்றும் பசறை பிரதேசங்களை சேர்ந்தவர்கள். வன காப்பகத்தில் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய குழுவினர், அதன்பிறகு அப்பகுதியில் தீ வைத்துள்ளனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/hPDa71g via Kalasam

மின்வெட்டு குறித்து புதிய அறிவிப்பு

Image
  நாளை (27) மற்றும் நாளை மறுதினம் (28) நாடு முழுவதும் 2.20 மணி நேரம் வரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும்  என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின் துண்டிப்பு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/UgJzjBZ via Kalasam

பிறந்து ஏழு நாட்களே ஆன சிசுவை 50,000 ரூபாவுக்கு விற்ற தாய் கைது!

Image
  பிறந்து ஏழு நாட்களே ஆன தனது கைக்குழந்தையை ரூ.50,000க்கு விற்பனை செய்த இளம் தாய்.நேற்று மாலை அனுராதபுரத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் விற்பனை செய்ய உதவிய தாதி ஒருவரின் கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண்ணுடன் வசித்து வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரையும், குழந்தையின் தந்தை, அரசாங்க வைத்தியசாலையின் தாதி, வைத்தியசாலையின் உதவியாளர் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பாடசாலை ஆசிரியர்கள் உட்பட மேலும் பலரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். . மல்வத்து ஓயா ஆற்றங்கரையில் உள்ள குடிசை ஒன்றில் 40 வயதுடைய ஆண் ஒருவருடன் ஒன்றாக வசித்து வந்த கெபிட்டிகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த பெண் குழந்தையை வாஹல்கட பிரதேசத்தில் உள்ள தம்பதியருக்கு விற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. தமக்கு ஒன்றரை வயது மகனும் இருப்பதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/QrWJoEk via Kalasam

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து – 25 பேர் மருத்துவமனையில்

Image
ஹொரண பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலைப் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/X6TdAJ0 via Kalasam

பாராளுமன்றம் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது (படங்கள்)

Image
கொவிட் சூழலைக் காரணமாகக் கொண்டு பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு வரையறைகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்கள் பாராளுமன்றம் கூடாத தினங்களில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 3.00 மணி வரை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த சில நாட்களாக அதிகளவான கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளமை, பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆர்வம் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இதுவரை பல்லைக்கழக மாணவர்கள், அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் போன்ற பல்வேறு பிரிவினர் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைய இன்று (26) கொழும்பு மகளிர் கல்லூரியைச் சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட மாணவியர் குழு பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு வருகைதந்திருந்தனர். நாட்டில் கொவிட் சூழல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் கடந்த 20ஆம் திகதி தளர்த்தப்ப...

தாமரை கோபுர கடனை தீர்க்க நாளாந்தம் 41,000 அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட வேண்டும் -சம்பிக்க

Image
தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற கடனைத் தீர்க்க வேண்டுமானால், அதன் மூலம் நாளாந்தம் 41,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க, கோபுரத்திற்காக மொத்தமாக 105 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். “தாமரை கோபுரம் கட்டப்பட்ட நிலத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு வழங்குவதற்காக 4.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. அவர்களின் நிலுவை தொகையை தீர்த்துவைக்க மேலும் 56 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வேண்டும். ஐந்தாண்டுகளில் தீர்வு காண வேண்டும்,” என்றார். “எனவே தாமரை கோபுரம் சித்தரிப்பது ஒரு இருண்ட படம் மாத்திரமே ” என அவர் மேலும் தெரிவித்தார். தாமரை கோபுரம் நாட்டிற்கு பெரும் வருவாயை ஈட்டும் ஒரு நல்ல திட்டமாக இருந்திருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/TSWbZQF via Kalasam

கோட்டாவின் மனைவியிடம் கப்பம் கோரிய சந்தேகநபர் கைது!

Image
  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவியான அயோமா ராஜபக்ஷவிடம் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொலன்னாவ – சாலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், முன்னாள் முதற் பெண்மணி அயோமா ராஜபக்ஷவுக்கு தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, அவரிடம் 10 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில், தவறுதலாக குறித்த அழைப்பு வந்திருக்கலாம் என்று எண்ணி, பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வரவினால் சந்தேகநபருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அதன் பின்னரும் குறித்த சந்தேகநபர் தொடர்ந்தும் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு கப்பம் கோரியதாகவும், இவ்வாறாக 3 நாட்களில் சுமார் 30 அழைப்புகளை அவர் மேற்கொண்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. from Ceylo...

குறைகிறது முட்டை விலை

Image
உற்பத்தி செலவு குறைந்துள்ளதால் முட்டையின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தினத்திற்கு (26) சந்தையில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாக உள்ளதால், அதனை மேலும் குறைக்க முடியும் என சங்கத்தின் செயலாளர் அனுரசிறி குமாரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, முட்டை விலை திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை மறுதினம் (28) நடைபெறவுள்ளது. /chat.whatsapp.com/HO028c8ERFy349K4aFlPFt from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/PIjs0dA via Kalasam

உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில்.

Image
  க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய புலமைப்பரிசில் பெறுவதற்காக ஒரு கல்வி வலயத்திலிருந்து தகுதியுடைய 30 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன்படி நாடு முழுவதுமுள்ள 99 கல்வி வலயங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் 2970 மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. புலமைப்பரிசில் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, அவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை மாதாந்தம் 5,000/- ரூபா வீதம் ஆகக்கூடியது 24 மாதங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வருட க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி க.பொ.த உயர்தர கல்வியாண்டு ஆரம்பிக்கப்பட்டதும் இந்த புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பங்களை கோரும் வகையில் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்படும். இது தொடர்பாக மாகாண பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர...

போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Image
போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் பஸ் சாரதிகளை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐஸ் மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள்களை பயன்படுத்தி பொது போக்குவரத்து பஸ் சேவையில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் பஸ் நடத்துனர்கள் கைது செய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் பாவிக்கும் சாரதிகள் மற்றும் பஸ் கண்டக்டர்களை கண்டறிய விசேட கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்குரிய சாரதிகள் மற்றும் பஸ் நடத்துனர்கள் தடயவியல் அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவ்வாறான 27 பேர் அண்மையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை, சில பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் நீண்டகாலமாக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பேருந்து ஓட்டுநர்கள் மட்டுமின்றி தலைநகரின் பணக்கார இளம் பெண்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளனர் என்றார். பொலி...

புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது- நியூயோர்க்கில் அலி சப்ரியின் அதிரடி உரை..!

Image
இலங்கை எதிர்கொள்ளும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்கள்,அரசியல், சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை செயற்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77 ஆவது அமர்வில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த செயற்பாடு இலங்கை மக்களின் மீட்சி மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய அரசாங்கம் நிதி ஒழுக்கம், பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தம் விடயத்தில் அர்ப்பணிப்புடன் உள்ளது. அத்துடன் கருத்து சுதந்திரத்தை அங்கீகரிக்கும் அதேவேளையில் அது அரசியலமைப்பின் வரம்புகளுக்குள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/26hR1se via Kalasam

இலங்கை நிலக்கரி நிறுவனம் விசேட அறிவிப்பு!

Image
  நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலைக்கு நிலக்கரி கொள்வனவு செய்வதற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டதையடுத்து, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை உடனடியாக கொள்வனவு செய்வதற்கான டெண்டர் கோரப்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார்.  எவ்வாறாயினும், ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் சந்தர்ப்பவாத நிபுணர்களின் கொள்முதல் நடைமுறைகளுக்கான தலையீட்டால் நிலக்கரியை பெற்றுக் கொள்வதில் நெருக்கடி உருவாகியுள்ளதாக மின்சார தொழில்நுட்ப மற்றும் பொறியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  எந்த வகையிலாவது நிலக்கரி ஆலையில் வீழ்ச்சி ஏற்பட்டால் அதனை சமாளிக்க களனிதிஸ்ஸ கூட்டு மின் உற்பத்தி நிலையத்தை உரிய முறையில் தயார்படுத்துமாறு சங்கம் அரசாங்கத்திடம் மேலும் கோரியுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/uqM3spN via Kalasam

கட்டாரில் இருந்துவந்த பிக்குவிடம் இரண்டரைக் கோடி பெறுமதியான தங்க நகைகள் மீட்பு

Image
2 கோடி 49 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் தனது பயணப் பையில் வைத்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் சென்றுகொண்டிருந்த பௌத்த பிக்கு ஒருவரைச் சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர். தெஹியத்தகண்டிய, சிரிபுர பௌத்த மத்திய நிலையத்தைச் சேர்ந்த 58 வயதான பிக்குவே நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் பிக்கு, டோஹாவிலிருந்து கட்டார் விமான சேவையின் கியூ.ஆர்–654 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். விமானப் பயணத்தில் நட்பு கொண்ட நபர் ஒருவர், இந்தத் தங்க நகைகளை விமான நிலையத்துக்கு வெளியே எடுத்து வந்து தரும்படி தம்மிடம் ஒப்படைத்தார் என்று இந்த பிக்கு சுங்கப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சுங்கப் பிரிவினர் அந்த நபரையும் தேடி கைது செய்துள்ளனர். இந்தத் தங்க நகைகளைப் பறிமுதல் செய்த சுங்கப் பிரிவினர் பிக்குவை விடுதலை செய்து தங்க நகைகளை பிக்குவிடம் கையளித்த நபருக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதித்தனர். Jaffna Muslim from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/wMncTay via Kalasam

உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி

Image
உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் பிரிவு 2 எந்தவொரு காணி, கட்டிடம், கப்பல் அல்லது விமானம் ஆகியவற்றை தடைசெய்யப்பட்ட இடமாக பிரகடனப்படுத்த உதவுகிறது, மேலும் பாரிய பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்க அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) வலியுறுத்துகிறது. நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்தார். அதன்படி, மேல்மாகாணத்துக்குப் பொறுப்பான பொலிஸ் மா அதிபர் அல்லது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் எழுத்துப்பூர்வ அனுமதி பெறப்படாவிட்டால், உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் எந்தவொரு நபரும் வீதி, மைதானம், கரை அல்லது திறந்த வெளியில் பொதுக் கூட்டம் அல்லது ஊர்வலத்தை நடத்தவோ அல்லது நடத்தவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள சில பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தியமை குறித்தும், ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் முதன்மைச் சட்டத்தில் இல்லாத குற்றங்களை உருவாக்க முயல்கிறதா என்பது குறித்தும் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் BASL தெரிவித்துள்ளது. /chat.whatsapp.com/HO028c8ERFy349K4aFlPFt ...

எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் -கோழி வியாபாரிகள்

Image
  கோழிப்பண்ணைக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறைவடைந்துள்ளதால் எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். தற்போது பண்ணைகளுக்கு சொந்தமான கோழிகளும் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். கோழிப்பண்ணை உற்பத்திக்குத் தேவையான கோழிகளின் இறக்குமதி 80,000லிருந்து 10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் கோழிப்பண்ணை தொழிலின் எதிர்காலம் குறித்து தமக்கு நம்பிக்கை இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே, கோழிப்பண்ணை தொழிலை நடத்துவதற்கு தேவையான கால்நடை தீவனங்களை வழங்குவது மற்றும் இறக்குமதி செய்வதை விட நாட்டிற்குள் இருந்து பெறப்படும் வழிமுறைகள் மூலம் அதை தக்கவைப்பது போன்ற குறுகிய கால தீர்வுகளை அதிகாரிகள் கவனித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/ex9BE83 via Kalasam

ஐ. நா.பொதுச்சபையில் அலி சப்ரி விசேட உரை!

Image
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77 ஆவது அமர்வில் இன்று உரையாற்றவுள்ளார். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77 ஆவது அமர்வில் பங்ககேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் கடந்த 19 ஆம் திகதி நியுயோர்க் சென்றடைந்தார். இதேவேளை, நியுயோர்க் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பலரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், பல்வேறு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/B3quRhK via Kalasam

கஞ்சா ஏற்றுமதி சட்டம் அமைச்சரவைக்கு

Image
கஞ்சா  ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டங்களை உருவாக்க அமைச்சரவைப் பத்திரம் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கஞ்சா உற்பத்தி மூலம் நாடு பாரிய ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் எதிர்வரும் 5ஆம் திகதிக்குள் இதற்கான ஆவணத்தை வகுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு மருத்துவம் மற்றும் ஆயுர்வேத நடைமுறைகளை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையினால் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். ஆகவே கஞ்சா ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக அண்மைய நாட்களில் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பரவலாக கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். உலக சந்தையில் நான்கு டிரில்லியன் அளவிற்கு கஞ்சாவிற்கான கேள்வி இருப்பதாகவும் இதனை இலங்கை பயன்படுத்த வேண்டும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். ...

தேசிய சபை'க்கான 32 உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.

Image
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை உள்ளடக்கிய ´தேசிய சபை´க்காக தற்போது பெயர்கள் வழங்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் இன்று (23) பாராளுமன்றில் சமர்பித்தார். அதேபோல், திருத்தம் ஒன்றை முன்வைத்த ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் தெரிவிக்கையில், சபாநாயகர் தலைவராக இருந்த போதிலும், பிரதமர், பாராளுமன்றின் சபைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர், எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர், மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களினால் தீர்மானிக்கப்படும் வகையில் நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஒன்பதாவது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 35 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகாமல் ´தேசிய சபை´ இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். தற்போது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தேசிய சபையில் உள்வாங்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்வருமாறு. டக்ளஸ் தேவானந்தா நசீர் அஹமட் டிரான் அலஸ் சிசிர ஜெயக்கொடி சிவநேசதுரை சந்திரகாந்தன் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ரவூப் ஹக்கீம் பவித்ராதேவி ...

சவூதி அரேபியா - மதீனாவில் பெருமளவிலான தங்கமும், தாமிரமும் புதைந்து கிடப்பது கண்டறியப் பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வுத்துறைஅறிவிப்பு.

Image
  சவூதி அரேபியாவில் உள்ள புனித நகரான மதீனாவில்  பெருமளவிலான தங்கமும், தாமிரமும் புதைந்து கிடப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் புவியியல் ஆய்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சவூதி அரேபிய புவியியல் ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள டிவீட்டில், மதீனாவில் உள்ளஅபா அல் ரஹா பகுதியில் தங்கப் படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல அல் மதிக், வாதி அல் பரா பகுதிகளில் தாமிரப் பதிவுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இதன் காரணமாக சவூதியில் மேலும் பல்வேறு உலகளாவிய முதலீடுகள் குவிய வாய்ப்புகள் ஏற்பட்டிருப்பதாக சவூதி அரசு தெரிவித்துள்ளத புதிய தங்கம் மற்றும் தாமிப் படிவுகள் காரணமாக சவூதி அரேபியாவின் தேசியப் பொருளாதாரம் கிடுகிடுவென அதிகரிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் இதை வைத்து பல்வேறு முதலீடுகளையும் ஈர்க்க சவூதி அரசு திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட 533 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் கிடைக்கும் என்றும் 4000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் சவூதிக்கு இந்த தங்கம் கண்டுபிடிப்பு புதிய அந்தஸ்தை ஏற்படுத்தித் தரு...

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

Image
  லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த விலை குறைப்பு 22 முதல் வரும் 30ம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 25 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளை சீனி 7 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. 185 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 6 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலை 14 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டு அரிசியை 9 ரூபாயால் குறைத்து நுகர்வோருக்கு வழங்க சதொச கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/1MKZAp6 via Kalasam

நிலக்கரி டெண்டர் ரத்து: அமைச்சர் அறிவிப்பு

Image
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒகஸ்ட் 25 ஆம் திகதி வழங்கப்பட்ட நிலக்கரி டெண்டரை இடைநிறுத்துவதற்கு நேற்று அமைச்சரவை நடவடிக்கை எடுத்தது. அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில், தெரிவு செய்யப்பட்ட வழங்குனர்கள் உரிய டெண்டரை நிறைவேற்ற முடியாது என அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சட்ட தலையீடு மற்றும் பணம் செலுத்துவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு நிலக்கரி பெறுவதற்கான புதிய டெண்டருக்கான அறிவிப்பை அமைச்சகம் வெளியிடும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார். தற்போதைய நிலக்கரி தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட டெண்டரின்படி பெறப்பட வேண்டிய நிலக்கரி இருப்புக்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தனது டுவிட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார். /chat.whatsapp.com/HO028c8ERFy349K4aFlPFt from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/EtGpRSa via Kalasam

வெளிநாட்டு சுற்றுலா பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்த 10 பேர் கைது.

Image
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் கோவளம் கடற்கரை பகுதிக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியான ஸ்பானிஷ் நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காரைநகர் கோவலன் கடற்கரை பகுதியை சுற்றிப் பார்க்க வந்த வெளிநாட்டு பிரஜைக்கு மது போதையில் இருந்த சிலர் அங்கு பாலியல் ரீதியான முறையில் தொந்தரவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் காரைநகர் பொலிஸ் காவல் அரணில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/bT43ARN via Kalasam

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்த வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி!

Image
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் எழுபத்தி ஏழாவது அமர்வின் போது அமெரிக்க ஜனாதிபதி மற்றும் மருத்துவர் பைடன் வழங்கிய விருந்தில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் பைடன் இனை சந்தித்தார். 24 செப்டம்பர் 2022 அன்று நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வில் அமைச்சர் அலி சப்ரி இலங்கை அறிக்கையை வழங்குவார். ​​ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த மாநாட்டின் 77 வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் சீனாவுடனான சந்திப்பு மற்றும் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு, உலகளாவிய மேம்பாட்டு முயற்சியின் நண்பர்கள் குழுவின் அமைச்சர் கூட்டம் ஆகியவை இவ்விஜயத்தின் போது இடம்பெறவுள்ளது. ஐ.நா உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனும் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கை தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி மொஹான் பீரிஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி மற்றும் இலங்கையின் நிரந்தர தூதரகத்தின் அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர்....

விரைவில் 12 மணி நேர மின்வெட்டு

Image
நாட்டில் தற்போது கையிருப்பில் 250,000 மெற்றிக் தொன் நிலக்கரி உள்ளதாகத் தெரிவித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, மின்சார உற்பத்திக்காக நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால் 10 அல்லது 12 மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டி ஏற்படும் என, இன்று (22) பிற்பகல் தெரிவித்தார். கையிருப்பில் உள்ள நிலக்கரி ஒக்டோபர் 28ஆம் திகதி வரை மட்டுமே போதுமானது எனவும் நுரைச்சோலையில் உள்ள இரண்டு மின் பிறப்பாக்கிகளையும் இயக்குவதற்கு நாளொன்றுக்கு 5000 மெற்றிக் தொன் நிலக்கரி தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார். நிலக்கரி இல்லாவிடில் 900 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் இருந்து இழக்க நேரிடும் எனவும், மின்சாரத் தேவையில் 35 வீதத்தை நிலக்கரி உற்பத்தி செய்வதாகவும் சுட்டிக்காட்டினார். மிகக் குறைந்த விலைக்கு சமர்ப்பித்த நிறுவனத்துக்கு நிலக்கரி விலைமனு வழங்கப்பட்ட போதிலும், மற்றொரு நிறுவனம் நீதிமன்ற நடவடிக்கையில் இறங்கியதன் காரணமாக விலைமனு பெற்ற நிறுவனம் நிலக்கரி வழங்க மறுத்துள்ளமையால் நிலைமை தீவிரமடைந்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த நிலையில் இருந்து விடுபட ஐந்து நாட்களுக்கு ஒருமுறை ...