Posts

Showing posts from October, 2022

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் இருக்கும் திலினியிடம் தொலைப்பேசி கண்டுபிடிப்பு!

Image
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் கையடக்கத் தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் சிறைச்சாலை அவசர நடவடிக்கைப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/0BRr7WK via Kalasam

வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் பணத்தில் முன்னேற்றம்!

Image
கடந்த ஓகஸ்ட் மாதம் 325 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கை தொழிலாளர்களின் பணம் செப்டம்பர் மாதத்தில் 359 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவித்துள்ளார். "இது ஆகஸ்ட் 2022 இல் பதிவான வராக்கடன்களுடன் ஒப்பிடுகையில் 10% (34 மில்லியன் டாலர்கள்) அதிகரிப்பு மற்றும் ஜூலை 2022 இல் பதிவான வராக்கடன்களுடன் ஒப்பிடுகையில் 29% (80 மில்லியன் டாலர்கள்) அதிகரிப்பாகும்" என்று அமைச்சர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்) from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Y3eMGw4 via Kalasam

நபிகளாரின் போதனையைப் பின்பற்றி புரிந்துணர்வுடன் நடப்பதே அவருக்குச் செய்யும் கௌரவம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

Image
  மீலாதுந் நபி வாழ்த்து நபிகளாரின் போதனையைப் பின்பற்றி அனைவரும் புரிந்துணர்வுடன் நடப்பதே அவருக்குச் செய்யும் கௌரவமாகுமென,  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள மீலாதுந் நபி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் மீலாதுந் நபி வாழ்த்துச் செய்தி இலங்கை மற்றும் உலக முஸ்லிம்களால் பெரிதும் மதிக்கப்படும் முஹம்மது நபி அவர்களின் பிறந்த தினம் இன்று (09) கொண்டாடப்படுகின்றது. உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களின் மார்க்கப் போதகராக விளங்கிய அவரது உபதேசங்கள், முன்பை விட இன்றைய சமூகத்தில் நிலவும் சூழ்நிலையைப் போக்க உதவும் என்று நான் நம்புகிறேன். உயர்ந்த மனிதப் பண்புகளுடன் பிறந்த அனைவரும் ஒருவரையொருவர் விலகிச்செல்ல முற்படுவதை தவிர்த்து, நபிகளாரின் போதனையைப் பின்பற்றி அனைவரும் புரிந்துணர்வுடன் நடப்பதே அவருக்குச் செய்யும் கௌரவமாகும். ஒட்டுமொத்த மனித சமூகத்தைப் போன்று ஏனைய அனைத்தினதும்  பாதுகாப்பு, பயன்பாடு, மரியாதை மற்றும் நேர்மை பற்றிய முஹம்மத் நபி அவர்களின் கருத்து உண்மையின் உருவகமாகும்.  அவர்களின் போதனைக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதன் மூலம் ...

5,320 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் 6 பேர் கைது

Image
இந்தியா மற்றும் இலங்கைக்கு விற்பனை செய்ய தயார் செய்யப்பட்ட 200 கிலோ ஹெரோயினுடன் இந்தியாவின் கேரளாவிற்கு சொந்தமான கடற்பரப்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அந்த போதைப்பொருள் கையிருப்பின் மதிப்பு சுமார் 1,200 கோடி இந்திய ரூபாய் (5,320 கோடி இலங்கை ரூபாய்) என தெரிவிக்கப்படுகிறது.  இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து இந்தியாவின் கொச்சி கடற்பகுதியில் ஹெரோயின் ஏற்றிச் சென்ற கப்பலைக் கைப்பற்றியுள்ளனர்.  கடத்தல்காரர்கள் ஹெரோயினை கடலில் வீசி தப்பிச் செல்ல முயன்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  குறித்த கப்பலில் 6 ஈரானிய பிரஜைகள் தங்கியிருந்த நிலையில், 200 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.  ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படும் ஹெரோயின், பாகிஸ்தானில் இருந்து ஈரானுக்கு கொண்டு வரப்பட்டு ஈரானிய கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த ஹெரோயினை இலங்கைக்கு சொந்தமான மீன்பிடி கப்பலுக்கு மாற்றும் திட்டம் தீட்டப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. from C...

நாமலுக்கு மேலுமொரு புதிய பதவி!

Image
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் தேசிய பேரவையின் உப குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். அந்த யோசனைகள் மற்றும் பரிந்துரைகளின்படி, ஒரு மாதத்திற்குள் குறுகிய கால முன்மொழிவுகள், மத்திய காலப் பிரேரணைகளை இரண்டு மாதங்களுக்குள்ளும் நீண்ட காலப் பிரேரணைகளை மூன்று மாதங்களுக்குள்ளும் தேசிய பேரவையில் சமர்ப்பிக்க உபகுழு உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/LOaXVw2 via Kalasam

22ஆவது சட்டமூலம் குறித்து 20 மற்றும் 21ஆம் திகதிகளில் விவாதம்

Image
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சற்றுமுன்னர் நிறைவடைந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டத்தில் இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் 2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் முதலாம் வாசிப்பு மீதான விவாதத்தை 18ஆம் திகதி நடத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/0Eo1axX via Kalasam

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு

Image
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,777 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  இதற்கிடையில், இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் மாதத்தில் 1,717 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து செப்டம்பர் மாதத்தில் 1,777 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.  இது 3.5 சதவீதம் வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/x3XeYUn via Kalasam

விபசாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்; பௌத்த நாடான தாய்லாந்தும் சட்டபூர்வமாக்கியுள்ளது: டயானா கமகே

Image
  விபசாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். பௌத்த நாடான தாய்லாந்து விபசாரத்தை சட்டபூர்வமாக்கியுள்ளது என்றும் அது அவர்களின் மதம் அல்லது கலாசாரத்திற்கு தீங்கு விளைவிக்கவில்லை என்றும் அவர் கூறினார். கஞ்சா ஏற்றுமதியை எவ்வாறு சட்டப்பூர்வமாக்குவது என்பதை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ஜனாதிபதியின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அதற்கு அதிகாரிகள் தடையாக இருப்பதாகவும் அவர் கூறினார். இலங்கைக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் மற்றும் குடியுரிமை குறித்த குற்றச்சாட்டுகள் ஆகியவற்றைப் பெறுவதற்கு 22ஆவது அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கருத்து தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/lNqKH1I via Kalasam

31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள்

Image
  இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக  நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். ‘எவரையும் கைவிடாதீர்’ எனும் தொனிப்பொருளில் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த திட்டத்தின் கீழ், சமுர்த்தி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோய் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பயனடையும் குடும்பங்கள் அல்லது தனிநபர்கள், மானியங்களை எதிர்பார்த்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு அரசாங்க உதவியை எதிர்பார்ப்போருக்கு இந்த சலுகைகள் கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க  தெரிவித்தார். பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான கால அவகாசம் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நலன்புரி நன்மைகள் சபையின் www.wbb.gov.lk இணையத்தளத்தில் இருந்...

மஹிந்த, கோட்டா, பசிலுக்கு எதிராக விசாரணை!

Image
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்ற அடிப்படையில், இது குறித்து ஆராய்வதற்காக உயர் நீதிமன்றத்தினால் முக்கியமான சில உத்தரவுகள் இன்று (07) பிறப்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராகவும் விசாரணைகளை முன்னெடுக்க உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில், ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெசனல் உட்பட்ட தரப்புக்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் மீதே இந்த அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/BV7hLIg via Kalasam

கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

Image
2022 ஜனவரி முதல் ஜூலை வரையில் மட்டும் 224,915 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. இது கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு மற்றும் எண்ணிக்கை ஆகும். செப்டெம்பர் 30 அன்று இந்த எண்ணிக்கை மேலும் 233,756 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை குடிவரவுத் திணைக்களம் தற்போது மாதமொன்றுக்கு சராசரியாக 78,000 கடவுச்சீட்டுகளை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 5,90,260 ஆகும். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/yioDHR0 via Kalasam

பொருட்களின் விலை குறைப்பு

Image
லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசியப் பொருட்களின் விலையை இன்று (07) முதல் குறைத்துள்ளது. குறைக்கப்பட்ட உணவு வகைகள் மற்றும் புதிய விலைகளின் பட்டியல் * ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை 35 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி, 430 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் விலை 395 ரூபாவாகும். * ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை, 35 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி, 685 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கொண்டைக்கடலை, 650 ரூபாவாகும். * ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 17 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி, 415 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 398 ரூபாவாகும். * ஒரு கிலோகிராம் நாட்டு சம்பாவின் விலை 08 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி 228 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் நாட்டு சம்பாவின் விலை 220 ரூபாவாகும். *இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் வெள்ளை நாடு 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது அதன்படி 179 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளை நாட்டரிசியின் விலை 174 ரூபாவாகும். * ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை ரூபாவால் 03 ரூபாவினால் குறைக்கப்பட்டுள...

கல்முனை மீனவர்கள் காணாமல் போன விடயம் தொடர்பில் இந்திய உதவியை பெற ஹரீஸ் எம்.பி நடவடிக்கை : மீனவர்களுடனான கலந்துரையாடலில் தீர்மானம் !

Image
  நூருல் ஹுதா உமர்  கல்முனை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பிலிருந்து கடந்த 26.09.2022ம் திகதியன்று மாலை ஏ.எல்.எம். உவைஸ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்ற மீனவர்களான கல்முனையைச் சேர்ந்த எம்.ஐ.எம் மஜிட் (வயது 55), சி.எஸ்.எச்.எம் நிப்றாஸ் (வயது 36 ), ஏ.பி கபீர்  (வயது 50), எம்.என்.ஹில்மி (வயது 33) ஆகிய மீனவர்கள் காணாமல் போகியுள்ளனர். இவர்கள் காணாமல் போன தினத்திலிருந்து மீனவ சங்கங்கள், கடற்படை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், மீன்பிடி அமைச்சு என்பன இணைந்து தேடுதல் நடவடிக்கை ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பிலான தற்போதைய நிலைகளை ஆராயும் சந்திப்பொன்று கல்முனை மீனவர் சங்க கட்டிடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் பங்குபற்றலுடன் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றது.  கடந்த 28ம் திகதி மாலை 05 மணியளவில் வாழைச்சேனை பிரதேச கடலில் வைத்து மீன்பிடி படகொன்று அவர்களை கண்டுள்ள விடயம் மற்றும் அவர்களின் பயணப்பாதை தொடர்பில் விளக்கிய மீனவர்கள் வடமாகாண கடலில் அந்த மீனவர்கள் தத்தளிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், சில நேரங்களில் இந்திய கடல் எல்லையில் அவர்...

பாராளுமன்ற மலசலக்கூடத்தில் ‘சமைத்த கோழி’

Image
பாராளுமன்றத்தில் உள்ள மலசலக்கூடங்களில், அதிகளவான சமைத்த கோழி இறைச்சி துண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ, முறையான உரிய தரப்பினருக்கு பணித்துள்ளார். அங்குள்ள மலசலக்கூடங்கள் பலவற்றின் போச்சிக்களுக்குள்ளே இவ்வாறு சமைத்த கோழி இறைச்சி துண்டுகள் வீசப்பட்டிருந்த நிலையில், ஒக்டோபர் 4ஆம் திகதியன்று மீ்ட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பொதுவான சோதனைக்கு அப்பால், பாராளுமன்றத்துக்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் பணியாளர்களின் பொதிகளை விசேடமாக சோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அறியமுடிகின்றது. பாராளுமன்றத்தில் சமைத்த மற்றும் சமையலுக்கான உணவுகளை, வெளியே கொண்டுச் செல்வது அதிகரித்துள்ளமையால் அவை தொடர்பில் விசேட சோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3vDkGAa via Kalasam

துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை இரு மகன்கள் பலி : மூன்று சந்தேகநபர்கள் கைது

Image
மினுவாங்கொடை, கமன்கெதர பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்கள் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை 7.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 51 வயதான தந்தை மற்றும் 24, 23 வயதான அவருடைய இரு மகன்கள் ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த சந்தேகநபர்கள், T56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். இவ்வாறு மரணமடைந்தவர்கள் கொலைச் சம்பவம் தொடர்பில் சிறை வைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்னர் சிறையிலிருந்து பிணையில் விடுதலை பெற்றிருந்தார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். சந்தேகநபர்களுடன் நீண்ட காலமாக இருந்து வந்த தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர...

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் : அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவு : தீர்ப்பு திகதி இன்றி ஒத்தி வைப்பு

Image
(எம்.எப்.எம்.பஸீர்) போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் 21/4 உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகளும் நேற்று (5) நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் குறித்த மனுக்களின் தீர்ப்புக்காக, வழக்குகளானது திகதி அறிவிப்பு இன்றி ஒத்தி வைக்கப்பட்டது. குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹார, எல்.டி.பி.தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ, எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன் நேற்று இறுதியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போதே உயர் நீதிமன்றம் வழக்கை நிறைவுறுத்தி இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன், அனைத்து தரப்பினரும் தமது எழுத்து மூல சமர்ப்பணங்களை எதிர்வரும் 3 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவித்தது. 21/4 தற்கொலை குண்டுத் தாக்குதலில் தனது இரு பிள்ளைகளை இழந்த தந்தையான நந்தன சிறிமான்ன, சுற்றுலாத்துறை வர்...

இன்று (5) முதல் மீண்டும் தொலைபேசி கட்டணங்கள் அதிகரித்தன.

Image
தொலைபேசி நிறுவனங்கள் இன்று (5) முதல் மீண்டும்  தொலைபேசி கட்டணத்தை அதிகரித்துள்ளன. இம்மாதம் முதல் 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக தொலைபேசி கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்த கட்டண உயர்வு குறித்து சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்கள் விரிவான தகவல்களை வெளியிட உள்ளன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/nzsxOrQ via Kalasam

புதிய லிட்ரோ சமையல் எரிவாயு விலை அறிவிப்பு

Image
லிட்ரோ கேஸ் லங்கா தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என முதன்மை எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். புதிய விலைகள் பின்வருமாறு: – 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ. குறைக்கப்பட்டுள்ளது. 271 புதிய விலை: ரூ. 4280 – 5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ. குறைக்கப்பட்டுள்ளது. 107 புதிய விலை: ரூ. 1720 – 2.3 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ. குறைக்கப்பட்டுள்ளது. 48 புதிய விலை: ரூ. 800 from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/LJXvC5i via Kalasam

பால் மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு!

Image
உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கமைய 450 கிராம் உள்ளுர் பால் மா பொதியின் விலை 125 ரூபாவினாலும், 850 ரூபாவாக இருந்த 450 கிராம் பால் மா பொதி 975 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சந்தையில் தற்போது உள்ளூர் பால் மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/XWtgMoV via Kalasam

11 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர் – தூக்கத்தில் அரசாங்கம்

Image
இலங்கையின் பணியாளர்கள் 87 இலட்சம். அவர்களில் 29% பேர் விவசாயத் துறையிலும், 26% பேர் தொழில்துறையிலும், 45% பேர் சேவைத் துறையிலும் பணிபுரிகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு முன், அதாவது 2020ல், வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 451,000 ஆக இருந்தது. இது தொழிலாளர்களில் 5% ஆக இருந்தது. பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் 11 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக இந்திய தரவு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. அதாவது, பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையின் 15% தொழிலாளர்களே வேலையில்லாமல் உள்ளனர். சுமார் 40 லட்சம் ஊழியர்கள் சம்பளம் வெட்டப்பட்டுள்ளனர். இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 3 இலட்சம் பேர் புதிதாக வேலையில் இணைகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு முன் சுமார் 10,000 பேர் அரசு வேலையும், 25,000 பேர் தனியார் துறையில் வேலையும் பெற்றனர். 2 லட்சம் பேர் மட்டுமே வெளிநாட்டு வேலைக்குச் சென்றனர். அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷா, இலங்கை மக்கள் அரசாங்கத்தை வீட்டு வேலை செய்யும் ஆயா போன்று பார்க்கின்றனர் என குற்றம் சுமத்திய அவர், அரசாங்கம் அனைத்தைய...

10 ஆயிரம் பேருக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு !

Image
  ஜப்பானில் தாதியர்களாக கடமையாற்ற 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்க ஜப்பானிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று உத்தரவாதம் அளித்துள்ளது. ஜப்பானுக்கு சென்றுள்ள அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் குறித்த நிறுவனம் ஆயிரம் வேலைவாப்பிற்கான சான்றிதழை கையளித்து உத்தரவாதம் அளித்துள்ளது. அத்துடன் இந்த வருட இறுதிக்குள் இலங்கையிலிருந்து 150 தாதியர்களை பணிக்கு அமர்த்துவதற்கும் ஜீ ரீ என் என்ற வெளிநாட்டு வேலைவாய்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஜப்பானில் தாதியர்களாக கடமையாற்றுவதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/v59i3Lx via Kalasam

ஏனைய எரிபொருள் விலைகள் குறையுமா? எரிசக்தி அமைச்சர் விளக்கம்

Image
  உலக சந்தையில் குறைவடைந்த மசகு எண்ணெய் விலைக்கு ஏற்ப, உள்நாட்டில் பெற்றோல் விலை மாத்திரம் குறைப்பட்ட போதிலும் டீசல் விலை குறைக்கப்படாமைக்கு காரணம் என்னவென்று பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் சபையின் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மசகு எண்ணெய் சுத்தகரிப்பின் மூலம் நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் 30 சதவீதம் மாத்திரமே ஈடுசெய்யப்படுகிறது 70 சதவீதம் நேரடி முடிவுப்பொருளாக எரிபொருள் இறக்குமதிசெய்யப்படுகிறது. அந்த 30 சதவீதத்தினுள், டீசல், பெற்றோல், விமானத்துக்கான எரிபொருள், மண்ணெண்ணெய், நெப்தா மற்றும் உலை எண்ணெய் உள்ளிட்ட 6 பொருட்கள் உள்ளடங்கும். எனவே, குறைவடையும் மசகு எண்ணெய் விலைக்கு ஏற்ப அனைத்து எரிபொருட்களின் விலைகளையும் குறைக்க முடியாது. முன்னதாக பல அரசாங்கங்கள் சலுகை விலையில் டீசல் வழங்கிவந்தது. தற்போது, சலுகை நீக்கப்பட்டு இறக்குமதி விலைகேற்க வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் டீசல் இறக்குமதியில் லீற்றர் ஒன்றுக்கு 30சதவீதம் நட்டம் நிலவிவந்தது. தற்போது நட்டத்துக்கு மாறாக ஒரு ரூபா அளவில் இலாபம்...

சாய்ந்தமருது கடற்கரையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது

Image
  சாய்ந்தமருது கடற்கரையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பினைக் கோரியிருந்த நிலையில் சடலம் அடையாளங்காணப்பட்டுள்ளது. பெண்ணின் உறவினர்கள் சடலத்தை அடையாளங்காட்டியதுடன் அம்பாறை மாவட்டம் காரைதீவுப் பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஆறுமுகம் வனிதா என்ற ஒரு பிள்ளையின் தாயார் எனவும் சடலமாக மீட்கப்பட்டவர் ஓர் ஆசிரியை எனவும் அடையாளங்காணப்பட்டுள்ளார். இம்மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/cqXthTn via Kalasam

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் மேலும் குறைக்கப்படுகிறது.

Image
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின்  விலைகள் 05 அக்டோபர் 2022 புதன்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என தெரிவிக்கப் படுகிறது. புதிய விலைகள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/dh89OiC via Kalasam

கோப் குழு மற்றும் கோபா குழு உறுப்பினர்கள் நியமனம்

Image
கோப் குழு மற்றும் கோபா குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இன்று காலை 09.30 மணிக்கு பாராளுமன்றம் கூடிய போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோப் மற்றும் கோபா குழுக்களுக்கான உறுப்பினர்களை அறிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.  அதன்படி, 27 பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  எனினும், கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/PqhAWwi via Kalasam

இலங்கையில் கோதுமையை பயிரிட அரசாங்கம் முன்வந்தால், கோதுமை மாவை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை

Image
கோதுமை மா உற்பத்தி மற்றும் இறக்குமதியாளர்கள் இந்த வாரம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கோதுமை மா விலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த முதலாம் திகதி முதல் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அமுலுக்கு வந்துள்ளதால், கோதுமை மாவின் விலையை மேலும் அதிகரிப்பதற்கு கோதுமை மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. கோதுமை மாவின் புதிய விலை தொடர்பான அறிவிப்பை இன்றைய தினம் வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், நுகர்வோர் விவகார அதிகார சபையுடனான இந்த வார கலந்துரையாடலில், கோதுமை மா விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள், நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் என வர்த்தக, மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கோதுமை விதைகளை இறக்குமதி செய்து இலங்கையில் பயிரிட அரசாங்கம் முன்வந்தால், கோதுமை மாவை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என, சட்டத்தரணி டிஷான் தர்மசேன தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift....

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க விசேட கெசட் அறிக்கை!

Image
செப்டம்பர் மாதம் 23ம் திகதி மதியம் ரணில் விக்கிரமசிங்க அவர்களால் உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து விசேட கெசட் அறிக்கை வெளியிட்டார் இவ் கெசட் அறிக்கையில் கொழும்பு மாவட்டத்தின் 6 பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்தார் இதன் பின்னர் 24ம் திகதி இளைஞர்கள் சங்கம் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள இருந்தனர் இப் போராட்டத்திற்கு சில மணி நேரங்களிற்கு முன்னரே இவ் அறிக்கை வெளியிடப்பட்டது. செப்தம்பர் 24ம் திகதி நீதிமன்றத்தில் இவ் கெசட் அறிக்கையை தடை செய்தனர் நீதிமன்றத்தில் கூறியது நீதிக்கு விரோதமான செயல் என்று 24ம் திகதி மேற்கொண்ட போராட்டத்தில் போராட்ட காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர் 7பேரிற்கு அதிக தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது இதன் பின்னர் 26ம் திகதி மேல் நீதிமன்றத்தில் கூறியது இவ் உயர் பாதுகாப்பு வலயம் என்ற கெசட் அறிக்கை பிழையானது அமைதியான முறையில் போராட்டம் மேற்கொள்வது சாதாரண மக்களின் உரிமைகள் அன்று கோடாபய ராஜபக்ஷ அவர்கள் போலவே ரணில் விக்கிரமசிங்க அவர்களும் ராஜபக்ஷ பாதையிலே செல்கிறார் என்று அன்று வடக்கில் யுத்தம் ஏற்பட்ட காலங்களில் நாட்டில் பல இடங்களில் உயர் பாதுகாப்பு வலயம...

பல்கலைக்கழக அனுமதிக்காக 93,000 விண்ணப்பங்கள்

Image
இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்காக சுமார் 93,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் சுமார் 45,000 மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, மருத்துவ பீடத்திற்கு 2,035 மாணவர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதுடன் பொறியியல் பீடத்திற்கு 2,238 மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். 2021ஆம் ஆண்டின் உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய 171,497 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ளனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Zs16ieq via Kalasam

சாரதி அனுமதிப்பத்திரங்களை பெறுவதற்காக சுமார் 09 இலட்சம் பேர் காத்திருப்போர் பட்டியலில்!

Image
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை (அட்டைகள்) பெறுவதற்காக சுமார் 09 இலட்சம் பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்த போதிலும், இவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான அட்டைகள் திணைக்களத்திடம் இல்லாததாலும் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அட்டைகள் முறையாகப் பெறப்பட்டால், சிறப்புத் தேவைகள் உள்ள உரிமம் வைத்திருப்பவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், பொது உரிமம் வைத்திருப்பவர்கள் எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் தங்கள் உரிமத்தைப் புதுப்பிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். ஆனால் உரிம அட்டையை முறையாகப் பெறாத பணியாளர்களுக்கு ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் தற்காலிக உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஆட்கள் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம், மாவட்ட செயலகம், வெரஹெர கிளை ஆகியவற்றிற்கு நேரத்தை நீடிக்கச் செல்வது சிரமமாக உள்ளது. இது தொடர்பில் மோட்டார் ஆணையாளர் நாயகம் த...

இம்ரான் கானை கைது செய்ய உத்தரவு! பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு!

Image
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்து இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், ஆகஸ்ட் 20ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், தங்களது கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினரையும், பெண் நீதிபதியையும் கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து அவர் மீது அரசு அதிகாரிகளை மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், முன்னதாக அங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகாத நீதிபதி சவுத்ரி முன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் இம்ரான் கான். ஆனாலும், இம்ரான் கானின் அவதூறு பேச்சுக்கு பாகிஸ்தான் மாஜிஸ்ட்ரேட் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இம்ரான் கான் கைது செய்யப்படலாம் என்பதால், அவரது வீட்டின் முன் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இம்ரான் கட்சி தொண்டர்கள் அங்கு திரண்டு அமளியில் ஈடுபடுவதை தவிர்க்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள எனவும் தெரிவிக...

பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட நாமல் ராஜபக்ஷ !

Image
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்ய தீர்மானித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விவசாயிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளார். திகாமடுல்ல பிரதேசத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதிக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார். அந்த முடிவுக்கு கட்சி என்ற முறையில் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/pbaelun via Kalasam

பின்வாங்கினார் ஜனாதிபதி ரணில்: வர்த்தமானி வெளியீடு

Image
கொழும்பில் உள்ள பல முக்கிய இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி அண்மையில் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (01) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 1955 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க அரச இரகசியச் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ், கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி வெளியிட்ட அதி உயர் பாதுகாப்பு வலயங்களின் பிரகடன வர்த்தமானியே இரத்துச் செய்யப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/1DTUs0z via Kalasam

உயர்தர திரிபோஷ வழங்க நடவடிக்கை

Image
நாட்டில் உள்ள குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் தொடர்ந்தும் உயர்தர திரிபோஷ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தெற்காசியாவிலேயே குழந்தைகளுக்கு இவ்வாறான போஷாக்கு உணவை வழங்கும் ஒரே நாடு இலங்கை என்றும் இதற்கு தேவையான அதிகபட்ச நிதி திறைசேரியில் இருந்து ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். திரிபோஷ தொடர்பில் அண்மைய நாட்களில் வெளியான தகவல்களை ஆராய்வதற்காக சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/OF0SDok via Kalasam

BREAKING: பெற்றோல் விலை குறைப்பு!

Image
இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் 92 இன் விலை லீட்டரொன்றுக்கு 40 ரூபாயும், பெட்ரோல் 95 இன் விலை லீட்டரொன்றுக்கு 30 ரூபாயும் குறைக்கப்படும். பெட்ரோல் 92 இன் புதிய விலை லீட்டர் ஒன்றுக்கு ரூ.410 ஆகவும், 95 பெட்ரோல் லீட்டர் ஒன்றுக்கு ரூ.510 ஆகவும் இருக்கும். மற்றைய எரிபொருள் விலைகளில் எந்தவித மாற்றமும் இல்லை. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/AQGolhn via Kalasam

நீதிமன்றம் சென்ற சரத் பொன்சேக்கா

Image
கொழும்பின் சில இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கோரி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா மற்றும் சட்டத்தரணி சுதத் விக்ரமரத்ன ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர். சட்டமா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பொலிஸ் மா அதிபர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர். அரச இரகசிய சட்டமூலத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், அந்த சட்டமூலத்தின் கீழ் இவ்வாறான உத்தரவை வெளியிட ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை எனவும் கூறியுள்ளனர். மேலும், ஜனாதிபதி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறி, இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதால் அதன் மூலம் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பை வழங்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் வர்த்தமானி அறிவித்தல் செல்லுப்படியற்றது என்ற உத்தரவை பிறப்பிக்குமாறும், இந்த மனு...