🔴தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கு தேவையான நிதி ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன் விடுவிக்கப்பட்டால், ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்பு நடைபெறுவதற்கு ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் தபால் வாக்குச் சீட்டுகளை அரச அச்சகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். “ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை,” என புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். “ஏப்ரல் 10 ஆம் திகதிக்குப் பின்னர் நிலைமையைக் கருத்திற்க் கொண்டு முடிவு எடுக்கப்படும்”. இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், பிரதமர் தினேஷ் குணவரதன, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாட கோரிக்கை விடுத்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/T3PClby via Kalasam