இலங்கை - துருக்கி நேரடி விமான சேவை
கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க இலங்கை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் இலங்கைக்கான துருக்கிய தூதுவருக்கும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்றது. தற்போது துருக்கி ஏர்லைன்ஸ் இலங்கைக்கு விமானப் பயணத்தை மேற்கொண்டாலும் அது மாலைதீவு ஊடாகவே பயணிக்கின்றது. துருக்கிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரும்போது இது ஒரு அசௌகரியம் மற்றும் அவர்கள் கூடுதலாக ஒன்றரை மணிநேர பயண நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. அந்த நேரத்தை குறைப்பதே நோக்கமாகும். இந்த புதிய சேவையானது ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளுக்கு நன்மை பயப்பது மட்டுமன்றி, இலங்கைக்கு வருகை தருவதற்கு அவர்களை ஊக்குவிக்கும். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/ARDTHoM via Kalasam