Posts

Showing posts from September, 2024

இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வரும் தேர்தல் பிரச்சாரம்

Image
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. குறித்த காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது குழுக்களோ வேட்பாளர்களை பிரச்சாரம் செய்வது, ஊக்குவிப்பது போன்றன தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் ஆணையாளர் தொடர்ந்து கருத்து வௌியிடுகையில், நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதற்காக கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. “பிரச்சார காலம் முடிவடைந்தவுடன் பொது பேரணிகள், விளம்பர பொருட்கள் விநியோகம் அல்லது வீடு வீடாக பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படாது.  எந்தவொரு பிரச்சாரத்திற்கும் எதிராக நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  இதேவேளை, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க,சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க,  நாமல் ராஜபக்ஷ,  திலித் ஜயவீர, நுவன் போககே ஆகியோர் தலைநகரில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை இன்று நடத்தவுள்ளனர். இதனால் கொழும்பு நகரின் பா...

வெளியான ஜேவிபியின் சுயரூபம்

Image
13வது திருத்தத்தை தற்போதைய வடிவில் மட்டுமே நடைமுறைப்படுத்துவோம் எனவும், மாகாண சபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை தேசிய மக்கள் சக்தி (NPP) வழங்காது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (vijitha herath) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்கள் மற்றும் பௌத்தம், சிங்கள கலாசாரம் மற்றும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழிகள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் (ACBC) ஒழுங்கு செய்த கூட்டத்தின் போதே தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த உறுதிமொழியை வழங்கினார். 13வது திருத்தம் தேசிய பிரச்சினை அல்லது மாகாண அபிவிருத்திக்கான தீர்வு அல்ல என்ற கருத்தை தாங்கள் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் நாட்டின் ஒற்றையாட்சி, இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்தும் அதேவேளை இலங்கைக் குடியரசு பௌத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை வழங்கும் என்று கூறுகின்ற அரசியலமைப்பின், 9 ஆவது சரத்தை எதிர்கால தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் மாற்றாது அதற்காக ஜே.வி.பி பெரும் பங்காற்றியுள்ளதாக...

இலங்கை கல்வி அமைச்சர் யார் என்ற கேள்விக்கு பாடசாலை மாணவன் அளித்த மிளிர வைக்கும் பதில்

Image
இலங்கையில் கல்வி அமைச்சு யார் என்று?  தவணை பரீட்சையில் இந்த கேள்வி இடம் பெற்றிருந்தது , இந்த பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் சரியான பதிலை வழங்க வில்லை. எனினும் ஒரு குறிப்பிட்ட மாணவனின் பதில் மாத்திரம்  பலரை மகிழ்வித்தது. அவர் இலங்கையின் கல்வி அமைச்சர் ஜோசப் ஸ்டாலின் என்று பதிலளித்திருந்தார். கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை விட ஆசிரியர் தொழிற்சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தொலைக்காட்சிகளிலும் ஏனைய ஊடகங்களிலும் அதிகம் தோன்றுகிறார் என்ற அடிப்படையில் குறித்த மாணவர் இந்த பதிலை வழங்கியுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/fycU7rj via Kalasam

வாக்காளர் அட்டை கிடைக்காதோர் அருகில் உள்ள தபால் நிலையத்தை நாடவும் !

Image
  வாக்காளர் அட்டை கிடைக்காதோர் அருகில் உள்ள தபால் நிலையத்தை நாடவும் ! ( அம்னா இர்ஷாத்) ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளில் 97 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு கோடியே 66 இலட்சத்து 50 ஆயிரம் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மாஅதிபர் ராஜித கே. ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்த் நிலையில் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்காதவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை அருகிலுள்ள தபால் நிலையங்களுக்கு சென்று அதனை பெற்றுக்கொள்ள முடியும் என சிரேஷ்ட பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க கூறினார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/ZIWbrPe via Kalasam

வாக்குப் பெட்டியில் வெளியான புதிய செய்தி

Image
நாடளாவிய ரீதியில் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குப் பெட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  இதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதி தேர்தல் அலுவலர்கள் உரிய வாக்குப்பெட்டிகளை வாக்குச் சாவடிகளுக்கு விடுவிப்பார்கள். இந்நிலையில், வாக்குச் சீட்டு பெரிய அளவில் இருப்பதால் இம்முறை மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதுடன் 3 அளவுகளில் அட்டைப் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், வாக்குப்பதிவு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், அரச அதிகாரிகளுக்கு அனைத்து அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.     மேலும், தேர்தல் பணிகளில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு அதற்கான ஏற்பாடுகளை தயார் செய்து, குறிப்பிட்ட நாளில் பணிகள் நடைபெறும் இடங்களுக்குச் செல்லுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.  from Ceylon Muslim - NEWS CASTING FROM SR...

கடந்த தவறுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத குழுவினரிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியாது - இந்த தேர்தல், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இறுதி வாய்ப்பு - ஜனாதிபதி தெரிவிப்பு

Image
  1987 கலவரத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று ஜே.வி.பி கூறுமானால், தமது பெயரை தவறாகப் பயன்படுத்தியதற்காக நஷ்டஈடு கோரி வழக்குத் தொடர வேண்டும். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி மீண்டும் மக்களை ஏமாற்றுகின்றனர்.  கடந்த காலத் தவறுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத ஒரு குழுவினரிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியாது. 2024 ஜனாதிபதித் தேர்தல், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இறுதி வாய்ப்பு. - 'புழுவன் பெரலிய' (புரட்சி செய்வோம்) நிகழ்ச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு நாட்டின் தற்போதைய நிலைக்கு தம்மைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் காரணம் என்றும், 1987 ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சிக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறி ஜே.வி.பி மக்களை ஏமாற்றி வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  சாத்தியமில்லாத வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி ஏமாற்றும் தவறை ஜே.வி.பி மீண்டும் செய்து வருவதாகவும் கடந்த காலத் தவறுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத குழுவிடம் நாட்டின் எதிர்காலத்தைக் கையளிக்க முடியுமா என்றும் ஜனாதிபதி வினவினார்.  Stables@ParkStreet ...

அமுல்படுத்தப்படுமா ஊரடங்கு சட்டம்...!

Image
ஜனாதிபதி விரும்பினால் நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார். எனினும், ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் காவல்துறை ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தத் திட்டமோ அல்லது தயாரிப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (Ministry of Defense Secretary) குறிப்பிட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க (Viyani Gunathilaka) கொழும்பு (colombo) ஆங்கில ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், ”இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கும் காவல்துறைக்கும் வழங்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் போராட்டம் வெடித்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற போதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ...

9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருகை!

Image
9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக  வருகை தந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் அழைப்பிற்கிணங்க அவர்கள் வருகை தந்துள்ளதாக அதன் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 18ஆம் திகதி முதல் அவர்கள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். சார்க் வலய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ரஷ்ய கண்காணிப்பாளர்களும் இந்த கண்காணிப்பு குழுக்களில் அடங்குகின்றனர். அவர்கள் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அறிக்கையொன்றை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கையளிக்கவுள்ளனர். இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய அமைப்பின் கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/8b9tBRg via Kalasam

கடும் போட்டியில் ரணில்,அனுர..!

Image
 அண்மையில் ஜனாதிபதியின் பிரசார குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ,தேர்தலில் வெற்றியின் பின்னர் தான் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள நல்ல நேரம் கணிக்கப்பட்டுள்ளதாக, சமகால ஜனாதிபதியும் வேட்பாளருமான ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்தவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என, ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் வெற்றி குறித்து பதற்றமடைய வேண்டாம் என அனுரவுக்கு தகவல் அனுப்புமாறும், அந்த வெற்றி தனக்கானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது வெற்றி குறித்து ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ளதாகவும், பதவிப்பிரமாணம் செய்யும் நேரமாக எதிர்வரும் 22ஆம் திகதி மதியம் 2 மணி முதல் 4 மணி வரை, ஜோதிடர்களால் நேரம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தனது பதவிப்பிரமாணத்திற்கு அனுரவும் வருகை தர முடியும். அத்துடன் அனுர தனது பணியை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார...

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜம்மியத்துல் உலமாவின் வழிகாட்டல்கள்

Image
  எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பின்வரும் வழிகாட்டல்களை கவனத்திற்கொண்டு செயலாற்றுமாறு இலங்கை முஸ்லிம்களிடம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2024.09.21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பின்வரும் வழிகாட்டல்களை கவனத்திற்கொண்டு செயலாற்றுமாறு இலங்கை முஸ்லிம்களிடம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுக்கிறது. நாட்டில் கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக அரசியலுக்கு அப்பால் நின்று சமூக, சமய, சன்மார்க்கப் பணிகளை மேற்கொண்டுவரும் ஒரு மார்க்க, சமூக வழிகாட்டல் செய்து வரும் சபையே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பதை சகலரும் அறிவர். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு வேட்பாளருக்கும் எந்தவோர் அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ செயற்படுவதில்லை. இந்த சந்தர்ப்பத்தில் எமது தாய் நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும் குடிமக்களது நல்வாழ்வுக்காகவும் அதிகம் பிரார்த்திப்போம், இறையுதவியைப் பெற்றுத் தரும் நற்கருமங்களில் எம்மை ஈடுபடுத்திக் கொள்வோம். ஜனநாயக நாடொன்றில் எவரும் எந்தக் கட்சிய...

வீட்டில் எரிவாயு தீர்ந்து போனால், சிலிண்டரை எடுத்துச் செல்வதில் பிரச்சினை இருக்காது - மஹிந்த தேசப்பிரிய

Image
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் ,தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தேர்தல் பிரசாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் வீட்டில் எரிவாயு தீர்ந்து போனால், சிலிண்டரை எடுத்துச் செல்வதில் பிரச்சினை இருக்காது என  தெரிவித்துள்ளார். தேர்தல் தினத்தன்று தனிநபர் ஒருவர் சின்னத்தைக் காட்டி வீதியில் நடமாட முடியும் என்றாலும், ஊர்வலமாகச் செல்வதைத் தடைசெய்யும் திறன் பொலிஸாருக்கு உண்டு என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் யாராவது ஒருவர் துவிச்சக்கரவண்டியில் எரிவாயு சிலிண்டர்களை கட்டிக்கொண்டு செல்வாலோ அல்லது நட்சத்திரம் அல்லது திசைகாட்டியை வீதியில் காண்பித்தாலோ அது தேர்தல் சட்டத்தை மீறும் செயலா என ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வடமாகாணத்தில் தேர்தல் நடத்தப்படாத சூழ்நிலை போன்று முற்றாக அமைதியாக இருப்பதாகவும், அமைதியான நீர்த்தேக்கத்தின் ஆழம் அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏனைய மாகாணங்களில் பாரதூரமான சம்...

தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை

Image
இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நாளை (11) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாளை அச்சடித்து விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, பரீட்சை வினாத்தாள்களுக்கான வினாக்களை வழங்குவதாகவோ அல்லது அதற்கு சமமான வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள், மின்னணு, அச்சிடப்பட்ட அல்லது சமூக ஊடகங்களில் வெளியிடுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு நபரோ, நிறுவனமோ அல்லது தரப்பினரோ இந்த உத்தரவை மீறினால் அருகில் உள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம் அல்லது பரீட்சை திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANK...

வேட்பாளர்களுக்கு ஆதரவாக விளம்பரப்படுத்தும் ஸ்டிக்கர்களை வாகனங்களில் காட்சிப்படுத்தக் கூடாது - எச்சரிக்கை

Image
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக விளம்பரப்படுத்தும் ஸ்டிக்கர்களை வாகனங்களில் காட்சிப்படுத்தக் கூடாது என வாகன சாரதிகளுக்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் ஜனாதிபதி வேட்பாளர்களின் படங்கள் மற்றும் சின்னங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களைக் காட்சிப்படுத்துவது குறித்து ஆணைக்குழுவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தகைய செயற்பாடுகள் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகும் என்று குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணைக்குழு, மோட்டார் வாகனங்களில் உள்ள அனைத்து அடையாளங்கள் மற்றும் ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தல் விடுத்துள்ளது. ஸ்டிக்கர்களை அகற்றுவதற்கு நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/MZntgLo via Kalasam

தேர்தல்கள் ஆணைக்குழுவால் பாடசாலை மூடுவது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு கடிதம்

Image
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளை மூடுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவால் கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு பின்னர், வாக்கெண்ணும் நிலையங்களை தயார்ப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்களிப்பு மையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் தயார்ப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைகளை பரிசீலித்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சு முன்னதாக தெரிவித்திருந்தது.  Colombo (News 1st)  from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/iUqw07z via Kalasam

வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு புதிய திட்டம்

Image
  வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு புதிய திட்டம்  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு  இலகுவாக வாக்களிப்பதற்கு   மக்களுக்கு தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை வழங்கவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது இந்த தற்காலிக வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையைப் பெற, வாக்காளர்கள் தங்கள் கிராமசேவகர் அல்லது தோட்டக் கண்காணிப்பாளர் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/KoNkT2r via Kalasam

சட்டத்தரணி அலி சப்ரியின் தாயார் இறையடி சேர்ந்தார்

Image
வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் தாயார் காலமானார். அமைச்சர் அலி சப்ரியின் தாயாரான பாதீமா சரீனா உவைஸ் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் தெஹிவாளையில் அமைந்துள்ள வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை தெஹிவளை ஜும்மா மஸ்ஜிட் பள்ளிவாசலில் அலி சப்ரியின் தாயாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/UNAPWae via Kalasam

தேர்தல் பிரசாரம் பற்றி தெளிவுபடுத்தியுள்ள தேர்தல் ஆணையகம்

Image
தேர்தல் பிரசார நடவடிக்கைகளை குறித்து தேர்தல் ஆணையகம் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட இருக்கும் ஜனாதிபதி ஒருவர் னைய வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் இது சட்ட விரோதமான செயல் என்பதையும்  தேசிய தேர்தல் ஆணையகம்  (Election Commission ) தெளிவாக வலியுறுத்தியுள்ளது. மற்றும் இவ்வாறான செயற்பாடுகள் சட்டத்திற்கு புறம்பானது மட்டுமன்றி நெறிமுறையற்ற செயல்களாகவே இருக்கும் என தேர்தல்  ஆணையாளர் சமன் ரத்நாயக்க ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/mhgUwBI via Kalasam

அநுர ஜனாதிபதியாக வேண்டும் என்பதே ரணிலின் எதிர்பார்ப்பு ; ஐ.தே.க.வினர் எனக்கே வாக்களிக்க வேண்டும் - சஜித்

Image
  அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக வேண்டும் என்பதே ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்பார்ப்பு என்பது அவர் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் ஆற்றிய உரையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையான ஐக்கிய தேசிய கட்சியினர் என்னிடமே உள்ளனர். எனவே அவர்கள் எனக்கே வாக்களிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.  மினுவாங்கொடையில் வியாழக்கிழமை  (05)  இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பச்சை யானைகளும், சிவப்பு யானைகளும் இன்று ஒன்றிணைந்துள்ளன. அதனை ஜனாதிபதி ரணில் தனது பேச்சில் வெளிப்படுத்தியுள்ளார். ரணிலுக்கு வெற்றி பெறுவதற்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை.   எனவே உங்களது வாக்குகளை வீணடிக்காமல் நாட்டைக் கைட்டியெழுப்புவதற்கான ஆணையை ரணசிங்க பிரேமதாசவின் புதல்னான என் தலைமையிலான குழுவுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.  அநுரவுக்கு வாக்களிக்க இருப்போர், அவருக்கு வழங்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் கள்வர்களைப் பாதுகாக்கும் குழுவுக்காக வாக்குகள் என்பதை நினைவில் க...

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் ! இரகசிய உத்தரவு வழங்கிய நீதிமன்றம்

Image
இம்முறை ஜனாதிபதி தேர்தலில்போட்டியிடும் பிரதான வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துமாறு உத்தரவு என்ற தகவல் வெளியான நிலையில் , கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த தகவல்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு குற்ற புலனாய்வு பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்ப்பில் இரகசியமான அறிக்கையொன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதவானிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை  இரகசியமாக பேணுமாறு நீதிமன்றம் மேலும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.  மற்றும் இந்த தாக்குதல் தொடர்பிலான தகவல்களை குற்ற புலனாய்வுப் பிரிவிற்கு வழங்கிய நபரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Bz6SUmT via Kalasam

எனது ஆதரவு எந்த வேட்பாளருக்கும் இல்லை - முன்னாள் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

Image
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெற இருக்கும் 9 வது ஜனாதிபதி தேர்தலில் பற்றி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க  முக்கிய கருத்து ஒன்றை அறிவித்துள்ளார்.  அதாவது இம்முறை போட்டியிட இருக்கும் பல்வேறான வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அரசியல் மேடைகளில்  உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளி வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  மற்றும், போட்டியிடும் பல வேட்பாளர்கள் ஆதரவு வழங்குமாறு கோரியிருந்தாலும், இம்முறை எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்காமல் நடுநிலை வகிக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார். ற்றும், போட்டியிடும் பல வேட்பாளர்கள் ஆதரவு வழங்குமாறு கோரியிருந்தாலும், இம்முறை எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்காமல் நடுநிலை வகிக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார்.  from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/gmieCRN via Kalasam

நான் ஜனாதிபதியாகியதும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் - நாமலின் வாக்குறுதி

Image
  வடக்கு – கிழக்கு பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைக்கு பதில் வழங்க தான் தயாராக இருப்பதாகவும்  காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு நிச்சயமாக ஒரு பதில் வழங்கியாக வேண்டும் என்றும், ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த  போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மற்றும் தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த ஆணைக்குழுக்களை நியமித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.  இதற்கு நிச்சயமாக பதில் வழங்கியாக  வேண்டும். அந்த பதிலை வழங்குவதற்க நான் தயாராக இருக்கின்றேன். நான் ஜனாதிபதியாகியதும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/PrnxtIl via Kalasam

வடக்கின் அபிவிருத்தி இந்தியாவின் உதவியுடன் நடைமுறை படுத்தப்படும் - சஜித்

Image
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அரசாங்கத்தின் கீழ் தேசிய அபிவிருத்திக்கு வடக்கு மற்றும் கிழக்கின் பங்களிப்பு அதிகரிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.   அத்தோடு நாட்டில்  இருக்க கூடிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேற்கு மாகாணம் 43 சதவீதத்தைக் கொண்டுள்ளது. மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு, வடக்கு 4.1 சதவீதத்தையும் கிழக்கு மாகாணம் 5.2 சதவீதத்தையும் பங்களிக்கின்றன. தமது அரசாங்கத்தின் கீழ் எதிர்கால அரசாங்கம் இந்த நிலையை மாற்றும். இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், தமது அரசாங்கத்தின் கீழ் தேசிய அபிவிருத்திக்கு அதிக பங்களிப்பை வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்படும் என்று மன்னாரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்தநிலையில், வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்கான நிதியை உருவாக்குவதற்காக விசேட நன்கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு பிரேமதாச தனது வேண்டுகோளை மீண்டும் இதன்போது வலியுறுத்தியுள்ளார். வடக்கில் குறிப்பாக மன்னாரில், இந்தியாவின உதவியுடன் போக்குவரத்துப்பணிகள் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் சஜித் பிர...

பாலஸ்தீனத்திற்கான மக்கள் ஆதரவு எனது, வாழ்நாளில் நான் அறிந்ததை விட பெரியது

Image
 காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து அதிக எண்ணிக்கையிலான தொழிற்கட்சி எம்.பி.க்கள் கவலை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் கூறுகையில், காஸாவில் தொடரும் போருக்கு மத்தியில் கட்சியின் பல எம்.பி.க்கள் தங்கள் தொகுதியினரிடமிருந்து "மகத்தான" அழுத்தத்தை உணர்கிறார்கள். "நாட்டின் பல பகுதிகளில், சமீபத்திய பொதுத் தேர்தலில் [ஜூலையில்] தொழிலாளர் வாக்குகள் குறைந்துவிட்டன,  காசாவைச் சுற்றியுள்ள பிரச்சனைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை" என்று அவர் அல் ஜசீராவிடம் கூறினார், போருக்கு எதிரான பொது ஆர்ப்பாட்டங்கள் "அதிகரித்துள்ளன. அளவு, குறையவில்லை." “பாலஸ்தீன மக்களுக்கான மக்கள் ஆதரவு எனது வாழ்நாளில் நான் அறிந்ததை விட பெரியது. நாங்கள் எங்கள் பிரச்சாரத்தை மேம்படுத்துவோம் ... இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை முடிவுக்குக் கொண்டு வந்து உயிர்களைக் காப்பாற்றுவோம். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/AeBZgpF via Kalasam

மந்த போசணையை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கத்தால் நிதியொதுக்க முடியாமல் போயுள்ளது - சஜித் பிரேமதாச

Image
  இலங்கையில் சிறுவர்களுக்கான மந்த போசன நிலமை அதிகரித்துக் காணப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கைக்குழந்தைகள் மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் நிறை குறைவான மற்றும் வளர்ச்சி குறைவான (கட்டையான) குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சிக்கலுக்கு பின்னரான ஆய்வுகளின் படி வீடுகளில் நான்கில் ஒரு பங்கு நடுத்தரமான அளவில் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு (உயரம் குறைவு) 19.3 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 9.2% ஆல் அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய ஊட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து கணக்கெடுப்பின் பிரகாரம் 5- 18 வயதுக்குட்பட்டவர்களில் 37.4% ஆகவும் அல்லது 10-17 வயதுக்குட்பட்டவர்களில்1/3 பங்கினர் வளர்ச்சி குன்றியவர்களாக (கட்டையான)  அல்லது அதிக எடை கொண்டவர்களாக அல்லது உடற்பருமன் அதிகரித்தவர்களாக காணப்படுகின்றார்கள். இதற்கு பல போசணைக் குறைபாடுகள் காரணமாக ...

தேர்தல் நடைமுறைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அமைச்சரவை தீர்மானங்கள் -நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

Image
  தேர்தல் நடைமுறைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் எடுக்கப்படும் அமைச்சரவை தீர்மானங்களிற்கு எதிராகநடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்எம் ஏஎல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான தேர்தல் நடைமுறைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த அமைச்சரவை தீர்மானம் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தேர்தல் நடைமுறைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனவா என்பதை கண்டுபிடிப்பதற்கான அதிகாரம் எங்களிற்கு உள்ளது முறைப்பாடு இல்லாவிட்டாலும் நாங்கள் இந்த நடவடிக்கையை எடுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். முறைப்பாடுகள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் எங்களால் தேர்தல் நடைமுறைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் என தெரிவித்துள்ள அவர் அமைச்சரவையின் தீர்மானங்கள் கிடைத்ததும் நாங்கள் தேர்தல் நடைமுறைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள்  ஏதாவது உள்ளனவா என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEW...

வாகனங்களில் அரசியல் பிரச்சார விளம்பரங்கள் ; பொலிஸ் எச்சரிக்கை

Image
  அரசியல் கட்சிகளின் பிரச்சார விளம்பரங்களை வாகனங்களில் காட்சிப்படுத்துவதற்கு எதிராக வாகன உரிமையாளர்களுக்கு பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில், அரசியல் கட்சிகளின் பிரச்சார விளம்பரங்களை வாகனங்களில் காட்சிப்படுத்துவது சட்டவிரோதமானது. விளம்பரங்களுடன் காணப்படும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விளம்பரங்கள் அகற்றப்படும். ஓட்டப்பட்ட ஸ்டிக்கர்கள் அல்லது சுவரொட்டிகளை அகற்றும் போது வாகனங்களுக்கு சேதம் ஏற்படலாம். பொலிஸாரின் தலையீட்டைத் தவிர்க்க வேண்டுமாயின், தானாக முன்வந்து இந்த விளம்பரங்களை அகற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/NAru49V via Kalasam

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் உடனடியாக நாடாளுமன்றத்தை கலைப்பேன் - அனுரகுமார

Image
  ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் உடனடியாக நாடாளுமன்றத்தை கலைப்பேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். டெய்லி எஃப்டியிடம்  இதனை தெரிவித்துள்ளஅனுரகுமாரதிசாநாயக்க தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் அதிகாரத்தைப் பாதுகாப்பதும் அதிகாரத்தை நிலைநாட்டுவதும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதிக்குவழங்கப்பட்ட அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி செப்டம்பர் 22 அன்று நாடாளுமன்றத்தைக் கலைக்க தேசிய மக்கள் கட்சி விரும்புகிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில்  கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்  "இந்த ஊழல்வாதிகளுடன் ஒரு நாள் கூட சேர்ந்து செயற்படவிரும்பவில்லை அதற்கான காரணங்களும் இல்லை . புதிய அமைச்சரவை மற்றும் செயலாளர்களை நியமிக்கும் அரசியலமைப்பு அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது மேலும் செப்டம்பர் 22 அன்று தலைவர் அனுர குமார திசாநாயக்க நம் நாட்டிற்கு சிறந்த முடிவை எடுப்பார். தேவையான ஏற்பாடுகளுடன் நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம் "என அவர் தெரிவித்துள்ளார். என். பி. பி. யி...

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

Image
  பாராளுமன்றம் 3ஆம், 4ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் திங்கட்கிழமை (02) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன் பிரகாரம் செவ்வாய்க்கிழமை (3) காலை  9.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், 9.30 மணி முதல்  10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 10.30 மணி முதல்  மாலை 5.00 மணி வரை வெளிநாட்டுத் தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்தல் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ...

எனது அரசாங்கத்தில் மூன்று ஆண்டுகளுக்குள் மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பேன் ; நாமல் ராஜபக்ஷ உறுதியளிப்பு

Image
  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தனது அரசாங்கத்தின் கீழ் மூன்று ஆண்டுகளுக்குள் மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதாக உறுதியளித்துள்ளார். தனது தேர்தல் அறிக்கையை வெளியிடும் விழாவில் உரையாற்றிய ராஜபக்ச, டிஜிட்டல் மயமாக்கல், அரசாங்க கொள்முதல் செயல்முறைகளுக்கான போட்டி ஏலத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் ‘சாம்பல் பொருளாதாரத்தை’ ‘வெள்ளை பொருளாதாரமாக’ மாற்றுவதன் மூலம் மோசடி மற்றும் ஊழலை ஒழிக்க முடியும் என்றார். SLPP அரசாங்கம் அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி, பதவியேற்ற முதல் ஆறு மாதங்களுக்குள் திட்டமிட்ட டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கும் என்று அவர் கூறினார், இது நாட்டில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வாகவும், வரிசைகளின் சகாப்தத்தை முடிவுக்கு கொண்டுவரவும் உதவும் என்றும் கூறினார். அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் வங்கி முறைக்குள் கொண்டுவரும் அதே வேளையில் கொள்முதல் செயல்முறைகள் மற்றும் டெண்டர் நடைமுறைகளுக்கு போட்டி ஏல நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று ராஜபக்ச கூறினார். “இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளுக்குள் மோசடி மற்றும் ஊழலை மு...

கிளப் வசந்த படுகொலை ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Image
  கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் உட்பட 12 பேரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்கள் 12 பேரும் இன்று  திங்கட்கிழமை (02) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் பிரபல பாடகியான கே. சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/yKizCn5 via Kalasam

வடகிழக்கு பகுதிகளை மையமாகக் கொண்டு பாரிய அபிவிருத்தி திட்டங்கள் – சஜித்

Image
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்கின்ற வடகிழக்கு பகுதிகளை மையமாகக் கொண்டு பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.   இந்த மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக, அவர்களின் வறுமையை போக்குவதற்காக மாதம் ஒன்றுக்கு 20000 வீதம் 24 மாதங்களுக்கு வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுப்பதற்கான சக்தியை நாம் கொடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். சேமிப்பு, முதலீடு, நுகர்வு, உற்பத்தி, மற்றும் ஏற்றுமதி ஆகிய ஐந்து துறைகளை அடிப்படையாகக் கொண்டு, மாதம் 20 ஆயிரம் ரூபா வழங்கி வறுமையை போக்க முடியும். இந்த பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் திறமையானவர்கள்.  அர்ப்பணிப்புடன் செயல்பட கூடியவர்கள். வட பகுதிய இளைஞர்களின் சக்தியை முழு நாட்டின் சக்தியாக மாற்ற முடியும். புதிய தொழில் நுட்பங்களின் ஊடாக அவர்களுக்கான திறமைகளை வளர்த்தெடுக்க வழி வகுத்து, இளைஞர்களை வலுவூட்டுவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிமித்தம் வட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நே...

அனுரகுமார வெற்றிபெற்றால் வேறு கட்சியில் இருந்தே பிரதமர் நியமிக்க வேண்டி வரும் ; ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ

Image
  அனுரகுமார வெற்றிபெற்றால் பாராளுமன்றத்தை கலைத்து காபந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அவர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆசனங்கள் இல்லை. அதனால் ஜே.வி.பி. அரசாங்கம் அமைப்பது சாத்தியமில்லை. அதேநேரம் அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்று கொண்டுவந்தால், அது தொடர்பான விசாரணை முடிவடையும் வரைக்கும் பராாளுமன்றத்தை கலைக்கவும் முடியாது என ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றால் அவர் எவ்வாறு தற்காலிக அரசாங்கம் அமைப்பது என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் யாராவது ஒரு வேட்பாளர் எதி்ர்வரும் 21ஆம் திகதி வெற்றிபெற்றால், அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அவருக்கு கிடைக்கிறது. அவ்வாறு அவர் பாராளுமன்றத்தை கலைத்தால் தற்காலிக அமைச்சரவை ஒன்றை அவர் அமைக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அடுத்த வருடம் செப்டம்பர் முதலாம் திகதிவரை பாராளுமன்றத்துக்கான காலம் இருப்பதால், அதுவரைக...

ஜனாதிபதி தேர்தல் ஆதரவை உத்யோகபூர்வமாக அறிவித்த தமிழரசுக் கட்சி!

Image
புதிய இணைப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இன்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா. அரியநேத்திரனை போட்டியில் இருந்து விலகுமாறு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/7c5HfjX via Kalasam