ஊடகப்பிரிவு - புத்தளத்தில் வாழும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு நிவாரணம் மற்றும் இதர கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில், அவர்களின் விபரங்கள் மற்றும் தகவல்களை உடன் அனுப்பி வைக்குமாறு கோரி, மன்னார் மாவட்ட அரச அதிபர் சீ.ஏ. மோகன் ராஸ் மன்னார் நகரம், முசலி, மாந்தை மேற்கு, நானாட்டான் ஆகிய பிரதேச செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். புத்தளத்தில் வாழும் இந்தக் குடும்பங்கள் மன்னாரிலோ அல்லது புத்தளத்திலோ எந்தவிதமான உதவிகளும் பெறாமல் மிகவும் கஷ்டப்படுவதாகவும், கொரோனா அச்ச சூழ்நிலை காரணமாக வாழ்வாதாரங்களை இழந்துள்ளதோடு, தொடர்ந்தும் புத்தளம் மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கினால் அவர்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் கஷ்டத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டி, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவுக்கு மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்த விடயம் தொடர்பில், மன்னார் அரச அதிபரிடமும், தவிசாளர் முஜாஹிர் வேண்டுகோள் ஒன்றை ஏற்கனவே விடுத்திருந்தார். மன்னார் அரச அதிபர் இந்தக் கோரிக்கை தொடர்பில், தாம் மேற்கொண்டு...