Posts

Showing posts from April, 2022

மருந்துகளின் விலை அதிகரிப்பு – வர்த்தமானியை ரத்து செய்யுமாறு கோரிக்கை

Image
  அரசாங்கத்தினால் 60 வகையான மருந்து பொருட்களின் விலையை 40 சதவீதத்தினால் அதிகரிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அதன் தலைவர் அஜித் திலகரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை மற்றும் மருந்தக நிறுவனங்களின் ஊடாக தற்போது மருந்து பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் வெகுவாக பாதிப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தனியார் மருந்தகங்களில் சிறுவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/pBy5aZu via Kalasam

இன்று மின்வெட்டு இல்லை

Image
  இன்றும் நாளை மறுதினமும், நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார். மேதினம் மற்றும் ரமழான் பண்டிகை காரணமாக குறித்த தினங்களில் மின்சாரத்தை துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நாளை மற்றும் எதிர்வரும் 4ஆம் திகதி ஆகிய தினங்களில், A முதல் W வரையான வலயங்களில் மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த வலயங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. அத்துடன் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் ஒரு மணிநேரமும் 20 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாகும். இதேவேளை கொழும்பு நகர் பகுதிகளில் குறித்த தினங்களில் காலை 6 மணிமுதல் 9 மணிவரையான மூன்று மணித்தியாலங்களுக்கு மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/ApbNmfv via Kalasam

மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ள விடயம் தொடர்பில் அவதானம்

Image
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வுகாணுமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வலயுறுத்தியுள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.   இதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரினால் மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பபட்டுள்ளது. அனைத்துகட்சி இடைக்கால ஆட்சியொன்றை உருவாக்க ஒத்துழைப்பு வழங்கும் குழு என தம்மை அடையாளப்படுத்தும் பொதுஜன பெரமுனவின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களாலேயே இந்த கடிதம் அனுப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/7NMpbEI via Kalasam

6ஆம் திகதி ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கவேண்டுமாயின் 3 கோரிக்கைகள் முன்வைப்பு

Image
எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு, ஆதரவு வழங்கவேண்டுமாயின், சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களிடம், 3 கோரிக்கைகளை முன்வைக்க இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அரசதுறை தொழிற்சங்கங்கள் சம்பளம் பெற்றுக்கொள்ளாமல், இந்த ஹர்த்தால் போராட்டத்தில் பங்கேற்க இணக்கம் தெரிவிப்பது, அத்துடன், கனியவளக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை உள்ளிட்ட அரச நிறுவனஙகள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் நிபந்தனை விதித்துள்ளது.   இது குறித்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எழுத்துமூலம் அறிவிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு எழுத்துமூலம் அறியப்படுத்த உள்ளதாக கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 6ஆம் திகதி முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு பேருந்து சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, தொழிற்சங்க மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA htt...

பொதுஜன முன்னணியின் ஆட்சியை எவரும் கவிழ்க்க முடியாது. அதேவேளை, ஜனாதிபதியையும் பதவியிலிருந்து எவரும் விரட்டவும் முடியாது ; பெசில

Image
 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் பிரதமர் மஹிந்த  ராஜபக்சவுக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. ஒருவரையொருவர் பதவி விலகவும் கோரவில்லை.” – இவ்வாறு முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநருமான பஸில் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டில் இன்று பெரும்பாலான ஊடகங்கள் எமது அரசுக்கு எதிராகவே செய்திகளை வெளியிடுகின்றன. இதன் பின்னணியில் யார் செயற்படுகின்றார்கள் என்று தெரியவில்லை. ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின்படி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. ஜனாதிபதியைப் பதவி விலகுமாறு பிரதமரோ அல்லது பிரதமரைப் பதவி விலகுமாறு ஜனாதிபதியோ கோரவில்லை. எனவே, ஊடகங்கள் உண்மைத்தன்மையுடன் செய்திகளை வெளியிட வேண்டும் நடுநிலையுடன் செயற்பட வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியை எவரும் கவிழ்க்க முடியாது. அதேவேளை, ஜனாதிபதியையும் பதவியிலிருந்து எவரும் விரட்டவும் முடியாது” – என்றார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/4gvrC5S via Kalasam

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கொலைவெறி தாக்குதல்.

Image
குளியாப்பிட்டிய, பரிகொட பிரதேசத்தில் உள்ள மக்கள் மற்றும் பிக்குகள் அரசாங்கத்திற்கு எதிராக நேற்று (29) பிற்பகல் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குளியாப்பிட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர்கள் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒருவரின் கால் உடைந்துள்ளதுடன் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியதாவது, “நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தாக்குவதற்காக மோட்டார் சைக்கிள்கள் சிலர் வருவதாக கூறினார்.. நாங்கள் குறுக்கு வீதியில் நுழைய முற்பட்ட போது எனது முதுகுப்பகுதிக்கு பொல்லால் ஒருவர் தாக்கினார்., பின்னர் நான் பைக்கில் இருந்து விழுந்தேன். அதுவரைதான் எனக்கு நினைவிருக்கிறது. .” இதேவேளை, மகாவலி இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் பதவி விலகுமாறு கோரி கிரித்தலையில் உள்ள அவரது இல்லத்திற்கு முன...

வரி அதிகரிப்பதைத் தவிர வேறு வழி இல்லை – நிதியமைச்சர்

Image
இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமையினால் நாட்டின் விற்பனை வரியை அதிகரிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பி.பி.சி ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே நிதியமைச்சர் அலி சப்ரி இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் பெறுமதி சேர் வரியை 8 வீதமாகக் குறைத்தமை அரசாங்கம் மேற்கொண்ட முக்கிய தவறாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய பெறுமதி சேர் வரியை 13 அல்லது 14 வீதமாக அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு வரிகளை அதிகரிப்பதற்கான கடினமான தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசாங்கத்தின் வருமானத்திற்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசத்தை குறைப்பதற்கு அவசியமான வழிமுறையைக் கண்டறிய வேண்டும் எனவும் நிதியமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், எதிர்வரும் 8 மாதங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். from Ceylon Musli...

பிரதமரை விலக்கி புதிய இடைக்கால அரசை உருவாக்க ஜனாதிபதி இறுதி முடிவு எடுத்தார்.

Image
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று (ஏப்ரல் 29) இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய பேச்சுவார்த்தையில் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டை நிர்வகிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் புதிய அமைச்சரவைக்கு உதவுவதற்காக தேசிய சபையொன்றை நியமிப்பதற்கும் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று காலை அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியதையடுத்து இந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/iYj37RS via Kalasam

திரிபோஷ உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தம்...

Image
  நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதன்படி வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷா இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதல் சில மாதங்களில் மட்டுமே தமக்கு திரிபோஷ கிடைத்ததாக அப்பகுதி கர்ப்பிணித் தாய்மார்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து லங்கா திரிபோஷ நிறுவனத்திடம் வினவியபோது, மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷ உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/1NBZV7n via Kalasam

இலங்கை வந்தடைந்த மருத்துவப் பொருட்கள்

Image
இந்தோனேஷியாவினால் இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்ட 550 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக குறித்த மருத்துவ பொருட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/gMdZ9Ev via Kalasam

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியல் தியாகம் செய்து பதவி விலகியே ஆக வேண்டும்...

Image
  சமையல் எரிவாயுவின் விலை 10 ஆயிரமாகவும்,ஒரு இறாத்தல் பாணின் விலை 400 ரூபாவாகவும் உயர்வடையும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். எனவே நாடு பாரிய நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளது என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள். இதன்படி ,நெருக்டிக்கு தீர்வு காண அரசியல் தியாகம் செய்து பதவி விலகமாட்டார்கள். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கட்டாயம் பதவி விலக வேண்டும் என இலங்கையை பாதுகாப்போம் அமைப்பின் தலைவர் பாஹியன்கல ஆனந்தசாகர தேரர் தெரிவித்தார். அதற்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், மகாசங்கத்தினருக்கும் இடையில் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அலரிமாளிகை,காலி முகத்திடல் உட்பட நாடுதழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.தற்போதைய நிலைமை தொடர்ந்து நீடித்தால் நாடு பாரிய எதிர்விளைவுகளை எதிர்க்கொள்ள நேரிடும் என்பதை பிரதமரிடம் எடுத்துரைத்தோம். மேலும் பொருளாதார நெருக்கடி குறித்து அவதானம் செலுத்தும...

11 கட்சிகளின் இறுதித் தீர்மானம்..! ஜனாதிபதிக்கு அறிவிப்பு

Image
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 சுயேச்சைக் கட்சிகளும் நிபந்தனைகளுடன் ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்க இன்று (28) தீர்மானித்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  ஜனாதிபதியால் நாளை தினம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கலந்துரையாடலில் கலந்துக் கொள்வது தொடர்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  நாடு எதிர்நோக்கும் நெருக்கடிக்கு தீர்வாக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.  எவ்வாறாயினும், பிரதமரோ அல்லது அமைச்சரவையோ இன்றி தனிப்பட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டால் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவது என 11 கட்சிகளும் இன்று தீர்மானித்துள்ளன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/zUwJTGQ via Kalasam

பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

Image
தேசிய ரீதியிலான பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே 23 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரையும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 16 ஆம் திகதியும், 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 12 ஆம் திகதி வரையும் இடம்பெறவுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/mU3v8XT via Kalasam

இந்தியக் கடன் முடிவடைகிறது; புதிய கடனுக்கான எந்த அறிகுறியும் இல்லை -ரணில்

Image
இந்தியாவிடமிருந்து பெற்ற கடன் மே மாதத்து டன் முடிவடையும் என்றும் புதிய கடன் கிடைப்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே, நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து, அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படும் சூழ்நிலை உருவாகலாம் என்றார். மேலும், தற்போதுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியை ஒத்திவைக்க வாய்ப்பில்லை எனவும், பாராளுமன்றம் நிதி அதிகாரத்தைப் பெற்று அனைவரின் கருத்துகளுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2Ta647i via Kalasam

சாணக்கியனுக்கு எதிராக பெறப்பட்டுள்ள நீதிமன்றம் தடை!

Image
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் காவல்துறையினரால் நீதிமன்ற உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள குறித்த நீதிமன்ற உத்தரவு களுவாஞ்சிக்குடி காவல்துறையினரால் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தனக்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவு குறித்து இரா.சாணக்கியன் தெரிவிக்கையில், 14 நாட்களுக்கு வீதியை மறித்தோ பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலோ எந்தவொரு விடயமும் செய்யக் கூடாது என நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது. இதுதான் இன்று நாட்டில் அராஜகமான நிலை, ஏன் என்றால் இன்று இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலுமே மக்கள் வீதியிலேயே போராடும் போது, இன்று களவாஞ்சிக்குடி காவல் நிலைய பொறுப்பதிகாரி மாத்திரம் ஒரு நீதிமன்ற தடை உத்தரவினை பெற்றிருக்கிறார். இந்த நாட்டில் ஒரு நாடு ஒரு சட்டம் இல்லாவிட்டால் இந்த நாட்டில் தமிழர்களுக்கு இன்னுமொரு சட்டமா? என்பதுதான் நீண்டகாலமாக எங்களுக்கு இருக்கின்ற கே...

இலங்கைக்கு இந்தோனேஷியா 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கியுள்ளது

Image
  அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு இந்தோனேஷியா வழங்கியுள்ளது. மனிதாபிமான உதவியாக இலங்கைக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்தோனேஷியாவின் தூதுவர் Dewi Gustina Tobing தெரிவித்துள்ளார். அதற்கமைய குறித்த பொருட்கள் எதிர்வரும் 28 மற்றும் மே 8ஆம் திகதிகளில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் ஊடாக இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/c4XkuEC via Kalasam

நாளை புகையிரத சேவைகளும் ஸ்தம்பிதம்

Image
இன்று (27) நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.   அரசாங்கத்திற்கு எதிராக தீவிரமடைந்துள்ள போராட்டத்தை பலப்படுத்தும் வகையிலும், ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/OQSYHGw via Kalasam

நாளை முழுப் பொது வேலைநிறுத்தப் போராட்டம்

Image
அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் (28) ´முழுப் பொது வேலைநிறுத்தம்´ என்ற தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரசு, அரை அரசு, தோட்ட மற்றும் தனியார் துறைகள் அனைத்தும் இந்த நாள் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். வசந்த சமரசிங்க மேலும் தெரிவிக்கையில், *´இந்த நாட்டு மக்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் தன்னிச்சையான பயணத்தை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகிறது. எனவே இந்த நாட்டின் உழைக்கும் மக்களாகிய நாங்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கத்திடம் கூறுகின்றோம். காலிமுகத்திடலில் போராடும் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்திற்காக போராடுகிறார்கள். ஆட்சியாளர்களை வீட்டுக்குப் போகச் சொல்கிறார்கள். இந்த நாட்டிலுள்ள அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரும் இணைந்து 28ஆம் திகதி முழுப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம். வேலைநிறுத்தத்தை அடுத்து வரும் 6ம் திதி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.´* ஆயிரத...

அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு

Image
புதிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கும் வகையில் எதிர்வரும் 29 ஆம் திகதி விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய பிரதமர் மற்றும் அமைச்சரவையின் பதவி விலகலைத் தொடர்ந்து புதிய அரசாங்கததை அமைப்பது மற்றும் புதிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/ZPsg0FL via Kalasam

இடைக்கால அரசுக்கு அனுமதி- ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு..!

Image
தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சர்வ கட்சிகளையும் இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி என்ற வகையில் கொள்கை அடிப்படையில் இணக்கப்பாட்டை தெரிவிப்பதாக ஜனாதிபதி கட்சித் தலைவர்களுக்கு தெரிவித்தார். பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் முழுமையான இணக்கத்தை கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/n1243Il via Kalasam

அனைத்து நிர்மாணப் பணிகளையும் இடைநிறுத்துமாறு கோரிக்கை!

Image
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அனைத்து நிர்மாணப் பணிகளையும் இடைநிறுத்துமாறு இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  உற்பத்திகள் விற்பனை செய்யப்படாத நிலை ஏற்படும் போது, ​​இறக்குமதியாளர்கள் விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என இலங்கை தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.  “இப்படி அதிகரிப்பதன் மூலம் என்ன செய்ய முயல்கிறீர்கள். இவ்வாறு அதிகரிக்கும் போது நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகள் எவ்வாறு இடம்பெறும்.  10 மில்லியனில் வீடு கட்ட திட்டமிட்டிருந்தால் 25 மில்லியனில் கூட கட்டி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இது ஒரு மாஃபியா. இந்த நேரத்தில் சீமெந்து விலையை இறக்குமதியாளர்கள் சங்கம்தான் முடிவு செய்கிறது.  சீமெந்து மூடை ஒன்றின் விலை இதுதான் என அவர்கள் முடிவு செய்கின்றனர். அது செயற்படுத்தப்படுகிறது. அரசாங்கம் அதில் தலையிடுவதில்லை.  இந்த வணிக சமூகத்திற்கு நான் கூறுகிறேன், தயவுசெய்து கட்டுமானத் தொழிலை நிறுத்துங்கள்.  நாட்டு...

மக்களுக்கு எதிராக அரசாங்கத்தை செயற்கையாகப் பாதுகாக்க முடியாது.. பதவி விலகத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அறிவிப்பு.

Image
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு இடமளித்து பதவி  விலகத் தயார் என ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை உறுப்பினர்களால் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். முழு அரசாங்கமும் இராஜினாமா செய்ய வேண்டும் என்ற சுமூகக் கருத்து உருவாகியுள்ளதாகவும் அதன் காரணமாக பிரதமர் உட்பட அரசாங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகக் கருத்துக்குப் புறம்பாக அரசாங்கத்தை செயற்கையாகப் பாதுகாக்க முயற்சிப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/yx1mMQj via Kalasam

ஜனாதிபதி பதவி விலகும்வரை இடைக்கால அரசுக்கு ஆதரவு இல்லை’

Image
” கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் நீடிக்கும்வரை இடைக்கால அரசுக்கு ஜே.வி.பி. இணங்காது.” – என்று அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று அறிவித்தார். ” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், இந்த அரசும் பதவி விலகவேண்டும். இதுதான் மக்களின் கோரிக்கை. எமது நிலைப்பாடும் இதுவாகவே உள்ளது .   அவர்கள் பதவி விலகிய பின்னர் குறுகில காலப்பகுதிக்கு இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும். அதன்பின்னர் பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டும். ” – என்றும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தா from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/w0H5hrg via Kalasam

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்க நான் தயாரில்லை

Image
இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்க தாம்  தயாரில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கம் தற்போது பெரும்பான்மையை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் சம்மதத்துடன் புதிய பிரதமரை நியமிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/1H5C4cW via Kalasam

சாய்ந்தமருது குண்டுவெடிப்பு - அனைவரது சடலங்களையும் தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி

Image
  2019 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பூதவுடல் கள் நாளை (27) தோண்டி எடுக்கப்படவுள்ளது. இதன்படி ,தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த 17 பேரில் சாரா ஜாஸ்மின் என்கிற புலஸ்தினி மகேந்திரன் உள்ளாரா என்பதை அறியவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சஹரான் ஹாஷிமின் சகோதரர் மொஹமட் ரில்வான் தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்ததில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் அறிவித்தனர். அதன்படி அந்த நேரத்தில் டி.என்.ஏ. சோதனைகள் சம்பவ இடத்தில் சாரா ஜாஸ்மின் இருப்பதை உறுதிப்படுத்தவில்லை. இதற்கமைய ,முந்தைய இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சாரா ஜாஸ்மினுடைய டி.என்.ஏ ஒத்துபோகாததை அடுத்து எச்சங்களை மீண்டும் ஒருமுறை தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாளை (27) அம்பாறை மயானத்தில் தோண்டி எடுக்க பொலிஸாருக்கு கல்முனை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/e8Aiy71 via Kalasam

உலகின் மிகவும் வயதான மூதாட்டி காலமானார்...

Image
  உலகின் மிகவும் வயதான நபர் என நம்பப்பட்ட ஜப்பானை சேர்ந்த 119 வயது மூதாட்டி புகுவோகா நகரில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் ,கேன் டனகா என்ற அந்த மூதாட்டி 1903ம் ஆண்டு பிறந்தார். அவர் கடந்த 2019ம் ஆண்டு உலகின் மிகவும் வயதான நபர் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/5Q43Jlm via Kalasam

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்க வாய்ப்பு ?

Image
  சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து இன்று (26) முடிவு எடுக்கப்படவுள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இதன்படி ,கொழும்பில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், விலையை அதிகரிக்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார். செலவு அதிகரிப்பு காரணமாகவும் நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும் அந்நிறுவனம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார். அதற்கமைய , சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். மேலும் எரிவாயு இறக்குமதி மற்றும் ஏனைய செலவுகள் தொடர்பிலான அறிக்கைகள் ஆராயப்பட்டு இன்று தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/FKQiwmW via Kalasam

அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பு..

Image
  இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (26) 346.49 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேபோல் , அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 333.88 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி குவைத் தினாரின் பெறுமதி 1,113.72 ரூபாவாக பதிவாகி உள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/L09GZpD via Kalasam

மின் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி..

Image
மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. நேற்றிரவு (25) தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் அது சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் நாளாந்த இழப்பு சுமார் 500 மில்லியன் ரூபாவாகும் என தெரிவித்த அவர், இப்போது நாம் செய்ய வேண்டியது, உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதுதான் என தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிபொருள் விலை திருத்தம் எதிர்காலத்தில் விலை சூத்திரத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேரத்ன தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/fbiyxjv via Kalasam

நாணய கொள்கையினை கடுமையாக்குமாறு IMF கோரிக்கை

Image
பொருளாதார நெருக்கடியினை சமாளிப்பதற்கு இலங்கை நாணயக் கொள்கையினை கடுமையாக்குமாறும் வரிகளை அதிகரிக்குமாறும் சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது. அத்துடன், இலங்கை நெகிழ்வான நாணய மாற்று விகிதங்களை பின்பற்ற வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் செயற்பாட்டுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Oct8per via Kalasam

இலங்கையின் வங்கி ஒன்றில் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு வதிவிட விசா வழங்கப்படும்.

Image
மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில்  குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட விசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய 10 ஆண்டுகளுக்கு வதிவிட விசா வழங்குவதை செயல்படுத்தும் Golden Paradise Visa Program  என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/14ew5HA via Kalasam

28ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்கள் போராட்டம்

Image
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் இன்று (25) நாடளாவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இன்றைய தினம் முன்னெடுத்த சுகயீன விடுமுறை போராட்டம் வெற்றிகரமாக அமைந்ததாக ஆசிரியர் தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன.   எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அதிபர், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. முச்சக்கரவண்டிகளில் சென்றாலும் பாரிய செலவு ஏற்படுகிறது. எனவே இந்த நெருக்கடிகளுக்கு சுமூகமான தீர்வை வழங்குமாறு கல்வி அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   எனவே நாட்டு மக்களுடன் இணைந்து அதிபர், ஆசிரியர்கள் விடுக்கும் கோரிக்கையை ஏற்று அரசாங்கம் பதவி விலக வேண்டும். அவ்வாறில்லை எனில் எதிர்வரும் 28ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அதிபர், ஆசிரியர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் ...

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேர் உட்பட, கர்தினால் தலைமையில் 60 பேர் வத்திக்கான் பயணம்.

Image
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை  தலைமையில், 60 பேர்கொண்ட குழு, பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்ஸிசை சந்திப்பதற்காக, வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளது. இன்று காலை வத்திக்கான் நோக்கி பயணமான இந்தக் குழுவில், கொழும்பு ஆயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோவும் அடங்குகிறார். அத்துடன், உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேரும் இந்தக் குழுவில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என பாப்பரசர் விடுத்த அழைப்புக்கு அமைய, குறித்த குழுவினர் வத்திக்கான் பயணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/bdY0QV6 via Kalasam

கட்சிக்கு துரோகம் செய்பவர்களை எவ்வித தயவு தாட்சணையுமின்றி வெளியேற்ற வேண்டும், இல்லாதவிடத்து தாங்கள் பதவிகளை துறக்கத் தயார்! மக்கள் காங்கிரஸ் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள்..!

Image
கட்சிக்கு துரோகம் செய்பவர்களை எவ்வித தயவு தாட்சணையுமின்றி வெளியேற்ற வேண்டும், இல்லாதவிடத்து தாங்கள் பதவிகளை துறக்கத் தயார் என்கின்றனர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதினால் அவரை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்திய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் இது தொடர்பில் கட்சியின் உயர்பீடம் துரிதமாக செயற்படாதவிடத்து தாங்கள் வகிக்கும் பிரதேச சபையின் பதவிகளை இராஜினாமா செய்ய நேரிடும் என தெரிவித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட கட்சியின் உயர்பீடத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பு இன்று திங்கட்கிழமை கட்சியின் நகர அமைப்பாளர் எம்.எச்.முஹம்மத் தலைமையில் புத்தளத்தில் இடம் பெற்ற போதே இதில் கலந்து கொண்ட புத்தளம், கல்பிட்டி, வண்ணாத்தவில்லு பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கூட்டாக இந்த வேண்டுகோளினை முன்வைத்தனர். கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களாக முஹம்மத் ஆசிக், பைசல் மரைக்கார், புத்தளம்...

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டிற்கு...

Image
  எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் இந்த வாரத்திற்குள் இலங்கையை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை(26) 3,600 மெட்ரிக் தொன் எரிவாயு மேலும் 3,600 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளை மறுதினம்(27) நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார். மேலும் நாளை(26) கொண்டுவரப்படும் எரிவாயு தொகையை நாளை மறுதினம்(27) முதல் சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/C0SsDRh via Kalasam

கட்சித் தலைவர் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு சஜித் கோரிக்கை

Image
  அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்லும் பொருட்டு கட்சித் தலைவர் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று (25) கோரிக்கை விடுத்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/rjgbyaN via Kalasam

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சிறிதளவு குறைய சாத்தியம்

Image
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சிறிதளவு குறைய வாய்ப்புள்ளதாக  அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி ,இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு எதிர்பார்ப்பதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வதை ஆரம்பிக்க முடியும் என அதன் பேச்சாளரான நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/CKeOaqd via Kalasam

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ பதவி விலகமாட்டார்

Image
  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்னும் பெரும்பான்மையான பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருப்பதால், பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக எந்தவொரு குழுவிற்கும் அறிவிக்கவில்லை என பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளனர். அதன்படி ,SLPP கட்சி உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை மற்றும் மதக் குழுக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் ராஜினாமா செய்வது பற்றி விவாதிக்கவில்லை என்றும், இந்த கூற்றுக்கள் தவறானவை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாகவும் பிரதமர் பதவி விலகவுள்ளதாக சில குழுக்களுக்கு அறிவித்துள்ளதாகவும் இன்று காலை ஊடகங்களுக்கு தெரிவித்த உதய கம்மன்பிலவின் கூற்றுக்கு பதில் வழங்கியபோதே ராஜபக்ஷவின் அலுவலக சிரேஷ்ட அதிகாரிகள் இதனை தெரிவித்தனர். மேலும் எவ்வாறாயினும், இந்த கூற்றுக்கள் பொய்யானவை என்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை தவறாக வழிநடத்த கம்மன்பில மேற்கொண்ட முயற்சி இது என்றும் பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். from Ceylon Muslim - NEW...

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு மற்றுமொரு தடை உத்தரவு

Image
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  அவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய காலத்தில் பொது நிதியை மோசடி செய்ததாக வண.தினியாவல பாலித தேரர் செய்த தனிப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.  அஜித் நிவார்ட் கப்ராலை எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நீதவான் அழைப்பாணை விடுத்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/JduXpZv via Kalasam

தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக இருதய நோயாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் வரை அதிகரித்தது.

Image
தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி  காரணமாக இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர், கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, மேல் மாகாணத்தில் மாத்திரம் பதிவாகும் இருதய நோயாளர்களின் எண்ணிக்கை 30 தொடக்கம் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிலைமையை புரிந்துணர்வுடன் எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/NwYdrz6 via Kalasam

வீதித்தடைகளை அகற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

Image
மக்களின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர வீதித்தடைகளை அகற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/1EtGfQS via Kalasam

மருந்து இறக்குமதிக்கு வெளிநாட்டு உதவிகளை பெற புதிய கணக்கு அறிமுகம்

Image
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் டொலர்களை வைப்பிலிடக்கூடிய புதிய வைப்பு கணக்கொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த கணக்கிற்கு தேவையான அனுமதியைப் பெறுவதற்கான கோரிக்கை நிதி அமைச்சில் முன்வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் நன்கொடைகளுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ஒருங்கிணைப்பாளர் விசேட வைத்திய நிபுணர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர்களை நன்கொடையாக வழங்க விரும்பும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் எந்தவொரு தரப்பினரும் இந்த புதிய கணக்கிற்கு டொலர்களை அனுப்ப முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா, தாய்லாந்து, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுடன் இலங்கைக்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/RGoYPb3 via Kalasam

குற்றப் பிரேரணையை கொண்டுவருவதிலும் அதனை நிறைவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள்

Image
நாடாளுமன்றில் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையிலாப் பிரேரணை ஒன்றினை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன.   அந்தவகையில் குறித்த பிரேரணையை கொண்டுவருவதற்கான செயற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்னெடுக்கவுள்ளார். எதிர்க்கட்சியினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த பிரேரணையை கொண்டு வருவதற்கான முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களும் ஜனாதிபதிக்கு எதிரான குற்ற பிரேரணை தொடர்பான முன்மொழிவுகளை தன்னிடம் வழங்கியதாக சுமந்திரன் தெரிவித்தார். இருப்பினும் குற்றப் பிரேரணையை கொண்டுவருவதிலும் அதனை நிறைவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் காணப்படுவதாக சுமந்திரன் தெரிவித்தார். ஆகவே அவர்கள் வழங்கிய முன்மொழிவுகளில் இருக்கும் முக்கிய விடயங்களை இணைத்து நம்பிக்கையிலாப் பிரேரணை கொண்டுவரப்படும் என அவர் மேலும் கூறினார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/yzkOXjQ via Kalasam

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பொலிஸாருக்கு விடுத்துள்ள பணிப்புரை

Image
பொது போக்குவரத்து நடவடிக்கைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய விடயங்கள் வழமையாக முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு பொலிஸாருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, பொது போக்குவரத்து, எம்புலன்ஸ், பாடசாலை வாகனங்கள், அலுவலக சேவைகள், அத்தியாவசிய சேவை போக்குவரத்து, சுற்றுலா பயணிகள் பயணிக்கும் வாகனங்களின் போக்குவரத்து ஆகியவற்றை தடையின்றி முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/jmnqw78 via Kalasam

சவர்க்காரத்தின் விலைகளும் அதிகரிப்பு..

Image
  நாட்டில் சவர்க்காரங்களின் விலைகளை சடுதியாக அதிகரிக்க சவர்க்கார இறக்குமதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. அதற்கமைய , 70 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்ட ஆடைகளைக் கழுவும்  சவர்க்காரம் வகையொன்றின் விலை  115 ரூபாய் தொடக்கம் 150  ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.  குழந்தைகளுக்கான  சவர்க்காரம்  175 ரூபாயாகவும் வாசனை  சவர்க்காரம் 145 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்துடன் இந்த விலை அதிகரிப்புடன் சலவைத் தூள்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஷெம்போ மற்றும் பற்தூரிகை (Toothbrush) என்பவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/A1ic9h0 via Kalasam

கடன் மீள்கட்டமைப்பு ஒத்துழைப்புகளை இலங்கை வரவேற்கிறது!

Image
ஜப்பானில் நடைபெற்ற 4ஆவது ஆசிய-பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டு உரையாற்றினார். 48 நாடுகளின் பங்குப்பற்றலுடன் இடம்பெற்ற இந்த மாநாட்டில், ஜனாதிபதி காணொளி தொழில்நுட்பம் வழியாக கலந்துகொண்டார். அவர் அதில் உரையாற்றுகையில், நெருக்கடியான காலகட்டத்தில் பொருளாதார மீட்சிக்கான முதலீடுகள், தொழில்நுட்ப பரிமாற்றம், நிதியுதவி, பரந்த அபிவிருத்தி மற்றும் கடன் மீள்கட்டமைப்பு ஒத்துழைப்புகளை இலங்கை வரவேற்பதாக கூறினார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/JL5nFWU via Kalasam

ரம்புக்கனையில் பவுசர் தீப்பிடிக்கும் பகுதியில் நின்றிருந்த சந்தேகநபர் CID யினரால் கைது

Image
கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, எரிபொருள் பவுசருக்கு தீ வைத்த சந்தேகநபரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ரம்புக்கனை, பின்னவல வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின்போது, பச்சை நிற ரீசேர்ட்டும், இராணுவ ஆடைக்கு ஒப்பான காற்சட்டையும் அணிந்திருந்த குறித்த சந்தேகநபர் புகையிரத பாதை குறுக்காக நிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் பவுசரின் முன்னால் தீப்பிடிக்கும் பகுதியில் இருந்த ஏதோ பொருள் ஒன்றை எடுத்து வீசி விட்டு அங்கிருந்து செல்லுகின்ற வீடியோ காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கின்றது. அதற்கமைய குறித்த சந்தேகநபர் இன்றையதினம் (23) கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். குறித்த சம்பவத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் பலர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை CIDயினர் மேற்கொண்டுள்ளனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LA...

மஹிந்த விலகாவிடின் சஜித்துக்கே ஆதரவு.

Image
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிவிலகி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, 40 பேரடங்கிய சுயாதீன குழு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சுயாதீன குழு, ஐக்கிய மக்கள் சக்தியுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது என்றும் அறியமுடிகின்றது. நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியடையுமாயின், இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவது தொடர்பிலான திட்டங்கள் குறித்தும் அந்தக் குழு கலந்துரையாடியுள்ளது என்றும் அறியமுடிகின்றது. இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை 20க்கு கீழ் மட்டுப்படுத்திக்கொள்வது குறித்தும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என அறிய முடிகின்றது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/DMX6E0p via Kalasam