Posts

Showing posts from May, 2022

கடந்த 20 மாதங்களில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

Image
கடந்த 20 மாதங்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்கள் நாட்டில் அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும்,  2019ஆம் ஆண்டில் 600 கோடி ரூபாய்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நாட்டின் தேசிய பொருளாதார நெருக்கடிக்கு இதுவே பிரதான காரணம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு டிரில்லியன் ரூபாய்கள் அச்சடிக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது இலங்கையை படுகுழியில் தள்ளப்போகின்றது எனவும், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஆட்சியாளர்களே காரணமாகும். அதில் பிரதான பங்கு ரணில் விக்கிரமசிங்கவையும், நிகழ்கால நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவையும் சாரும் எனவும் தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளில் ஐந்து நிதி அமைச்சர்களை மாற்றியுள்ள போதிலும் பொருளாதார பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதை கண்டறியவில்லை. அமைச்சரவை இருக்கின்றதா இல்லையா என தெரியவில்லை. இவ்வாறு தலைகளை மாற்றி தீர்வு காண முடியாது எனக்கூறிய அவர், ஒட்டுமொத்தமாக அரச பொறிமுறை மாற்றப்பட்டால் மட்டுமே இதற்கான தீர்வை காண முடியும் எனவும் கூறினார். 1950 களில் ஒரு

இந்த ஆண்டு இலங்கையில் இருந்து ஹஜ் யாத்திரைக்கு யாத்ரீகர்கள் செல்வதில்லை என தீர்மானிக்கப் பட்டது.

Image
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு யாத்ரீகர்களை அனுப்புவதில்லை  என இலங்கை தீர்மானித்துள்ளது.  நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அந்நிய கையிருப்பு பற்றாக்குறையால் எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களுக்கான நீண்ட வரிசையில் காத்து நிற்கும் அதே வேளையில் மின்வெட்டு மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவை மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளன. பொருளாதார நெருக்கடி இலங்கையிலும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/NTCp8Js via Kalasam

துமிந்தவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

Image
துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பை வழங்கியிருந்தார். ஹிருணிகா மற்றும் அவரது தாயாரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தோடு துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் இன்று (31) உத்தரவு பிறப்பித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/5ZOvB4J via Kalasam

சஷி வீரவங்ச பிணையில் விடுதலை

Image
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்ச கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  சட்டவிரோத இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சசி வீரவன்சவுக்கு அண்மையில் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/QrIKulR via Kalasam

நாளை முதல் ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு

Image
முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான ரயில் கட்டணம் நாளை  முதல் வெவ்வேறு பிரிவுகளுக்கு 30 சதவீதம் முதல் 65 சதவீதம் வரையிலும் அதிகரிக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/grdGUPb via Kalasam

40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் நாட்டிற்கு

Image
  40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலொன்று நேற்று கொழும்பை வந்தடைந்துள்ளது. இதன்படி ,கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/hgLv5oI via Kalasam

ஒரு வாரம் கடந்தும் மண்ணெண்ணெய் இல்லை

Image
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மண்ணெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் கிடைக்கப் பெறவில்லை.  இதனால் பகலிலும் இரவிலும் காத்திருந்து ஏமாற்றத்துடன் வெறுங்கையுடன் செல்வதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இராணுவத்தினர், பொலிஸார் என பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் இன்மை காரணமாக பல்வேறுபட்ட சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவதாக சாரதிகள் துறை சார் இயந்திர தொழிலாளர்கள், குடும்ப பெண்கள் என பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். திருகோணமலை நகர், கிண்ணியா, கந்தளாய், முள்ளிப்பொத்தானை உள்ளிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று (31) சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல கேன்கள் மண்ணெண்ணெய்க்காக வரிசையில் அடுக்கப்பட்டுள்ளது.  உப்பு செய்கை உற்பத்தியாளர்கள், ஆழ் கடல் இயந்திர மீனவர்கள் தொழிலின்றி இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.   from

சிறுமி ஆயிஷாவின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

Image
பண்டாரகம – அட்டலுகமவில் கொலை செய்யப்பட்ட சிறுமி  பாத்திமா ஆயிஷாவின் ஜனாஸா இன்று(30) நல்லடக்கம் செய்யப்பட்டது. அட்டலுகம பெரிய பள்ளிவாசல் பொது மையவாடியில் சிறுமியின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. இதன்போது அதிகளவிலானவர்கள் அங்கு கூடியிருந்தனர். இதனிடையே, சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 29 வயதான ஒருவராவார். சந்தேகநபர் சிறுமியின் வீட்டுக்கு அருகில் வசிப்பவரென பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் இன்று(30) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவரை 2 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். அதற்கமைய, சந்தேகநபர் தற்போது பாணந்துறை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/hc2CJai via Kalasam

சமூக ஊடக செயற்பாட்டாளரான ரெட்டா கைது

Image
சமூக ஊடக செயற்பாட்டாளரான ரெட்டா எனப்படும் ரத்திந்து சேனாரத்னவை பொலிஸார் கைது செய்துள்ளனர். கோட்டை நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கும் நீதித்துறைக்கும் இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/ao81XCV via Kalasam

சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பில் 29 வயது நபர் ஒருவர் கைது ; காவல்துறை தெரிவிப்பு.

Image
பண்டாரகம - அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் 29 வயது  சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். அத்துடன்  உயிரிழந்த  9 வயது சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன்  இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. சந்தேக நபர் சிறுமியை  கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.  மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளனர். மேலும் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு பிரிவுகளில்  விசாரணைகள் இடம் பெற்றுவருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹல் தல்துவ தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை சுமார் 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த சிறுமி கடந்த 27  ஆம் திகதி காணாமல் போயிரு

அரச ஊழியர்கள் 5 நாட்களும் சமுகமளிப்பது அவசிமற்றது என வெகுவிரைவில் அறிவிக்கப்படும் : அமைச்சர் மஹிந்த அமரவீர

Image
(இராஜதுரை ஹஷான்) சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே உணவு பற்றாக்குறை சவாலை சிறந்த முறையில் வெற்றி கொள்ள முடியும். அரச ஊழியர்கள் 5 நாட்களும் சமுகமளிப்பது அவசிமற்றது என வெகுவிரைவில் அறிவிக்கப்படும் ஆகவே அனைவரும் காலத்தை பயனுடையதாக்கும் வகையில் வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபட வேண்டும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், உலக உணவு பற்றாக்குறை தொடர்பில் பல்வேறு தரப்பினர் எதிர்வு கூறியுள்ளார்கள். இச்சவாலை வெற்றி கொள்ள அரசாங்கம் சிறந்த திட்டங்களை வகுத்துள்ளதுடன், அவற்றை விரைவாக செயற்படுத்த தீர்மானித்துள்ளது. பல்வேறு காரணிகளினால் தேசிய விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. அரச காரியாலயங்களை சூழவுள்ள காணிகளில் மேலதிக பயிர்ச் செய்கையில் ஈடுபடுமாறு சகல அரச ஊழியர்களிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள விசாலமான அரச மற்றும் தனியார் காணிகளில் தற்காலிகமாக மேலதிக பயிர்ச் செய்கை

அக்கரைப்பற்றில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : கல்முனையில் மற்றொரு சிறுமி மாயம் : தீவிர விசாரணைகளில் பொலிஸார்

Image
பாறுக் ஷிஹான் காணாமற்போன சிறுமியைக் கண்டுபிடிப்பதற்காக கல்முனை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை (29) மதியம் 2.30 மணியிலிருந்து குறித்த சிறுமி மாயமாகியுள்ளதாக குறித்த பாடசாலையின் நிர்வாகத்தினர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் மாலை முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்த குறித்த சிறுமி பலரால் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு பின்னர் வழக்கு விசாரணையின் பின்னர் குறித்த பாடசாலையில் பாதுகாப்பிற்காக நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தங்க வைக்கப்பட்டிருந்தார். மேலும், இச்சம்பவத்தில் காணாமற்போன சிறுமி நிந்தவூர்-2, இமாம் கஸ்ஸாலி வீதியைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க வதுர்தீன் பாத்திமா சஜானா என்பவராவார். குறித்த சிறுமி தங்க வைக்கப்பட்டிருந்த பாடசாலையில் சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை (29) பகல் உணவினை உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாகத்தில் நின்றதாகவும் பின்னர் திடீரென அவர் அங்கிருந்து காணாம

ஆயிஷா மரணம் தொடர்பில் கைதான நபரின் கட்டிலுக்கு அடியில் சேறு படிந்த சாரம் மீட்பு!

Image
  பண்டாரகம - அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி ஆயிஷா  மரணம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேக நபர்களில் ஒருவர் கீரை தோட்ட தொழிலாளர் என்பது தெரிய வந்துள்ளது. அவரது வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் இருந்து சேறு படிந்திருந்த நிலையில் சாரம் ஒன்றை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். கீரை தோட்டத்தை அண்டிய காணியொன்றில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்தே, உயிரிழந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் காவல்துறையினர் தெரிவித்தனர். சிறுமியின் பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.இதேவேளை மரணம் தொடர்பில் பல பிரிவுகளின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மற்றும் 5 காவல்துறை குழுக்கள் இணைந்து இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதற்கமைய, அப்பகுதியில் சி.சி.டி.வி கமராவின் காட்சிகள் மற்றும் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியிலுள்ள தொலைபேசி சமிக்ஞை கோபுரங்களிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்

அட்டுலுகம சிறுமியின் மரண பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது

Image
கொலை செய்யப்பட்ட பண்டாரகம – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆய்ஷாவின் மரண பரிசோதனைகள் பண்டாரகம ஆதார வைத்தியசாலையில் இன்று இடம்பெறவுள்ளது. அத்துடன் சிறுமியின் கொலை தொடர்பில் பல தரப்பினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் 5பொலிஸ் குழுக்கள் என்பன விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய குறித்த பகுதியில் உள்ள சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் பரிசோதிக்கப்படுவதோடு போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் தொலைபேசி அலைவரிசைகளும் பரிசோதிக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.   கடந்த 27ஆம் திகதி காணாமல் போயிருந்த சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம், மறுநாள் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வைத்து சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் தற்போது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/hKMzlFg via Kalasam

முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை அதிகரிப்பு?

Image
எதிர்காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் அஜித் எஸ்.குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.  இறக்குமதியாளர்களுக்கு அடுத்த மாதத்திற்குத் தேவையான மூலப்பொருளை இறக்குமதி செய்ய வங்கிகள் மூலம் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் கிடைத்தால், அடுத்த ஆறு மாதங்களுக்கு தொழிலை தொடர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.  இன்று கோழி உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ளதுடன் பண்ணைகள் மூடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/EA5mFpf via Kalasam

அட்டுளுகம ஆயிஷா அட்டாளைச்சேனையில் ஒரு ஆயிஷா...

Image
அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத்தில் உள்ள 11 வயது சிறுமி ஆயிஷா (சட்டரீதியான காரணம் கருதி பெயர் மாற்றி எழுதப்பட்டுள்ளது.) 2022.05.23 இரவு ஆயிஷா தனது குடும்பத்துடன் அட்டாளைச்சேனை கடற்கரைக்கு செல்கிறாள். ஆயிஷாவின் மூத்த சகோதரி இடைநடுவே வீடு செல்ல நேரிட்டதால் ஏனைய உறவினர்கள் கடற்கரையில் வீற்றிருக்க விளையாடிக் கொண்டிருந்த ஆயிஷா அழைக்கப்பட்டு தனது சகோதரிக்கு பாதுகாப்பாக அவளுடன் வீட்டுக்கு அனுப்பப்படுகிறாள். தனது சகோதரியை வீட்டில் விட்டுவிட்டு இன்னும் பருவம் எய்தாத அந்த 11 வயது சிறுமி தனிமையாக மீண்டும் கடற்கரைக்கு செல்கிறாள். அப்போது இரவு 10.30 மணி இருக்கும். கடற்கரைக்கு சென்று கொண்டிருந்த ஆயிஷா வழியில் இரண்டு காவலிகளால் இடைமறிக்கப்பட்டு வாயை கையினால் பொத்தி அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு தூக்கிச் செல்லப் படுகிறாள். அங்கு ஒரு காவலி வெளியில் காவல் இருக்க மற்றய காவலி அந்து பிஞ்சு உடம்பை துவம்சம் செய்திருக்கிறான். இடையே அந்த காவலியின் தாய் உள்வரும் சப்தம் கேட்டு அந்த குழந்தையை மிரட்டி யாரிடமும் சொல்ல வேண்டாம், மீண்டும் கூப்பிட்டால் வர வேண்டும் என்று கூறி மதிளுக்கு மேலால் அவளை வெளியே தூக்கிப் போட

பிரதமர் ரணில் இன்று மாலை நிகழ்த்திய உரை இது தான்..

Image
இன்று, நம் நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல. அரசியல் வட்டாரத்திலும் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. 19வது திருத்தச் சட்டத்தை மீள அறிமுகப்படுத்துவது இந்த விடயங்களில் ஒன்றாகும். இது தொடர்பில் கட்சித் தலைவர்கள் என்ற வகையில் தற்போது 21ஆவது திருத்தச் சட்டத்தை தயாரித்து வருகின்றோம். இரண்டாவது விடயம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான முயற்சியாகும். அதற்கான நேரம் மற்றும் வழிமுறைகள் கட்சித் தலைவர்களால் தீர்மானிக்கப்பட வேண்டும். 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் பலவீனப்படுத்தப்பட்டதன் காரணமாக நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. நிறைவேற்றதிகாரத்துக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடியை தடுக்கும் வகையில் பாராளுமன்றம் செயற்படவில்லை என்பதே இன்றைய பிரதான குற்றச்சாட்டு. பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் பாராளுமன்ற பணிகளை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சரவை அமைச்சர்களால் அனைத்தும் திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த காலத்தில் என்ன

கடவுச்சீட்டினை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Image
நாளாந்தம் கடவு சீட்டினை பெற்றுக்கொள்வதற்கு 2 ஆயிரத்து 500 பேர் வரை முன்பதிவு செய்வதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இதுவரையான காலங்களில் வழங்கப்பட்ட கடவுசீட்டுக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் தற்பொழுதே அதிகமான கடவுசீட்டுக்கள் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/RWjp1D6 via Kalasam

பாதுகாப்பு தாருங்கள் : இந்திய பிரதமரிடம் முன்னாள் அமைச்சர் கோரிக்கை!

Image
தம்மையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் இந்தியாவிற்கு பாதுகாப்புக்காக அழைத்துச் சென்று பாதுகாப்பு வழங்குமாறு முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும், அவ்வாறு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் தாம் திருப்தியடையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தான் அரசியலில் இருந்து ஒரு ரூபா கூட சம்பாதிக்கவில்லை என்றும், தான் உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் வன்முறைக் கும்பலால் முற்றாக எரிக்கப்பட்டதால் இன்று இந்த நாட்டில் வீடற்ற மனிதனாக தான் மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/E4FVCLb via Kalasam

அட்டுலுகம சிறுமி கொலைச் சம்பவம் தொடர்பில் விரைவில் நீதி கிடைக்கும் – ஜனாதிபதி

Image
பண்டாரகம – அட்டுலுகமவில் சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம் கொல்லப்பட்ட சம்பவத்தில் விரைவில் நீதி கிடைக்கும் என தாம் உறுதியளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார். ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார். இதேவேளை, சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம் கொல்லப்பட்டமை இதுவரையில் மர்மமாக உள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்கள் எவையும் இதுவரையில் கிடைக்கவில்லை. எனினும் இன்று இடம்பெறுகின்ற மரண பரிசோதனையின் பின்னர் பல தகவல்கள் வெளியாகும் என விசாரணைகளை மேற்கொள்ளும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். சிறுமியின் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக தற்போது 3 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த பகுதியில் உள்ள பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. பண்டாரகம – அட்டுலுகமவை சேர்ந்த சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். 9 வயதான குறித்த ச

மின்சார கட்டண அதிகரிப்பிற்கு யோசனை

Image
அதிகூடிய மின் பாவனையைக் கொண்ட பாவனையாளர்களுக்கான மின்சார கட்டணங்களை திருத்துவதற்கான யோசனையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.  இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், மின்சார பாவனை தொடர்பில் அனைத்து தரப்பினரும் அக்கறையுடன் செயற்பட வேண்டுமெனவும், நிறுவன மற்றும் தனிஆள் மின்சார பாவனையை குறைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.  வருகிறது மின்சார கட்டணத்தில் அதிகரிப்பு யோசனை! சூரிய சக்தி பொறிமுறைக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்!  நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடியின் தீவிரத்தை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. கடந்த 09 வருடங்களாக நிலவும் மின்சார கட்டண விகிதங்களை திருத்துமாறு இலங்கை மின்சார சபை பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளது.  இந்தநிலையில் சில நிறுவனங்கள் வழமையான கட்டணத்தை விட குறைவாக செலுத்தும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த வசதியும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினார்.  மின்சார உற்பத்தியால் நட்டம் ஏற்படுவதாகக் கூறிய அவர், மருத்து

தேயிலை உற்பத்தி வீழ்ச்சி – 73 மில்லியன் டொலர் வருமானம் இழப்பு!

Image
2022 முதல் காலாண்டில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதால் 73 மில்லியன் டொலர் வருமானம் இழக்கப்பட்டுள்ளது என தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்களின் சங்கத்தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார். இரசாயன உரத்துக்கு விதிக்கப்பட்ட தடையின் விளைவாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கவலை வெளியிட்டார். இதேவேளை 50 கிலோ கொண்ட பசளை மூடையின் விலை 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இரசாயனப் பசளை யின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளதால் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் இரசாயன பசளை பாவிப்பதை கைவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் கொழுந்து உற்பத்தி குறைந்துள்ளது. தேயிலைக் கொழுந்தின் தரமும் குறைந்துள்ளதாகவும் தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.   நாளுக்கு நாள் தேயிலை உற்பத்தி குறைந்து உலக சந்தையில் எமக்குள்ள இடத்தை ஏனைய நாடுகள் கைப்பற்றும் சூழ்நிலை உருவாகும் எனவும் லயனல் ஹேரத் அச்சம் வெளியிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/yRxpzDO via Kalasam

பாத்திமா ஆயிஷாவை தேடும் பணியில் 4 பொலிஸ் குழுக்கள்!

Image
  காணாமல் போயுள்ள 9 வயது பாத்திமா ஆயிஷாவை தற்போது நான்கு பொலிஸ் குழுக்கள் தேடி வருகின்றன.இதற்கமைய சிறுமியின் தந்தையிடம் விசாரணைக் குழு நீண்ட நேரம் விசாரித்து வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி நேற்று (27) காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றுக்கு கோழி இறைச்சி வாங்குவதற்காக சென்றுள்ளார்.  ஆனால் அவள் வீடு திரும்பவில்லை. கடைக்கு அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் அவர் கடைக்கு வருவதும் மீண்டும் வெளியே செல்வதும் பதிவாகியுள்ளது.  சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸாருக்கு மேலதிகமாக பானந்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் புலனாய்வு அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இதேவேளை, பானந்துறையில் வசிக்கும் சிறுமியின் நெருங்கிய உறவினர் ஒருவர் தொடர்பிலும் விசாரணைக் குழு கவனம் செலுத்தியுள்ளது. புறக்கோட்டை பிரதான பேருந்து நிலையத்தில் பெண் ஒருவருடன் சிறுமி இருப்பதாக முகநூல் பக்கம் ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.  இதன்படி, கொழும்பு பொலிஸ

கல்முனை கல்வி வலயத்தில் O/L பரீட்சையில் ஆள் மாறாட்டம் : கைதான இருவருக்கும் பிணை

Image
பாறுக் ஷிஹான் பரீட்சையில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று பிணை வழங்கியுள்ளது. நாடு பூராகவும் கல்விப் பொதுத் சாதாரண தரப் பரீட்சை கடந்த திங்கட்கிழமை (23) ஆரம்பித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டம், கல்முனை வலயக் கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலையொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. இதற்கமைய குறிப்பிட்ட பரீட்சைக்கு 21 வயது மதிக்கத்தக்கவர் தனிப்பட்ட போலிப் பரீட்சார்த்தியாக தோற்றுவதற்கு அம்பாறை புறநகர்ப் பகுதியிலிருந்து வருகை தந்துள்ளதுடன், சம்பவ தினமன்று இடம்பெற்ற சிங்கள மொழி மூலம் சமய பாடப் பரீட்சையை 32 வயதுடைய தனிப்பட்ட பரீட்சார்த்தியின் அனுமதி அட்டையை பாவித்து அவருக்குப் பதிலாக ஆள் மாறாட்டம் செய்து எழுதியுள்ளதுடன், தனது அடையாள அட்டையின் புகைப்படத்தை மாற்றியுள்ளமை விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது. இந்த ஆள் மாறாட்டமானது கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில் இடம்பெற்றுள்ளதுடன், இதில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டு பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்

டிரில்லியன் கணக்கான ரூபா அச்சடிப்பது பணம் படைத்தோருக்கு சலுகை வழங்குவதற்கா?

Image
நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண டிரில்லியன் கணக்கான ரூபா நோட்டுக்கள் அச்சடிக்க வேண்டும் என அரசாங்கம் தெரிவிப்பதாகவும், இவ்வாறு நோட்டு அச்சடிப்பது பணம் படைத்த தனவந்தர்களுக்கு வரி சலுகை வழங்குவதற்கா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் ஒன்றினைந்த முன்னணியின் பிரதிநிதிகள் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸவை இன்று (27) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்ததோடு, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினர்.   மக்கள் வங்கிக்கும், இலங்கை வங்கிக்கும் பணம் செலுத்த வேண்டிய பணம் படைத்த தனவந்தர்கள் பலர் நாட்டில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவர்களின் கடனைத் தள்ளுபடி செய்ய அரசாங்கம் பணத்தை அச்சிடப் போகின்றதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு பணம் அச்சிடப்படும் போது வாழ்க்கைச் செலவு 40% உயரும் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி, ஆதரவற்ற மக்களே எனவும் அவர் கூறினார்.   வரிசையில் நிற்கும் மக்களை அத

கோட்டாகோகமவில் நாளை பேரணி! கறுப்பு ஆடை அணிந்து வருமாறு அழைப்பு!

Image
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் “கோட்டா கோகம” போராட்டத்துக்கு 50 நாட்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாளை 28 ஆம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்தும் நாளைய தினம் காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக இளைஞர்கள் வரவுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். நாளை பிற்பகல் 2 மணிக்கு கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து, ஜனாதிபதி செயலகம் வரை கறுப்பு உடை அணிந்து எதிர்ப்புப் பேரணியொன்றயும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் போராட்டக் களத்தில் பல்வேறு எதிர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கும் மேலதிகமாக அன்றைய தினம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு நாடு முழுவதும் உள்ள பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/DhHpI9l via Kalasam

சிறைத் தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்தார் சஷி வீரவன்ச : மே 30 இல் பிணை தொடர்பில் பரிசீலனை, அதுவரை சிறையில்

கடவுச்சீட்டு முறைகேடு தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனையை எதிர்த்து சஷி வீரவன்ச மேன்முறையீடு செய்துள்ளார். அதற்கமைய, அவரை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை எதிர்வரும் மே 30ஆம் திகதி பரிசீலிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் திகதி குறிப்பிட்டுள்ளது. குறித்த பிணை மனு இன்று (27) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷண கெகுனவலவின் உத்தியோகபூர்வ அறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார். போலித் தகவல்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சஷி வீரவன்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (27) இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் ரூ. 100,000 அபராதத்தையும் விதித்திருந்தது. குறித்த அபராதத்தை செலுத்தாவிடின் மேலும் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சசி வீரவன்சவுக்கு கடவுச்சீட்டை பெற்றுக்கொடுக்க உதவிய அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தீர்ப்பின் பிரதியொன்றை பொது நிர்வாக அமைச்சின் செயலா

பஸ் கட்டண அதிகரிப்பு:ரயில் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

Image
மேலதிக ரயில்கள் மற்றும் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பஸ் கட்டண அதிகரிப்பினால் ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதை கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். அத்தியாவசிய ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்வதற்கும் பொது நிர்வாக சேவை ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். எரிபொருள் விலை அதிகரிப்பினால் ரயில்வே திணைக்களத்திற்கு நாளாந்தம் சுமார் 15 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Toeq3fw via Kalasam

பாராளுமன்ற உறுப்பினர் விமலின் மனைவி சசிக்கு 2வருட கடூழிய சிறைத்தண்டனை.

Image
  தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் தலைமை நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. #குற்றச்சாட்டு! போலி ஆவணங்களை தயாரித்து தவறான தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தலைவர் Rishad Bathiudeen அவர்களை பாடாப்படுத்தியதற்கு அல்லாஹ் நன்றாகவே தீர்ப்பளிக்கின்றான். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/wx8vPKl via Kalasam

குமார வெல்கம மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

Image
  கடந்த 9ஆம் திகதி பாராளுமன்ற  உறுப்பினர் குமார வெல்கம மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ,கொட்டாவ பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற  உறுப்பினர் குமார வெல்கம கொட்டாவ பகுதியில் வைத்து கடந்த 9ஆம் திகதி தாக்கப்பட்டார். மேலும் அவர் பயணித்த வாகனம் சேதமாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/7wSkQbP via Kalasam

உணவுப் பஞ்சம் வருகிறது : அரிசி கையிருப்பு குறைகிறது

Image
அடுத்த இரண்டு மாதங்களில் நாட்டின் அரிசி கையிருப்பு முழுமையாக குறையும் என அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். சிங்கள நாளித் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரிசி இருப்பு ஏற்கனவே வேகமாக குறைந்து வருவதாக அவர் கூறுகிறார்.   குறிப்பாக நாட்டிற்கு வருடாந்தம் 3.7 மில்லியன் மெட்ரிக் தொன் நெல் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளதுஇ ஆனால் பெரும் போகத்தில் 1.5 மில்லியன் மெட்ரிக் தொன் நெல் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுஇ உர நெருக்கடியின் போது சிறுபோகத்தில் நெல் உற்பத்தி செய்வது கனவாகவே உள்ளது எனவும் கருணாரத்ன தெரிவித்தார். அதன்படிஇ ஆண்டு முழுவதும் 3.7 மில்லியன் மெட்ரிக் தொன் நெல் அறுவடைக்கு பதிலாக குறைந்தது 2 மில்லியன் மெட்ரிக் தொன் நெல் முடிக்கப்படவில்லை என்பது பாரிய பிரச்சினையாகும். அரிசியை இறக்குமதி செய்தால் தற்போதைய டொலரை விட நான்கு மடங்கு அதிக விலை கிடைக்கும் எனவும்இ நாட்டில் டொலர் பற்றாக்குறை உணவு நுகர்வை முற்றாக பாதிக்கும் போது நாட்டின் மோசமான நெருக்கடி ஆரம்பிக்கும் எனவும் அவர் கூறுகிறார். உரம் வழங்குவத

ஹஜ் கடமையை நிறைவேற்ற இம்முறை 1,585 இலங்கையர்களுக்கு வாய்ப்பு

Image
புனித ஹஜ் பயண ஏற்பாடுகள் அமைப்பினருக்கும் சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட்டிற்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இந்தமுறை ஹஜ் பயண ஏற்பாடுகளைச் செய்வது குறித்தும், அதில் ஏற்பட்டுள்ள தடைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக புனித ஹஜ் யாத்திரைக்கு இலங்கையிலிருந்து எவரும் செல்லவில்லை. இந்நிலையில், இந்தமுறை 1,585 பேருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி உள்ளிட்ட சில விடயங்களால், பயண கட்டணங்களை டொலரில் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அந்த அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். அரச அனுமதியுடன் குறித்த நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இந்த சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டதாக சுற்றாடல் அமைச்சரின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/A5JRviO via Kalasam

எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் – நந்தலால் வீரசிங்க

Image
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க வேண்டியேற்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் பலருக்கு வறுமை ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை வழமையான முறையில் தொடர முடியாமைக் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 6 மாதக் காலப்பகுதிக்குள் பணவீக்கத்தை எவராலும் 30 சதவீதத்திற்கு கீழ் கொண்டுவர முடியாது. அரசாங்கம் சலுகை வழங்காத விடத்து சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு முடியாது போகும். இதனால் பலர் தமது தொழில் வாய்ப்புக்களை இழக்க வேண்டியேற்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/zVQ4Hni via Kalasam

3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது.

Image
அதன்படி 7,500 மெட்ரிக் டன் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, 6.5 மில்லியன் டொலர் கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது. இன்று நாட்டை வந்தடையவுள்ள கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் வரையில், எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க இயலாது. இதற்கமைய ,இன்றைய தினமும் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு அந்த நிறுவனம் பொது மக்களைக் கோரியுள்ளது. கடந்த 2 நாட்களாக லிட்ரோ நிறுவனத்தினால் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையிலும், பொதுமக்கள் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்தாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். மேலும் , நாடு முழுவதிலும் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகத்தை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை எரிபொருள் தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/zxNp954 via Kalasam

IMF இடமிருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் அடுத்த மாத நடுப்பகுதியில் அமுலாகும் – பிரதமர் ரணில்

Image
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் அமுலாகும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர், இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இயலுமானவரை செலவினத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வருடத்திற்குள் 4 பில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற எதிர்ப்பார்க்கின்றோம்.   அதேநேரம், சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளினதும் உதவிகள் பெறப்படவுள்ளன. கிடைக்கப்பெறும் உதவிகளில், அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், நாட்டின் பணவீக்கமானது 40 சதவீதம் வரை அதிகரிக்கும். எவ்வாறாயினும், 2025ம் ஆண்டு வரை  ஒரு சதவீத ஆரம்ப மிகை நிலுவையை அடைவதை இலக்காக நிர்ணயித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/c50ZfXq via Kalasam

2 வழக்குகளில் ரிஷாத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடைகள் நீக்கம்

Image
இருவேறு வழக்குகளில் ரிஷாட் பதியுதீனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடைகள் நீக்கப்பட்டன இருவேறு வழக்குகளில் முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடைகள் நேற்றும் இன்றும் தளர்த்தப்பட்டுள்ளன. வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம் நேற்று ( 24) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைகள் விசாரணைக்கு வந்தது. இதன்போது அவ்விவகாரத்தில் சந்தேக நபர்களின் பெயர்களாக அடையாளப்படுத்தப்பட்டு பிணையில் உள்ள ரிஷாட் பதியுதீன், அவரது மனைவி உள்ளிட்ட அனைவரும் மன்றில் ஆஜராகியிருந்தனர். இதன்போது ரிஷாட் பதியுதீனுக்காக ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட், ரிஷாட் பதியுதீனுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை தளர்த்தக் கோரினார். தனது சேவை பெறுநர் சம்பவம் இடம்பெறும் போது, விளக்கமறியலில் இருந்ததாகவும், அவருக்கு எதிராக குற்றம் சுமத்த சாட்சியங்கள் இல்லாத நிலையில், தொடர்ச்சியாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாது விசாரணைகளை இழுத்துச் செல்வது நியாயமற்றது எனவும் சா

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சிறையில் வைக்கப் பட்டிருந்த வர்த்தகர் முஹமட் இப்ராஹிம் பிணையில் விடுதலை.

Image
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சிறைக்காவல் தடுத்து வைக்கப் பட்டிருந்த வர்த்தகர் முஹமட் இப்ராஹிமுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/TOwbha5 via Kalasam

போதிய பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பை உருவாக்கும் வரை இலங்கைக்கு புதிய நிதியுதவி இல்லை ; உலக வங்கி அறிவிப்பு

Image
போதிய பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பை உருவாக்கும் வரை இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்கத் திட்டமிடவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள World Bank, "இலங்கைக்கு கடன் அல்லது புதிய கடன் உறுதிப்பாடுகள் போன்ற தவறான கூற்றுக்கள் போன்ற வடிவங்களில் உலக வங்கி ஆதரவு வழங்க திட்டமிடுவதாக சமீபத்திய ஊடக அறிக்கைகள் தவறாகக் கூறியுள்ளது." உலக வங்கி இலங்கை மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளது மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பரந்த அடிப்படையிலான வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான பொருத்தமான கொள்கைகளுக்கு ஆலோசனை வழங்குவதில் IMF மற்றும் பிற அபிவிருத்தி பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. போதுமான பெரிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை என்று வங்கி மேலும் கூறியுள்ளது. “மேலும் நாங்கள் சில அத்தியாவசிய மருந்துகள், ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு தற்காலிக பணப் பரிமாற்றம், பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களின் குழந்தைகளுக்கு பாடசாலை உணவு மற்றும் விவசாயிகள் மற்றும் ச

கோதுமை ஏற்றுமதி தடையை மறுபரிசீலனை செய்யுங்கள் - இந்தியாவிடம் சர்வதேச நிதியம் கெஞ்சல்..!!

Image
  கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை மறுபரிசீலனை செய்யும்படி இந்தியாவை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்'' என, சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டினா ஜியார்ஜிவா தெரிவித்துள்ளார். கோதுமை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தாண்டு வட மாநிலங்களில் கடும் வெப்பம் காரணமாக கோதுமை உற்பத்தி 4.4 சதவீதம் குறைந்து. இதையடுத்து உள்நாட்டில் கோதுமை விலை உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில் கிறிஸ்டினா ஜியார்ஜிவா பேசியதாவது... இந்தியாவில் 135 கோடி மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்க வேண்டிய நிலையில் அந்நாடு உள்ளது. இருந்தும், உலக மக்கள் நலன் கருதி கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியாவை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/gVBDIyJ via Kalasam

ஆறு வாரங்களுக்குள் வரவு செலவுத் திட்டம் -ரணில்

Image
ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்பிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதி முன்னிலையில் நிதியமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் மேலும் வரும் மாதங்களில் வருடாந்த பணவீக்கம் 40 சதவீதத்தால்அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/bLqznwN via Kalasam

நிதியமைச்சராக பிரதமர் ரணில் பதவிப்பிரமாணம்

Image
புதிய நிதியமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் சற்றுமுன்னர் அவர் நிதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/jtLsiQ1 via Kalasam

நிதி அமைச்சராக பிரதமர் ரணில் நாளை பதவியேற்பு! ?

Image
  நிதி அமைச்சு பதவியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளதென அறியமுடிகின்றது. இதன்படி புதிய நிதி அமைச்சராக, ரணில் விக்கிரமசிங்க நாளை பதவியேற்பார் என தெரியவருகின்றது.   நிதி அமைச்சு பதவியை ஏற்பதற்கு, அலிசப்ரியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையிலேயே, நிதி அமைச்சு பதவி பிரதமர் வசமாகவுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Fkis04M via Kalasam

புத்தளத்தில் கடும் மழை : ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

Image
இன்று பெய்த கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் 5,791 குடும்பங்களைச் சேர்ந்த 20,122 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்று வரும் சாதாரண தரப் பரீட்சை நிலையங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 600 மாணவர்கள் பரீட்சை எழுதுவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.   இதேவேளை, புத்தளம் நகர சபைக்கு உட்பட்ட புத்தளம் – மன்னார் வீதி, கடையார்குளம், நூர் நகர் உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகளும், புத்தளம் பிரதேச சபைக்கு உட்பட்ட ரத்மல்யாய, அல்காசிமி சிட்டி மற்றும் பாலாவி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் வெள்ளநீர் புகுந்தமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/EjwcK5f via Kalasam

ட்ரில்லியன் ரூபா வரை கடனைப் பெறுவது தொடர்பான பரிந்துரையை பாராளுமன்றில் முன்வைக்க இணக்கம்

Image
நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய இக்கட்டான சூழ்நிலையின் உண்மை யதார்த்தத்தை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுவதுடன், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் கொள்ளை ரீதியான தீர்மானங்களுக்கு குறுகிய அரசியல் லாபம் இன்றி கட்சி பேதங்களை மறந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இன்று (24) அரசாங்க நிதி பற்றிய குழுவில் கோரிக்கை விடுத்தார். இதற்கு முன்னர் எரிபொருளுக்கு விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டபோது இதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட எதிர்ப்புக்களைத் தொடர்ந்து அதனை செயற்படுத்த முடியாமல் போன நிலையில் இதனை இன்று அறிமுகப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.   நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து விளக்கமளித்த மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிடுகையில், உலக வங்கியின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் கொள்கைத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 600 மில்லியன் அமெரிக்க டொலரை எதிர்காலத்தில் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள