Posts

Showing posts from April, 2023

குறைக்கப்பட்டது எரிபொருட்களின் விலை!

Image
எரிபொருட்களின் விலையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 07 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 340 ரூபாயாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 333 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது. அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 375 ரூபாயாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 365 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது. அதேபோல், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 325 ரூபாயாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 310 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது. மேலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 135 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 465 ரூபாயாக...

பதினேழு தடவை சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்திய இலங்கை. மீண்டும் இந்த நிலமை ஏற்படாமலிருக்க அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்; விளக்குகிறார் ரிஷாத் பதியுதீன்.

Image
  -முஹம்மட் தம்பி முஹம்மட் றிம்ஸான்- சர்வதேச நாணய நிதியத்தின்  நிபந்தனைகளை அமுல்படுத்துவது தொடர்பான சட்டமூலம்  பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட போது அது தொடர்பாக கடந்த 26,27 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது இந்த நாட்டினுடைய பொருளாதார முன்னேற்றம் குறித்தும்  சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை  அமுல்படுத்துவது குறித்தும் பல்வேறு விடயங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன் வைத்திருந்தார். அந்த வகையில் நாட்டினுடைய பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கும் மக்களினுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் வழங்கப்படுகின்ற இந்த கடன் தொகையை வைத்துக்கொண்டு அவற்றை நிவர்த்தி செய்ய முடியாது. எனவே இந்த நாடு அன்னிய செலவாணியை பெருக்கிக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். என்ற விடயத்தை வலியுறுத்திக் கூறி இருந்தார்.  இந்த நாட்டில் அன்னிய செலவாணியை பெற்றுக் கொள்வதற்கான முக்கிய துறைகளாக சுற்றுலாத்துறை மற்றும் விவசாய ஏற்றுமதி துறை இறக்குமதிக்கு பகரமான உற்பத்தி துறை ஆகியவற்றை விரிவு ப...

சுமார் 2,000 அரசு ஊழியர்கள் ஐந்தாண்டு ஊதியம் இல்லாத விடுப்பில் வெளிநாடு சென்றுள்ளனர்

Image
  ஏறக்குறைய 2,000 அரச ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வதற்காக ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்கப்பட்ட விடுமுறையைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், அரசின் செலவினங்களைக் குறைக்கவும் இந்தத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அரச அதிகாரிகள் இந்த ஊதியமில்லாத விடுப்பை வெளிநாட்டில் பணிபுரியவோ, தொழில் பயிற்சி பெறவோ அல்லது அவர்களின் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தவோ பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இந்த சுற்றறிக்கை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, மொத்தம் 1988 ஊழியர்கள் ஏற்கனவே வெளிநாட்டு வேலைவாய்ப்பை தொடர அனுமதி பெற்றுள்ளதாக பொது நிர்வாக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. “இந்த விடுப்பு காலம் இன்னும் பணி மூப்பு மற்றும் ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான பணிக்காலமாக கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  எவ்வாறாயினும், இந்த சுற்றறிக்கையின் விதிகள் தங்கள் பதவியில் உறுதி செய்யப்படாத நிர்வாக தர அதிகாரிகளுக்கு பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், ”என்று அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ...

🔴எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

Image
அதிக மழையுடனான வானிலையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் காணப்படுவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2500 பேர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. காலி, மாத்தறை மாவட்டங்களில் மாத்திரம் 19 பேர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 229 பேர் எலிக்காய்ச்சலுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/vBcPpH6 via Kalasam

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்!

Image
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்றது என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி சுகுணன் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் தற்போது வரையில் 65 நோயாளிகள் இனம் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், அதில் செங்கலடியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் மரணம் அடைந்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பில் சனிக்கிழமை (29.04.2023) முன்னெடுக்கப்பட்ட டெங்கு பரிசோதனை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், விசேட அதிரடி டெங்கு பரிசோதனை டெங்கு நோயின் தாக்கத்தில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மாவட்டத்தின் முதன்மையான இடத்தை பெறுகின்றது. இப்பிரிவில் 107 பேர் டெங்கு நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளனர். அதிலும் கொக்குவில் பிரதேசத்தில் ஒரே வீட்டில் நேற்று நான்கு நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். வெட்டுக்காடு, இருதயபுரம் ஆகிய கிராமங்களிலும் மட்டக்களப்பு நகர வைத்திய சுகாதார பிரிவில் 35 வீதமானவர்கள் இப்பிரதேசத்திலேயே இனம் காணப்பட்டுள்...

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

Image
கடந்த மார்ச் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்தும் வலுவடைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறையின் வருவாய்கள் என்பன கடந்த மார்ச் மாதத்தில், குறிப்பிடத்தக்க மேம்பாட்டினைப் பதிவு செய்திருந்தன. சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி மற்றும் மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட கொள்கைத் தளர்வினால் ஏற்பட்ட மேம்பாடுகளினால் கடந்த மார்ச் மாதத்தில், செலாவணி வீதம் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்ததுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/FyQWC0L via Kalasam

🔴குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான அரிசி விநியோகம்

Image
 *CEYLON NEWS 24 🇱🇰* நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்துடன் குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதற்காக சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (28) நடைபெற்ற குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான இலவச அரிசி வழங்கும் இரண்டாம் கட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 2022/2023 பெரும் போகத்தில் அரசாங்க அரிசி கொள்வனவு மற்றும் அரிசி கையிருப்பு அகற்றல் திட்டத்தின் இரண்டாம் கட்ட வேலைத்திட்டத்துடன் இணைந்து இது செயல்படுத்தப்பட்டதுடன், யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை மற்றும் வேலணை பிரதேசங்களை மையமாக வைத்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. = குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான அரிசி விநியோகம் சாகல ரத்நாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டதுடன் அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், ஜ...

🔴குருநாகலில் களஞ்சியசாலை ஒன்றில் 50,000 முட்டைகள் கண்டுபிடிப்பு

Image
குருநாகல் ஹெட்டிபொல – கிராதலாவ பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 50,000 முட்டைகளை நுகர்வோர் அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது. இன்று (29) முட்டை கொள்வனவு செய்யும் முகவர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக அதிகார சபையின் அவசரச் சோதனைப் பிரிவின் சிரேஷ்ட விசாரணை அதிகாரி தெரிவித்தார். கடையின் உரிமையாளரான பெண்ணுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர் எதிர்வரும் திங்கட்கிழமை ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/HJnw6zV via Kalasam

ரணில் வீடு எரிப்பு: ஸ்ரீ ரங்கா சந்தேகநபர்

Image
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சொந்தமான வீட்டுக்கு தீ வைத்த குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்காவை குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகநபராக பெயர் குறிப்பிட்டுள்ளனர். இதற்கமைய, ஜெ. ஸ்ரீரங்காவை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை, கடந்த 2011 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்கா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/sGlfX5r via Kalasam

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்ள சந்தர்ப்பம்!

Image
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தேவையான திருத்தங்களைச் செய்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  இன்று (28) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அதற்கிணங்க, யார் வேண்டுமானாலும் எழுத்துமூலமான கருத்துக்களை சமர்ப்பிக்கலாம் எனவும் விடயங்கள் குறித்து கலந்துரையாடலாம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/BVtRh0r via Kalasam

பாணந்துறை கடற்கரையில் ஏழு அடி முதலை

Image
பாணந்துறை கடற்கரைக்கு இன்று சுமார் ஏழு அடி நீளம் கொண்ட முதலை ஒன்று வந்துள்ளதாக பாணந்துறை உயிர் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடற்கரைக்கு அருகில் உள்ள கல் அருகே முதலை இருப்பதைக் கண்ட மீனவர் ஒருவர் கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். முதலை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக பணிகள் நாளை (29) இடம்பெறும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். முதலையை கடற்கரையில் இருந்து அகற்றும் வரை, கடலில் நீராடும்போது கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/ZQWaVXo via Kalasam

🔴வைத்தியசாலைக்குள் நடந்த கொடூர சம்பவம்

Image
  அனுராபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர், கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த இந்த இளைஞன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது. இன்று அதிகாலை இளைஞன் சிகிச்சை பெற்று வந்த விடுதிக்குள் வந்த ஒருவர் இளைஞனை கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/FaDM3P2 via Kalasam

🔴IMF யோசனை பாராளுமன்றில் நிறைவேற்றம்

Image
சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் கடனுதவி தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. குறித்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் செலுத்தப்பட்டன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/uAFo4hc via Kalasam

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு : தொழிலாளர்களுக்கு காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான வேலைத்திட்டம் குறித்தும் அவதானம்

Image
விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருவதுடன், பெருந்தோட்டப் பகுதி மக்கள் முகம்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்க வேண்டியது அவசியமென, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பெருந்தோட்ட மறுசீரமைப்பு குழுவுடன் (PRC) ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காணிப் பிரச்சினை உட்பட விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் இங்கு விரிவாக ஆராயப்பட்டதோடு, தற்போது தீர்வுகள் வழங்கப்பட்டு வருகின்ற மகாவலி காணிப் பிரச்சினை குறித்தும் ஆராயப்பட்டது. அதேபோல் பெருந்தோட்ட நிறுவனங்களில் செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது. எதிர்வரும் 10 - 15 வருடங்களுக்குள் பெருந்தோட்ட நிறுவனங்களில் குத்தகைக் காலம் நிறைவடைய உள்ளதால் விவசாயத்துறையை நவீன மயப்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்ல அரசாங்கம் முற்படுமாயின் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கான புதிய குத்தகை வசதிகளை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். எவ்வாறாயினும் ...

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் நீதி அமைச்சர்

Image
ஊழலுக்கு எதிரான ஊழல் ஒழிப்பு சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் எனும் வகையில் விஜயதாச ராஜபக்ஷவினால் குறித்த சட்டமூலம் பாராளுமன்றில் இன்றையதினம் (27) சமர்ப்பிக்கப்பட்டது. பாராளுமன்றம் வியாழக்கிழமை (27) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ், ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாக சபைக்கு அறிவித்தார். அதன் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு வாசித்தளித்தார். அதில் ஊழலுக்கெதிரான ஐக்கிய நாடுகள் சபை சமவாயத்தின் குறித்த சில ஏற்பாடுகளுக்கும் மற்றும் வேறு சர்வதேச ரீதியில் ஏற்று அங்கீகரிக்கப்பட நெறிகள், நியமங்கள் அத்துடன் மிகச்சிறந்த செயல்முறைகள் என்பவற்றுக்கும் பயன்கொடுப்பதற்கும் இலஞ்சம் ஊழல் பற்றிய சார்த்துதல்களை மற்றும் சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தலுடன் தொடர்புபட்ட தவறுகளை மற்றும் இணைந்த தவறுகளைக் கண்டுபிடித்து புலனாய்வுச் செய்வதற்கும் இலஞ்சம், ஊழல் பற்றிய தவறுகளுக்காகவும் சொத்துக்கள...

🔴IMF திட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் வாக்களிக்க, SJB இனது தீர்மானம் இன்று

Image
  சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) நாட்டிற்கு வழங்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்து நாடாளுமன்றத்தில் இன்று ஏப்ரல் 27 ஆம் திகதி இரண்டாவது நாளாக விவாதம் தொடர்கிறது. இந்த விவகாரத்தின் மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் 28 ஆம் திகதி மாலை நடைபெற உள்ளது. தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் அரசாங்கப் பிரிவை உடைத்துவிட்ட நிலையில், சுதந்திர மக்கள் கூட்டமைப்பு ஏற்கனவே திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB), இந்த விவகாரம் குறித்து இறுதி தீர்மானத்தினை எட்டுவதற்கு பிரதான பாராளுமன்ற எதிர்க்கட்சி இன்று கூடவுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/z0rGpIJ via Kalasam

🔴வட, கிழக்கில் இன்று ஹர்த்தால்

Image
  பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்னும் கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று 25 கதவடைப்பு போராட்டம் இடம்பெறுகின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று(25) மேற்கொள்ளப்படவுள்ள பொது முடக்கம் ஊடான எதிர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ் மக்களும், சிவில் சமூக அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தமது முழுமையான ஆதரவை வழங்க முன்வர வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ஹர்த்தால் பிரச்சாரம் காரணமாக அந்த பகுதிகளில் போக்குவரத்து தடைபடலாம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/zbew62M via Kalasam

"மக்கள் காங்கிரஸின் தம்பலகாமம் முக்கியஸ்தர் ஆபிலூன் என்சுலூன் அவர்களின் மறைவு வேதனை தருகிறது..!"

Image
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட முக்கியஸ்தரும் தம்பலகாமம் பிரதேச சபை, கல்மெட்டியாவ வடக்கு வட்டாரத் தலைவரும் வேட்பாளருமான ஆபிலூன் என்சுலூன் அவர்களின் மறைவு தனக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவர் தனது அனுதாபச் செய்தியில், "எமது கட்சியின் நீண்டகால உறுப்பினரும் கட்சியின் வளர்ச்சிக்காக மிகத் தீவிரமாக செயற்பட்டவருமான சகோதரர் ஆபிலூன் என்சுலூன் அவர்களின் இழப்பால் துயருறும் அந்தப் பிரதேச மக்களுடன் இணைந்து நானும் வேதனையடைகிறேன்.  சமூகப் பற்றும் சமூகத்தின் மீதான அக்கறையும்கொண்டு உழைத்தவரான அவர் இன, மத பேதங்களுக்கு அப்பால் தனது பணிகளை மேற்கொண்டார். சிங்கள சகோதரர்களை  பெரும்பான்மையாகக்கொண்ட கல்மெட்டியாவ வட்டார மக்கள் அனைவராலும் விரும்பப்பட்ட இவர், மக்கள் பணிக்காக தன்னை ஈடுபடுத்தியவராவார். அவரைப்போன்று, அவரது சகோதரரும் எமது கட்சியுடன் இணைந்து பணியாற்றி வருகின்றார். கல்மெட்டியாவ கிராம அபிவருத்திச் சங்கத்தின் (RDS) தலைவராக இருந்து, ஊரின் வளர்ச்சிக்காகவும் வட்டாரத...

ஹஜ் ஏற்பாடுகளுக்கு 105 முகவர்கள் நியமனம் : கட்டண விபரம் விரைவில் வெளியிடப்படும்

Image
2023 ஆம் ஆண்டின் ஹஜ் யாத்­திரை தொடர்­பான பயண ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் 105 ஹஜ் பயண முக­வர்­களை உத்­தி­யோ­பூர்­வ­மாக நிய­மித்­துள்­ளது. அனு­ம­திப்­பத்­திரம் பெற்­றுக்­ கொண்­டுள்ள ஹஜ் முக­வர்­களை மாத்­திரம் ஹஜ் யாத்­தி­ரிகர்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என திணைக்­களம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது. குறிப்­பிட்ட 105 ஹஜ் பயண முக­வர்­களைத் தவிர ஏனைய ஹஜ் முக­வர்­க­ளுக்கு கட­வுச்­சீட்­டையோ ஹஜ் கட்­டண முன் பணமோ வழங்­க­வேண்டாம் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள ஹஜ் முக­வர்­களைத் தவிர ஏனைய முக­வர்­க­ளுடன் மேற்­கொள்­ளப்­படும் பதி­வுகள், கட்­ட­ணங்­க­ளுக்கு திணைக்­களம் பொறுப்­புக்­கூற மாட்­டாது எனவும் அவர் தெரி­வித்தார். அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்ள 105 ஹஜ் பயண முக­வர்­களின் பெயர் விப­ரங்களை திணைக்­க­ளத்தின் இணை­யத்­தளம் மற்றும் பத்­தி­ரிகை விளம்­ப­ரங்கள் ஊடாக அறிந்து கொள்ள முடியும். இவ்­வ­ருடம் 3500 ஹஜ் கோட்டா ...

🔵இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சகோதர மக்களுக்கு அமைதி, நல்லிணக்கம் நிறைந்த மகிழ்ச்சியான நோன்புப் பெருநாளாக அமையட்டும் ; ஜனாதிபதி

Image
முஸ்லிம்கள், ரமழான் மாத நோன்பை நிறைவு செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையில் இவ்வருட நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். அது அனைவருக்கும் ஆறுதலாக இருக்கும் என்பது உறுதி. ரமழான் காலம் மற்றும் நோன்புப் பெருநாள் என்பன மதிப்புமிக்க மத, ஆன்மீக மற்றும் சமூக அமைப்பைக் கொண்டுள்ளன. அந்த விழுமியங்களையும் பாதுகாத்து நேர்மையாக நோன்பு நோற்று முஸ்லிம்கள் தம்மை அர்பணிக்கின்றனர். ரமழான் மாதம், நோன்புநோற்று காலத்தை கழிப்பதாக மட்டுமின்றி, ஏனைய சமூகத்தவர் மீதான கரிசணை மற்றும் தியாகம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் சிறப்புக்களை உலகிற்கு உரைப்பதாகவும் அமைந்துள்ளது. சமாதானம் மற்றும் சகோதரத்துவம் கொண்ட வளமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு நாம் முன்னெடுக்கும் பணிகளின்போது, இந்த சமூகக் கோட்பாடுகள் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பதோடு அவற்றை சமூக நலனுக்காக பயன்படுத்த நாம் அனைவரும் உறுதிபூணவேண்டும். சாதி, மத பேதமின்றி ஒரே இலங்கை மக்களாக ஒன்றிணைந்து எமது தாய்நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்லவும், சுதந்திரம், சமத்துவம், மனித மாண்புகள் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்ப இவ்வருட நோன்புப் பெரு...

🔴அக்குறணை மற்றும் பாணந்துறை பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு தொடர்பில் பொலிஸாரின் தெளிவுபடுத்தல்.

Image
அண்மையில் பாணந்துறை மற்றும் அக்குறணை பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு தொடர்பில் இலங்கை பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர். பாணந்துறையில் இஸ்லாமியர்களின் தொழுகையை இலக்கு வைத்து பாதுகாப்பு அபாயங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். எனவே, அவ்வாறான அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வகையில் விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். எவ்வாறாயினும், அக்குரணை பிரதேசத்தில் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் சாத்தியம் இருப்பதாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.எஸ்.பி தல்துவ தெரிவித்தார். இந்தச் செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் அதே வேளையில், அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க அக்குறணையில் உள்ள மேற்படி பகுதிக்கு விசேட பாதுகாப்பை வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அலவத்துகொட பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்...

முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் வரைபு சமர்ப்பித்து!

Image
முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வரைபொன்றை சமர்ப்பித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமையால் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் பாரிய சிரமங்களை நீண்டகாலமாக எதிர்நோக்கி வருவதாக சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். மேலும், தொழில்துறைக்கு மிகவும் தேவையான நிவாரணங்களை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் உடனடியாக வரைவை பரிசீலனை செய்து அங்கீகரிக்கும் என சங்கம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். tuk-tuks என்றும் அழைக்கப்படும் முச்சக்கர வண்டிகள் இலங்கையில் குறிப்பாக நகர்ப்புறங்களில் ஒரு பொதுவான போக்குவரத்து முறையாகும். இருப்பினும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், அதிக கட்டணம் வசூலித்தல், ஒழுங்குமுறையின்மை போன்ற பிரச்னைகளால் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது. உத்தேச வரைவு இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், இலங்கையில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான முச்சக்கர வண்டித் தொழிலைக் கொண்டுவரும் என எதிர...

🔴பாணந்துறை பிரதேசத்திலும் 3 பொலிஸ் பிரிவுகளில் பள்ளி வாசல்களுக்கு அதியுயர் பாதுகாப்பு.

Image
பாணந்துறை பிரதேசத்தில் மூன்று பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிடைத்த தகவலுக்கு அமைய பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாணந்துறை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள 14 முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கும், பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் 3 இஸ்லாமிய பள்ளிவாசல்களுக்கும், பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் 6 பள்ளிவாசல்களுக்கும் இவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நடமாடும் சேவை வாகனங்கள் மூலம் விசேட பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/sdGoeE5 via Kalasam

🔴கல்வியை அத்தியாவசிய சேவையாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது

Image
கல்வித்துறையில் நிலவும் தொழில்சார் பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் இதனை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க அதிகாரிகள் சாதகமாக செயல்படுவது முக்கியம் என அதன் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்வரும் வாரத்திற்குள் உயர்தர விடைத்தாள்களை ஆசிரியர்கள் சரிபார்க்காவிட்டால் அவசர சட்டத்தின் கீழ் கல்வியை அத்தியாவசிய சேவையாக மாற்றுவோம் என ஜனாதிபதி தெரிவித்தார். இது தொடர்பில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். “.. அந்த சேவையின் முக்கியத்துவத்தையும், அந்த சேவையின் மூலம் நாட்டு மக்களுக்கு வழங்கக்கூடிய சேவையையும் கருத்தில் கொண்டு சில சேவைகள் அத்தியாவசிய சேவையாக இருக்க வேண்டும். மற்றபடி, தொழில் வல்லுநர்கள் குழு தங்கள் தொழில் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றிப் பேசு...

🔴அக்குரணை நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Image
கண்டி அக்குரணையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் அக்குரணை நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.  பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அவசர இலக்கத்திற்கு நேற்று இரவு அக்குரணையில் சில நாசவேலைகள் இடம்பெறவுள்ளதாக தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.  அதன்படி, உடனடியாக செயற்பட்ட பாதுகாப்பு தரப்பினர் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி குறித்த பகுதிக்கு விசேட பொலிஸ் குழுக்களை அனுப்பி வைத்துள்ளனர்.  தேவைப்பட்டால் அப்பகுதிக்கு மேலதிக இராணுவக் குழுக்களை அனுப்புவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தற்போது அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் குழுக்கள் மறு அறிவித்தல் வரை அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/BMRAsD1 via Kalasam

இறக்குமதித் தடைகளை படிப்படியாக நீக்க அவதானம்

Image
(எம்.மனோசித்ரா) மருந்துகள், தொழிற்சாலை துறைகளுடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் என்பவற்றுக்கான இறக்குமதித் தடைகளை படிப்படியாக நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை அடிப்படையாகக் கொண்டே இறக்குமதித் தடைகளை நீக்குவது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சுங்கத் திணைக்களத்தின் வரி வருமானம் குறித்து சுங்க அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், சுங்கத் திணைக்களத்தின் வருமானம் இறக்குமதி வரியிலேயே தங்கியுள்ளது. எனினும் டொலர் நெருக்கடியைக் கருத்திற் கொண்டு சுமார் 400 க்கும் அதிகமான பொருட்களுக்கு இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக இவ்வாண்டின் முதற் காலாண்டில் சுங்கத் திணைக்களத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்கினை அடைய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 2021 இல் 485 பொருட்களுக்கும், கடந்த ஆண்டு 750 பொருட்களுக்கும் இ...

ஹஜ் கடமைக்காக 105 முகவர்கள் – இலங்கையிலிருந்து 3500 பேருக்கு சந்தர்ப்பம்

Image
இம்முறை ஹஜ் கடமைக்காக 105 முகவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் இணையத்தளத்தில் முகவர்கள் தொடர்பில் தகவல் பதிவிடப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் மாத்திரம் ஹஜ் பயணத்திற்கான வேலைகளை முன்னெடுக்குமாறும் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தலைவர் இஸட்.ஏ.எம். பைசல் தெரிவித்தார். இம்முறை ஹஜ் கடமைக்காக இலங்கையிலிருந்து 3500 பேருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், ஏற்கனவே முற்பணம் செலுத்தி பதிவு செய்தவர்கள் மிக விரைவில் தமது பயணத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் புதிதாக பதிவு செய்ய விரும்புவோரும் விரைவில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/AjPbJwk via Kalasam

கடன் வாங்க பயப்பட வேண்டாம் - இலங்கை எப்போது செல்வந்த நாடாகுமென ஜனாதிபதி ரணில் கூறிய விடயம்

Image
கடன் வாங்குவதற்கு பயப்பட வேண்டாம், கடனை செலுத்தவில்லை என்றால் பயப்படுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார் . பெற்ற கடன்களை முறையாக முதலீடு செய்தால் 15 முதல் 20 வருடங்களின் பின்னர் இலங்கை செல்வந்த நாடாக மாறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார் . ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் 3 வருடங்களின் பின்னர் மீண்டும் சிங்கள, தமிழ் புத்தாண்டை தேசிய விழாவாக இலங்கை மக்கள் கொண்டாடுவது அதிர்ஷ்டம் என்றும் அவர் சிறிகொத்தவில் உள்ளஊடகவியலாளர் சந்திப்பில் ஐ.தே.க தலைவர் தெரிவித்தார் from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/8TRAvQm via Kalasam

கல்வி அமைச்சு வெளியிடவுள்ள புதிய சுற்றறிக்கை....!

Image
இடைநிலை வகுப்புகளுக்கான பாடசாலை மாணவர் சேர்க்கை தொடர்பான புதிய சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட உள்ளது. தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை ஏப்ரல் 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதிய சுற்றறிக்கைக்கு மேலதிகமாக, இந்த வாரம் பாடசாலை தவணை விடுமுறை திருத்தத்துடன் புதிய கால அட்டவணையையும் கல்வி அமைச்சு வெளியிடும் என்றும் நம்பகத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/QsH0Ugp via Kalasam

🔴ராஜிதவுக்கு வழங்கினால் ரோஹிதவுக்கும் வழங்குமாறு கோரிக்கை

Image
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் அதே மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கும் அமைச்சுப் பதவி வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. “ரோஹிதவுக்கு அமைச்சுப் பதவி வழங்காமல் ராஜிதவுக்கு மட்டும் பதவி வழங்க வேண்டாம்” என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். ரோஹித அபேகுணவர்தன கட்சியின் வளர்ச்சிக்காக அதிக அர்ப்பணிப்புகளை செய்தவர். அவருக்கு வழங்காமல் ராஜிதவுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் அது பாரிய அநீதி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக ராஜித சேனாரத்ன விரைவில் புதிய அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாக பல்வேறு ஊடகச் செய்திகள் வெளியாகின. இதேவேளை, அமைச்சுப் பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெயர் பட்டியலும் கடந்த காலங்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Musli...

இன்று முதல் வழமைக்கு திரும்பும் பஸ், ரயில் சேவைகள்!

Image
இன்று (17) முதல் இ.போ.சபை பஸ்கள் மற்றும் புகையிரதங்கள் வழமையான சேவைகளை முன்னெடுக்கும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று 4,500 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, விசேட வருட போக்குவரத்து சேவை திட்டம் நாளை வரை தொடரும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. ரயில் இன்று வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/oNKl3CJ via Kalasam

தேசிய அரசில் இணைய டலஸ் தரப்பு தயக்கம்

Image
ரணில் விக்கிரமசிங்க உருவாக்க முனையும் 'தேசிய' அரசில் இணைவதற்கு பெரமுன அதிருப்தி குழுவான டலஸ் அணி தயக்கம் வெளியிட்டுள்ளது. தமிழ் தரப்பினரை ஒன்று படுத்த மனோ கணேசன் முயல்கின்ற அதேவேளை, சமகி ஜன பல வேகயவிலிருந்தும், பெரமுனவில் தமது எதிர்காலம் குறித்து சுயாதீனமாக சிந்திப்பவர்களிடமிருந்து ஆதரவு கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த சூழ்நிலையில், அதிகாரம் கிடைக்கும் என்பதற்காக ஆட்சியில் பங்கெடுக்க முடியாது என டலஸ் - ஜி.எல் பீரிஸ் உட்பட்ட பதின்மூன்று பேர் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/SRXPunI via Kalasam

முஷர்ரபை முஸ்லிம்களின் எதிரியான பா.ஜ.கவினர் கௌரவித்தது ஏன்..?

Image
  தற்போது பா.உறுப்பினர் முஷர்ரப் இந்தியாவில் கௌரவிக்கப்பட்ட விவகாரம் பாரிய பேசு பொருளாக உள்ளது. சில கௌரவங்கள் ஆளுமையின் வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை. எல்லா கௌரவங்களும் ஆளுமையின் வெளிப்பாடல்ல. குறித்த பா.உறுப்பினர் முஷர்ரபின் கௌரவம் எத்தகையது என பார்ப்பது மிகவும் அவசியமானது. அக் குறித்த நிகழ்வுக்கு அதிதியாக வருகை தந்தவர்களை ஆராய்ந்து பார்ப்பதனூடாக இதிலுள்ள ஆபத்தை எம்மால் அறிந்துகொள்ள முடியும். இக் குறித்த நிகழ்வின் பிரதான அதிதியாக இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டிருந்தார். இவர் யார் தெரியுமா? இவர் முன்னாள் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் ஆவார். பா.ஜ.க என்பது இந்தியாவில் நாளாந்தம் முஸ்லிம்களின் இரத்தை குடித்துகொண்டிருக்கும் RSS அமைப்பை பிரதானமாக கொண்டு இயங்கும் ஒரு கட்சியாகும். இந்த பாரதிய ஜனதா கட்சியினால் ( RSS அமைப்பு ) இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் அநியாயம் நான் சொல்லித் தான் நீங்கள் அறிய வேண்டியதில்லை. இப்படியானவர்களை முதன்மையாக கொண்டு நடத்தும் நிகழ்வில், அவர்கள் ஏன் ம...

🔴SJB , UNP இணை இணைக்கும் முயற்சி தோல்வி ! விரைவில் புதிய அமைச்சரவை நியமணம்

Image
ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் தம்முடனும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் இணைந்து ஆரம்பிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி தலைமை பதிலளிக்காத காரணத்தினால் அந்த யோசனையை கைவிட நேரிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.  பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி செய்தி அனுப்பியதாக வெளியான தகவல்கள் அடிப்படையற்றவை எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தினை அடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் சிலர் அரசில் இணைவார்கள் எனவும் அவர்களையும் பொதுஜன பெரமுன கட்சியையும் இணைத்து புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படும் என கூறப்பட்டது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/l6Zfhc4 via Kalasam

🔴நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு.

Image
கஹட்டகஸ்திகிலிய நெகுடவெவ பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு அருகில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது பாதுகாப்பற்ற கிணற்றில் தண்ணீர் நிறைந்திருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சடலம் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/AHvJy89 via Kalasam

🔴18,000 பசுக்கள் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தன

Image
அமெரிக்காவில், டெக்சாஸ் மாநிலத்திலுள்ள சவுத்ஃபோர்க் பால் பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 18,000 பசுக்கள் உயிரிழந்தன. பால் கரப்பதற்காக கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 18,000 பசுக்கள் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தன.  பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ஊழியர் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மாட்டு சானத்தை உறுஞ்சும் vacuum cleaner வகை எந்திரம் அதிக சூடாகி வெளிப்பட்ட தீப்பொறியால், பண்ணையிலிருந்த மீத்தேன் வாயு பற்றி எரிந்து விபத்து நேர்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/lho51xV via Kalasam

உறவினர் வீட்டுக்கு சென்ற ஆட்டோ, நடு வீதியில் தீ பற்றியது

Image
களுத்துறை பிரதேசத்தில் புத்தாண்டை முன்னிட்டு உறவினர் வீடுக்கு சென்ற குழுவினரை, ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் (14.04.2023) இடம்பெற்ற இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ராகம பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் அக்கலவத்தைப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளாக கூறப்படுகின்றது. இந்த தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் இது குறித்து விசாரித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/JPWSv0K via Kalasam

🔵இன்று, பேரூந்து சேவை மிகவும் குறைவாகவே இருக்கும்

Image
புத்தாண்டு தினத்தில் பேரூந்து போக்குவரத்து மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று காலை நோன்கடை ஆரம்பமாகவுள்ளதால் சுபநேரம் முடியும் வரை பேரூந்து சேவை மிகவும் கட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் பயணிகளின் தேவையின் அடிப்படையில் மாத்திரம் கொழும்பில் இருந்து வெளி மாகாணங்களுக்கு பேரூந்துகள் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 25 அல்லது 30 பேரூந்துகள் இயங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் ஓட்டப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார். மக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தயாராக உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/wbta25r via Kalasam

அதிக விலைக்கு விற்பனை செய்யப்படவிருந்த 15,000 முட்டைகள் கண்டுபிடிப்பு

Image
மருதானை மரியகடையில் உள்ள கடையொன்றில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிக விலையில் முட்டை விற்பனை செய்ய தயார் செய்யப்பட்ட 15,000 முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இன்று (12) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னர், சோதனை நடத்திய அதிகாரிகள், அரசு நிர்ணயித்த 44 ரூபாய் கட்டுப்பாட்டு விலையில், முட்டை கையிருப்பை நுகர்வோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/VmXG7r9 via Kalasam

🟢ஜூன் மாதம் முதல் நலத்திட்ட உதவிகள்

Image
தகுதியான நபர்களுக்கு அரசாங்கத்தால் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட 3.2 மில்லியன் குடும்பங்களின் விண்ணப்பங்கள் இதுவரை சரிபார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், நலன்புரி திட்டத்திற்கு தகுதியான நபர்களை அடையாளம் காணும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தகவல் கணக்கெடுப்பு ஏப்ரல் 10 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.  தரவுக் கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் நலன்புரி உதவிகள் பெறத் தகுதியானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அனைத்து பிரதேச செயலகங்களிலும் கிராம சேவையாளர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்படும். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/zwlWjdq via Kalasam

🔴இலங்கை குரங்குகளை சீனாவுக்கு அனுப்ப திட்டம் !!

Image
இலங்கையில் அதிகரித்து வரும் குரங்குகளின்  எண்ணிக்கைக்கு தீர்வாக  இலங்கையின் குரங்குகளுக்கு  சீனாவில் இருந்து அதிக தேவை ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை  வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிடுகிறது. இந்தக் கோரிக்கையின் பிரகாரம் முதற்கட்டமாக 100,000 குரங்குகளை  வழங்குவதற்கான விசேட கலந்துரையாடல் இன்று (11) பத்தரமுல்லையில் உள்ள விவசாய அமைச்சில் இடம்பெற்றது. விவசாய அமைச்சர்  மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் விவசாய அமைச்சு, தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவொன்று இணைந்துள்ளது. இக்கலந்துரையாடலின் படி இலங்கை குரங்குகளை  வெளிநாட்டுக்கு வழங்குவது தொடர்பான சட்ட நிலைமைகளை ஆராய்வதற்காக அமைச்சர்கள் சபையின் அங்கீகாரத்தின் அடிப்படையில் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். தற்...

புத்தாண்டில் இனிப்பு வகைகளின் விலை அதிகரிப்பு

Image
பண்டிகை காலத்தையொட்டி சந்தையில் இனிப்பு பண்டங்களின் விலை அதிகரித்துள்ளது. அத்துடன் புத்தாண்டு அனுஷ்டானங்களை நிறைவேற்ற பயன்படுத்தப்படும் வெற்றிலையின் விலையும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சீனி, தேங்காய் எண்ணெய், பாசிப்பயறு, தேங்காய் போன்ற மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக தமது உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாக இனிப்பு பண்டங்களின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொக்கிஸ் ஒன்றின் விலை 30 ரூபாவாகவும், ஆஸ்மி ஒன்றின் விலை 120 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. புத்தாண்டு சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் வெற்றிலை பாக்கு ஒன்றின் விலையும் 320 ரூபாவாக அதிகரித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/knc63hO via Kalasam

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைத்தொலைபேசி திருட்டு?

Image
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். பயணி ஒருவரின் கைத்தொலைபேசி திருடப்பட்டமை தொடர்பில் சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவ்வாறான திருட்டுக்கான ஆதாரம் எதுவும் பதிவாகவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி இதனைத் தெரிவித்தார். இலங்கைக்கு வருவதற்கு முன்னர் குறித்த பயணியின் கையடக்கத் தொலைபேசி மத்திய கிழக்கு நாடு ஒன்றின் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டுடன் தொடர்புடைய விமான நிறுவனம் எழுத்துமூலம் அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அது நிறைவடைந்தவுடன் அங்கு பெறப்படும் முடிவுகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தலைவர் மேலும்...

🔴இராஜாங்க அமைச்சர் ரோஹன ஜனாதிபதிக்கு ஆதரவு

Image
நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்ட தலைவராக ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் ஜனாதிபதிக்கு முழு ஆதரவை வழங்குவேன் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தோட்டை பிரதேச செயலகத்தின் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “.. நாம் இப்போது ஒரு நாடாக பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பெற்று வருகிறோம் என்பதை மத்திய வங்கி அறிக்கைகள் காட்டுகின்றன. இந்த நிலையை அடைய பலர் தியாகம் செய்தனர். அதனால் கிடைக்கும் நன்மைகளைப் பெற்று மக்களின் வாழ்க்கையை வலுப்படுத்த தேவையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த நமது பொதுச் சேவைகளை விரிவுபடுத்துவது நமது கடமையாகும். எதிர்க்கட்சியினர் இப்போது வெறித்தனமாகப் பலவிதமாகச் சொல்கிறார்கள். திசைகாட்டி வடக்கு மற்றும் தெற்கு நோக்கி நகர்ந்து கத்துகிறது. சில பொதுக்கூட்டங்கள் இப்போது தடையின்றி செல்கின்றன. இதையெல்லாம் மக்கள் நன்றாக வலியுறுத்துகிறார்கள். சவால்களை ஏற்றுக்கொண்ட தற்போதைய தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் வ...

ஆளுநர்கள் இங்கு மட்டுமல்ல இலங்கையில் எப்பாகத்திலுமே தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி அத்துமீறல் செய்து இனவாதத்தை ஏற்படுத்தக் கூடாது.

Image
  ஆளுநர்  உத்தரவின் பேரில் அகற்றப்பட்ட  புன்னைக்குடா வீதி பெயர்ப்பலகை அமைச்சர் நஸீர் அஹமட்டினால் மீள நடப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர்  அனுராதா யஹம்பத்தின் உத்தரவின் பேரில் “எல்மிஸ் வல்கம” வீதி என சிங்களப் பெயராக மாற்றுவதற்காக அகற்றப்பட்ட  புன்னைக்குடா வீதி எனும் பெயர்ப்பலகை அதே “புன்னைக்குடா வீதி” என்ற பழைய நாமத்தோடு அமைச்சர் நஸீர் அஹமட்டினால் மீள நடப்பட்டது. இந்நிகழ்வு  ஏறாவூர் நகர புன்னைக்குடா வீதி சந்தியில் திங்கள்கிழமை 10.04.2023  இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய அமைச்சர் நஸீர் அஹமட், ஆளுநர்கள் இங்கு மட்டுமல்ல இலங்கையில் எப்பாகத்திலுமே தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி அத்துமீறல் செய்து இனவாதத்தை ஏற்படுத்தக் கூடாது. கிழக்கு மாகாண ஆளுநர் தன்னிச்சையாகத் தீர்மானம் எடுத்து இனமுரண்பாடுகளை உருவாக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.  ஆளுநரின் உத்தரவு வெளியானதை அடுத்து ஏற்கெனவே ஏறாவூர் நகரை ஊடறுத்துச் செல்லும் கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும்  அறிவித்தலாக அமைக்கப்பட்டிருந்த புன்னைக்குடா வீதி என்ற பெயர்ப் பலகை உடனட...