Posts

Showing posts from June, 2023

இலஙக வஙகரதத நலயலரநத மளம: ஜனதபத நமபகக

Image
இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீளும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீளும் எனவும் ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார். ⭕அனைத்து தரப்பினரின் ஆதரவு இன்றைய தினம் (30.06.2023) இலங்கை பணிப்பாளர் நிறுவகத்தில் (SLID) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார். குறிப்பாக உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்கான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/lcwmCYu via Kalasam

அசச இயநதரஙகள களவனவ சயய 20 கட ரப தவ - 8 இலடசம சரத அனமதபபததரஙகள அசசட வசதயலல.

Image
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கு போதியளவிலான இயந்திரங்கள் இன்மையால் சுமார் 8 இலட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதிப் பத்திர அட்டைகள் பலமாதங்களாக வழங்கப்படாதுள்ளதுடன், ஜூன் 19ஆம் திகதி முதல் வழங்கப்படவிருந்த தற்காலிக சாரதி அனுமதிப் பத்திர காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்படுவதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கான புதிய அச்சு இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்காக சுமார் 20 கோடி ரூபா செலவிடவேண்டியுள்ளது. இதனால் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்புக்கு பொறுப்பான நிறுவனம் ‘கார்ட்’களை அச்சிடும் இயந்திரங்களை பெற்று பத்திரமொன்று 150 ரூபா அறவிடும் நடைமுறையுடன் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவிக்கையில், சாரதி அனுமதிப்பத்திரங்களை அ...

வலபதத வவகரம - ரஷட பதயதனகக எதரன மன வசரண ஆகஸட 28 இல!

Image
  முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வில்பத்து வனப்பகுதியை அண்மித்துள்ள மரிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளி, கொண்டச்சி, முள்ளிக்குளம் மற்றும் அளக்கட்டு வனப்பகுதிகளை அழித்தமை  தொடர்பாக, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த மனு இன்று புதன்கிழமை (28) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற  அமர்வு முன்னிலையில்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். ரிஷாத்  பதியுதீன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா, பைசர் முஸ்தபா, சட்டத்தரணி ரிஸ்வான் ஆகியோர் நீதிமன்றில் பிரதிவாதி சார்பில் விவாதத்தை முன்வைத்து மனு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ந...

மன கடடண கறபப யசன தடரபன இறத தரமனம வளளயனற

Image
மின் கட்டணத்தைக் குறைப்பது குறித்து மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(30) தீர்மானம் எடுக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த யோசகைள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/UjKpTGY via Kalasam

மததயமறக வஙகககடல பகதகளல சறவள: இலஙகயல ஏறபடபகம கலநல மறற

Image
இலங்கை மற்றும் தென் தமிழக பகுதிகளில் இன்று  (27.06.2023) முதல் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வரை ஏற்படக்கூடி காலநிலை மாற்றங்கள் தொடர்பில்சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என கணிக்கப்படுகின்றது. இந்த சூறாவளிக்காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. லேசான மழை பெய்யக்கூடும் 29.06.2023 முதல் 01.07.2023 வரை:  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் சின்...

கடடண அதகரபப தடரபல வளயன வரததமன அறவததல

Image
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கான உரிமம் புதுப்பித்தல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டண அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ⭕கட்டண அதிகரிப்பு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1985 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தின் 51 வது பிரிவின் கீழ் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு உரிமம் புதுப்பித்தலுக்கும் 50,000 ரூபாவாக காணப்பட்ட கட்டணம் தற்போது 100,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2IniMgp via Kalasam

இலஙகயல மத அவதற சயறபடகள தடகக வஷட கழ... அமசசரவயம அஙககரம வழஙகயத.

Image
  மத சுதந்திரத்தை பறித்தல் மற்றும் சமய கருத்துக்களை திரிபுபடுத்துதல் போன்றவற்றை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பௌத்த, முஸ்லிம், இந்து, கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள், ஊடகங்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட குழுவை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், மத போதனைகளை அவதூறு செய்வதைத் தடுக்கவும் சட்ட விதிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/gQFnBzs via Kalasam

கழககம மடடககம வரட இறதயல தரவ!

Image
  இந்த வருட இறுதியில், மீண்டும் வெளிநாடுகளிலிருந்து முட்டை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இருக்காது எனவும் கோழி இறைச்சி மற்றும் கோழி முட்டை தொடர்பாக நாட்டில் நிலவும் பிரச்சினைகளும் முற்று முழுதாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிவர்த்தி செய்யப்பட்டு விடும் எனவும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். திஸ்ஸமகராமயில் கடந்த சனிக்கிழமை (24) நடைபெற்ற கால்நடை மருத்துவமனை திட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/iHWnRpj via Kalasam

பல நள பஸபக கதலன சககனர

Image
  பல இளம் பெண்களை ஏமாற்றி அவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வைத்து மிரட்டி பணம் பறித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணையையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முகநூல் ஊடாக இளம் பெண்களை அடையாளம் கண்டுகொண்ட சந்தேக நபர் அவர்களைக் காதலிப்பது போல் பேசி பழகியுள்ளார்.  பின்னர், அப்பெண்களை விடுதிகளுக்கு அழைத்துச் சென்று நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை காண்பித்து சம்பந்தப்பட்ட இளம் பெண்களை மிரட்டி, தாம் கேட்ட பணத்தை தராவிட்டால் அந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு, அவிசாவளை பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய யுவதி ஒருவருடன் காதல் உறவை வளர்த்துக் கொண்ட குறித்த சந்தேக நபர், வழக்கம் போல்அந்த யுவதியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் எடுத்துள்ளார். பின்னா் அவரை மிரட்டி சுமார் 2 லட்சம் ரூபாயை பறித்துள்ளதாக தெரிவிக்க...

எரபரள வல கறபப தடரபல வளயன பதய தகவல

Image
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இலாபம் ஈட்டியுள்ள நிலையில், எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) முகாமைத்துவ பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மேலும் கூறுகையில், கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 60 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளது. ⭕எரிபொருள் விலை இந்த இலாபத்தை எதிர்காலத்தில் மக்களுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடு செயற்படும். அத்துடன் எதிர்காலத்தில் எரிபொருளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்போம். மேலும், இந்த இலாபத்தை பெறுவதற்கு முக்கிய காரணம், கூட்டுத்தாபனத்தில் நிலவிய வினைத்திறனின்மை மற்றும் முறைகேடுகளை கண்டறிந்து அகற்றியமையே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/1YlBbO2 via Kalasam

மககய பரடகளன வல கறபப தடரபல பசசவரதத

Image
சீமெந்து, டைல்ஸ் மற்றும் பெயின்ட் விலை குறைப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும் எனவும் வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த பொருட்களின் சந்தை விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அது மட்டும் அன்றி அதற்காக தொடர்ந்தும் பாடுபடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை செயற்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/1c2f8it via Kalasam

அரச தர பப நடளமனற உறபபனரகளகக வடககபபடடளள மககய அறவபப

Image
அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் நாளை (26.06.2023) முதல் கொழும்பில் தங்குமாறு ஆளும் கட்சியின் பிரதம கொறடா அலுவலகம் அறிவித்துள்ளது. ⭕காரணம் என்ன...! ஆளுங்கட்சியின் பிரதம கொறடா அலுவலகம் அரசாங்கத்தின் அனைத்து எம்.பி.மாருக்கும் வாட்ஸ்அப் செய்தி மூலம் இதனை அறிவித்துள்ளதாக தெரியவருகிறது. ஆனால், அதற்கான காரணம் குறித்து எம்.பி.மார்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. இதேவேளை, இந்த பிரேரணையை அவசர மசோதாவாக நாடாளுமன்றத்தில் முன்வைக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாகவும், அதனை முன்னிட்டு எதிர்வரும் சனிக்கிழமை (01.07.2023) நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   விசேட கூட்டம் இதேவேளை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணங்கள் இவ்வாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா அலுவலகம் அறிவித்துள்ளது. லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(25.06.2023) நாடு திரும்பிய பின்னர், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் விசேட கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவு...

தரபஷ வழஙகபபடமககன கரணம

Image
6 மாதம் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்கும் அரசின் திட்டம் சுமார் ஒரு வருடமாக முடங்கிக் கிடப்பதாக அரசின் குடும்ப நலச் சேவைகள் சங்கத் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார். இதுகுறித்து அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தும் எந்த பதிலும் இல்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார். நம் நாட்டில், கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6 மாதங்களுக்கும் மேலான மற்றும் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் திரிபோஷா கொடுக்கப்பட வேண்டும். 06 மாதங்கள் முதல் 03 வயது வரையிலான குழந்தைகளுக்கு சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக திரிபோஷா வழங்கப்படவில்லை. கொரோனா தொற்று காலத்தில் கூட குழந்தைகளுக்கு திரிபோஷா கொடுக்கப்பட்டது. சமீபத்தில் அப்லாடாக்சின் பிரச்சினை இருந்தது. சுகாதார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பிரச்சினை என்றால் அதை அரசுதான் தீர்க்க வேண்டும் என அரசின் குடும்ப நலச் சேவைகள் சங்கத் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/YLAv1Id via Kalasam

"மதத ஆலம ஆதம லபப ஹஸரத அவரகளன மறவ கவல தரகனறத" - மககள கஙகரஸ தலவர ரஷட!

Image
நாடறிந்த மூத்த ஆலிம் ஆதம் லெப்பை ஹஸரத் (அஷ்ஷைக் பி.எம்.ஹனீபா) அவர்களின் மறைவு நமது சமூகத்துக்கு பேரிழப்பாகுமென்றும் அவரின் மறைவு பெருங்கவலை தருவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஆதம் லெப்பை ஹஸரத் அவர்களின் மறைவையொட்டி, அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டு்ள்ளதாவது, "காத்தான்குடியின் அரபுக் கல்லூரிகள் பலவற்றின் உஸ்தாதாகவும் பொறுப்பாளராகவும் சிறப்பாகக் கடமையாற்றிய அவர், மார்க்கக் கல்விக்காகவும் இஸ்லாமியப் பிரச்சாரப் பணிக்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த பேரறிஞர். தனிப்பட்ட சொந்த வேலைகள், குடும்ப நலனுக்கு அப்பால் இஸ்லாத்தின் எழுச்சியை மதித்த அன்னார், மக்கள் உள்ளங்களில் மார்க்கக் கடமைகளை உணர்த்தி, ஆழமாகப் பதித்தவர். அவரிடம் மார்க்கக் கல்வியைக் கற்ற ஏராளமான மாணவர்கள் சிறந்த மார்க்க அறிஞர்களாகவும், உலமாக்களாகவும் திகழ்கின்றனர். இவ்வாறான மார்க்க அறிஞர் ஒருவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர், மாணவர்கள், நண்பர்கள் மற்றும் ஊரவர்களின் கவலையில் நானும் பங்குகொள்கின்றேன். அல்லாஹ்வின் நாட்டப்படி ந...

ஆதம லபப ஹசரத அவரகளன மரணச சயத கடட ஆழநத கவல அடகனறன - ஹஸபழழஹ அனதபம!

Image
  காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்டு பல்வேறு பட்ட மார்க்கப் பணிகளிலும் ஈடுபட்டு நாடு முழுவதிலும் இஸ்லாமிய பிரச்சாரம் செய்த ஒரு மார்க்க அறிஞர் ஆதம் லெப்பை ஹசரத் அவர்கள். அவரது மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைகின்றேன் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். மார்க்க விடயங்களை தெளிவுபடுத்துவதில் முதன்மையானவர். தஃவா பணிகளில் எல்லோருடனும் பண்பாகவும், அன்பாகவும் பழகக் கூடிய ஒருவர். ஜாமிஅதுல் பலாஹ்வில் கல்வி கற்று அங்கேயே உஸ்தாதாகவும்,தப்லீக் ஜமாஅத் மத்ரசாவில் அதிபராகவும் தப்லீக் ஜமாஅத் மத்ரசாவில் பல்வேறு பட்ட பணிகளிலும் இருந்து தேசிய ரீதியிலும் சமூகப் பணியாற்றியவர். மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் அவர்களை கல்வி ரீதியாக வழி காட்டுவதற்காக பல்வேறுபட்ட பயிற்சி வகுப்புக்களை நடத்தியவர். காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனம், காத்தான்குடி ஜம்மியத்துல் உலமா, காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரி, காத்தான்குடி மர்க்கஸ் உட்பட பல்வேறு பட்ட சமூ...

சன சலகறர அல சபர

Image
சீன வெளிவிவகார அமைச்சரின் அழைப்பின் பேரில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என இலங்கைக்கான சீன தூதரகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனாவில் தங்கியிருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/H0C6AgP via Kalasam

கழமபல 10 வயத மணவ மத நடததபபடட கடரம - நதமனறம அதரட உததரவ

Image
  கொழும்பில் உள்ள பிரபல மகளிர் பாடசாலையில் கல்வி கற்கும் 10 வயது மாணவியை 8 தடவைகள் வன்புணர்வு செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் நேற்று (22.06.2023) நீதிமன்றில் அறிவித்துள்ளனர். இந்நிலையில் பாதிப்புக்களான சிறுமி இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய சிறுமியை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ⭕சட்ட வைத்திய அறிக்கை பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸாரால் பெறப்பட்ட சட்ட வைத்திய அறிக்கையில் சிறுமி வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சிறுமியின் மருத்துவ அறிக்கையை கருத்தில் கொண்ட நீதிமன்றம் சிறுமியை அவரது தாயின் பாதுகாப்பில் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்ட சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை கவனித்த வகுப்பு ஆசிரியர் சிறுமியை...

ஜனதபதய கடமயக வமரசதத சஜத!

Image
  ஜனாதிபதியின் அஸ்வெசும திட்டமானது வெறும் கண்துடைப்புக்கு ஒப்பானது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு இன்று(22.06.2023) உரையாற்றும் ​போது சஜித் பிரேமதாச இவ்வாறு விமர்சித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில், ஜனாதிபதியின் நான்கு தூண் தேசிய திட்டம் மக்களை நான்கு முனைகளிலிருந்தும் தாக்க ஆரம்பித்துள்ளது. ⭕ஜனாதிபதியின் தேசிய திட்டம் நான்கு தூண்களில் தேசிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டுக்கு அறிவித்துள்ளார். ஆனால் நோயைக் குணப்படுத்தும் முன் நோய் என்னவென்பதை அரசாங்கம் கண்டறிய வேண்டும். சனத்தொகையில் 31 சதவீதம் அல்லது எழுபது இலட்சம் மக்கள் ஏழைகள் என்று தெரிய வந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்களை பற்றிய சரியான தரவுகளை பெறுவதற்கு ஒரு கணக்கெடுப்பை நடத்துவதே ஜனாதிபதி முதலில் செய்திருக்க வேண்டும். ⭕மக்களுக்கான நிவாரணம் 70 இலட்சம் ஏழைகள் இருந்தாலும் 12 இலட்சம் பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படுவதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அரசாங்கம் கண்மூடித்தனத்தனம...

இலஙக மககளன ஆயடகலததல ஏறபடடளள தடர மறறம

Image
இலங்கை மக்களின் ஆயுட்காலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இலங்கை வாழ் மக்களின் ஆயுட்காலம் குறைவடைந்துள்ளதாக வெளிநாட்டு பொருளியல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் சிசு மரண வீதமும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ⭕சிசு மரண வீதங்கள் உயர்வு இலங்கை, ஸம்பியா, கானா போன்ற நாடுகளில் சிசு மரண வீங்கள் உயர்வாக காணப்படுவதாகவும் அந்தப் பட்டியலில் இலங்கையும் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது இந்த பிரச்சினைக்கு  விரைவில் தீர்வு எட்டப்படாவிட்டால் அந்த நாடுகள் நெருக்கடி நிலைமைகளை எதிர் நோக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகள் குறிப்பாக இலங்கை, ஸம்பியா, கானா ஆகிய நாடுகள் கூடுதல் அளவில் சீனாவிடம் கடன் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், குறித்த நாடுகளின் சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் சீனா உரிய கவனம் செலுத்த தவறியுள்ளதாகவும் மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Fz6DEmO via Kalasam

மவடபபளள கம/அல/அஸரப மக வததயலயததன சறறபபறச சழல சததபபடததம பணயளரன இரணட வரட மத சமமளதத பறபபடதத தனவநதர அஸலம!

Image
- அஹமட் சாஜித் - மாவடிப்பள்ளியில் ஒரே ஒரு பாடசாலை கமு/அல்/அஸ்ரப் மகாவித்தியாலயமாகும். இப் பாடசாலையில் தரம் 1 தொடக்கம் கா.பொ.தா சாதாரண தரம் வரை 615 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இப் பாடசாலையின் முற்றம் மற்றும் சுத்தம் செய்யக் கூடிய சுற்றுப்புறச் சூழலின் பரப்பு பெரியதாக காணப்படுவதாலும், நிழல்தரக் கூடிய மரங்கள் அதிகமாக இருப்பதனாலும், நாளாந்தம் சுற்றுப் புறச்சூழலை சுத்தப்படுத்தும் பணியை ஒரு நபர் மாத்திரம் செய்வது மிகப்பெரும் கடினமாகவும் இருந்து வருகின்றது. இதனை நிவர்த்தி செய்வதாயின் இன்னுமொரு பணியாளரின் தேவைப்பாடு அத்தியாவசியமாக இருப்பதனாலும், அப் பணியாளரை உத்தியோகபூர்வமாக நியமிப்பதில் நிர்வாகச் சிக்கல் காணப்படுவதாலும், மாதாந்த சம்பள அடிப்படையில் இன்னுமொரு பணியாளரை நியமித்து பிரச்சியையைத் தீர்ப்பதற்கு மாதாமாதம் சம்மளம் வழங்குவதற்குரிய போதுமான நிதியும் பாடசாலை நிர்வாகத்திடம் இல்லாமையானது மிகப்பெரும் குறையாக காணப்படுகின்றது. இது தொடர்பான நிலைப்பாடுகளை அறிந்த மாவடிப்பள்ளி அபிவிருத்திக் குழுவானது, உடனடியாக பாடசாலை அதிபர் ரஜாப்டீன் ஆசிரியரை அனுகி இது சம்மந்தமாக கலந்துரையாடிய பின் இதற்கா...

சறறலப பயணகளன வரக 6 இலடசதத நரஙககறத

Image
இந்த வருடம் இலங்கைக்கு வருகைத் தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 600,000 ஐ நெருங்குகிறது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த வருடம் 585,669 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் இதுவரை 61,183 சுற்றுலாப் பயணிகள் தீவுக்கு வந்துள்ளனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/dxcYrCL via Kalasam

பணவககம மலம வழசச

Image
2023 மே மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கம் வெளியிடப்பட்டுள்ளன.  இதன்படி, 2023 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 33.6% ஆக பதிவாகிய இலங்கையின் பணவீக்கம் 2023 ஆண்டு மே மாதத்தில் 22.1% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.  2023 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 27.1% ஆக இருந்த உணவு வகை ஆண்டு பணவீக்கம் (புள்ளி) 2023 ஆண்டு மே மாதத்தில் 15.8% ஆக குறைந்துள்ளது.  மேலும், ஏப்ரல் மாதத்தில் 39.0% ஆக இருந்த உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்கம் (புள்ளி) மே மாதத்தில் 27.6% ஆக கணிசமாகக் குறைந்துள்ளது.  உணவு வகையைப் பொறுத்த வரையில், புதிய மீன், காய்கறிகள், சீனி, கோழி இறைச்சி, மைசூர் பருப்பு, உருளைக்கிழங்கு, இஞ்சி, பூண்டு, வெங்காயம், கருவாடு மற்றும் டின் மீன் போன்ற உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.  புதிய பழங்கள், பால் மா, அரிசி, தேங்காய், மிளகாய் துாள், தேங்காய் எண்ணெய், சாதாரண பாண், முட்டை, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மஞ்சள், கௌபி மற்றும் சின்ன...

23 அபவரதத தடடஙகள இடநறததம!

Image
அரசாங்கத்தின் பணத்தை செலவு செய்து நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 23 திட்டங்கள் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 11 திட்டங்கள் நிறுவனங்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் அண்மையில் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் புலப்பட்டது. பணப்பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட திட்டங்கள் தவிர, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையில் சரியான ஒத்துழைப்போ அல்லது ஒப்பந்தமோ இல்லாமை சில திட்டங்கள் நிறுத்தப்படுவதற்கு முக்கிய காரணம் என்றும் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்ட திட்டங்களைப் பரிசீலித்து அவற்றை மீளவும் ஆரம்பிப்பதற்கான உத்திகள் அல்லது பின்பற்றக் கூடிய நடைமுறைகளில் மாற்றம் செய்வது தொடர்பில் ஆராயும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கடந்த 20ஆம் திகதி கூடியிருந்தது. இதற்கமை...

இலஙகயல வல சயயதரககம அரச ஊழயரகள! சபயல அமபலமன தகவல

Image
அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்களில் நூற்றுக்கு 15 வீதமானவர்கள் மாத்திரமே வேலை செய்பவர்களாக இருக்கின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஷரப் தெரிவித்துள்ளார். மிகுதி 85 சதவீதமானவர்கள் வேலை செய்யாமல் இருப்பவர்களாக இருக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். ⭕இலங்கையிலுள்ள அரச ஊழியர்கள் மேலும் தெரிவிக்கையில், உலக ரீதியாக நோக்குகின்ற போது ஒரு நாட்டின் சனத்தொகையில் 3 சதவீதமானவர்களே அரச உத்தியோகத்தில் இருக்கின்றனர். ஆனால் எமது நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அரச சேவையில் உள்ளனர். இதற்கு காரணம் நாட்டில் ஆட்சிக்கு வருபவர்கள் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ள, தமது செல்வாக்கை அதிகரிக்க அரச உத்தியோகங்களை அள்ளி வழங்கியுள்ளனர். ⭕நட்டமா? இலாபமா? அரச நிறுவனங்கள் இலாபத்தில் இயங்குகிறதா? நட்டத்தில் இயங்குகிறதா? நட்டத்தில் இயங்கினால் அதை எப்படி சரி செய்வது என்பதை எல்லாம் அவர்கள் சிந்திப்பதில்லை. அதே சமயத்தில், அரச அலுவலகங்களில் உள்ள உத்தியோகத்தர்களில் ந...

யடயப பரதத தபபகக தயரதத இரவர கத

Image
  யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த மாமாவும் மருமகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினரால் திங்கட்கிழமை  (19)  கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் T-56 ரக துப்பாக்கி, 5 அடி நீளமான வேறு ரக  துப்பாக்கி,  ரவைகள், துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்படும் இரண்டு கிரைண்டர்கள் மற்றும் கிரில் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் துப்பாக்கிகளை பயன்படுத்தி சந்தேக நபர்கள் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.  பதுரலிய சீலதொல பிரதேசத்தைச் சேர்ந்த 41 மற்றும் 21 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விருவரும் கடந்த அரகலயவின் போது, 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள், வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்து எரித்தனர் என்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்கள் ஆவர். கைது செய்யப்பட்ட இவ்விரு சந்தேகநபர்களையும் மத்துக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்...

சரத அனமதபபததரம சலலபடயகம கலம இரணட வரடஙகளகக நடபப

Image
சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்திற்க் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளது. அச்சடிக்கும் அட்டைகள் பற்றாக்குறையால் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் பாதுகாப்பு குறியீடு மற்றும் ஒரு வருட செல்லுபடியாகும் காலத்துடன் வழங்கப்பட்டன. காலாவதியான தாற்காலிக உரிமத்தை புதுப்பிப்பதில் மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.எனவே இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க திணைக்களம் முடிவு செய்துள்ளது,” என்றார். சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் அச்சடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 800,000...

சமபததல நன கடகக சலலவலல அரச வவகரததல மஹநத சஜத மதல

Image
அரிசி விலை குறித்த தகவல் தெரியாததால், கடைக்குச் சென்று அரிசியின் சரியான விலையை அறிந்து கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மஹிந்த அமரவீர தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; “நீங்கள் ஹம்பாந்தோட்டையில் இருந்தீர்கள். அரிசி 220க்கு விற்கப்படுகிறது என்று சொன்னீர்கள். நீங்கள் சமீபத்தில் கடைக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். லுனுகம்வெஹர பகுதியில் 125 ஆக பதிவாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் பணியாற்றிய அனைவரும் சந்தைக்குச் சென்றனர். சென்று விலைகளைக் கண்டறியவும். நீங்களும் செல்லுங்கள். இங்கே யாரும் சொல்வதைச் சொல்லாதீர்கள். பாஸ்மதி கீரி சம்பாவை பற்றி யோசித்து பேசாதீர்கள். இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் நாடு மற்றும் கெக்குலு அரிசியை உண்கின்றனர். அதுவும் 200க்கு மேல் விற்கவில்லை. எம்ஓபி உரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை. யாராவது கொடுக்கவில்லை என்றால் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பேன். பொலன்னறுவையில் யூரியாவில்...

தடபபசயல பல கழநதகள இறநதளளனர

Image
  பேராதனை வைத்தியசாலையில் வெளியிடப்பட்ட மயக்க ஊசி காரணமாக பல சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இந்த ஊசிகள் அகற்றப்படுவதாக கூறப்பட்டாலும், அவை தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பிரதமரிடம் கேள்வி எழுப்பிய போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; “.. பேராதனை வைத்தியசாலையில் மயக்க ஊசி மூலம் விஷம் கலந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு முன்பும் பல உயிரிழப்புகள் நடந்துள்ளன. இந்த நச்சுத் தடுப்பூசிகள் அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதுதான் செய்தி. இதை பிரதமர் ஆராய்ந்து தெளிவான பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்…” எனத் தெரிவித்திருந்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/LEdh4ql via Kalasam

பககர உறபததகளன வலயல மறறம

Image
பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாயால் குறைப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். “430 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிலோகிராம் கோதுமை மா இப்போது சந்தையில் ரூ. 160 தொடக்கம் 170 வரையில் விற்கப்படுகிறது. தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தைத் தவிர்க்க கோதுமை மா அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ளது. எனவே கோதுமையின் விலை மீண்டும் அதிகரிக்கப்படாது என்ற உத்தரவாதத்தில் பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்கலாம்“ என அமைச்சர் மேலும் தெரிவித்தார். கோழி இறைச்சி விலையுயர்வை கட்டுப்படுத்துதல் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி உள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிார சபை விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/tHjCw9h via Kalasam

இளஞரகள தழல இனமயல பழயன பதயல பயணதத கறறவளகளக மறயளளனர : இளஞர பரளமனற உறபபனர அமர அபfனன.

Image
  நூருல் ஹுதா உமர்  நாடோ அதால பாதாளத்தில் சென்று நாட்டின் பொருளாதார சிக்கலினால் பல இளைஞர்கள், அரச உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் போன்ற தொழில் வாண்மையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர், பலர் தொழில் நிலையற்றவர்களாக உள்ளனர், இன்னும் சிலர் போதைக்கு அடிமையாக உள்ளனர், மேலும் பலர் வறுமையால், தொழிலின்மையால் பிழையான பாதையில் பயணித்து தண்டனைக்குரிய குற்றவாளிகளாக மாறி வழக்கும் கையுமாக அலைகின்றனர். யுவதிகளுக்கான வாழ்வியல் வசதிகள் தற்போது உள்ளதா? எதுவுமே இல்லை. பல இளவயது திருமணங்களால் பல வாழ்க்கை சீரழிவுகளை யுவதிகள் அனுபவிக்கும் கால சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்fனான் தெரிவித்தார்.  ஐந்தாவது இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு 17,18 ம் திகதிகளில் ஜனாதிபதி செயலக பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது உத்தேச இளைஞர் பாராளுமன்ற சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த உரையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,  உத்தேச இளைஞர்கள் பாராளுமன்ற சட்ட மூலத்தின் பிரதான நான்கு பிரிவுகளாக...

சரவதச நணய நதயததன வககறதகள நறவறறய இலஙக

Image
சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தின் 100 கண்காணிக்கக்கூடிய கடப்பாடுகளில் 29ஐ இலங்கை பூர்த்தி செய்துள்ளது. எனினும் இந்த ஆண்டு (2023) மே மாத இறுதியில் மூன்றில் இலங்கை  தோல்வியடைந்துள்ளதாக வெரிடே ஆராய்ச்சியின் சர்வதேச நாணய நிதியத்தளம் தெரிவித்துள்ளது. தோல்வியுற்ற இரண்டு பொறுப்புகள் வருவாய் தொடர்பானவையாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1வீத வரி வருவாயை அதிகரிப்பது இதில் முதலாவது நிபந்தனையாகும். ⭕புதிய மத்திய வங்கிச் சட்டம் மே 30க்குள் வரி முன்மொழிவுக்கு ஏற்ப பந்தயம் உட்பட்ட வரி விகிதங்களை அதிகரிப்பது இரண்டாவது நிபந்தனையாகும். இணைத்தள நிதி வெளிப்படைத் தளத்தை நிறுவுதல் என்ற நிபந்தனை, மே மாத இறுதியில் ஓரளவு நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து தயாரிக்கப்பட்ட புதிய மத்திய வங்கிச் சட்டத்திற்கு இலங்கை நாடாளுமன்ற அங்கீகாரம் பெறப்படவேண்டும் என்ற மூன்றாவது நிபந்தனையை இன்னும் இலங்கை நிறைவேற்றவில்லை என்று வெரிடே ஆராய்ச்சியின் சர்வதேச நாணய நிதியத்தளம் தெரிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/9MYAwD5 via...

எரபரள வலததரதத கலபபகதயல நணட வரசகள உரவவத தடகக வலதரநத தகதய மறற நடவடகக.

Image
எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் திகதியை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னதாக எரிபொருள் விலைத்திருத்தம் மாதத்தின் முதலாம் திகத முன்னெடுக்கப்பட்டது. எனினும், கடந்த எரிபொருள் விலைத்திருத்த காலப்பகுதியில் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நீண்டவரிசை காணப்பட்டது. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் விலை மாற்றத்திற்கு பயந்து உரிய முறையில் எரிபொருள் கையிருப்பை பேனாமையே அதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/DKTkMUg via Kalasam

சநதயல 1600 ரப வர வறபனயகம மளகய தள! பரய மசட அமபலம

Image
சந்தையில் கலப்படம் செய்யப்பட்ட மிளகாய் தூளின் விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் மிளகாய் தூளில் கோதுமை மா, உப்புத்தூள் மற்றும் வர்ண தூள்கள் என்பன கலக்கப்படும் சம்பவங்கள் அதிகளவு பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். *⭕வெளியான காரணம்* சந்தையில் ஒரு கிலோகிராம் மிளகாய் தூள் 1,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், 40 சதவீதம் வரையில் கலப்படம் செய்யப்பட்ட மிளகாய் தூள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சந்தையில் மிளகாய் தூளின் விலை அதிகரித்துள்ளமையினால், அதிக இலாபத்தை ஈட்டுவதற்காக வர்த்தகர்கள் இவ்வாறான மோசடி செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/XMVetGA via Kalasam

மககவல இனற (18) மல பனத தலஹஜ மத தலபபற தனபடடத

Image
புனித மக்காவில் ஜூன் 19 துல்ஹஜ் ஆரம்பம் ஜூன் 27 அரபா தினம் ஜூன் 28 ஹஜ் பெருநாள் தினம் இலங்கையில் நாளை திங்கள் மாலை பிறை பார்க்கப்படும் from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/xs3ytHn via Kalasam

ஜனதபத ரணல வகரமசஙகவன உததரவ! வளயன வசட வரததமன

Image
மின்சார விநியோகம், பெட்ரோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளது.  விசேட வர்த்தமானி இது தொடர்பில்  விசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் வழங்கல் அல்லது விநியோகம், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளுக்கு பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பராமரிப்பு, உணவு, சிகிச்சை ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைத்து சேவை வேலைகள்  என்பன இதனால் அத்தியாவசிய சேவைகளாக மாறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/KbsgHzG via Kalasam

இ.ப.ச பஸகளல இன நடததனர இலல

Image
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ்களில், நடத்துனர் இன்றி சேவைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இந்த நடைமுறை ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படுத்த ஆராயப்பட்டுள்ளது  என போக்குவரத்து அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதிவேக நெடுஞ்சாலை பஸ்களில் பயணம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே, பயணச்சீட்டு விநியோகிக்கப்படும். ஆகையால், அந்த பயணச்சீட்டை சாரதியால் விநியோகிக்க முடியுமா? என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்றும் அவ்வதிகாரி தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/ZoaduHj via Kalasam

மசட நடவடகக தடரபல இலஙக மககளகக வடககபபடடளள எசசரகக

Image
இலங்கையில் பொது போக்குவரத்தினை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு ஏமாற்று நடவடிக்கை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  பொது போக்குவரத்திற்காக  பேருந்துகளை பயன்படுத்தும் மக்களிடத்தில் மோசடியான முறையில் பணம் பறிக்கும் கும்பல் பல பிரதான நகரங்களில் உலாவி வருகின்றனர்.  வீதியோரங்களில் இருந்து யாசகம் பெறும் முறை, மற்றும் பேருந்துகளில் ஏறி யாசகம் பெறும் முறை போன்ற பல்வேறு  முறைகளில் யாசகம் பெற்று வந்தவர்களை கண்டிருப்போம்.  அதனையும் தாண்டி, விபத்தில் படுகாயமடைந்து உடல் உறுப்புக்களை இழந்தவர்கள், தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி,  உறவினர்களின் உடல் நிலை மோசம் என தெரிவித்து பல்வேறு மருத்துவ  சான்றிதழ்களை காட்டி பயணிகளிடம் பணம் பெற்றுக்கொள்வோரும் உண்டு.  *⭕எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்* எனினும், கிட்டத்தட்ட பல மாதங்களாக ஒரே சான்றிதழையும் துண்டுப்பிரசுரங்களையும் வைத்து பொதுமக்களிடத்தில் மோசடியான முறையில் பணம் பறிக்கும் ஏமாற்று வேலையில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனை உண்மை என நம்பும் பல பயணிகள் அவர்களுக்கு நன்மை செய்வதாக எண்ணி...

மஸலம தரமண சடடததல பழயனறல பழயக பறநதவர மஷரரப எம.ப? ஐககய கஙகரஸ கடச தலவர மலவ மபரக அபதல மஜத கடடம!

Image
முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ம் என்ப‌து இஸ்லாமிய‌ ச‌ட்ட‌மோ ஷ‌ரீயா ச‌ட்ட‌மோ அல்ல‌ என‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் முஷ‌ர்ர‌ப் ShortNews நேர்காண‌லில் கூறியிருப்ப‌து அவ‌ர‌து இஸ்லாமிய‌ அறிவுக்குறையை காட்டுவ‌துட‌ன் அவ‌ர‌து க‌ருத்து க‌ண்டிக்க‌த்த‌க்க‌தாகும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தெரிவித்துள்ள‌து. இது ப‌ற்றி அக்க‌ட்சி த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்த‌தாவ‌து, முஸ்லிம் விவாக‌ விவாக‌ ர‌த்து ச‌ட்ட‌ம் என்ப‌து இஸ்லாமிய‌ ச‌ட்ட‌த்தில் இருந்தே எடுக்க‌ப்ப‌ட்ட‌து என்ப‌தை தெரியாத‌ ஒருவ‌ராக‌ முஷ‌ர்ர‌ப் இருப்ப‌து க‌வ‌லையான‌து. ஒரு இஸ்லாமிய‌ திரும‌ண‌த்தில் அல்ல‌து விவாக‌ர‌த்தில் என்னென்ன‌ நிப‌ந்த‌னைக‌ள் உள்ள‌தோ அவ‌ற்றை வைத்தே முஸ்லிம் விவாக‌ விவாக‌ர‌த்து ச‌ட்ட‌ம் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. முஷ‌ர்ர‌ப் MP பேசும் போது முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் திருத்த‌ம் செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும் என்றும் இது முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ம் திருத்த‌ப்ப‌ட‌ வேண்டும், திருத்த‌ கூடாது முஸ்லிம்க‌ள் இரு த‌ர‌ப்புக்குள் ஏற்ப‌ட்ட‌ பிர‌ச்சினை என்கிறார். இது த‌வ‌றான‌ வாத‌மாகும். முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை திருத்த...

ஹஜ கழவகக எதரக மஸலம சமய தணககள உததயகததரகள பததசசன அமசசரடம மறபபட

Image
News View - Atom  /  Newsview  /  2 hours ago 2023ஆம் ஆண்­டுக்­கான அரச ஹஜ் குழு­விற்கு எதி­ராக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­கத்­தர்­க­ளினால் புத்­த­சா­சன மற்றம் சமய விவ­கார அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்­க­விடம் எழுத்­து­ மூல முறைப்­பா­டொன்று சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வரு­டத்­திற்­கான ஹஜ் ஏற்­பாட்டில் குறித்த குழு­வினால் மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னங்கள் தொடர்­பி­லான முறைப்­பாடே இவ்­வாறு அமைச்­ச­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பணி­யாற்­று­கின்ற சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட தரங்­க­ளி­லுள்ள பல உத்­தி­யோ­கத்­தர்கள் கையெ­ழுத்­திட்டே இந்த முறைப்­பாடு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் கட­மை­யினை மேற்­கொள்ளச் செல்லும் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­களை கவ­னிப்­ப­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­கத்­தர்கள் ஒவ்­வொரு வருடம் சவூதி அரே­பியா செல்­வது வழ­மை­யாகும். எனினும், கொவிட் பரவல் மற்றும் நாட்டில் ஏற்­பட்ட பொரு­ளா­தார நெருக்­கட...