உலத்திலயே முன்மாதிரியாக செயற்பட்ட இம்ரான்கான்
இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதற்கிடையே, அபினந்தன் விவகாரம் பற்றி ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்த நிலையில், தற்போது நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தன் இன்று விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமரின் குறித்த அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்துள்ள இந்தியமக்கள் சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் பிரதமரை பாராட்டி வருகின்றனர். அத்துடன் இந்த அறிவிப்பு உலகத்தலைவர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மக்களும் அவரை ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர். இதன் மூலம் அனைத்து மக்களும் சமாதானத்தையும், மனிதாபிமானத்தையுமே உலகத்தலைவர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றனர் என்பதுடன், பாகிஸ்தான் பிரதமரின் இந்த முடிவு அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - First Islami...