Posts
Showing posts from August, 2019
கோத்தா. ஹக்கீம் : தொலைபேசியில் உரையாடல்
- Get link
- X
- Other Apps
பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது, கோத்தாபய ராஜபக்சவுக்கு அமைச்சர் ஹக்கீம் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதாக கூறப்படுகிறது. எனினும், இந்தப் பேச்சு தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது. ஐதேக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. கடைசியாக நடந்த மூன்று அதிபர் தேர்தல்களிலும் இந்தக் கட்சி ஐதேக தலைமையிலான கூட்டணி நிறுத்திய வேட்பாளரையே ஆதரித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. அதுபோல் கடந்த சில தினங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணிலுக்கு சஜித்தை வேட்பாளராக அறிவிக்குமாறு கோரியதாகவும் தெரிய வருகிறது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2L8dVD9 via Kalasam
நம்பகத்தன்மை கொண்ட வேட்பாளருக்கே எமது கட்சி ஆதரவளிக்கும் : ACMC தலைவர்
- Get link
- X
- Other Apps
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்பே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எந்தக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது பற்றி தீர்மானிக்கும். முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு உறுதி வழங்கும், நம்பகத்தன்மை கொண்ட வேட்பாளருக்கே எமது கட்சி ஆதரவளிக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் “விடிவெள்ளி”க்குத் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் “ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் விபரங்கள் வெளியிடப்பட்டதும் முஸ்லிம் சமூகம் தொடர்பில் நாம் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உத்தரவாதமளிக்கும் வேட்பாளருக்கு நாம் ஆதரவு வழங்குவோம். இந்தத் தீர்மானம் கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டத்திலே மேற்கொள்ளப்படும். அத்தோடு நாட்டி...
கம்பகாவில் நவீன தொழிநுட்ப கூடம் ஆரம்பித்த ரிஷாத் பதியுதீன்!
- Get link
- X
- Other Apps
"நவீன தொழில்நுட்பத்தில் நாளை உலகை வெல்வோம்" அமைச்சர் றிஷாட் தலைமையில் கம்பகாவில் நிகழ்வு.. கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தினால் கம்பஹா, யக்கல, வெரல்வத்த தொழில்நுட்ப கல்லூரிக்காக 4.64 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாக கட்டிடம், உத்தியோகபூர்வ தங்குமிட வளாகம் மற்றும் கொரிய தொழில்நுட்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட NVQ 5/6 டிப்ளோமா கற்கையின் பயன்பாட்டுக்கு பெறப்படுகின்றன பயிற்சி கூடங்களை மாணவர்களுக்கு உரித்தாக்கும் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான, இராஜாங்க அமைச்சர்களான புத்திக பத்திரன, அஜித் மண்ணப்பெரும, அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக மற்றும் கொரிய நாட்டு அதிகாரிகள்...
மொட்டின் வெற்றிக்காகவே ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி வேட்பாளர்..??
- Get link
- X
- Other Apps
ஜனாதிபதி தேர்தல் களம் வரலாற்றில் ஒரு போதுமில்லாதவாறு சூடேற ஆரம்பித்துள்ளது. பெரிய தேசிய கட்சிகள், தங்களது வெற்றியை நோக்கி காய்களை நகர்த்துகின்றன. ஏனைய சிறிய கட்சிகளும், தனி நபர்களும் எங்கு சென்றால், எதைச் செய்தால் சாதிக்க முடியுமோ அவற்றை செய்வதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான நிலையில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க சிந்திப்பதாக ஊர்ஜிதமான சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் இதனை ஒரு புரளியாக கடந்து சென்றாலும், இனியும் அவ்வாறு கடந்து செல்ல முடியாதளவு, அச் செய்தி உறுதியாகியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சார்பாக ஒருவர் களமிறங்க வேண்டும். யாரும் முன்வராவிட்டால், தான் தயாராகவுள்ளேன் என்பதே ஹிஸ்புல்லாஹ்வின் நிலைப்பாடு. இதனை தெளிவாக விளங்கினால் தான், அவரின் இந் நிலைப்பாடு தொடர்பான விமர்சன பார்வைக்குள் நுழைய முடியும். ஏன் இவ்வாறு ஹிஸ்புல்லாஹ் சிந்திக்கின்றார் எனும் வினாவுக்கு, அவர் ஜனாதியாகத் தான் இவ்வாறு சிந்திக்கின்றார் எனும் பதிலை தவிர்த்து, வேறு வகையில் சிந்தனையை அமைப்பதே பொருத்தமானது. அதிலும் இதற்கான மிகப் பொ...
ஹஜ்ஜுல் அக்பர் சஹ்ரானின் இரண்டாவது குழுவின் தலைவர் : குற்றத்தடுப்புப் பிரிவு
- Get link
- X
- Other Apps
மாவனல்ல முறுத்தவெல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை ஜமேத்துல் இஸ்லாம் அமைப்பின் முன்னாள் தலைவரான ஹஜ்ஜுல் அக்பர் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியிருப்பதாக உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது என உத்தியோகபூர்வ அரச இணையத்தளம் (news.lk) செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹஷிமுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்துள்ள இவர் சஹ்ரானின் இரண்டாவது குழுவின் தலைவர் என கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை ஜமாத்துல் இஸ்லாம் அமைப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு கோட்பாட்டு ரீதியில் ஊக்குவிப்பு வழங்கியிருப்பதாகவும் பிரிவு குறிப்பிட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/30HUzKl via Kalasam
முஸ்லிம் பெண்களின் நிகாப் மற்றும் புர்காவுக்கான தடை நீக்கப்பட்டு விட்டதா?
- Get link
- X
- Other Apps
அவசரகால சட்டம் நீக்கப்பட்டு விட்டாலும் அச்சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் பெண்களின் ஆடையான நிகாப் மற்றும் புர்காவுக்கான தடையும் நீக்கப்பட்டு விட்டதா? என்பது தெளிவற்ற நிலையில் உள்ளதால் முஸ்லிம் பெண்கள் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைக்கும்வரை விழிப்புணர்வுடன் செயற்படுமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; “அவசரகால சட்டம் நீக்கப்பட்டதன் பின்பு சிலர் நிகாப் மற்றும் புர்கா தடையும் நீங்கிவிட்டதாக பிரசாரம் செய்து வருகிறார்கள். அவர்களது பிரசாரங்களின்படி செயற்படுவதை விடுத்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைகளுக்கு அமைவாகவே முஸ்லிம் பெண்கள் செயற்பட வேண்டும். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் கிடைக்கும் வரை முகத்திரை அணியும் முஸ்லிம் பெண்கள் அவசரகால சட்டம் அமுலில் இருந்தபோ...
மாற்றுத் தலைமைகளின் முரண்பாட்டு முழக்கங்கள்; சிறுபான்மைத் தலைமைகளுக்கு சிம்ம சொப்பனமா?
- Get link
- X
- Other Apps
சுஐப் எம் காசிம் சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில் புதிய முதலீடுகளில் சில கட்சிகள் கவனம் செலுத்தியுள்ளன. இந்த கட்சிகளின் வருகைகள்,எந்தளவு தாக்கத்தை எற்படுத்தும். சிங்களச் சமூகத்தைவிடவும் சிறுபான்மைச் சமூகங்களிலிருந்து முட்டுக்கு வைத்த கம்புகள் தழைப்பதைப் போன்று பல கட்சிகள் முளைப்பதேன்? தேர்தல் காலங்களில் நாக்கிள் புழுவும் படம் எடுக்கும் என்பார்கள். இதைப்போன்ற படங்களையா புதிதாக முளைக்கும் கட்சிகள் திரையிடுகின்றன. அரசியல் பங்கீடு,சுயஅதிகாரம், ஆள்புல எல்லைகளை அடையாளம் காண்பதற்கான நகர்வுகளில் சிறுபான்மைச் சமூகங்களின் பாரம்பரியக் கட்சிகள் விட்ட தவறுகளிலிருந்தா? இப்புதிய கட்சிகள் தழைக்கின்றன. இல்லாவிட்டால் பிழைப்புக்கு வழியின்றி ஏதாவது கோஷங்களுடன் அரசியலில் முதலிட இவை முனைகின்றதா? இந்தக் கேள்விகளுக்குத்தான் இன்று பலரும் விடைகளை எதிர்பார்க்கின்றனர். எனினும் இவை எவையும் புதிதாக முளைத்த கட்சிகளும் இல்லை. சிறுபான்மைச் சமூகங்களின் பாரம்பரியக் கட்சிகளில் முக்கியஸ்தர்களாகவும், பங்காளர்களாகவும், போராளிகளாகவும் இருந்தவர்களே புதுப்புது அணிகளில் சங்கமிக்கின்றனர். வெவ்வேறு கொள்கைகள், கோட்பாடு...
பயங்கரவாதம் உள்ளது என அரசியலுக்காக பேசுகின்றனர் :ரவூப் ஹக்கீம்
- Get link
- X
- Other Apps
இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம் இருக்கின்றது என வெளியிடப்படும் கருத்துக்கள் அரசியல் ரீதியானவை எனவும், அதனை சிறுபான்மை மக்கள் பெரிதாக விடயமாக கருத வேண்டியதில்லை எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஹக்கீம் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த போது அந்த நாட்டு ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம் செயற்படுகின்றது எனக் கூறப்படுவதை அரசியல் ரீதியான கருத்ததாகவே நான் காண்கின்றேன். முஸ்லிம் மக்கள் தலைவர் என்ற முறையில் இதனை கூறுகிறேன். இந்த கருத்துக்கள் தொடர்பாக முஸ்லிம்களோ, தமிழர்களோ அச்சம் கொள்ள தேவையில்லை. நாட்டில் மீண்டும் அப்படியானதொரு நிலைமை ஏற்படாத வகையில் கவனமாக இருக்க வேண்டும். புலனாய்வு பிரிவினர், பாதுகாப்பு தரப்பினர் அதற்கு இடமளிக்க மாட்டார்கள் என நம்புவதாகவும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/329ZdRK via Kalasam
வேட்பாளர் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் : சஜித்
- Get link
- X
- Other Apps
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் வேட்பாளர் பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட்டு ஜனநாயக தேசிய முன்னணி அறிவிப்பும் வெளியாகும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் சஜித் பிரேமதாச. கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு கூட்டணி அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எனினும், சஜித் பிரேமதாசவுக்கு தொடர்ந்தும் கட்சி மட்டத்தில் எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2zsPERy via Kalasam
புத்தளம் குப்பை விவகாரம் : சட்ட விரோதம் என நீதிமன்றம் அறிவிப்பு
- Get link
- X
- Other Apps
அல்ஹம்துலில்லாஹ்..! அல்ஹம்துலில்லாஹ்..! புத்தளத்திற்கு குப்பை கொண்டுவருவது சட்டவிரோதமானது என இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தற்காலிக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது..!! # இதுவரை குப்பையை கொண்டுவந்தது EPL license இல்லாமலேயே (சட்டவிரோதமாக) என நிறுவப்பட்டுள்ளது..! # இதுவரை குப்பையை கொண்டுவருவதற்கு பாதுகாப்பளித்த இராணுவமும் போலீசாரும் இனி குப்பையை கொண்டுவராமல் இருக்க மக்கள் சார்பாக உதவ வேண்டும்...! # இந்த கட்டளைகள், இதனை அமுல்படுத்துவதோடு சம்பந்தப்பட்ட அணைத்து நிறுவனங்களுக்கும் இன்று சட்டரீதியாக அறிவிக்கப்படும்..! # வழக்கின் அடுத்த தினம் எதிர்வரும் 12 - 03 -2020 இது சந்ததி காக்கும் சரித்திரப்போராட்டத்தின் முதல் வெற்றிப்படி..! இன்ஷா அல்லாஹ் நிரந்தரத் தீர்வு நோக்கி எமது வழக்கு முன்னேற அனைவரும் கைகோர்ப்போம்...! இயற்கையை நேசிக்கும் இலங்கை வாழ் சகல உள்ளங்களுக்கும்.... இந்த சாத்வீகப்போராட்டத்திற்கு இறைவனிடம் பிரார்த்தித்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் இந்த இனிப்பான செய்தியை நன்றியுடன் பகிர்ந்துகொள்கிறோம்...! க்ளீன் புத்தளம் அமைப்பு from Ceylon Muslim - NEWS CASTI...
விடுதலை புலிகள் இருவர் மருதமுனையில் கைது!
- Get link
- X
- Other Apps
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் மருதமுனையில் நேற்று விசேட அதிரடிப்படையால் ஒருவர் கைதானார். புலிகளின் அடையாள அட்டைகளை தயாரிப்பதாக கிடைத்த தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2HuxLWC via Kalasam
வேட்பாளர்களின் கொள்கைகள் வெளியான பின்னரே முடிவெடுப்போம் : ரிஷாத் பதியுதீன்
- Get link
- X
- Other Apps
இதுவரையில் தேர்தல் அறிவிக்கப்படவுமில்லை, வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான அறிவித்தல் விடுக்கப்படவுமில்லை. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கட்சியின் உயர் பீடம் கூடியே யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற இறுதித் தீர்மானம் பெறப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஸாட் பதியுதீன் தெரிவித்தார். இதுவரையில் இரு கட்சிகள் மாத்திரமே தமது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அரசாங்கத்திலுள்ள பிரதான கட்சிகள் இதுவரை வேட்பாளரை தீர்மானிக்க வில்லை. வேட்பாளர்கள் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் அவர்களது கொள்கைகளை வைத்தே தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நேற்று ஊடகங்களிடம் குறிப்பிட்டார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/32dUnCZ via Kalasam
நிறைவு பெற்றது அவசரகால சட்டம் : நீடிக்க ஜனாதிபதி தீர்மானமில்லை
- Get link
- X
- Other Apps
உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் நடைமுறைக்கு வந்த அவசரகால சட்டத்தினை கைவிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏப்பிரல் 21 ம் திகதிக்கு பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி ஒவ்வொரு மாதம் 22 ம் திகதியும் அவசரகால சட்டத்தினை நீடித்து வந்தார். எனினும் ஜனாதிபதி அவசரகாலகட்டச்சட்டத்தினை நீடிப்பதில்லை என தீர்மானித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் வியாழக்கிழமையுடன் அவசரகால சட்டத்தினை முடிவிற்கு கொண்டுவந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளன. ஜனாதிபதி அவசரகாலசட்டத்தினை நீடிப்பதற்கான புதிய அறிவிப்பை வெளியிடவில்லை என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை அரசாங்க அச்சககூட்டுத்தாபனமும் அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான புதிய வர்த்தமானி அறிவித்தல் எதுவும் கிடைக்கவில்லை என்பதை உறுதிசெய்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கடுமையான அவசரகால சட்டத்தினை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் இடம்ப...
கோத்தாவுக்கு எதிராக களமிறங்கும் அமில தேரர்!
- Get link
- X
- Other Apps
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நிறுத்தியுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு எந்த ஆதரவையும் வழங்க போவதில்லை என தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில், கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவாவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அர்ப்பணிப்புடன் செய்வேன். கோத்தபாய அண்மையில் தலதா மாளிகைக்கு வழிபாடு செய்ய சென்றிருந்தார். மூன்று மணி நேரத்திற்கும் மேல் தலதா மாளிகை மூடப்பட்டிருந்தது. இதனால், தலதா மாளிகைக்கு வழிபாடுகளில் ஈடுபட வந்திருந்த பக்தர்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகினர். இதனையடுத்து அவர்கள் பலவந்தமாக தலதா மாளிகைக்குள் புகுந்து, வழிபாடுகளில் ஈடுபட்டனர். மேட்டுக்குடி கொலைகாரர்களுக்கு மட்டுமா தலதா மாளிகையில் வழிபாடுகளை செய்ய முடியும்?. தலதா மாளிகையில் இருந்த சில பிக்குமார் கோத்தபாய ராஜபக்சவை மிகப் பெரிய அரசரை போல் கவனித்தனர் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் அண்மையில் ஒருநாள் மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, புனித வெள்ளரச மரம் அமைந்துள்ள ...
கஞ்சிப்பான இம்ரானுக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை
- Get link
- X
- Other Apps
பாதாள உலகக் கும்பலின் பிரபல உறுப்பினர் கஞ்சிப்பான இம்ரானுக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 5.3 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருளை கடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அவருக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரபல போதைப்பொருள் வர்த்தகரான மாக்கந்துர மதுசின் பிரதான சகாவான கஞ்சிப்பான இம்ரான் டுபாயில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றின் போது மாக்கந்துர மதுசுடன் சேர்த்து டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(அ) from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2L5t4DM via Kalasam
பைஷல் காசீம், அலி சாஹிர் சற்றுமுன் பதவியேற்றனர்; ஹரீஸ் ஏற்கவில்லை
- Get link
- X
- Other Apps
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இராஜாங்க அமைச்சர்களாக சற்று முன் பதவியேற்றனர். பைசல் காசீம் சுகாதார இராஜாங்க அமைச்சராகவும் ,அலிசாஹீர் மௌலானா சமூக வலுவூட்டல், ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகவும் பதவியேற்றனர் . இன்று நண்பகல் ஜனாதிபதி முன்னிலையில் இந்த பதவிகளை ஏற்றனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2ZoCmQq via Kalasam
பயங்கரவாத சம்பம் : 14 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் - கல்முனை நீதவான்
- Get link
- X
- Other Apps
பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 14 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு மாவட்ட நீதிபதியும் கல்முனை நீதிமன்ற பதில் நீதிபதியுமான பயாஸ் றஸாக் முன்னிலையில் இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது ஆஜர்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் பல்வேறு பிரதேசங்களில் கைதாகினர். இவர்கள் இரு மாதங்களுக்கும் மேலான தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் இன்று மேற்கொள்ளப்பட்டன. இதன் போது சந்தேகநபர்கள் 14 பேருக்கும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு இவ்வழக்கின் அடுத்த தவணையை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 04 திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் அனைவரும் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, மருதமு...
முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்!
- Get link
- X
- Other Apps
பண்டுவஸ்நுவர பள்ளிவாயலில் தொழுகைக்கு தடை...!
- Get link
- X
- Other Apps
பண்டுவஸ்நுவர - கொட்டம்பபிட்டிய, அக்பர் மாவத்தையில் அமைந்துள்ள "மஸ்ஜித் லுஉ லுஉல் அம்மார்" ஜும்ஆப் பள்ளி வாசலில், ஜும்ஆ தொழுகை உள்ளிட்ட ஐந்து நேர தொழுகைகளை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு தொழுகை நடாத்தப்பட்டு வந்த இப்பள்ளிவாசல், ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை அடுத்து, கடந்த மே மாதம் 13 ஆம் திகதியன்று இப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின்போது இப்பள்ளி வாசலும் குண்டர்களால் தாக்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதனையடுத்து, இப்பள்ளி வாசலின் துப்புறவுப் பணிகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டு, தொழுகை மற்றும் இதர மார்க்கக் கிரியைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், குளியாப்பிட்டிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அபேவர்தனவின் பணிப்புரைக்கமைய, ஜூலை மாதம் 18 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் இப்பள்ளி வாசல் தற்காலிகமாக மூடப்பட்டதாக, இப்பள்ளி வாசல் நிர்வாக சபையினர் தெரிவித்தனர். நாட்டின் பல்வேறு முஸ்லிம் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களின்போது தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல்கள் அன...
முஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க வேண்டும் : ஹாபீஸ் நசீர்
- Get link
- X
- Other Apps
எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் இம்முறை 50 சதவீத வாக்குகளைப்பெறப் போவதில்லை. சிறுபான்மை மக்களின் வாக்குகளே ஜனாதிபதி யார் என்பதை உறுதி செய்யப்போகின்றது. எனவே முஸ்லிம் மக்கள் தமது சக்தி எத்தகையது என்பதை வெளிக்காட்டும் விதத்தில் ஜனாதிபதி வேட்பாளராக முஸ்லிம் ஒருவரை நிறுத்தி அவருக்கு ஒட்டுமொத்தமாக தமது முதலாவது வாக்கை அளிக்கவேண்டும். இரண்டாவது வாக்கை முஸ்லிம்களின் கோரிக்கைகளை ஏற்று அதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் செயற்படக்கூடிய பிரதான வேட்பாளருக்கு வழங்கவேண்டும். இத்தகைய நடவடிக்கையே சமகால அரசியல் போக்கில் முஸ்லிம்களுக்கு சிறந்த பெறுபேற்றைத்தரும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, சமகால அரசியல் நிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் மிகமுக்கிய வகிபாகம் பெறுகின்றன. எனவே, முஸ்லிம் மக்கள் தமது ஒட்டுமொத்தமான 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை எவ்வாறு அளிக்கப் போகின்றார்கள்...
“பொலிஸ் ஆணைக்குழுவினர் பதவி விலகவேண்டும்” ஆசாத் சாலி வலியுறுத்து
- Get link
- X
- Other Apps
கண்ணாடி வீட்டுக்குள்ளே இருந்து கல்லெறிய வேண்டாமென்று இனவாத இலத்திரனியல் ஊடகங்களை தான் எச்சரிப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான ஆசாத் சாலி தெரிவித்தார். இன்று காலை (07) ராஜகிரியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது: தினமும் காலையில் எழுந்தவுடன் இவர்களின் பொய்களையும் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளையுமே நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது . வீணாக மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள். சதொச நிறுவனத்துடன் என்னை தொடர்பு படுத்தி பொய்யான செய்திகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். மொட்டுக்கட்சியினரை ஆட்சியில் கொண்டுவருவதற்காக இந்த இனவாத ஊடகங்கள் முஸ்லிம்களை பலிக்கடவாக்கின்றனர். குருநாகல் பிரதி பொலீஸ் மாஅதிபர் கித்சிறிஜெயலத்தின் இடமாற்ற விடயத்தில் பொலிஸ் ஆணைக்குழு, காலையில் ஒரு முடிவும் மாலையில் ஒரு முடிவும் மேற்கொண்டதிலிருந்து இந்த ஆணைக்குழுவினர் முள்ளந்தண்டில்லாதவர்களென நிரூபித்துள்ளனர். எனவே உடனடியாக பொலிஸ் ஆணைக்குழு பதவி விலக வேண்டும். அழுத்தங்களுக்காக வேலை செய்தால் எவ்வாறு இதனை சுயாதீன ஆணைக்குழு என்றழைப்பது? 48 நாடுகளுக்கு ஆறு மாதங்கள...
கல்முனை விவகாரம் : ரிஷாத் -ஹரீஸ் விசேட சந்திப்பு
- Get link
- X
- Other Apps
-ஊடகப்பிரிவு- கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கல்முனை ஜூம்ஆ பள்ளிவாசல்,வர்த்தக சங்கம் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். நேற்று இரவு (05) கொழும்பில் நடந்த இந்த சந்திப்பில் கல்முனை ஜூம்ஆ பள்ளி தலைவர் டாக்டர் அஸீஸ் , வர்த்தக சங்க தலைவர் சித்தீக் ஹாஜியார்,ஆகியோர் உட்பட கல்முனை முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.இந்த சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூபும் பங்கேற்றார். கல்முனை விவகாரத்தில் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமெனவும் அதற்காக முழுமூச்சுடனும் செயற்படுமாறும் இவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு பிரச்சினைக்கு சுமூக தீர்வுகாண, காட்டி வருகின்ற அக்கறை குறித்து கல்முனை மக்கள் சார்பில் தமது நன்றிகளையும் தெரிவித்தனர். எதிர்காலத்திலும் தொடர்ந்தும் ஒத்துழ...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், மஹிந்த-மைதிரி சந்திப்பு
- Get link
- X
- Other Apps
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் காலமான குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்கவின் இறுதிக்கிரியைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பிற்கு முன்னர் அண்மையில் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2YJPdwr via Kalasam
நிந்தவூரில் குழந்தை ஒன்று கடலில் மூழ்கி மரணம்
- Get link
- X
- Other Apps
நிந்தவூர் 9ம்,பிரிவைச் சேர்ந்த இல்லியாஸ் , நிஸா" தம்பதிகளின் குழந்தை முகம்மட் ஆதில்" ஒன்னரை வயது ஆண் குழந்தை இன்று காலை கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளது. "இன்னாலிலாஹி வஇன்னாயிலைகி ராஜுஹுன்" குறித்த குழந்தையின் அப்பா " அதாவது குழந்தையின் உம்மாவின் தந்தையார் குழந்தையை கடற்கரைக்கு கூட்டிச் சென்று குழந்தையை கடற்கரை ஒரத்தில் விளையாட விட்டுவிட்டு குழந்தையை கவனிக்காத போது குழந்தையை கடல் அடித்துச் சென்றுள்ளது. குழந்தை கடலில் மூழ்கியதும் அறியாது சற்று நேரத்திற்கு பிறகு குழந்தையை அங்கும் இங்கும் தேடிப்பாத்துவிட்டு வீட்டுக்கு திரும்ப வந்து வீட்டாரிடம் குழந்தையை காணவில்லையென கூறிவிட்டு திரும்பவும் கடற்கரைக்கு தேடிச் சென்றபோது சுமார் 800 மீட்டருக்கு அப்பால் குழந்தையின் உடல் கரையொதிங்கிய நிலையில் மீனவர்கள் கண்டெடுத்ததாக அப்பிரதேசவாசிகள் கூறுகின்றனர். குறித்த குழந்தையின் தந்தை வெளிநாட்டுக்குச் சென்று 15 நாட்களேயான நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் மரணமடைந்த குழந்தையின் உடலை நிந்தவூர் ஆதாரவைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பொலி...
நீர்கொழும்பில் பதற்ற நிலை : முஸ்லிம் கடைகளுக்கு பூட்டு
- Get link
- X
- Other Apps
புனித செபஸ்தியன் உருவச் சிலைக்கு இனந்தெரியாதவர்கள் சேதம் விளைவித்ததையடுத்து நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்கின்றனர். பதற்ற நிலை உள்ளதால் அப்பகுதியில் உள்ள முஸ்லிம்களின் கடைகளை தற்காலிகமாக மூடுமாறு பாதுகாப்புத் தரப்பு கேட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2YNCskx via Kalasam
பர்தா அணிந்து பரீட்சை எழுத எந்தத் தடையும் இல்லை : பரீட்சைகள் ஆணையாளர்
- Get link
- X
- Other Apps
பர்தா அணிந்து பரீட்சை எழுத எந்தத் தடையும் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் தன்னிடம் தெரிவித்ததாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குப் பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் மாணவிகளைப் பரீட்சை எழுத அனுமதி வழங்காமல் இடையூறு செய்யப்பட்டமை தொடர்பில், பரீட்சைகள் ஆணையாளரின் கவனத்திற்குக் கொண்டுவந்தபோதே பரீட்சைகள் ஆணையாளர் இதனைத் தெரிவித்ததாக முஜீபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார் இது தொடர்பில் தேவையான அறிவுறுத்தல்களைப் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு வழங்குவதாக ஆணையாளர் தன்னிடம் உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். க.பொ.த உயர் தரப்பரீட்சை நேற்று நாடுபூராகவும் ஆரம்பமானது. இந்த நிலையில் பாடசாலை சீருடையில் (வெள்ளை நிற பர்தா) அணிந்து பரீட்சை எழுதச் சென்ற சில மாணவிகளுக்குப் பர்தாவை அகற்றிவிட்டு பரீட்சை எழுதுமாறு பணிக்கப்பட்டதாக சில பகுதிகளிலிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக பூகொடை குமாரிமுல்ல மாணவிகள் சிலர் பரீட்சை எழுதத் தயாரான நிலையில், பர்தாக்களை அகற்றுமாறு பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி கடுமையாக உத்தரவிட்ட...
பதற்றத்தை உருவாக்கிய ஞானசாரவின் வழக்கு ஒத்திவைப்பு
- Get link
- X
- Other Apps
இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை சின்னவெட்டி பிரதேசத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற போது திட்டமிடப்பட்ட குற்றங்கள் தடுப்பு பொலிஸ் பிரிவினர் வழக்கு தொடர்பாக சட்ட மா அதிபர் ஆலோசனை நாடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனயைடுத்து வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் ஆறாம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2YLnGP2 via Kalasam
உயர்தர பரீட்சையில் முஸ்லிம் மாணவிகளுக்கு நடந்த அநீதி!
- Get link
- X
- Other Apps
அடையாளப்படம் அஸ்ரப் ஏ சமத் இன்று (05.8.2019) ஆரம்பமான க.பொ.த. உயா் தர பரீட்சையின் போது கம்பகா மாவட்டத்தில் உள்ள புகொட பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மாணவிகள் கிருந்திவெல் உள்ள கிருந்திவெல சிங்கள மத்திய மகா வித்தியலயத்தில் பரீட்சை எழுதச் சென்றபோது அங்கு கடமையில் இருந்த பரீட்சை பரிசோதகா்கள் பர்தாவை கழற்றிவிட்டே பரீட்சை மண்டபத்திற்குள் வரும்படியும் அதன் பின்னரே பரீட்சை எழுதுவதற்கு அனுமதித்தாக அங்குள்ள மாணவிகளது பெற்றோா்கள் தெரிவிக்கின்றனா். from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2ZzgrH0 via Kalasam
முஸ்லிம்களின் நிலங்களை தமிழ் கூட்டமைப்பு அபகரிக்க முயற்சி : ஹரீஸ் காட்டம்
- Get link
- X
- Other Apps
இந்த நாட்டில் இப்போதைய சூழ்நிலையில் முஸ்லிங்களாகிய நாம் மிகப்பெரும் சவால்களுக்கு முகம்கொடுத்து வருகிறோம். எமது உரிமைகள், நிலங்கள், சொத்துக்களை பாதுகாப்பதில் பாரிய முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட மஸ்ஜித் சம்மேளனம் ஏற்பாடு செய்த ‘முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான மாநாடு’ இன்று (4) தெஹிவளை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது இங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு உரையாற்றினார். தனது உரையில் மேலும், இந்த நாட்டில் தொடர்ந்தும் மார்க்கவிடயங்களை கடைபிடிக்க முடியுமா என்ற சவால் எம் முன்னால் உள்ளதுடன் எமது பூர்விக நிலங்களையும் அந்நியர்கள் ஆக்கிரமிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. அதை விட இந்த நாட்டில் வாழும் முஸ்லிங்களின் தனிமனித பாதுகாப்பு பாரிய சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எமது முஸ்லிம் உம்மத்து இவற்றுக்கெல்லாம் பயந்து ஒடுங்கி வாழ முடியாது. இப்போது கொண்டுவரப்பட்டுள்ள முஸ்லிம...
நிகாபுக்கு தொடர் தடை இல்லை : முஸ்லிம் தலைவர்கள் உறுதியான நிலைப்பாட்டில்
- Get link
- X
- Other Apps
முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாபை தடை செய்வதற்குத் துணைபோக வேண்டாம். முஸ்லிம்களின் உரிமைகளுக்காக தற்போது அமுலிலுள்ள சட்டங்களைப் பாதுகாப்பதற்கு ஒன்றுபடுங்கள் என கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனங்கள் இணைந்து நேற்றைய தினம் தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசலில் நடாத்திய விசேட மாநாட்டில் கோரிக்கை விடுத்ததுடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜரையும் கையளித்தன. முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாபை தடைசெய்வதற்கு சட்டமொன்றினை இயற்றிக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றினை நீதியமைச்சர் தலதா அத்துகோரள சமர்ப்பித்திருக்கின்ற நிலையில் அதற்கு எதிர்ப்புத்தெரிவிப்பதற்கும், தடைசெய்ய வேண்டாம் எனக் கோருவதற்குமான கூட்டமொன்று நேற்றுக் காலை தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்துக்கு நாடெங்கிலுமிருந்து பள்ளிவாசல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 6000 பேர் கலந்துகொண்டனர். அக...