மதராசாவுக்கு செல்ல மறுத்த மகனுக்கு நேர்ந்த கதி
காத்தான்குடி இரண்டாம் குறிச்சி ஊர்வீதியில் வசித்து வரும் சிறுவனொருவன் சிறுவனின் தாய் சூடு வைத்த காயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்திய சாலையில் இன்று (25.02.2020) செவ்வாய்க்கிழமை காலை அனுமதிக்கப்பட்டுள்ளான். இது தொடர்பில் தெரியவருவதாவது 4ம் ஆண்டில் பாடசலையில் கல்வி கற்கும் 9வதுடைய குறித்த சிறுவன் கல்விக்கும் பாடசாலைக்;கு இன்று(25.02.2020) செவ்வாய்க்கிழமை காலை சென்ற அப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அப்பாடசாலையின் அதிபரை சந்தித்து இப்பாடசாலையில் கல்விக கற்கும் சிறுவன் ஒருவனுக்கு அச் சிறுவனின் தாய் அயன் பொக்சினால் சூடு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையத்து குறித்த பாடசாலை அதிபரும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரும் மாணவனின் வீட்டுக்கு சென்று சிறுவனை பார்க்க முற்பட்ட போது முதில் மறுத்த தாய் பின்னர் மகனை காண்பித்துள்ளார். பலத்த காயங்களுடன் காணப்பட்ட சிறுவனை அழைத்துக் கொண்டு அதிபரும் ஆசிரியரும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுக்கு காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு சென்று சிறுவனை அனுமதித்துள்ளனர். ஆரம்பக்கட்ட சிகிச்சை மற்றும் விசாரணைகளையடுத்து சிறுவன் மேலதிக சிகிச்சைகள...