Posts

Showing posts from December, 2021

20 வருடங்களாக வியாபாரம் செய்யும் அப்துல் கலீமை, அச்சுறுத்தி வெளியேற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் - வாழைச்சேனையில் அநீதி

Image
- எஸ்.எம்.எம்.முர்ஷித் - கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதியில் மஜ்மாநகர் சந்தியில் காணியில் கடை அமைத்து வியாபாரம் செய்து வரும் என்னை வாழைச்சேனை வனஇலாகா அதிகாரிகள் உடனடியாக எழும்புமாறு கோரியுள்ளதாக சம்பந்தப்பட்ட வியபாரியான ஏ.எல்.அப்துல் கலீம் (வயது 58) தெரிவித்தார். கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதியிலுள்ள காணியில் இருபது வருடங்களுக்கு மேலாக எனது தந்தை சிறிய கடை அமைத்து வியாபாரம் செய்து வந்த நிலையில் பின்னர் நான் அதே இடத்தில் சாப்பாடு, சர்பத், இளநீர், தேனீர் போன்றவற்றை வியபாரம் செய்து வருகின்றேன். அத்தோடு நான் இங்கு வியாபாரம் செய்வதற்கு என்னால் ஓட்டமாவடி பிரதேச சபையில் வியாபார அனுமதிப் பத்திரம் பெற்றுள்ளதுடன், மின்சார பட்டியலும் எனது பெயரியல் வருவதுடன், குறித்த காணிக்காக என்னால் விண்ணப்பித்த ஒப்ப துண்டும் என்னிடம் உள்ளது. இந்த நிலையில் தற்போது வாழைச்சேனை வனஇலாகா அதிகாரிகள் வருகை தந்து என்னை இவ்விடத்தில் இருந்து எழும்பி செல்லுமாறு கோரியுள்ளனர். இது என்னுடைய இடம் என்பதற்கு என்னிடம் பல ஆதாரங்கள் இ

ரூ.202 பில்லியன் அச்சிட ஏற்பாடு

Image
202 பில்லியன் ரூபாவை அச்சிடுவதற்கு இலங்கை மத்திய வங்கி டிசெம்பர் (29) நடவடிக்கை எடுத்திருந்தது. கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதியின் பின்னர் பணம் அச்சிடப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 825 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை மத்திய வங்கி 48.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான முறிகளை விநியோகிப்பதற்கு டிசெம்பர் 29ஆம் திகதியன்று நடவடிக்கை எடுத்திருந்த போதிலும் அதில் 33.5 பில்லியன் பெறுமதியான முறிகளையே விற்பனை செய்ய முடிந்துள்ளது. “வட்டி வீதம் மற்றும் ​நாணய மாற்று விகிதத்தை தொடர்ந்தும் கட்டுப்படுத்துவதன் மூலம் நெருக்கடி மேலும் தீவிரமடைந்து வருகிறது” என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி டப்ளியு. ஏ.விஜேவர்தன தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3HoS6t9 via Kalasam

மகிந்த ராஜபக்ஷ உயிருடன் இருக்கும் வரை, அரசியலிலிருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதி வழங்க மாட்டார்கள்

Image
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற முயற்சித்தாலும் நாட்டு மக்கள் அவரை ஓய்வு பெற அனுமதிக்க மாட்டார்கள் என பயணிகள் போக்கு வரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசியலிலிருந்து ஓய்வு பெற்று, பிரதமர் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கவுள்ள தாக நாட்டில் தகவல் ஒன்று பரவி வருவது குறித்து செய்தியாளர் ஒருவர், திலும் அமுனுகமவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் இவ்வாறு பதில் வழங்கி யுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஒரு முறை அரசியலிலிருந்து ஓய்வு பெற முயற்சித்தார். நாட்டு மக்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை. மீண்டும் அவர் ஓய்வு பெற முயற்சித் தாலும் அவர் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் மக்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள். இதுதான் உண்மையான கதை. அவர் விரும்பினாலும் அதற்கான சந்தர்ப்பம் அவருக்குக் கிடைக்காது. மகிந்த ராஜபக்ஷ உயிருடன் இருக்கும் வரை அரசியலிலிருந்து ஓய்வு பெற மக்கள் அனுமதி வழங்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3eJlwWo via Kalasam

புதுவருட கொவிட் கொத்தணி அதிரடியாக அதிகரிப்பு

Image
இன்று (31) புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 495 ஆகும். இந்த எண்ணிக்கை புதுவருட கொவிட் கொத்தணிக்குள் அடங்குகின்றது. அந்த எண்ணிக்கையுடன் சேர்த்து, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 587,245 ஆகும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3eC1r4D via Kalasam

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு – பெரிய வெங்காயத்திற்கான வரி குறைப்பு

Image
இன்று நள்ளிரவு முதல் இறக்குமதி செய்யப்படும் உருளைகிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான வரியை 30 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3pI4z5i via Kalasam

தமிழ் பேசும் கட்சிகளின் கடிதம் : சமூகத்திற்காக தலையை அடமானம் வைக்க துணிந்த மயில்..

Image
தற்போது தமிழ் பேசும் கட்சிகள் சில இணைந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை அறிய முடிகிறது. இந்த முயற்சியில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளான மு.கா மற்றும் அ.இ.ம.கா ஆகியனவும் உள்வாங்கப்பட்டிருந்தன. இக் கடிதத்தில் அ.இ.ம.கா கையொப்பமிடுவதில்லை என, அதன் உயர்பீடம் மிக தைரியமான தீர்மானத்தை எடுத்துள்ளது. எச் சமூகமும் இன்னுமொரு சமூகத்தோடு அவசியமற்ற விடயம் ஒன்றில் முரண்பட வேண்டிய தேவையில்லை. இருந்தாலும், சில முரண்பாடுகள் தவிர்க்க முடியாததே! தவிர்க்க முடியாத முரண்பாடுகளில் ஒன்றாகவே இதனையும் நோக்க முடிகிறது. வடக்கையும், கிழக்கையும் இணைத்தல், சமஷ்டி தீர்வு போன்றன முஸ்லிம் சமூகத்தை நேரடியாக பாதிக்கும். இதனை முஸ்லிம் கட்சிகள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள கூடாது. இவ்விடயத்தில் எவ்வித சமரசமும் அவசியமற்றது. அ.இ.ம.காவின் கையொப்பமிடுவதற்கு எதிரான தீர்மானமானது இவற்றையே வலியுறுத்தி நிற்கின்றன. இதுவே முஸ்லிம் சமூகத்தின் தீர்மானமாகவும் உள்ளது. அ.இ.ம.காவின் தலைவர் அண்மைக்காலமாக முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் யாவரும் அறிந்ததே! அவரது

கடுமையான தீர்மானங்களை எடுக்க தயாராகும் ஜனாதிபதி – வெளியான தகவல்

Image
” பங்காளிக்கட்சிகளின் அழுத்தத்தால் சில தீர்மானங்களை மீளப்பெற வேண்டிய நிலைமை கடந்த காலத்தில் அரசுக்கு ஏற்பட்டது. இனி அவ்வாறு நடக்காது. 2022 முதல் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும்.” – என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” அரசு எதிர்ப்பார்த்த இலக்கை நோக்கி கடந்த இரண்டு வருடங்களில் பயணிக்க முடியாமல்போனது. இதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். 2022 ஆம் ஆண்டு முதல் மக்களின் எதிர்ப்பார்ப்புகள் உரிய வகையில் நிறைவேற்றப்படும். அதற்காக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும். ஜனாதிபதி தலைமையில் நேற்று (நேற்று முன்தினம்) இது சம்பந்தமாக தீர்க்கமான கலந்துரையாடலும் இடம்பெற்றது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் இடம்பெறுமானால் வேலையை நிறுத்தியாவது, அந்த திட்டத்தை நாம் நிச்சயம் செயற்படுத்துவோம். எமது தோழமைக்கட்சிகள் மற்றும் சில குழுக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பிரகாரம் சில தீர்மானங்களை நாம் மீளபெற்றோம். இது பாரிய தவறாகும். கிழக்கு முனையத்துக்கு எ

தாமதிக்கும் ஒவ்வொரு நாட்களும், பேராபத்து மிக்கதாகவே அமையும் - ரணில் எச்சரிக்கை

Image
"நாடு பட்டினிச் சாவை நோக்கிச் செல்கின்ற இன்றைய நிலைமையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் நாட்டின் நலன் கருதி அவசர தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். இல்லையேல் 2022ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே நாடும் அரசும் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் சமகால நிலைவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு, எரிவாயு அடுப்பு வெடிப்பு, எரிபொருட்களின் விலையேற்றம், பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, மரக்கறிகளின் விலை உயர்வு எனப் பலதரப்பட்ட பிரச்சினைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரக்தியின் விளிம்பில் நிற்கின்றனர். ஆனால், அரசோ மக்களை ஏமாற்றும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது. இந்த அரசின் முட்டாள்தனமான தீர்மானங்களால் நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சியடைந்துள்ளது. எந்த நாடும் இலங்கைக்குக் கைகொடுக்க மு

உணவுக்காக இந்தியா , பாகிஸ்தானிடம் கடன் கோரும் இலங்கை

Image
அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் கடன் கோரியுள்ளார். இது தொடர்பில் வர்த்தக அமைச்சர், இரண்டு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரிசி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்களை இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து இலங்கை கொள்வனவு செய்துவரும் நிலையில், மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் கொள்வனவுக்காக இவ்வாறு கடன் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3zf6q4x via Kalasam

காஸ் அடுப்பு வெடித்ததில் வீடு எரிகிறது.

Image
சமையலறையில் காஸ் அடுப்பு வெடித்து சிதறியதில், அந்த வீடே தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றது. இந்த சம்பவம் வத்தளை - ஹூனுப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது என தீயணைப்பு படையினர் தெரிவிக்கின்றனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3qBf8Gj via Kalasam

ஆட்சி கவிழாது – அடித்து கூறுகிறார் பீரிஸ்!

Image
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராகவும் இலங்கை பிரதமராகவும் மஹிந்த ராஜபக்‌ஷவே உள்ளார். அவர் தலைமையிலான ஆட்சியை இனி ஒருபோதும் கலைக்கவும் முடியாது, கவிழ்க்கவும் முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.தலைமையிலான எதிரணியினர் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியை ஆரம்பிக்கும்போது நாம் பல சவால்களை எதிர்கொண்டோம். இருப்பினும், அந்தச் சவால்களை முறியடித்து தனிப் பெரும் கட்சியாக பொதுஜன முன்னணியை வளர்த்தெடுத்துள்ளோம். இதற்கு மக்களின் அமோக ஆதரவே முக்கிய காரணம். இப்போது எவராலும் அசைக்க முடியாத மாபெரும் கட்சியாக, கூட்டணியாக பொதுஜன முன்னணி திகழ்கின்றது. சஜித் பிரேமதாச தலைமையிலான எதிரணியினர் நினைப்பது போல் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் முரண்பாடுகள் எதுவும் இல்லை. இங்கு கருத்துச் சுதந்திரத்துக்கு இடமுண்டு. எவரும் கருத்துக்களைப் பகிரங்கமாகத் தெரிவிக்க முழுச் சுதந்திரம் உண்டு. ஒரு சிலரின் உணர்ச்சி மிகுந்த கருத்துக்களை வைத

பதில் பிரதமராக பஸில்! இரட்டை குடியுரிமை தடையாகுமா?

Image
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை பதில் பிரதமராக நியமிப்பது தொடர்பில் அரச தரப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாகவும், சிகிச்சைகளின் பின்னர் சுமார் ஒருமாதம்வரை அவருக்கு கட்டாய ஓய்வு தேவைப்படுவதாலும், பதில் பிரதமர் நியமனம் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றுவருகின்றது. இதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஆதரவு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இரட்டை குடியுரிமை கொண்டவர். எனவே, அவருக்கு பதில் பிரதமர் பதவியை வழங்குவதில் உள்ள சட்டரீதியிலான சிக்கல்கள் குறித்தும், அரசியல் ரீதியில் எழும் எதிர்ப்புகள் பற்றியும் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3zbixjc via Kalasam

திருகோணமலையில் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம்

Image
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை லிங்கநகர் முருகன் கோவில் 24ஆம் ஒழுங்கை சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (30) பிற்பகல் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. இந்த வெடிப்பு சம்பவம் இன்று சமைத்து கொண்டிருக்கும் போது இல்லத்தரசியும் அவரது கணவரும் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்த போது இவ் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவ் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவத்தின் போது கணவர் அருகில் இருந்தமையினால் தீ கட்டுப்படுத்த பட்டதாகவும் பாதிக்க பட்ட இல்லத்தரசி தெரிவித்தார். சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3eCtYXF via Kalasam

உள்நாட்டு பால்மா விலையும் அதிகரிப்பு!

Image
” இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பால்மாவின் விலையும் நிச்சயம் அதிகரிக்கப்படும்.” – என்று இராஜாங்க அமைச்சர் டி பி ஹேரத் தெரிவித்தார். ” உலக சந்தையில் பால்மா விலை அதிகரித்துள்ளது. அதனால்தான் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையும் இங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடையாமல் இருப்பதற்கு தேசிய பால்மா விலையும் அதிகரிக்கப்படும். 400 கிராம் தேசிய பால்மா 20 ரூபாவால் அதிகரிக்கப்படும். ஒரு கிலோ பால்மாவின் விலையும் உயர்த்தப்படும்.” – என்றும் அவர் கூறினார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3Hp9Dl6 via Kalasam

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஜனவரியில் மக்கள் பாவனைக்கு

Image
மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படுமென நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தின் நீளம் 40.91 கி.மீ. சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்பைக் குறைப்பதற்காக கட்டப்பட்ட இந்த நெடுஞ்சாலை நகர்ப்புறங்களைத் தவிர்த்து, முக்கியமாக காலி நிலங்கள் வழியாகச் செல்லும். 4 வழிப்பாதையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வீதியின் மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான வீதி தற்போது இலங்கையின் மிக அழகிய அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த வீதி உள்ளூர் ஒப்பந்ததாரர்களால் உள்ளூர் நிதியில் அமைக்கப்பட்டது. மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருநாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய இடங்களில் பணம் செலுத்தும் கவுன்டர்களுடன் ஐந்து பரிமாற்ற மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 137 பில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SR

திருந்ததாத திருடன்; 79 வயதிலும் அட்டகாசம்

Image
சுமார் 40 மோட்டார் சைக்கிள்களை திருடிய 79 வயது முதியவர் எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மின்னேரியா தும்பிரியபொல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், சந்தேகநபர் கைது செய்யப்படும்போது அவர் திருடிய 06 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருட்டுச் சம்பவங்களுக்கு பெயர் போன இந்த முதியவர் மீது, இதற்கு முன்னர் தான் திருடிய 17 மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னரும் 16 வருட சிறைதண்டனை அனுபவித்து வந்துள்ளதோடு, தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு திருட்டுச் சம்பங்களில் இவர் ஈடுபட்டு வருவத தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3FH4btn via Kalasam

சிலிண்டர்களை மீள கையளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு!

Image
  டிசம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்டு இதுவரை எரிவாயு நிறைவடையாத சிலிண்டர்களை மீள கையேற்பதற்கு Laugfs எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. பச்சை நிற சீல் அகற்றப்பட்டாலும் எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்குவதற்கு விருப்பமான நுகர்வோருக்கு இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என Laugfs எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.   Laugfs எரிவாயு விற்பனை முகாமையாளர் அல்லது விநியோக பிரதிநிதிகளை சந்தித்து சிலிண்டர்களை கையளிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்கும் போது, அதன் நிறைக்கமைய பணத்தை மீள செலுத்துமாறும் அல்லது அதற்கேற்ற புதிய சிலிண்டர்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக Laugfs எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3pDzOhC via Kalasam

லிட்ரோ சிலிண்டர் விநியோகம் பற்றிய அறிவிப்பு

Image
லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்ப இன்னும் மூன்று வாரங்கள் ஆகும் என அந்த நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். சந்தைக்கான எரிவாயு விநியோகம் மற்றும் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளாா். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3eyZfdZ via Kalasam

ஒமிக்ரோனின் வீரியத்தை எச்சரிக்கும் உலக சுகாதார ஸ்தாபனம்

Image
  டெல்டா மற்றும் ஒமிக்ரோன் திரிபுகளின் கலவையானது, கொவிட் எண்ணிக்கையில், ஆபத்தான பேரலையை உருவாக்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. இது, சுனாமி போன்று ஆபத்தான பேரலை என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரொஸ் அதனம் கெப்ரியேஸஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பதிவாகும் அதிகளவான புதிய நோயாளர்கள் பதிவாகின்ற நிலையில், அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பாவில் அதிகமான நாளாந்த நோயாளர் எண்ணிக்கையாக, 2 இலட்சத்து 8 ஆயிரம் பேர் ஃப்ரான்ஸில் பதிவாகியுள்ளனர். ஜோன்ஸ் ஒப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, அமெரிக்காவில் கடந்த வாரத்தில் நாளொன்றுக்கு 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். டென்மார்க், போர்த்துக்கல், ஐக்கிய இராச்சியம் மற்றும் அவுஸ்திரேலிய முதலான நாடுகளில், அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தற்போதைய நிலையில், சர்வதேச ரீதியில் நாளாந்தம் சுமார் 9 இலட்சம் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இந்நிலையில், இது இரண்டு வகையான திரிபுகளினதும் இரட்டை அச்சுறுத்தல் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவ

மீண்டும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

Image
அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். அதற்கமைய, ஜனவரி 3ஆம் திகதி முதல் ஜனவரி 30ஆம் திகதி வரை இவ்வாறு மூடப்படுவதாக அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடினாலும் நாட்டுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதன் காரணமாக, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் எரிசக்தி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3EGbIXK via Kalasam

’கடனை அடைக்க நான் தயார்’; வவுனியாவில் தனிநபர் போராட்டம்

Image
க. அகரன் இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா? என தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். வவுனியா நகர மணிக்கோபுர சந்தியில் நின்று குறித்த நபர் இன்று (29) போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். இதன்போது, அவர் இலங்கை தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன் 'இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். இதை ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா?, எங்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுமா? இதற்கு மக்கள் நாம் ஒன்றுபடுவோம் ' என எழுதப்பட்ட சுலோக அட்டையையும் ஏந்தியிருந்தார். குறித்த தனிநபரின் கவனயீர்ப்பு போராட்டத்தால் மணிக்கூட்டு கோபுர சந்தியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பொலிஸார் அறிவுறுத்தியதையடுத்து, பழைய பேருந்து நிலையம் முன்பாக சென்று சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அதன் பின் அங்கிருந்து சென்றிருந்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3zc4oCq via Kalasam

பால் மா விலை மீண்டும் அதிகரிப்பு

Image
பால் மா விலையை நாளை முதல் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது எவ்வளவு தொகை அதிகரிக்கப்படும் என்பதை இன்று நள்ளிரவு அறிவிக்கப்படும் என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஒரு கிலோ பால்மா, 945 ரூபாவில் இருந்து 1195 ரூபாவிற்கு கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி அதிகரிக்கப்பட்டிருந்தது. எனினும், அண்மைக்காலமாக பால்மாவிற்கு சந்தையில் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் வெளிநாட்டு டொலர் கையிருப்பு குறைந்துள்ள நிலையில், இறக்குமதிப் பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ள நிலையில், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்துப் பொருட்களின் விலையும் கணசமாக அதிகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3mJaDZn via Kalasam

இஸ்ரேலிய வான் தாக்குதலால் சிரியாவில் பாரிய பொருட்சேதம்

Image
சிரியாவின் லடக்கியா துறை முகத்தின் மீது இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக இஸ்ரேல் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய வான் தாக்குதலில் பாரிய பொருட்சேதம் ஏற்பட்டிருப்பதாக சிரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. “லடக்கியா துறைமுகத்தில் உள்ள கொள்கலன் நிலையை இலக்கு வைத்து மத்திய தரைக் கடல் பக்கம் இருந்து அதிகாலை 3.21 மணி அளவில் இஸ்ரேலிய எதிரிகள் பல ஏவுகணைகளை வீசி தாக்கியுள்ளனர்” என்று சிரிய இராணுவத்தை மேற்கோள்காட்டி சானா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அரச தொலைக்காட்சி ஒளிபரப்பிய நேரடி காட்சிகளில் கொள்கலன் முனையத்தில் இருந்து பாரிய தீ மற்றும் புகை வெளிவருவது தெரிகிறது. இந்த தீயை அவசர சேவை பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக அரச ஊடகம் பின்னர் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டது. இந்த ஏவுணை தாக்குதலால் மருத்துவமனை ஒன்று, சில குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் கடைகளும் சேதமடைந்திருப்பதாக சானா குறிப்பிட்டது. இந்த சம்பவம் பற்றி இஸ்ரேலிய இராணுவ பேச்சாளரிடம் கேட்டபோது, “வெளிநாட்டு ஊடக செய்திகளுக்கு கருத்துக்கூற முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். லடக்கியா சிரியாவின் பிரதான வர்த

2020 ஆம் ஆண்டின் உயர்தர மாணவர்களுக்கான அறிவிப்பு!

Image
2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீள்திருத்த பெறுபேறுகள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3quGC0w via Kalasam

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் முடியாது போனால், ஜனாதிபதி ஒருவரை எதிர்காலத்தில் உருவாக்கியேனும் ஒரே ''நாடு- ஒரே சட்டத்தை நிறைவேற்றுவோம்.

Image
ஒரே நாடு, ஒரே சட்டத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் முடியாது போகுமாயின் ஜனாதிபதி ஒருவரை எதிர்காலத்தில் உருவாக்கியேனும் அச்சட்டத்தை நிறைவேற்றப்போவதாக, ‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், நாட்டின் முன்னாள் தலைவர்கள் எவரும் ‘ஒரே நாடு-ஒரே சட்டம்’ தொடர்பில் இதற்கு முன்னர் சிந்தித்ததும் கிடையாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டின் எதிர்காலத்துக்காக சில நல்ல விடயங்களை செய்து வருகிறார் என்றார். ஜனாதிபதியின் இவ்வாறான திட்டங்கள் மக்களுக்கு தெரியுமா என்பதில் பிரச்சினைகள் உள்ளன. எவ்வாறாயினும் நாட்டு மக்களிடத்தில் தற்போது பட்டிணி, சமையல் எரிவாயு மற்றும் உரம் உள்ளிட்ட பிரச்சினைகளே காணப்படுகின்றன என்றார். ஒரே நாடு- ஒரே சட்டம்’ எனும் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் முடியாவிட்டாலும் எதிர்காலத்தில் ஜனாதிபதி ஒருவரை உருவாக்கியேனும் ஒரே நாடு, ஒரே சட்டத்தை சட்டமாக்குவோம் என்றார். மேலும், ‘ஒரே நாடு, ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை ஜனாதிபதி கோட்டா ய ராஜபக்ஷவுக்கு உள்ளது.

நடத்துனர்கள் இன்றி பேருந்துகளை இயக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Image
நடத்துனர்கள் இன்றி பேருந்துகளை இயக்கும் புதிய வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நாளை காலை ஆரம்பிக்கப்படவுள்ளது. தானியங்கி கட்டண முறையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3mDDhLa via Kalasam

லண்டனிலிருந்து வந்த பெண், பொதியொன்றில் சடலமாக கண்டெடுப்பு

Image
கிளிநொச்சியில் காணாமல் போன பெண், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில், கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் வாழ்ந்த பெண் நேற்று மாலை காணாமல் போயிருந்தார். இந்த நிலையில், உறவினர்களினால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்;. இந்த நிலையில், வீட்டில் இரத்தக்கறை காணப்பட்ட நிலையில், குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான பின்னணியில், கிளிநொச்சி – அம்பாள்கும் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3qswHbH via Kalasam

விமல், வாசு, கம்மன்பில ஆகியோரை பதவி நீக்கம் செய்யும் எண்ணமில்லை – ஜனாதிபதி

Image
அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு தொடர்பில் அபத்தமான கருத்தைக் கொண்டுள்ளமையினால் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகிய மூன்று அமைச்சரவை அமைச்சர்களை, பதவிகளில் இருந்து நீக்குவதில் தனக்கு எவ்வித அவசியமும் இல்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (27) இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். கூட்டுப் பொறுப்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் இருப்பின் அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பதிலாக அதிலிருந்து விலகி கருத்து வெளியிடுவதே சிறந்ததெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். பிரேமதாஸவின் ஆட்சிகாலத்தில் கூட்டுப் பொறுப்பை மீறியமை தொடர்பில் லலித் அத்துலத்முதலி மற்றும் ஜி.எம்.  பிரேமசந்திர ஆகிய அமைச்சர்கள் எதிரான வழக்கில் நீதிபதி மார்க் பெர்னாண்டோ வழங்கிய தீர்ப்பை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3sEsgNz via Kalasam

சவூதி நிதி உதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்ட பிபிலை - செங்கலடி வரையிலான வீதி பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது

Image
சவூதி அரேபிய நிதி உதவியின் கீழ் 7200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பேராதனை - பதுளை - செங்கலடி (A005) வீதியின் பிபிலையிலிருந்து செங்கலடி வரையிலான 86.7 கிலோ மீற்றர் பகுதி பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் பேராதனை - பதுளை - செங்கலடி (A005) வீதி 275 கிலோ மீற்றர் நீளமானது. பிபிலை முதல் செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் நீளமான வீதி ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின்தலைமையில் 28-12-2021 அன்று விரிவுபடுத்தப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. பிபிலையிலிருந்து செங்கலடி வரையிலான அபிவிருத்தி செய்யப்பட்ட வீதியின் நீளம் 86.7 கி.மீ. இந்த வீதி அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு கடந்த 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த வீதியை இரண்டு உள்ளூர் நிர்மாணத்துறை நிறுவனங்கள் மூன்று கட்டங்களாக நிர்மாணித்துள்ளனர். முதற்கட்டமாக பிபிலை முதல் பதியத்தலாவை வரையிலான 29 கிலோ மீற்றர் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக பதியத்தலாவ தொடக்கம் தம்பிட்டி வரை 30 கிலோ மீற்றர் அபிவிருத்தி செய்யப்

ஜனாதிபதியின் செயலாளர் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன? கடிதம் ஊடகங்களில் வெளியாகாமல் இருக்க நடவடிக்கை

Image
ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதற்காக பீ.பி. ஜயசுந்தர,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள மிக நீண்ட கடிதத்தில் பல முக்கிய விடயங்களை வெளியிட்டுள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பல சர்ச்சைக்குரிய தகவல்களை ஜயசுந்தர அந்த கடிதத்தில் வெளியிட்டுள்ளார். தான் பதவியில் இருந்த காலத்தில் எதிர்கொண்ட பிரச்சினைகளை ஜயசுந்தர கடிதத்தில் விரிவாக எடுத்துரைத்துள்ளதுடன் சில தவறுகளை அம்பலப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதிக்கு அனுப்பி இந்த பதவி விலகல் கடிதம் ஊடகங்களில் வெளியாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பீ.பி. ஜயசுந்தர ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து விலகினாலும் அவர் தொடர்ந்தும் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றுவார் என அந்த ஆங்கில ஊடகம் கூறியுள்ளது. ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்படவுள்ள தற்போது பிரதமரின் செயலாளராக கடமையாற்றும் காமினி செனரத், அந்த பதவியில் இருந்து விலகுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என கூறப்படுகிறது. அதேவேளை நிர்வாகத்துறையின் உயர் அதிகாரிக

ரஞ்சனின் காதலியுடன் சென்றார் எஸ்.பி நடந்ததை ஊடகங்களுக்கு சொன்னார்.

Image
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறை தண்டனை அனுபவித்து வருகின்றார். அங்குணகொலபெலஸ்ஸ சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அவர், அந்த சிறையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, சிறைச்சாலைக்குச் சென்று அண்மையில் பார்வையிட்டுள்ளார். “தான், ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிடுவதற்குச் சென்றிருந்தேன். சுமார் அரை​மணிநேரம் அவருடன் உரையாடியிருந்தேன். நான் தனியாக செல்லவில்லை. ரஞ்சன் ராமநாயக்கவின் காதலியுடன் சென்றிருந்தேன். காதலி ஒரு வைத்தியர், அவர், தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றார். என்னுடன், என்னுடைய ஊடகச் செயலாளரும் வருகைதந்திருந்தார்” என்றும் எஸ்.பி. திஸாநாயக்க தனியார் ஊடகமொன்றுக்கு கருத்துரைத்திருந்தார். “ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டுமென்பது தொடர்பில் கலந்துரையாடவில்லை. எனினும், பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். அதன்பின்னரே ஜனாதிபதியிடம் வலியுறுத்தமுடியும். எனினும், இதுதொடர்பில் நா

புத்தர் சிலைகளை உடைத்தோரை பயங்கரவாத சட்டத்தின் கீழ் விடுவிக்க மறுப்பதும், 18 பள்ளிவாசல்களை தாக்கிய 60 பேரை விடுவித்ததும் ஏன் - நீதிமன்றத்தை அதிரவைத்த கேள்வி

Image
(எம்.எப்.எம்.பஸீர்) சுமார் 3 வரு­டங்­க­ளாக அரச கைதில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள பிர­தி­வா­தி­களை, பிணையில் விடு­வித்து நியா­ய­மான வழக்கு விசா­ரணை ஒன்­றுக்­கான சந்­தர்ப்பம் அளிக்­கப்­படல் வேண்டும் என ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைர் கேகாலை மேல் நீதி­மன்றில் வாதங்­களை முன் வைத்து கோரிக்கை விடுத்­துள்ளர். உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக் காலப்­ப­கு­தியில் மாவ­னெல்லை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­களில் மாவ­னெல்லை திதுல்­வத்­தை­யிலும் ஏனைய இடங்­க­ளிலும் ஐந்து புத்தர் சிலை­களை சேதப்­ப­டுத்­தி­யமை தொடர்பில் 16 பேருக்கு எதி­ராக, கேகாலை மேல் நீதி­மன்றில் சட்ட மா அதி­பரால் தொட­ரப்­பட்­டுள்ள வழக்கின் விசா­ர­ணைகள் கடந்த வாரம் இடம்­பெற்ற போதே, 1,2,5,12,13,16 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக மன்றில் ஆஜ­ராகி அவர் இந்த வாதத்தை முன் வைத்­துள்ளார். இது குறித்த வழக்கு, கடந்த வாரம், கேகாலை மேல் நீதி­மன்றில் நீதி­பதி ஜகத் கஹந்­த­க­மகே தலை­மை­யி­லான ஜயகி டி அல்விஸ் மற்றும் இந்­திகா காலிங்­க­வங்ச ஆகிய நீதி­ப­திகள் அடங்­கிய சிறப்ப

இலங்கையில் உலகின் அதிநவீன தொழில்நுட்பம்!

Image
இலங்கை தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளை உலகின் அதிநவீன தொழில்நுட்பமாக மாற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் இன்று (28) கொழும்பில் ஆரம்பிக்கப்படுகிறது. பழமையான தொழில்நுட்பத்திலிருந்து(Analog) இலங்கை தொலைக்காட்சி ஒளிபரப்பு முறைமையை நவீன டிஜிட்டல் முறைக்கு (Digital) மாற்றியமைப்பதற்கான இந்த திட்டத்தின் ஆரம்ப விழா இன்று (28) மாலை 7.00 மணிக்கு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கலந்து கொள்கின்றார். ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் விசேட நிதியுதவியின் கீழ் இந்த புதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கை தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள் நேயர்களுக்கு சலுகைகளையும் நன்மைகளையும் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/312D8td via Kalasam

பஸ் கட்டண திருத்தங்கள்

Image
பஸ் கட்டண திருத்தங்கள் தொடர்பான அறிக்கை இன்று போக்குவரத்து அமைச்சிடம் கையளிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. எரிபொருள் மற்றும் உதிரிப்பாகங்களின் விலைகள், தினசரி, மாதாந்த மற்றும் வருடாந்த பராமரிப்பு, பணியாளர் சம்பளம் மற்றும் காப்புறுதி உட்பட 12 தரவுகள் அடிப்படையில் திருத்தப்பட்ட பஸ் கட்டணங்களை இன்று (28) அல்லது நாளை (29) திகதிக்குள் அறிவிப்பதற்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவினாலும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினாலும் தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை, பஸ்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு எரிபொருள் சலுகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு வழங்க முடியாத பட்சத்தில் குறைந்தபட்சம் 25 ரூபாய்க்கு பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனவும் தனியார் உரிமையாளர் சங்கங்கள் கோரியுள்ளன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3sDec6V via Kalasam

கல்முனை மாநகர சபை உறுப்பினராக றஜப்தீன் பதவியேற்பு

Image
அஸ்லம் எஸ்.மௌலானா, றாசிக் நபாயிஸ் கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள வர்த்தகரும் சமூக சேவையாளருமான எம்.ஜ.எம்.றஜப்தீன், தனது சத்தியப் பிரமாண பத்திரத்தை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபிடம் இன்று (27) கையளித்து, உறுப்பினர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகர மேயர் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், மாநகர சபை உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், ரி.ராஜரட்ணம், சபைச் செயலாளர் ஏ.எம்.ஆரிப், மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஜீ.எம்.நதீர், அக்கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.மஸீன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினராக பதவி வகித்து வந்த சட்டத்தரணி என்.எம்.அஸாம் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே மருதமுனையை சேர்ந்த எம்.ஐ.எம்.றஜப்தீன் அக்கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3FyVwsS via Kalasam

“சக்குராய்” விமானங்கள் பறக்க தடை

Image
“சக்குராய்” விமான நிறுவனத்துக்குச் சொந்தமான அனைத்து விமான சேவைகளும் உடன் அமுலுக்குவரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கான தீர்மானம் சிவில் விமான சேவைகள் அதிகார சபையால் எடுக்கப்பட்டுள்ளது. மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை, இந்த நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது என, விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி.வி. ஷானக தெரிவிக்கின்றார். இந்த விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டாவது இலகுரக விமானமும் இன்று (27) விபத்துக்குள்ளான நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிறுவனத்திற்கு சொந்தமான இலகுரக விமானமொன்று கடந்த 22 ஆம் திகதி பயாகல கடற்கரையோரத்திலும் இன்றையதினம் நீர்கொழும்பு பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3JiiOp4 via Kalasam

கொரோனா தொற்றாளர்கள் விபத்து

Image
கொரோனா தொற்றாளர்களை தனியார் வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்ற ​சொகுசு வான் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பாணந்துறை - அலுபோமுல்ல பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் இந்த வான் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 70 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை விபத்துக்குள்ளான வானில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருப்பதை தெரிந்துகொண்ட பிரதேச மக்கள் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயக்கம் காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வான் பலாங்கொடை பிரதேசத்தில் இருந்து தனியார் வைத்தியசாலைக்கு 7 கொரோனா தொற்றாளர்களை ஏற்றிவந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3FBcMOe via Kalasam

IMF ஐ நாடுவதா, இல்லையா? 03 ஆம் திகதி இறுதி முடிவு!

Image
” நிதி நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.” – என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இன்று தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா அல்லது வேறு நாடுகளிடம் கடன்பெறுவதா என்பது தொடர்பில் அவர்கள் தெளிவுபடுத்துவார்கள். நிதி அமைச்சரும் தமது உறுதியான நிலைப்பாட்டை அறிவிப்பார். அதன்பின்னர் அமைச்சரவையால் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியும்.” – என்றார். அடுத்த அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/313fD3p via Kalasam

கா.பொ.த பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு.

Image
2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. கல்வியமைச்சின் இணையத்தளம் மூலமாக பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கலாம் என்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார். விண்ணப்பப் படிவங்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் மாதிரிகள் இப்போது www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3puvVeQ via Kalasam

கோதுமை, எரிபொருள், சீமெந்து, ஏற்ற மறுப்பு.

Image
பேச்சு தோல்வியடைந்தமையால், ரயில்​வே நிலைய அதிபர்கள் தங்களுடைய வேலைநிறுத்தப் போராட்டத் தொடர்கின்றனர். முன்னதாக புகையிரத பயணச்சீட்டு வழங்காதது மற்றும் பொதிகளை ஏற்று, கொண்டு செல்வது போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அதற்கு மேலதிகமாக, அவற்றுக்கு மேலதிகமாக சீமெந்து, கோதுமை மற்றும் எரிபொருள் போக்குவரத்திலிருந்து விலகுவதற்கும் ரயில் நிலைய அதிபர்கள் தீர்மானித்துள்ளனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3myUPbi via Kalasam

இலங்கை மக்களிடம் மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

Image
நாடு முழுவதும் போலி நாணயத் தாள்கள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதால், இந்த விடயம் சம்பந்தாக மிகவும் கவனமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சந்தேகத்திற்குரிய நாணயத்தாள் கிடைத்தால், பாதுகாப்பு அடையாளத்தை ஆராய்ந்து, அதனை தம்வசம் வைத்துக்கொள்ளுமாறும், இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது. இதன் பின்னர், அந்த நாணயத்தாளை வழங்கிய நபர், அவரது வெளி தோற்றம், வாகனத்தில் வந்திருந்தால், அது பற்றிய விபரங்கள், நாணயத்தாளின் பெறுமதி, அதன் தொடர் இலக்கம் ஆகியவற்றை குறித்து வைத்துக்கொண்டு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் போலி நாணயம் தொடர்பான பிரிவின் தொலைபேசி இலக்கங்களான 0112422176 மற்றும் 0112326670 இலக்கங்களுடன் தொடர்புக்கொண்டு அறிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலி நாணயத்தாள்களை வைத்திருப்பது, பயன்படுத்துவது அல்லது அச்சிடுவது என்பன தண்டனைக்குரிய குற்றம் என பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக போலி நாணயத்தாள்ளை அச்சிடுதல் மற்றும் புழக்கத்தில் விடுவது அதிகரித்துள்ளது எனவும்