Posts

Showing posts from March, 2022

புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கல்வியியற் கல்லூரிகளுக்கும் விடுமுறை

Image
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கல்வியியற் கல்லூரிகளுக்கு ஏப்ரல் 08 ஆம் திகதி முதல் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  இம்முறை அட்டாளைச்சேனை, தர்காடவுண் ஆகிய கல்வியற் கல்லூரிகளுக்கு நோன்பு கால விடுமுறை வழங்கப்படமாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/cmIp46y via Kalasam

வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டு நாணயம் ஒன்றின் பெறுமதி 1000 இலங்கை ரூபாவானது

Image
வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டு  நாணயம் ஒன்றின் பெறுமதி 1000 இலங்கை ரூபாவானது. குவைத் தினார் ஒன்று 1000 ரூபாவை மிஞ்சும் முதல் இலங்கை நாணயமாக மாறியுள்ளது. இலங்கையில் சில வங்கிகளில் குவைத் தினார் ஒன்றின் பெறுமதி 1000 ரூபாவை தொட்டுள்ளது.  இலங்கை வங்கியில் 1 தினார்  இன்று 1001.70 ரூபா  மற்ற மத்திய கிழக்கு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. பஹ்ரைன் தினார் ரூ. 797.33 ஆகவும், ஓமன் ரியால் ரூ. 785.59. கத்தார் ரியால் ரூ. 83.98 ஆகவும், சவுதி ரியால் ரூ. 84.24. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் திராம் ரூ. இன்று 84.87 from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/UvBL2nE via Kalasam

மின்வெட்டை 4 மணித்தியாலங்களாக மட்டுப்படுத்த எதிர்பார்க்கிறோம் ; மின்சார சபை

Image
தற்போது அமுலிலுள்ள 13 மணித்தியால மின்வெட்டை எதிர்வரும் 2 ஆம் திகதிக்கு பின் 4 மணித்தியாலங்களாக மட்டுப்படுத்த எதிர்பார்ப்தாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/PgMfBYD via Kalasam

முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன காலமானார்

Image
முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது 91 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/UhOjSN9 via Kalasam

இந்திய ஒத்துழைப்புகள் குறித்து ரணிலுக்கு தெளிவுபடுத்திய ஜெய்சங்கர்.

Image
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் பொருளாதார ஆதரவு குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெளிவுபடுத்தியுள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் பிம்ஸ்டெக் அமைச்சர்கள்மட்ட அமர்வினை அடுத்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போதே இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார். பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி , எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் தீர்க்கமான சந்திப்புக்களில் ஈடுபட்டார். அதற்கமைவாகவே செவ்வாய்க்கிழமை (29) முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கலந்து கொண்டிருந்தார். இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் , இந்தியா வழங்கியுள்ள உதவிகள் சாதாரணமானவையல்ல என்...

இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

Image
  இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். 5,000 குளக்கட்டுகளை புனரமைக்கும் இரண்டாம் கட்டப் பணிகளில் கலந்துக்கொண்டு இன்று (30) அலரிமாளிகையில் வைத்து உரையாற்றுகையிலேயே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.  பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு, பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் நீரை நம்பித்தான் வாழ்கின்றன. தண்ணீர் நம் வாழ்வின் அடிப்படை. நாம் பின்னோக்கிச் செல்லும்போது, உலகில் உள்ள ஒவ்வொரு நாகரீகமும் நீரைக் கொண்டே உருவாகிறது. நம் நாட்டுக்கும் அப்படித்தான். பழங்காலத்திலிருந்தே, இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான ஒவ்வொரு அடியிலும் விவசாயமும் நீர்ப்பாசனமும் பின்னிப்பிணைந்துள்ளன. அந்தக் காலத்தில் கிராமம், விகாரை, குளம், தாதுகோபம் என்ற கருத்துதான் நமது கலாச்சாரத்தின் அடிப்படையாக இருந்தது. மேம்பட்ட நீர்ப்பாசனத்தின் மூலம் நாட்டில் விவசாய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே இவை அனைத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. குளங்கள் மட்டுமின்றி அவற்றுடன் இணைக்கப்பட்ட கால்வாய்களும் நமது பண்ட...

ரயில் கட்டணங்கள் 58%ஆல் அதிகரிப்பு...

Image
ரயில் கட்டண திருத்தத்தின் போது கட்டணங்கள் 58 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம நேற்று (29) தெரிவித்தார். இதன்படி ,முதல் 10 கிலோமீற்றருக்கு,  1 ரூபாய் 30 சதமாக இருந்த மூன்றாம் வகுப்பு ரயில் டிக்கெட்டின் விலை 2 ரூபாயாக அதிகரிக்கப்படும்  எனவும் அதற்கமைய 10 கிலோமீற்றருக்கான டிக்கெட்டின் விலை 20 ரூபாயாக உயரும் என்றும் தெரிவித்தார். அண்மைக்காலமாக நான்கு தடவைகள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/oCtnYZM via Kalasam

பாரிய போராட்டத்துக்கு தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தி...

Image
  வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளுக்கு எதிராக தேர்தல் தொகுதிகளை மையப்படுத்தி 150 போராட்டங்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இதன்படி அனைத்து இடங்களிலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டம் கடந்த 15ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையிலேயே நாடு முழுவதும் போராட்டத்தை நடத்த அக்கட்சி தீர்மானித்துள்ளது.   மேலும் இதேவேளை, கட்சியின் மே தினக் கொண்டாட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது அதேவேளை, தேசிய மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/S6ypT0h via Kalasam

இந்திய வெளிவிவகார அமைச்சர் – முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு

Image
13ஆவது திருத்தத்தின் பின்னர், எதிர்காலம் குறித்த சந்தேகம் ஏற்படுகின்ற அளவுக்கு அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் உத்தரவாதங்களை வழங்கவில்லை. தேர்தல்களை நடாத்தாமல் இழுத்தடிப்புச் செய்யும் விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் வலியுறுத்தினார். இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (29) நடைபெற்றது. இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிசாம் காரியப்பரும் கலந்துகொண்டார். அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டன. தமிழ்பேசும் மக்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழ், முஸ்லிம்களை உள்வாங்கும் விடயமாகும் உத்தியோகபூர்வ அறிக்கைகளில், தமிழ்பேசும் மக்கள் என்ற வார்த்தைப் பிரயோகத்தை கையாள்வதற்கான முஸ்லிம் தரப்பின் கருத்தை இந்திய தரப்பினர் அங்கீகரித்தனர். இந்திய – இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டப...

புத்தாண்டுக்குப் பின் பாராளுமன்றில் மாற்றம்

Image
சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின் பாராளுமன்ற அமைப்பில் மாற்றம் ஏற்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மக்கள் திறமையான மனிதராகப் பார்ப்பதன் காரணமாகவே இன்று அவர் மீது வதந்திகள் பரப்பப்படுகின்றன. தற்போதைய பொருளாதார நெருக்கடியை அவரால் தீர்க்க முடியும் என மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் பாராளுமன்றத்தின் அமைப்பில் மாற்றம் ஏற்படலாம் என நான் நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார். (R) from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/c9Lb2zR via Kalasam

பாட்டலியின் மனு விசாரணையின்றி தள்ளுபடி

Image
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தாக்கல் செய்த மீளாய்வு மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி தள்ளுபடி செய்துள்ளது. இராஜகிரியவில் இடம்பெற்ற விபத்தில் சாட்சியத்தை மறைத்த குற்றச்சாட்டில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், சாட்சி விசாரணையை கைவிடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், நீதிபதிகளான மேனகா விஜயசுந்தர மற்றும் எஸ்.குமாரரத்ன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்கமைய, பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்புமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/KpR7fMV via Kalasam

மருந்துகளின் விலையை மேலும் 20% அதிகரிக்குமாறு கோரிக்கை

Image
நாட்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு 300 ஆக உயர்ந்துள்ளதால் மருந்துகளின் விலையை மேலும் 20% அதிகரிக்குமாறு மருந்து இறக்குமதியாளர்கள் சபை மருந்து உற்பத்தி மற்றும் விநியோக இராஜாங்க அமைச்சுக்கு நேற்றையதினம்(28) அறிவித்துள்ளது. இரு வாரங்களுக்கு முன்னர் மருந்துகளின் விலையை 29% உயர்த்த சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் பரசிட்டமோல் மாத்திரை ரூ.1.59ல் இருந்து ரூ.3 ஆக உயர்வடைந்தது. இந் நிலையில் மீண்டும் மருந்துகளின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மருந்துகளின் விலை உயரவில்லை என்றால் விலைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/WCNRLDM via Kalasam

இந்தியா – இலங்கை இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

Image
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரின் இலங்கை விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று (28) பிற்பகல் வெளிவிவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டன. இதன்படி, இலங்கை டிஜிட்டல் அடையாளத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை நிறுவுதல் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு வெளியே உள்ள மூன்று தீவுகளில் கலப்பு மின் நிலையத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/WUfirR6 via Kalasam

ரணில் நாட்டைக் கைப்பற்றினால் 48 மணித்தியாலங்களில் நடக்கவிருக்கும் அதிசயம்

Image
ரணிலின் பாராளுமன்ற ஆசனம் பிரதமர் ஆசனமாக மாறலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இன்று (28) தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாட்டைக் கைப்பற்றினால் 48 மணித்தியாலங்களுக்குள் வரிசைகள் முடிவடையும் என்றும் குறிப்பிட்டார். தற்போதைய ஆட்சியின் மீதான சர்வதேச நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது என்றும் சர்வதேசம் நம்பும் ஆட்சி இலங்கையில் அமையும் போதே சர்வதேச உதவிகள் இலங்கைக்கு கிடைக்கும் என்றார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/kqATovu via Kalasam

ரணில் விரைவில் தேசத்தின் பாதுகாவலனாக விளங்குவார்

Image
முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க விரைவில் முக்கிய பங்களிப்பொன்றை வழங்கவுள்ளார் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. விரைவில் தேசிய கருத்தொருமைப்பாடு ஏற்படும் இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றுபடும் இதில் ரணில்விக்கிரமசிங்க முக்கிய பங்களிப்பை வழங்குவார் என ஐக்கியதேசிய கட்சியின் வஜிர அபயவர்த்தன செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். கட்சி அரசியலை மறந்துவிட்டு தேசிய கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துவதே தற்போதைய தேவை என அவர் தெரிவித்துள்ளா நாட்டை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீட்கக்கூடிய திறமையான நபரிடம் நாட்டை கையளிக்கவேண்டும் என வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை கையாள்வதற்கு மிகவும் பொருத்தமான நபர் ரணில்விக்கிரமசிங்கவே என அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரே தேசத்தின் பாதுகாவலனாக வருவார் என கருதுகின்றேன் என தெரிவித்துள்ள அவர் இலங்கைக்கு 1999இல் ரஸ்யா மேற்கொண்டஅரசியல் சீர்திருத்தம் போன்றதொன்றே அவசியம் என குறிப்பிட்டுள்ளார். அவ்வேளை ரஸ்யாவில் ஜனாதிபதி பொறிஸ்யெல்ட்சின் பிரதமராக விளாடிமிர் புட்டினை நியமித்தார்,பு...

இலங்கைக்கு கடன் வசதி வழங்குகிறது அமெரிக்கா

Image
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID) மூலம் கடன் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். ஜூலி சங்குக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (28) முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் திருமதி விக்டோரியா நூலண்ட் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பை தூதுவர் பாராட்டினார். அண்மைக்காலமாக இலங்கைப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கான காரணங்களை விளக்கிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தை அணுகும் விடயத்தில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை பாராட்டிய திருமதி ஜூலி சங், இது நீண்டகால அடிப்படையில் இந்நாட்டுக்கு முக்கியமானதொன்றாகும் எனவும் சுட்டிக்காட்டினார். எந்தவித பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், க...

முழு பட்டினியில் இருந்து இலங்கை மக்கள் இந்திய உதவியினால் காப்ப்பாற்றப்பட்டுள்ளனர்.

Image
நமது மக்கள் முழுமையான சம உரிமையுள்ள இலங்கை பிரஜைகளாக உதவுங்கள் -தமுகூ இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவிப்பு இந்நாட்டில் இன்று குடியுரிமை பிரச்சினை சட்டப்படி தீர்க்கப்பட்டு விட்டாலும்கூட முழுமையான சம உரிமையுள்ள பிரஜைகளாக நமது மக்கள் அனைவரும் மாறவில்லை. ஆகவே, இலங்கை அரசுடன் உங்களுக்கு உள்ள நல்லுறவை பயன்படுத்தி, முழுமையான சம உரிமையுள்ள பிரஜைகளாக மாற, எமக்கு நீங்கள் உதவுங்கள் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம், தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்தது. கொழும்பு இந்திய இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. ராதாகிருஷ்ணன், எம். உதயகுமார் எம்பி, ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்திய தரப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தூதுவர் கோபால் பாக்லே, துணை தூதர் வினோத் கே. ஜேகப், அரசியல் துறை செயலாளர் பானு பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளதாவது, இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்கனவே கடந்த சி...

நுவரெலியா பகுதியில் பதற்றமான சூழ்நிலை

Image
நுவரெலியா எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் பொது மக்களும், சாரதிகளும் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் இன்று (28) பரபரப்பு ஏற்பட்டது. வாகனத்திற்கு தேவையான எரிபொருள் பெறுவதற்கு சாரதிகளும், மண்ணெண்ணெய் பெறுவதற்கு பொது மக்களும் இன்று காலை முதல் எரிபொருள் நிலையத்தை சூழ காத்திருந்தனர். எனினும், எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே வாகன சாரதிகளும், மக்களும் எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் உள்ள சுற்றுவட்டத்தை மறைத்து சுமார் ஒரு மணித்தியாலயம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸார் கடும் பிரேயத்தனத்திற்கு மத்தியில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்படி, எரிபொருள் வாங்குவதற்காக கொள்கலன்கள் எடுத்து வந்தவர்களுக்கு ஆயிரம் ரூபாவுக்கும், வாகனங்களுக்கு 3500 ரூபாவும் டீசல் வழங்கப்பட்டது. அதேபோல பொது மக்களுக்கு மாலை 6 மணிக்கு பிறகு மண்ணெண்ணெய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FRO...

வைத்தியசாலைகளில் எரிவாயு தட்டுப்பாடா?

Image
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலை செயற்பாடுகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சில தொழிற்சங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். வைத்தியசாலை அமைப்பிற்கு முன்னுரிமை வழங்கி தொடர்ச்சியாக வைத்தியசாலைகளுக்கு எரிவாயு விநியோகிக்கப்படுவதாக வைத்தியசாலை பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மேற்கொண்ட கலந்துரையாடலில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார். கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/WREKwPp via Kalasam

புத்தாண்டு முடிவதற்குள் தட்டுப்பாடு தீர்க்கப்படும்

Image
இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு நிறைவடைவதற்குள் தீர்க்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே மீண்டும் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார். இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். தட்டுப்பாடு முடிவுக்கு வந்தவுடன், அரசாங்கம் மீண்டும் மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய ஆரம்பிக்கும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், நாட்டிலுள்ள எரிபொருள் வளம் குறித்த மேலதிக ஆய்வுகள் இடம்பெற்றுவருவதாகவும் ஒரு வருடத்துக்குள் நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார். இதேவேளை, இந்த வாரத்தில் மேலும் இரண்டு டீசல் தொகுதிகள் நாட்டுக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எரிசக்தி அமைச்சர் உறுதியளித்த போதிலும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கான நீண்ட வரிசையில் தொடர்ந்தும் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/4HacUgX via Kalasam

இலங்கையின் புதிய பிரதமாராகிறார் ரணில்

Image
பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படக்கூடுமென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடு தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தற்போதைய அரசாங்கத்தினால் அரசியல் ரீதியில் பாரிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அதனடிப்படையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை துறப்பார் என்றும் அதன்பின்னர், அரசியல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, தேசிய அரசாங்கமொன்றை நிறுவி, பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதற்கும் கலந்துரையாடப்படுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் ரீதியில் மாற்றங்களை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கைக்கு அமையவே, அரசியல் மாற்றம் செய்யப்படவிருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/9N81fIw via Kalasam

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 132 பேருக்கு எதிராக இன்டர்போல் ஊடாக சிவப்பு அறிவித்தல்

Image
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ள போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 132 பேருக்கு எதிராக இன்டர்போல் ஊடாக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளத. சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் தற்போது துபாயில் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது 95 ஆயிரம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது ஆயிரத்து 630 கிலோகிராம் ஹெரோயின், 15 ஆயிரம் கிலோகிராம் கஞ்சா மற்றும் ஆயிரத்து 377 கிலோகிராம் செயற்கை போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/dt0SKkG via Kalasam

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார் ௭ நாமல்..!

Image
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்துப்படி அமைச்சரவையை குறைப்பதற்கு அவர்கள் முன்னுதாரணமாக செயற்பட்டால், அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு தெரிவித்திருந்தார். அப்படியானல் அவர்கள் முன்னுதாரணமாக தங்களது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்தால் நான் பதவி விலகத் தயார் என அவர் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/wRxknOV via Kalasam

அரசாங்கத்திற்கு எதிராக நாமும் வீதிக்கிறங்க நேரிடும் – முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

Image
ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிக கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கம் முறையாக செயற்படாவிடின் அரசாங்கத்திற்கு எதிராக நாமும் வீதிக்கிறங்க நேரிடும். எதிர்வரும் 31 ஆம் திகதி மகாசங்கத்தினரை ஒன்றிணைந்து உறுதியான தீர்மானத்தை அறிவிப்போம் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மீது மக்கள் மத்தியில் நல்ல நிலைப்பாடு கிடையாது. அவரை 6 மாத காலத்திற்கு அமைச்சு பதவியில் இருந்து விலக்கி வைக்குமாறு ஏற்கெனவே வலியுறுத்தினோம். ஒன்று அவரை பதவி நீக்க வேண்டும் அல்லது அவருக்கு பிறிதொரு அமைச்சு பதவியினை வழங்க வேண்டும். மகாசங்கத்தினரும் அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து அதிருப்தியடைந்துள்ளார்கள். 31ஆம் திகதி எமது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பல விடயங்களை பகிரங்கப்படுத்துவோம்.நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சிறந்த தீர்மானங்களை முன்னெடுப்போம் என்றார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https...

கல்முனை சுகாதார சேவைகள் பணிமனை ஏற்பாட்டில் போஷாக்கு மற்றும் நலவாழ்வு தொடர்பிலான கருத்தரங்கு

Image
  நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஏற்பாட்டில் மதத்தலைவர்கள் மற்றும் திருமண பதிவாளர்களுக்கான போஷாக்கு மற்றும் நலவாழ்வு தொடர்பிலான கருத்தரங்கொன்று இன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது. இந்த கருத்தரங்கில் மதத்தலைவர்கள், திருமண பதிவாளர்கள், மருத்துவ மாதுக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்ததுடன் இங்கு வளவாளராக கலந்துகொண்டு பேசிய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் திருமண பந்தங்கள் தொடர்பிலும் உணவு பழக்கவழக்கங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.   நாட்டில் இப்போது வேகமாக வளர்ந்துவரும் ஆரோக்கியமற்ற வேகமான உணவுகள் தொடர்பில் கருத்துரைத்த டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் அந்த உணவுகளினால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி ஆழமாக தெளிவுபடுத்தியதுடன் குழந்தைகள் வளர்ப்பு, முறையற்ற உணவுப்பாவனைகளினால் இளவயது கற்பிணிகள்  சமகாலத்தில் அனுபவிக்கும் நோய் நிலைகள் அதற்கான தீர்வுகள் பற்றி விளக்கினார். இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை வைத...

மறுசீரமைப்புக்களில் பலவற்றை நாம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளோம் - இலங்கை மத்திய வங்கி சர்வதேச நாணய நிதியத்திற்கு விளக்கம்

Image
(நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான கொள்கை ரீதியான மறுசீரமைப்புக்களில் பலவற்றை நிதியமைச்சுடன் இணைந்து தாம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கைக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவினால் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய 95 பக்க அறிக்கை நேற்றுமுன்தினம் பகிரங்கப்படுத்தப்பட்டது. அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி மத்திய வங்கியினால் நேற்றையதினம் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான அதன் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பீட்டுச் செயன்முறையானது கடந்த 2021 ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நிதியமைச்சு, மத்திய வங்கி, பல்வேறு அரச கட்டமைப்புக்கள், நிதிக் கட்டமைப்புக்கள், தனியார்...

நாட்டை கட்டியெப்ப அனைவரும் பேதங்களை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு ஒன்றிணைய வேண்டும் - ருவன் விஜேவர்தன

Image
(எம்.எம்.சில்வெஸ்டர்) நாட்டில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாடென்ற ரீதியில் நாம் அனைவரும் ஒருமித்து பயணிக்க வேண்டும். நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் இன, மத, மொழி, கட்சி பேதங்களை ஒரு புறம் தள்ளி வைத்து நாம் சகலரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன வலியுறுத்தினார். ஐக்கிய தேசியக் கட்சியினால் கொழும்பு ஹைட் பார்க் திடலில் ஏற்பாடு செய்யபட்டிருந்த சத்தியாகிரகப் போராட்டம் குறித்து கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், "ஐக்கிய தேசிய கட்சியினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சத்தியாகிரக் போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவதற்கு முன்னெடுத்துள்ளோம். இந்த சத்தியாகிரகப் போராட்டத்தின் மூலம் நாம் எதிர்பார்ப்பது என்னவெனில், ஆர்ப்பாட்டம் செய்வதற்கல்ல அரசாங்கத்திற்கு ‍ ஓர் சிறந்த செய்தியை வழங்குவதாகும். விசேட விதமாக நாடு என்ற வகையில், நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம். இது, ஆட்சி அதிகாரத்திற்கான போரட்டமல்ல. மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அமைதி வழி போ...

பிம்ஸ்டெக்’ மாநாடு – செயலாளர் இலங்கை வந்தார் – 28 இல் வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

Image
‘பிம்ஸ்டெக்’ அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு மார்ச் 30 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செலயகத்தில் நடைபெறவுள்ளது. ” இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகள் ‘பிம்ஸ்டெக்’ அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. பிம்ஸ்டெக் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு கடைசியாக 2018 இல் நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்றது. இம்முறை இலங்கையில் நடைபெறுகின்றது. மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து பிரதமர் இலங்கை வரவுள்ளார்.’பிம்ஸ்டெக்’ அமைப்பின் அடுத்த தலைமைப்பொறுப்பை தாய்லாந்தே ஏற்கவுள்ளது. அந்த பதவியை தாய்லாந்து பிரதமர் பொறுப்பேற்பார். ஏனைய நாடுகளின் பிரதமர்கள் ‘காணொளி’ தொழில்நுட்பம் ஊடாகவே மாநாட்டில் பங்கேற்பார்கள். அரச தலைவர்கள் மாநாடு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் மார்ச் 30 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும். அத்துடன், ‘பிம்ஸ்டெக்’ அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு – கலந்துரையாடல் மார்ச் 29 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டில் மண்டபத்தில் நடைபெற...

சதொசவில் அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு தட்டுபாடு!

Image
சதொச கிளைகளில் பல அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு தட்டுபாடு என நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். அரிசி, சிவப்பு பருப்பு மற்றும் சீனி விற்பனைக்கு சதொச நிறுவனம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சதொச கிளை முகாமையாளர்களுக்கு சதொச நிர்வாகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. குறித்த சுற்றறிக்கையை மீறிச் செயற்படும் ஊழியர்களை பணியிலிருந்து இடைநிறுத்தி, ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/L7CkYW1 via Kalasam

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்!

Image
  இந்திய  வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்  இம்மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் அழைப்பின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 28 – 30 ஆம் திகதிகளில் வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் அமையவுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் இந்த விஜயத்தின்போது, கொழும்பில் நடைபெறும் BIMSTEC மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Yn8UW5N via Kalasam

டொலரின் பெறுமதியே பொருட்களின் விலையை தீர்மானிக்கும்...

Image
  துறைமுகத்தில் சிக்கியுள்ள கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டால் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதன்படி ,அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரத்து 500 கொள்கலன்கள் தற்போது துறைமுகத்தில் சிக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதேவேளை, பண்டிகைக் காலங்களில் டொலரின் பெறுமதியே பொருட்களின் விலையை தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/zJ104Lu via Kalasam

காசல்ரி நீர்த்தேக்கத்தில் வரலாறு காணாத அளவு நீர் தாழிறங்கியுள்ளது

Image
மத்திய மலைநாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினையடுத்து காசல்ரி நீர்த்தேக்கத்தில் வரலாறு காணாத அளவு நீர் தாழிறங்கியுள்ளது. இதனால் நீரில் மூழ்கி கிடந்த பல கட்டடங்களின் அடையாளங்கள் ஆலயங்கள் தீவுகள் ஆகியன தோற்றம் பெற்றுள்ளன.  குறித்த நீர்த்தேக்கத்தில் நேற்றைய தினம் வரை 12.4 வீத நீர் மாத்திரமே எஞ்சியிருப்பதாக மின்சாரதுறை பொறியியலாளர் தெரிவித்துள்ளனர்.  தொடர்ச்சியாக வரட்சியான காலநிலை நிலவுவதனால் இந்நீர்த்தேகத்தில் நீர் மட்டம் மேலும் குறைவடையலாம் எனவும் எனவே நீரினை மிகவும் கவனமாக பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிகவெகுவாக குறைவடைந்துள்ளதன் காரணமாக தற்போது மின் துண்டிப்பு இடம்பெற்று வருகின்றன கடந்த காலங்களில் ஐந்து ஆறு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளன.  இந்நிலையில் எரிபொருள் மற்றும் நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள வரட்சி நிலை காரணமாக 10 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.  இதே நேரம் மலையகத்தில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினையடுத்து நீர் ஓடைகள் நீரூற்றுக...

225 பேரும் எமக்குத் தேவையில்லையென நாட்டு மக்கள் கூறும் நிலை என்கிறார் மைத்திரி

Image
பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரும் எமக்குத் தேவையில்லையென நாட்டு மக்கள் கூறும் நிலை உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மறைந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். மறைந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்றுள்ள அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியானவர்கள் என்றும் அவர்கள் இதுபோன்ற காலத்தில் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். எஸ். செல்லச்சாமி, க.தங்கேஸ்வரி, பெற்றி வீரக்கோன், ஜஸ்டின் கலப்பத்தி ஆகியோருக்கான அனுதாபப் பிரேரணை நடைபெற்றது. இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி; சட்டத்தரணியான பெற்றி வீரக்கோன் சிறந்த அரசியல்வாதி மட்டுமன்றி சிறந்த மக்கள் சேவையாளருமாவார். சட்டத்துறை, தொழிற்சங்க துறை, அரசியல் மற்றும் சமூகத் துறைகளில் அகலக்கால் பதித்து மக்களுக்கு சிறந்த சேவை செய்தவர். அதேபோன்று மறைந்த க. தங்கேஸ்வரி எனது அடுத்த மாவட...

நிந்தவூர் வைத்தியசாலை வீதியில் எரிவாயு கொள்வனவுக்காக இன்று அதிகாலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு !

Image
(நூருல் ஹுதா உமர்) நிந்தவூர் வைத்தியசாலை வீதியில் எரிவாயு கேஸ் கொள்வனவு செய்வதற்காக இன்று 2022.03.25 அதிகாலை முதல் மக்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருக்கின்றனர். எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விநியோகம் இவ்வாரம் முதல் வழமைக்குத் திரும்பும் என இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் கடந்த வாரம் தெரிவித்துள்ள போதிலும் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கான விநியோகம் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. இதனால் மக்கள் எரிவாயு மற்றும் எரிபொருள் ஆகியன வந்து சேரும் என எதிர்பார்த்து வீதிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கியூவில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், இதுவரை எரிபொருள் கொள்வனவுக்காக நின்ற பலர் உயிரிழந்துள்ள சம்பவமும் இலங்கையில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதேநேரம் நிந்தவூர் பிரதேசத்தில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு அருகில் இருந்து ஆரம்பித்துள்ள எரிவாயு கொள்வனவு காண வரிசை கடற்கரை வீதியில் சென்று சுமார் 200 மீட்டர் தூரம் நீண்டு சென்றுள்ளது. இருந்த போதும் இன்னும் இந்த இடத்திற்கு எரிவாயு வந்து சேரவில்லை எனவும் அங்குள்ள மக்கள...

அடுத்த வாரம் முதல் 10 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும் நிலை..

Image
எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கையில் பல மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி தற்காலிகமாக இடைநிறுத்தப் பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி இடைநிறுத்தப் பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தற்போதைய மின்வெட்டு ஒரு நாளைக்கு 6 ½ மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக நீட்டிக்கப்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன . அடுத்த வாரம் முதல் 10 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருள் மற்றும் நீர் மின் நிலையங்களில் தண்ணீர் இல்லாததால் மின்வெட்டு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/GjtUs28 via Kalasam

இடைநிறுத்தப்பட்டது புகையிரத கட்டண அதிகரிப்பு

Image
(எம்.மனோசித்ரா) புகையிரத திணைக்களத்தினால் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட கட்டண திருத்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டண திருத்தம் தொடர்பில் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம, தற்போதுள்ள புகையிரத கட்டணங்களில் எவ்வித அதிகரிப்பும் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தூரப்பிரதேசங்களுக்கான புகையிரத கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் நேற்றுமுன்தினம் அறிவித்திருந்தது. எனினும் இது போக்குவரத்து அமைச்சிற்கு அறிவிக்காமல் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் எனத் தெரிவித்து வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பிலேயே அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/47roPjk via Kalasam

மாகாண இளைஞர் சேவைகள் காரியாலய விவகாரத்தில் முட்டுக்கொடுக்கப்பட்ட கம்பொன்று தழைத்ததை ஒத்த சம்பவமே நடந்துள்ளது - கிழக்கின் கேடயம்

Image
நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருதில் இருந்து இடமாற்றம் செய்யப்பட இருந்த கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் காரியாலய விவகாரம் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ள சூழ்நிலையில் நேற்று பிரதமரை சந்தித்து தீர்வை பெற எத்தனித்த சகலருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். இந்த விடயம் தொடர்பில் கரிசனையுடன் செயலாற்றிய அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், ஊடகங்கள், பொது அமைப்புக்கள், இளைஞர்கள், காரியாலய அதிகாரிகள், மறைமுகமாக உதவிய எல்லோருக்கும் நன்றிகள் என கிழக்கின் கேடயத்தின் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ் தெரிவித்தார். இளைஞர் பாராளுமன்ற கப்பல் துறைமுகங்கள் பிரதியமைச்சர் எஸ்.எம். றிஹான், இளைஞர் கழகங்களின் சம்மேளன அம்பாறை கிளையின் பிரதித்தலைவர் எம்.எம். ருக்ஸான், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற நிஸ்கோ மாவட்ட கிளையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹிஸாம் ஏ பாவா, சாய்ந்தமருது இளைஞர் கழக சம்மேளன தலைவர் எம். சிப்னாஸ், கிழக்கின் கேடயம் அமைப்பின் பிரதிநிதி இஸட். சக்கி ஆகியோர் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (24) இரவு சாய்ந்தமருது சீ பிரிஸ் இல் நடைபெற்றது. இதன்போதே அவ...

முக்கியமான ஒரு தகவல்

Image
நேற்று மதியம் யஹலத்தன்ன பகுதியில் பிள்ளைகள் இருவரை கடத்த முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. தனியாக சென்ற இரண்டு பிள்ளைகளை வெளியூரில் இருந்து வந்த வாகனத்தில் கடத்த முற்பட்ட பொழுது அத்திட்டம்   முறியடிக்கப்பட்டு பிள்ளைகள் பாதுகாக்கப்பட்டனர்.  *பெற்றோர்களே!  உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் போது மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுங்கள். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/mK0ywfr via Kalasam

கொழும்பில் 23 வீடுகள் தீக்கிரை

Image
கொழும்பு – பாலத்துறை (தொட்டலங்க) பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் சுமார் 23 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன. இந்த தீ விபத்து நேற்றிரவு 12.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 2 தீயணைப்பு இயந்திரங்களை பயன்படுத்தி தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் எந்தவொரு உயிர் சேதமோ அல்லது காயங்களோ பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். (R) from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/IoQxFb0 via Kalasam

இன்று ஜனாதிபதி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் சந்திப்பு!

Image
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் 10.30க்கு நடைபெறவுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறுவதாக இருந்து பிற்போடப்பட்ட சந்திப்பு, கடந்த 15ஆம் திகதி இடம்பெறவிருந்தது. எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, குறித்த தினத்தில் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அந்த சந்திப்பு இன்றைய நாளுக்கு பிற்போடப்பட்டது. இன்று இடம்பெறவுள்ள சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 3 பங்காளிக் கட்சிகளுள், இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் புளொட் என அறியப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய இரு கட்சிகளும் பங்கேற்க உள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ என அறியப்படும் தமிழீழ விடுதலை கழகம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் இன்று இடம்பெறவுள்ள சந்திப்பில், ...

O/L பரீட்சையில் மாற்றமில்லை – திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவிப்பு.!

Image
கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரபத்திர சாதாரண தர பரீட்சைகள் திட்டமிட்டபடி மே மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். 2022ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்களில் 38 மில்லியனுக்கும் அதிகமானவை அச்சிடப்பட்டு பிரதான களஞ்சியசாலைகளில்வைக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும்போது முழுமையாக பாடப் புத்தகங்கள் வழங்கும் பணிகள் நிறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/h9gT4c1 via Kalasam

‘பிளேன் டீ’ யின் விலை ரூ.60 ஆனது

Image
சீனி மற்றும் எரிவாயு விலை உயர்வால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் 30ரூபாவுக்கு தேநீர் விற்பனையானமை குறிப்பிடத்தக்கது. உணவுப் பொருட்களின் விலை உயர்வால் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/URvXfKD via Kalasam

இன்று 6 மணித்தியாலங்களுக்கு அதிக மின்வெட்டு

Image
இன்று நாட்டில் எட்டு பகுதிகளுக்கு 6 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு காலை 08.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 4 மணி 30 நிமிடங்கள் மற்றும் மாலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை 1 மணி 50 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி 20 நிமிடங்களும் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். இன்று நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/6eXxs8U via Kalasam

7 தங்கப் பதக்கங்களை வென்று மைசூர் பல்கலைக்கழகத்தில் லாம்யா மஜீத் சாதனை

Image
கர்நாடக மைசூர் பல்கலைக்கழகத்தில் ஒரு ஹிஜாப் மாணவி லாம்யா மஜீத் 7 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை. இன்று (23) மைசூர் பல்கலைக்கழகத்தின் 102வது பட்டமளிப்பு விழாவில்,மற்றொரு மாணவி லாம்யா மஜீத், எம்.எஸ்சி தாவரவியல் பிரிவில் ஏழு தங்கப் பதக்கங்களையும், இரண்டு ரொக்கப் பரிசுகளையும் வென்றுள்ளார், கடந்த வாரம் கர்நாடகாவில் நடந்து வரும் ஹிஜாப் பிரச்சினைகளுக்கு மத்தியில், ராய்ச்சூரை சேர்ந்த சிவில் இன்ஜினியரிங் மாணவி புஷ்ரா மாதின் விஸ்வேஸ்வரயா தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் 16 தங்கப்பதக்கங்களை வைன்று சாதனை படைத்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/dEXKwJx via Kalasam

பிரபாகரானால் 30 வருடங்களில் முடியாததை கோட்டா செய்துவிட்டார்

Image
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் 30 வருடங்களில் செய்ய முடியாததை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இரண்டே வருடங்களில் செய்துவிட்டதாக தெரிவிக்கும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன், காணி உரிமை என்பது மலையக மக்களுக்கு எட்டாக்கனி எனவும் தெரிவித்தார். காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழான 2251/48, 2262/50 மற்றும் 2266/5 இலக்க வர்த்தமானப் பத்திரிகையின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மீதான நேற்றைய (23) விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், சிங்களவர்கள், வட,கிழக்கு தமிழர்கள், முஸ்லிம் உள்ளிட்ட மக்களுக்கு இந்நாட்டில் காணிகள் உள்ளன. ஆனால் மலையக மக்களுக்கு காணிகள் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது என்றார். தொழிலாளர்கள், தொழில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் வாழ்வதற்கென ஒரு வீடு அவர்களுக்கு இல்லை. அவர்கள் வீதிகளில் நிற்கும் நிலையே காணப்படுகிறது. வாக்குரிமை இல்லாத காலத்திலும் வாக்குரிமை பெற்றப் பின்னரும் மலையக மக்களுக்கு காணி உரிமைகள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார். மாகாணசபைகளை...

கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் கலந்துகொள்ளும் எந்த நிகழ்வுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பொறுப்பல்ல..!

Image
  கட்சியின் கட்டுப்பாடுகளையும், கொள்கைகளையும் மீறி செயற்பட்டதனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு, ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களான முஷாரப் முதுநபீன் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகிய இருவரும், ஜனாதிபதி தலைமையில் இன்று (23) இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ‘சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வதில்லை’ என்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தை மீறி, அவர்கள் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றார்கள். இவர்கள் கட்சியிலிருந்தும், உறுப்புரிமையிலிருந்தும், கட்சியின் சகல பதவிகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, இவர்கள் கட்சியின் பெயரை சொல்லிக்கொண்டு, கட்சியின் சார்பாக சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அருகதையற்றவர்கள் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். எஸ்.சுபைர்தீன், செயலாளர் நாயகம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/EAidt5P via Kalasam

சர்வ கட்சி மாநாடு : முஸ்லிம் கட்சிகளின் புறக்கணிப்பு சரியானதா…?

Image
இன்று சர்வ கட்சி மாநாடு நடைபெற்றிருந்தது. இம் மாநாட்டை பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள், அரசின் பங்காளி கட்சிகள் புறக்கணித்துள்ளன. இப் புறக்கணிப்பு வரிசையில் முஸ்லிம்களின் பிரதான கட்சிகள் இரண்டும் உள்ளன. இலங்கை முஸ்லிம் அரசியலை மிக நிதானமான பாதையில் நகர்த்த வேண்டிய தேவை கட்சி தலைவர்களுக்கு உள்ளதை யாரும் மறுக்க முடியாது. இச் சந்தர்ப்பத்தில் அரசோடு இணைந்து, நாட்டு பற்றை வெளிப்படுத்தலாமே என்ற வினாவை சிலர் எழுப்புவதை அவதானிக்க முடிகிறது. அப்படியானால், பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள், பெரும்பான்மையான அரசின் பங்காளி கட்சிகள் நாட்டு பற்றற்றவையா என்ற வினா எழுகிறது. அதிகமான கட்சிகள் புறக்கணிப்பை செய்துள்ளதால் இதில் முஸ்லிம் கட்சிகளை நோக்கி யாருடைய பார்வையும் செல்ல வாய்ப்பில்லை. இவர்கள் கலந்து கொண்டிருந்தாலே, அது வேறு கோணம் எடுத்திருக்கும். இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒப்பந்தங்களை செய்து, முஸ்லிம் கட்சிகள் சாதிக்கலாமே என்று ஒரு ஆக்கம் படித்தேன். சர்வ கட்சி மாநாடு செல்ல ஒப்பந்தம் செய்ய கூறும் அறிவாளியை என்னவென்று சொல்வது? சர்வ கட்சி மாநாட்டில் ஒப்பந்தங்கள் செய்தாவது முஸ்லிம் கட்சிகளை ...