Posts

Showing posts from October, 2021

மாகாணப்பணிப்பாளர் நவநீதனின் பங்குபற்றலுடன் மாணவர்களுக்கான பக்கீர் பைத் பயிற்சிப் பட்டறை !

Image
  நூருல் ஹுதா உமர்  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த  "மாணவர்களுக்கான பக்கீர் பைத்  பயிற்சிப் பட்டறை -2021"  நிகழ்வு பொத்துவில் அல் அக்ஸா வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்ட கலாச்சார அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.எம். தெளபீக்கின் தலைமையில் இடம்பெற்றது.   இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர்  சரவணமுத்து நவநீதன் கலந்து கொண்டார். மேலும் விஷேட அதிதிகளாக பொத்துவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில், பொத்துவில் பிரதேச செயலக கணக்காளர் எம்.ஏ. அப்துர் ரஹ்மான், பொத்துவில் அல் அக்ஸா வித்தியாலய அதிபர் என்.டீ. அப்துல் கரீம் ஆகியோரும் இவ்வேலைத் திட்டத்திற்கு உதவி இணைப்பாளராக செயற்படும் ஆலையடிவேம்பு கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.ஜவ்பர், பொத்துவில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்.எம்.எல்.எம். இஸ்ஸத் கலைஞர் கிராமத்தான் கலீபா உட்பட பல இலக்கிய ஆர்வலர்களின் பங்கு...

பேருவளை, தர்காடவுனில் ரிஷாட் பதியுதீனும் ராஜித்தவும்

Image
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இன்று மாலை (31) பேருவளை, தர்காடவுன் பிரதேசத்துக்கு விஜயம் செய்து, கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்கள், பிரதேசவாசிகள் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார். பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹசீப் மரிக்காரின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பில், முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்னவும் பங்கேற்று, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுடன் உரையாடியதுடன், அங்கு வருகை தந்திருந்த மக்களுடனும் அளவளாவினர். இந்த சந்திப்பின் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் பேருவளை தொகுதி அமைப்பாளர் இப்திகார் ஜெமீல், மக்கள் காங்கிரஸின் கொள்கைபரப்புச் செயலாளர் ஜவாத் மற்றும் வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் ஆகியோரும் உடனிருந்தனர். சுமார், ஆறு மாத காலமாக சிறையிலிருந்து விடுதலையான பின்னர், தமது பிரதேசத்துக்கு வருகை தந்த தலைவர் ரிஷாட் பதியுதீனை, கட்சித் தொண்டர்களும், ஆதரவாளர்களும், அபிமானிகளும் அன்புடன் வரவேற்று சுகம் விசாரித்தனர். அத்துடன், தலைவ...

தடுப்பூசிபெறாத யாசகர்களை கண்டறிய அதிரடி நடவடிக்கை

Image
மேல் மாகாணத்திற்குள் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாத யாசகர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தினால் இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்றிரவு (30) 7 மணித்தியாலத்திற்கும் அதிக காலம் மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கொரோனா தடுப்பூசிகளைப் பெறாத 77 யாசகர்கள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில் 22 பேருக்கு நேற்று (30) முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதன்போது மேல் மாகாணத்தில் வசிக்கும் 541 யாசகர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களில் 464 பேர் ஒரு தடுப்பூசியையேனும் பெற்றிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3w0MQaJ via Kalasam

அரசாங்கத்தை வீழ்த்த அரசாங்கத்திற்குள்ளேயே சூழ்ச்சி : 2014 காலப்பகுதியில் இவ்வாறான தன்மையே காணப்பட்டது : மஹிந்த தீர்வு காண்பார் என்கிறார் செஹான் சேமசிங்க

Image
(இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்திற்குள் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறான தன்மையே காணப்பட்டது. அரசாங்கத்திற்குள் தோற்றம் பெற்றுள்ள முரண்பாட்டிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெகுவிரைவில் தீர்வு காண்பார் என சமுர்த்தி மற்றும் நுண்கடன் அபிவிருத்தி, இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அனுராதபுரம் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், யுகதனவி மின் நிலைய விவகாரம் தொடர்பில் கடந்த வாரம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் பங்காளி கட்சித் தலைவர்கள் கூட்டம் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தையின்போது பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டன. யுகதனவி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானம் தொடர்பில் ஆளும் கட்சியின் பங்காளி கட்சியினர் இப்பேச்சுவார்த்தையின்போது அதிக கவனம் செலுத்தினர். கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமாயின்...

சந்தையில் மஞ்சள் தூளின் விலையில் வீழ்ச்சி!

Image
நாட்டில் மஞ்சள் தூளின் விலை 7000 ரூபாவிலிருந்து 4500 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.  இதுவரையில் உள்நாட்டு சந்தையில் அதிகரித்து காணப்பட்ட மஞ்சள் தூளின் விலையானது, உள்ளூர் அறுவடைகள் சந்தைக்கு  கிடைக்கப்பெற்றதையடுத்து வீழ்ச்சியடைந்துள்ளது.  அவ்வாறே விதை மஞ்சள் கிலோவொன்றின் விலை  1000 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.  வெவ்வேறு பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளில் பெரும்பாலானோர் மஞ்சள் செய்கையிலும் ஈடுபட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3bs83AL via Kalasam

ஜனாதிபதி கோத்தாபயவின் தவறான தீர்மானங்களை அவர் அறியாவிடினும் நாட்டு மக்கள் குறிப்பாக பெரும்பான்மையினர் நன்கு அறிந்துள்ளார்கள் : பி.ஹரிசன்

Image
இராஜதுரை ஹஷான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தவறான தீர்மானங்களை அவர் அறியாவிடினும் நாட்டு மக்கள் குறிப்பாக பெரும்பான்மையின மக்கள் நன்கு அறிந்து கொண்டுள்ளார்கள். இடம்பெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் அரசாங்கத்திற்கும், எதிர்க்கட்சிக்கும் தீர்மானமிக்கதாக அமையும். மாகாண சபைத் தேர்தலில் வட மத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயாராகவுள்ளேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.பி.ஹரிசன் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை தோற்றம் பெறாமலிருக்க வேண்டுமாயின் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். உரப் பிரச்சினைக்கு துரிதகரமாக தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தினோம். இருப்பினும் அரசாங்கம் அவற்றை பொருட்படுத்தாமல் தன்னிச்சையான முறையில் செயற்படுகிறது. இரசாயன பசளை இறக்குமதி தடை செய்யப்பட்டதை தொடர்ந்து சேதனப் பசளை அறிமுகப்படுத்தப்பட்டது. அரசாங்கத்தின் தீர்மானத...

கூச்சலிட்டுக் கொண்டிருக்காமல் , அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்ப்பை காட்டுங்கள்.

Image
(எம்.மனோசித்ரா) அமைச்சரவை அமைச்சர்களுக்கு கூட தெளிவுபடுத்தப்படாமல் கெரவலப்பிட்டி ஒப்பந்தம் போன்ற முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது அதனை எதிர்க்கும் அமைச்சர்கள் அரசாங்கத்திற்குள் இருந்து கூச்சலிட்டுக் கொண்டிருக்காமல் , அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்ப்பை வெளியிட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். ஆளுந்தரப்பின் பங்காளி கட்சிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முரண்பாடு தொடர்பில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறிய முதலாவது நபர் நான் ஆவேன். 40 வருடங்களுக்கும் அதிக அரசியல் அனுகுபவத்தின் ஊடாகவே நான் அதைக் கூறினேன். குறைந்தபட்சம் பிரதேசசபை உறுப்பினராகக் கூட சேவையாற்றிய அனுபவம் கூட அற்ற அவரால் எவ்வாறு நாட்டை முறையாக நிர்வகிக்க முடியும்? அன்று என்னை தூற்றிய மக்கள் இன்று நான் கூறியது சரி என்று ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3jVysLU via Kalasam

நாட்டு மக்களை இரு தினங்கள் இருட்டில் வைத்திருக்க முயல்வது எத்தகைய அநீதியான முடிவாகும் - ஜோன்ஸ்டன்

Image
நவம்பர் மாதம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ள பேலியகொட புதிய களனி பாலத்தின் இறுதிக்கட்ட நிர்மாணப் பணிகளை ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டார். புதிய களனிப் பாலம் கொழும்பு நகரின் அழகை மேம்படுத்தும் என்பதால் கோபுரங்களில் நிர்மாணிக்கப்பட்ட பாலத்திற்கருகில் நிலத்தை அழகுபடுத்துவதற்காக நடப்பட்டுள்ள உள்ளூர் தாவரங்கள் குறித்து அமைச்சர் கவனம் செலுத்தினார். புதிய களனி பாலத்தை பார்வையிடும் விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்... புதிய களினி பாலம் மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் என்பன எப்பொழுது மக்கள் பாவனைக்காக திறக்க்பபடும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், களனிப் பாலத்தின் பணிகளை நிறைவு செய்து எதிர்வரும் நவம்பர் மாதம் மக்கள் பாவனைக்கு திறக்க எதிர்பார்க்கிறோம். மேலும் நீதிமன்றத்தில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின் பிரகாரம் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தை மீரிகம தொடக்கம் குருநாகல் வரை பூர்த்தி செய்து நவம்பர் 15 ஆம் திகதி மக்கள் பாவனைக்கு...

தமிழ் மொழியை கண்டுகொள்ளாத “மக்களின் பேரவை”

Image
மக்களின் நாளைய நலனுக்காக என்ற போர்வையில் ஆளும் அரசாங்கத்தில் உள்ள பிரதான இனவாதிகளின் தலைமையில் பதினொரு கட்சிகள் சேர்ந்து அமைக்கப்பட்ட “மக்களின் பேரவை” யானது வரவேற்கத்தக்க விடயமாகும். ஆனால் அதன் ஆரம்ப வைபவ மேடையில் காட்சிப்படுத்தப்பட்ட விளம்பர பதாகைகளில் எந்தவொரு இடத்திலும் தமிழ் மொழியை காணமுடியவில்லை. மாறாக அனைத்து பதாகைகளும் சிங்கள மொழியிலேயே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதாவது பல இன, மொழி பேசுகின்ற மக்கள் வாழுகின்ற நாட்டில் நடைபெறுகின்ற நிகழ்வுபோலல்லாது ஒரு இனத்தை அல்லது ஒரு மொழியை பிரதிநிதித்துவம் செய்பவர்களின் நிகழ்வு போன்று இருந்தது. இது கண்டிக்கத்தக்க விடயமாகும். இந்த நாட்டில் வாழுகின்ற இரண்டு சிறுபான்மை தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களின் தாய்மொழியான தமிழை புறக்கணித்துவிட்டு எந்த மக்களின் நலனுக்காக இதை தோற்றுவித்தார்கள் என்பது எமக்கு புரியாத ஒன்றல்ல. இந்த நாட்டில் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்தினை கோரியே ஆரம்பத்தில் தமிழர்கள் அஹிம்சை போராட்டத்தினை நடாத்தினார்கள். பின்பு அது தனிநாட்டுக்கான ஆயுதபோராட்டமாக மாறியது. அவ்வாறிருந்தும் இரண்டு சிறுபான்மை மக்களின் உணர்வுகளை புறம்...

நாளை சில பகுதிகளில் 12 மணி நேரத்திற்கு நீர்வெட்டு

Image
களனி முதுன்கொட (புதிய கண்டி வீதி) நீர்வழிப்பாதையின் திருத்த பணிகள் காரணமாக நாளை(01) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையான 12 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, சியம்பலாபேவத்த, பியகம, தெல்கொட, உடுபில – அனுருமுல்ல, கேரகல, தெமலகம, கதுபொட, தெனடன, பெலஹெல, இந்தொலமுல்ல, தொம்போ, நாரங்வல, வெலிவேரிய மற்றும் ரத்துபஸ்வல ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3bsX2PM via Kalasam

தனக்கு ஆலோசனை வழங்கவே ஞானசார தேரரை தெரிவு செய்தேன்- ஜனாதிபதி

Image
  ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கை வரைபை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைமை பதவி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டமையானது தனக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே தவிர நாட்டுக்கு நீதியை வழங்குவதற்காக அல்லவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் சந்திப்பில் வைத்து ஜனாதிபதி இததை் தெரிவித்தார். தான் செய்யும் சொல்லும் அனைத்திற்கும் கட்சித் தலைவர்களிடம் ஆலோசனைப் பெற சென்றால், தனக்கு தேவையான நண்பர்களை தெரிவு செய்வதற்கும் அவர்களிம் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்படுமெனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். நீதி அமைச்சராக அலி சப்ரியை தெரிவு செய்த சந்தர்ப்பத்திலும் இவ்வாறு எதிர்ப்புகள் வந்ததாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். நன்றி thamilan from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3GznO7o via Kalasam

ஞானசார தேரரின் நியமனத்திற்கு எதிர்ப்பு வெளியிட கத்தோலிக்க பேராயர்கள் தீர்மானம் ?

Image
ஜனாதிபதி செயலணிக்கு ஞானசார தேரரை நியமித்தமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு கத்தோலிக்க பேராயர்கள் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைக்க உள்ளதாக நம்பகமாக அறியவருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் இந்த நியமனம் தொடர்பில் பேசப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி செயலணிக்கு ஞானசார தேரரை நியமித்தமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு கத்தோலிக்க பேராயர்கள் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைக்க உள்ளதாக நம்பகமாக அறியவருகிறது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3CAWJyf via Kalasam

65 வயதுமாமனாரை திருமணம் செய்து கொண்ட 21 வயது மருமகள்.!

Image
பீகார் மாநிலத்தின் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோஷன் லால் (65). இவரின் மகனுக்கும் சுவப்ணா (21) என்ற பெண்ணுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருமண சமயத்தில் தான் காதலித்து வந்த பெண்ணுடன் மணமகன் ஓடிபோய்விட்டார். இதனால் திருமண வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தனது கவுரவம் கெட்டுவிடக்கூடாது என சுவப்ணாவின் தந்தை அதிர்ச்சி முடிவை எடுத்தார். அதன்படி தனது மகளை, அவரின் மாமனாரான ரோஷன் லாலுக்கு திருமணம் செய்துவைத்தார். மணப்பெண் சுவப்ணாவும் வேறு வழியின்றி ரோஷனை திருமணம் செய்து கொண்டார். (Lankapuri) from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3Bqu9OR via Kalasam

இஸ்லாமிய திருமணம் தொடர்பான இறுதி சட்ட வரைபு 2 வாரங்களில் அமைச்சரவைக்கு

Image
இஸ்லாமிய திருமண – விவாகரத்து சட்டத்திருத்தம், காதி முறைமை மற்றும் சிறுவயது திருமணத்தை இரத்து செய்தல் தொடர்பான இறுதி சட்ட வரைபு எதிர்வரும் 2 வாரங்களில் அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். முதலாவது சட்ட வரைபு தொடர்பில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை ஆராய்ந்து புதிய சட்ட வரைபு தயாரிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். திருமண வயதெல்லையை 18 ஆக மாற்றுதல், திருமணத்தைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்குதல் மற்றும் அதற்குப் பெண்களின் கையொப்பத்தினையும் பெற்றுக் கொள்ளுதல், காதி முறைமையை இல்லாது செய்தல், சிறுவயது திருமணத்தைத் தடுத்தல், காதிகளாகப் பெண்களையும் நியமிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குதல் உள்ளிட்ட யோசனைகள் அதில் அடங்குகின்றன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/317NbwK via Kalasam

மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

Image
மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கே முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3BxZSxk via Kalasam

ஞானசார தேரர் பதவியில் நீடித்தால் நான் பதவி விலகுவேன் ; அலி சப்ரி

Image
ஞானசார தேரர் ஜனாதிபதி செயலணியின் தலைவர்  பதவியில் தொடர்ந்து நீடித்தால் தன்னால் நீதி அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது என  நீதி அமைச்சர் அலி சப்ரி திட்டவட்டமாக கூறி உள்ளதாக தேஷய பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. ஞானசார தேரரை ஜனாதிபதி செயலணியின் தலைவராக  நியமித்துள்ளமை தொடர்பில் தன்னிடம் ஆலோசனை பெறவில்லை என கூறி உள்ள அவர் ஞானசார தேரரரின் நியமனம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் இதற்கு தீர்வு கிட்டாத பட்சத்தில் அவர் பதவி விலகுவார் என கூறப்படுகிறது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3GDtdu7 via Kalasam

திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு

Image
திங்கள் முதல், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர், தமது பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இலங்கை ரயில்வே திணைக்களம் ஆகியவை திட்டமிட்டுள்ளன. அதன்படி, பயணிகளின் தேவைக்கேற்ப தனியார் பஸ் சேவைகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா தெரிவித்தார். தனியார் பஸ் சுகாதார விதிமுறைகளின்படி இயக்கப்படும் என்றும், சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தங்கள் கடமைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் இருக்கை திறனுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதேவேளை, நவம்பர் 1 முதல் 152 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் ஜே.ஐ.டி.ஜெயசுந்தர தெரிவித்தார். பயணிகள் வசதிக்காகவும், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அவர்களின் சமூக தூரத்தை பராமரிக்கவும்...

தெஹிவளை பள்ளி தாக்குதல்தாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

Image
தெஹி­வளை - கொஹு­வலை பாத்­தியா மாவத்தை பள்­ளி­வாசல் தாக்­குதல் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சந்­தேக நபரின் விளக்­க­ம­றியல் எதிர்­வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி .வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த 13 ஆம் திகதி காலை 8.00 மணி­ய­ளவில் மோட்டார் சைக்­கிளில் வருகை தந்த சந்­தேக நபர் பள்­ளி­வாசல் பிர­தான வாயில் மீது தாக்­குதல் நடத்­தி­ய­தை­ய­டுத்து சிசி­ரிவி பதி­வு­களின் உத­வி­யுடன் கொஹு­வலை பொலிஸார் அவரை கைது செய்து கல்­கிசை நீதிவான் நீதி­மன்றில் கடந்த 18 ஆம் திகதி ஆஜர்­ப­டுத்­தினர். நீதிவான் சந்­தேக நபரை கடந்த 25 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்­டி­ருந்தார். அன்­றைய தினம் சந்­தேக நபர் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் அவர் மீதான குற்­றச்­சாட்­டுகள் பிணை வழங்­கக் ­கூ­டி­யது எனக்­கூறி பிணை மனு­வொன்­றினைத் தாக்கல் செய்­தனர். இதே­வேளை பொலிஸ் தரப்பில் ஆஜ­ரான கொஹு­வலை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிணை வழங்­கப்­ப­டு­வதை ஆட்­சே­பித்தார். தாக்­கு­தலின் பின்­ன­ணியில் ஏதேனும் இன முறு­கல்­களை ஏற்­ப­டுத்தும் கார­ணிகள் உள்­ள­ன...

5 முதல் 11 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசி..

Image
பைஸர் தடுப்பூசியை 5 முதல் 11 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்குச் செலுத்த அமெரிக்க சுகாதார அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். அதற்கமைய, 28 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க சிறார்களுக்கு பைஸர் தடுப்பூசியைச் செலுத்தும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. பிரதிபலன் மற்றும் பக்கவிளைவு என்பன தொடர்பாக உயர்மட்ட மருத்துவ ஆலோசனை சபையின் விரிவான மதிப்பீடுகளின் பின்னரே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ,தற்போதுவரை சீனா, சிலி, கியூபா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் முதலான நாடுகள், ஐந்து வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3BzI7Oi via Kalasam

'ஒரே நாடு ஒரே சட்டம்' : மத்ரஸாக்கள், புர்கா, ஹலால் உள்ளிட்டவற்றுக்குத் தடைவிதிக்கப் படுமா ? - ஷரீன் அப்துல் ஸரூர் அதிரடி

Image
(நா.தனுஜா) 'ஒரே நாடு, ஒரே சட்டம்' கொள்கை தொடர்பான புதிய ஜனாதிபதி செயலணியானது முஸ்லிம் விவாக, விவாகரத்துச்சட்டத்திருத்தம் தொடர்பில் மாத்திரமன்றி மத்ரஸாக்கள், புர்கா, ஹலால் உணவு, அரபுமொழி நூல்கள், மாடு அறுத்தல் ஆகியவற்றுக்குத் தடைவிதிக்கப்படக்கூடும் என்ற கரிசனைகளையும் தோற்றுவித்திருப்பதாக பெண்கள் தொடர்பான செயற்பாட்டு வலையமைப்பின் இணை ஸ்தாபகரும் பெண்கள் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஷரீன் அப்துல் ஸரூர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இலங்கைக்குள் 'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்ற கொள்கையை செயற்படுத்தும் வரைபைத் தயாரிப்பதற்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் அடங்கிய விசேட ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுவந்தவரும் அதன் காரணமாகப் பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தவருமான ஞானசார தேரரின் தலைமையில் மே...

சடுதியாக அதிகரித்த காய்கறிகளின் விலை

Image
உரத் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் காய்கறிகள் உள்ளிட்ட ஏனைய பயிர் செய்கையிலிருந்து விலகுவதற்கு விவசாயிகள் தீர்மானித்துள்ளதாக விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கிடைத்துவரும் காய்கறிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக, தற்போது காய்கறிகளின் விலை நூற்றுக்கு நூறு வீதம் அதிகரித்துள்ளதாக அறியமுடிகிறது. முன்னதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு 25 இலட்சம் கிலோ வரையில் காய்கறிகள் கிடைத்து வந்த நிலையில், தற்போது அது 3 இலட்சமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோல எதிர்வரும் 2 மாதங்களில் மழையுடனான வானிலை நிலவுமானால் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கும் எனவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மொத்த விற்பனை சந்தையில் 200 ரூபாவாக இருந்த போஞ்சி ஒரு கிலோ தற்போது 450 ரூபாவாக அதிகரித்துள்ளது. மேலும் 280 ரூபாவில் இருந்த மாலுமிரிஸ் 540 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பச்சை மிளகாய் கிலோ 120 ரூபாவாகவும், கெரட் 120 ரூபாவாகவும் காணப்பட்ட நிலையில் இவைகளின் விலையும் 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் அமை...

புத்தளம் மாவட்டத்தில் கடும் மழை - வௌ்ளத்தில் மூழ்கிய பிரதேசங்கள்!

Image
புத்தளம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  புத்தளம் மாவட்டத்தில் இருக்கும் 16 பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ள போதிலும், இதுவரை எவரும் இடம்பெயரவில்லை எனவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரியொருவர் கூறினார்.  இதேவேளை, புத்தளம் நகர சபைக்குட்பட்ட பல கிராமங்களும் நேற்றும், இன்றும் பெய்த கடும் மழை காரணமாக மணல்குன்று, நூர்நகர், வெஸ்ட்டன் சோல்ட்டன், மதினா நகர், தில்லையடி உள்ளிட்ட சில பகுதிகளும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.  வீடுகள், வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள் , வீதிகள் என்பன இவ்வாறு வெள்ளத்தினால் மூழ்கியுள்ள போதிலும், புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவியுடன் புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் ஆகியோர் வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வ...

மீண்டும் இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா – நேற்று மட்டும் 805 பேர் பலி

Image
இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4.57 இலட்சத்தை கடந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கமைய, இன்று காலை 8 மணியுடன் நிறைவுக்கு வந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: பாதிப்பு 3.42 கோடியை தாண்டியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக 14 ஆயிரத்து 348 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,42,46,157ஆக அதிகரித்துள்ளதுடன் புதிதாக 805 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது. இதனால், நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 57 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து ஒரே நாளில் 13ஆயிரத்து 198 பேர் குணமடைந்துள்ளதுடன் இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 36 இலட்சத்து 27 ஆயிரத்து 632 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 334 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனா். from ...

“பொதுபல சேனாவுடன் எனக்கு தொடர்பில்லை...”

Image
கடந்த 2014 ஆம் ஆண்ட ஜூலை 3 ஆம் திகதி அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச ஊடகம் ஒன்றிடம் விசேட கருத்தை வெளியிட்டிருந்தார். “பொதுபல சேனாவுடன் எனக்கு தொடர்பில்லை...” பொதுபல சேனா அமைப்புடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. அந்த அமைப்புக்கு எந்தவிதமான உதவிகளை நான் வழங்கியதில்லை. குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்போரே, பல குழுக்கள் இடையில் பிரச்சினைகள் ஏற்படும் போது அதன் பின்னணியில் நான் இருப்பதாக கூறுகின்றனர். இலங்கை மனித உரிமைகள் சம்பந்தமாக ஜெனிவாவில் பிரச்சினைகளை எதிர்நோக்கி இருக்கும் சந்தர்ப்பத்தில் இலங்கையை குழப்ப முயற்சிக்கும் தரப்பினர் எனக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். எப்போதும் நாட்டில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த நான், அந்த அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயற்பட எந்த நபருக்கும் இடமளிக்க போவதில்லை. அத தெரண - 03.07.2014 அன்றைய பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ச அத தெரண ஊடகத்திற்கு மாத்திரமல்ல டெய்லி மிரர் பத்திரிகைக்கும் செவ்வியை வழங்கியிருந்ததுடன் தனக்கும் ஞானசார தேரருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை ...

ரிஷாட் பதியுதீனை காண ஆவலுடன் திரண்ட மக்கள் வெள்ளம் . !

Image
ஏற்படுத்திய இடைவெளி, ஆதரவாளர்களின் தொடர்புகளை நீட்டித்திருந்தாலும் அன்பின் கனதியை குறைக்கவில்லை. ஆறுமாத சிறைவாழ்க்கையின் பின்னர் , வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர் தேர்தல் தொகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளாா். நேற்று (29) இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்கள் ரிஷாட் எம்.பியை ஆரத்தழுவி, ஆனந்தத்தை வெளிப்படுத்தினர். இதேவேளை வவுனியா, சாளம்பைக்குளம் பகுதிக்கு விஜயம் செய்த ரிஷாட், மக்களுடன் அளவளாயுள்ளாா். கட்சித் தொண்டர்கள் ஆதரவாளர்கள், தாய்மார்கள், சிறுவர்கள், சமூகநல விரும்பிகள், சமூகப்பற்றாளர்கள் என பல்வேறு மட்டத்தினரும் இந்த விஜயத்தின் போது கலந்துகொண்டுள்ளனா். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3Bv0rrY via Kalasam