தமிழ் முற்போக்கு கூட்டணி, சஜித் பிரேமதாசவுடன் கரங்கோர்த்து இருக்க காரணங்கள் இவைதான் த.மு.கூ தலைவர் மனோ கணேசன் எம்.பி நுவரெலியா முதல் கொழும்பு அவிசாவளை வரை நாடெங்கும் பரந்து வாழும், பெருந்தோட்ட மக்களுக்கு வீடு கட்டி வாழவும், பயிர் செய்கை வாழ்வாதாரத்துக்கும் காணி வழங்கி, அவர்களை சிறுதோட்ட உரிமையாளராக்கும் எமது கொள்கையை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ளார். அதேபோல், கொழும்பு மாநகரில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வாழும் மக்களுக்கு தொடர்மனைகளை கட்டி சொந்தவீடுகள் வழங்கவும் சஜித் பிரேமதாச எம்முடன் ஒரு கட்சியாக, தேசிய கூட்டணியாக உடன்பாடு கண்டுள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணி, சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணியில், பிரதான பங்காளி கட்சியாக அங்கம் வகிக்க பிரதான காரணங்களில் இது ஒன்றாகும், எதிர்கட்சி தலைவர் பிரேமதாச, இவை தொடர்பில் எமக்கு எழுத்து மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் உறுதிகள் அளித்துள்ளார். பகிரங்கமாக மேடைகளில் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் அதை இன்று மீண்டும் கூறி உறுதி செய்தார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார். இன்றைய பாராளுமன...