Posts

Showing posts from August, 2022

சானக்கியன் MP க்கு குர்ஆன் வழங்கிவைப்பு.

Image
 அல்ஹம்துலில்லாஹ்! AR-RABBANIYYA-CANADA சார்பாக, நேற்று கனடாவின் ஸ்காபரோ நகரில் திரு சானக்கியன் ராசமாணிக்கம் எம்.பியை சந்திக்கவும், வாழ்த்தவும் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.  நாங்கள் பெருமையுடன் அல்லாஹ்வையும் அவனது அன்பிற்குரிய தூதர் (ﷺ) அவர்களையும் பற்றி கூறி அவருக்கு புனித குர்ஆன் வழங்கினோம், மேலும் அதை படிக்கவும், புரிந்துகொள்ளவும், எந்த உதவிக்கும் எங்களை அணுகவும் ஊக்கப்படுத்தினோம். அல்லாஹ் (ﷻ) அவருக்கு ஹிதாயத்தை வழங்கி வழிகாட்டிவானாக ஆமீன்! Alhamdhulillah! On behalf of Ar-Rabbaniyya-Canada, we had an opportunity to meet, greet and discuss about Allah and His beloved Messenger (ﷺ‎) with Mr Shanakiya Rasamanickam MP at Scarborough, Canada yestreday.  We proudly presented him the Holy Qur'an, The Book of Allah and encouraged him to read, understand and reach us for any assistance. May Allah (ﷻ) grant him Hidaya (Guidance) to prosper in this world and in the Akhira.  Ameen! from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/AFpk62T v...

மீள உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க உள்ளோருக்கான அறிவித்தல்

Image
  2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்றது. இந்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் https://ift.tt/zac6XsS என்ற இணையத்தள பக்கத்தில் பார்வையிடலாம். இதேவேளை,இம்முறை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் 2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சையில் மீள தோற்ற வேண்டுமெனில் எதிர்வரும் 1ஆம் திகதி 8ஆம் திகதி வரையில் ஒன்லைன் முறைமையில் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் முறைமை மற்றும் காலம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தமுறை வெளியாகியுள்ள பெறுபேறுகளுக்கு அமைய, 1 இலட்சத்து 71 ஆயிரத்து 497 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகுதிப்பெறுள்ளனர். உயர்தரப்பரீட்சைக்கு 2 இலட்சத்து 72 ஆயிரத்து 682 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில், 49 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ...

அமைச்சர் ஹாபிஸ் நஸீர் சவூதி அரேபியா விஜயம்

Image
  நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சுற்றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட் சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார். ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதியாகச் சென்ற அமைச்சர், (28) சவூதியின் தலைநகர் ரியாதுக்குச் சென்றார். மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தில், அமைச்சருக்கு விஷேட வரவேற்பளிக்கப்பட்டது.  சவூதி அரேபிய வௌிநாட்டமைச்சின் பணிப்பாளர் நாயகம் மஜீட் எஸ்பின் ஷொவ்லி மற்றும் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அம்ஸா ஆகியோர் அவரை வரவேற்றனர்.  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விஷேட பிரதிநிதியாகச் சென்றுள்ள அமைச்சர், சவூதியின் முக்கிய  உயர்மட்ட பிரமுகர்களைச் சந்தித்து பேச்சு நடாத்தவுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/uvS6RX7 via Kalasam

நற்பிட்டிமுனை பிரதேச சமூக நல விடயங்கள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்.

Image
நூருள் ஹுதா உமர் நற்பிட்டிமுனை பிரதேச சமூக நல விடயங்கள் தொடர்பில் ஆராயும்  நற்பிட்டிமுனை சிரேஷ்ட பிரஜைகள் பேரவைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம். எம். ஹரீஸ் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு   பாராளுமன்ற உறுப்பினரின் செயலகத்தில் இன்று (28) நடைபெற்றது.  முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்ட இ ந்த கலந்துரையாடலில் நற்பிட்டிமுனை பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள், பிரதேச எல்லை பிரச்சினைகள், பிராந்தியத்தில் தலைதூக்கியுள்ள போதை பொருட்கள் ஒழிப்பு விவகாரம், நற்பிட்டிமுனையில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆழமாக கலந்துரையாடப்பட்டது.  இந்த கலந்துரையாடலில் நற்பிட்டிமுனை சிரேஷ்ட பிரஜைகள் பேரவை சார்பில் அமைப்பின் ஆலோசகர்களான சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எம்.எச்.எம். நளீர், மௌலவி யூ. எல்.ஏ. கபூர், அமைப்பின் தவிசாளர் ஏ.ஏ. கபூர், தலைவர் மௌலவி ஏ.எல். நசீர் கனி, பொதுச்செயலாளர் எம்.எம். றியாஸ், நிதி செயலாளர் ஐ.எல். ரவூப்தீன், பொருளாளர் யூ. எல். தௌஃபீ...

கபினட் அமைச்சர்களாக ஐ.ம.சக்தியின் சிரேஷ்ட எம்.பி.க்கள் ஐவர்

Image
  -சி.எல்.சிசில்- ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட எம்.பி.க்கள் ஐவர் கபினட் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்று இவர்கள் அமைச்சரவையில் இணையவுள்ளனர். இவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் பலமிக்க அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களாவர். சர்வகட்சி அரசாங்கத்துக்குப் பதிலாக அனைத்துக் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் தேசிய அரசாங்கத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் தற்போது தயாராகி வருகின்றது. இதன்படி, கட்சிகளாக இல்லாது தனிப்பட்ட எம்.பி.க்கள் என, பல கட்சிகளின் எம்.பி.க்கள் இணைந்து, அரசில் அமைச்சர் பதவிகளைப் பெற உள்ளனர். புதிய அமைச்சரவை இன்னும் சில தினங்களில் பதவியேற்கவுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/4BVtS1m via Kalasam

இறைச்சி , மீன் விலை குறைப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்

Image
கோழிக்கறி மற்றும் மீனின் விலை குறைப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சந்தையில் கோழி இறைச்சியின் விலை மற்றும் அதற்கான விலை தொடர்பான தரவுகள் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சீமெந்து, கம்பி மற்றும் இரும்பு ஆகியவற்றின் விலைகளை குறைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/HtyWhRe via Kalasam

அடுத்த உணவு எப்படி கிடைக்கும் என்று தெரியாமல் பசியுடன் படுக்கைக்குச் செல்லும் சிறுவர்கள் – யுனிசெப்

Image
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தமது பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத பெற்றோர்கள் அந்த குழந்தைகளை சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பும் போக்கு காணப்படுவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. நாட்டிற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜோர்ஜ் லரேயா அட்ஜெய், கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிலை தொடருமானால் குழந்தைகள் விடயத்தில் இந்நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தலைகீழாக மாறக்கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் தெரிவித்தார். அத்தோடு நாட்டில் வாழும் மூன்று குழந்தைகளில் ஒருவருக்கு அவசர உதவி தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் குறிப்பிட்டார். தற்போதைய நெருக்கடி நிலையில் பாடசாலைகள் உரிய முறையில் இயங்காதமை காரணமாக நெருக்கடிக்கு முன்னர் அவர்கள் பெற்றுக்கொண்ட மதிய உணவை கூட இழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நாட்டில் உள்ள குழந்தைகள் அடுத்த உணவு எப்படி கிடைக்கும் என்று தெரியாமல் பசியுடன் ...

பாதாள உலகத்தை ஒடுக்கும் விசேட நடவடிக்கை இன்று (27) முதல் ஆரம்பம்.

Image
பாதாள உலகத்தை ஒடுக்கும் விசேட நடவடிக்கை இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர், மேல் மற்றும் தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பயங்கரவாத விசாரணைப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப் படை, பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட புலனாய்வுத் திணைக்களத்தினர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/UW4BwNZ via Kalasam

மின் கட்டணம் திருத்தம் உள்ளிட்ட தகவல்களை கோருகிறது – IMF

Image
தற்போது நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. zoom தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதுடன் இருதரப்பும் சாதகமான கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. மின் கட்டண திருத்தம் மற்றும் கலால் சட்டம் தொடர்பான இந்த கலந்துரையாடல்களுக்கு தேவையான மேலதிக தகவல்களை வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க, எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் தகவல்களை வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஆலோசகர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களும் நேற்று கலந்துரையாடலில் கலந்துகொண்டதுடன், எதிர்வரும் புதன்கிழமை மற்றுமொரு சுற்று கலந்துரையாடலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/9Hc16JB via Kalasam

விடுதலையின் பின்னர் ரஞ்சனுக்கு கிடைத்த புதிய நியமனம்!

Image
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நல்லெண்ண தூதர் பதவியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார வழங்கினார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/PQBtkaE via Kalasam

ஜீ.எல் பீரிஸ் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

Image
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது பொருத்தமானதல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.  ஊழியர் மட்ட கலந்துரையாடலுக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/yNb5cI6 via Kalasam

ரஞ்சனை மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் – சஜித்

Image
நாடாளுமன்றத்தில் தேசிய பட்டியல் ஊடாக ஏற்படும் வெற்றிடத்தின் ஊடாக, ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாக எதிர்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/NmwAjvK via Kalasam

நீர் கட்டணம் அதிகரிப்பு!

Image
நீர் கட்டணத்தை செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் வௌியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/5YLS1gn via Kalasam

மிகத் தீவிரமாக பரவும் டெங்கு!

Image
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் நிமல்கா பன்னில ஹெட்டி தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (25) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த வைத்தியர் நிமல்கா பன்னில ஹெட்டி, குறித்த பிரதேசங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். கடந்த மாதம் 11 ஆயிரத்து 500 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டிருந்ததுடன் ,ஒகஸ்ட் மாதத்தில் 5 ஆயிரத்து 600 ஆக குறைவடைந்துள்ளது. இருப்பினும் எதிர்வரும் காலங்களில் பருவமழையினால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் எனவும் வைத்தியர் நிமல்கா பன்னில ஹெட்டி தெரிவித்தார். மேலும் கூறுகையில் ,டெங்கு தடுப்பு வேலைத்திட்டங்களின் போது பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் ஆதரவைப் பெற்றாலும் டெங்கு பரவும் இடங்களை சுத்தம் செய்வதும், அந்தந்...

ரஞ்சன் ராமநாயக்கவின் பொது மன்னிப்பு ஆவணத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்

Image
  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பொது மன்னிப்பு கடிதத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடன் தான் கையெழுத்திட்டதாக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, ரஞ்ஜன் ராமநாயக்க இன்றைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரஞ்சன் ராமநாயக்க சத்திய கடிதத்தின் ஊடாக நீதிமன்றத்திடம் நேற்றைய தினம் மன்னிப்பு கோரியிருந்தார். இந்தநிலையில், ஜனாதிபதியின் அனுமதியின் கீழ், பொது மன்னிப்பு ஆவணத்தில் தான் கையெழுத்திட்டதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவிக்கின்றார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Ib9rH5P via Kalasam

ரஞ்சன் ராமநாயக்க நாளை விடுதலை….

Image
  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாளை (26ஆம் திகதி ) அல்லது நாளை மறுநாள் சனிக்கிழமை (29ஆம் திகதி) விடுதலை செய்யப்படுவார் என்பதை தான் உறுதியாக நம்புவதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். “எனது மற்றும் மனுஷாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும், இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என அமைச்சர் ஹரீன் மேலும் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/35WB8OR via Kalasam

கோழி முட்டை விற்ற 64 பேர் கைது

Image
எவ்வளவு அறிவுறுத்தினாலும் அவற்றை கணக்கில் எடுக்காது, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.  முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி கடந்த 19ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்பட்டு, அன்று இரவில் இருந்தே அமுல்படுத்தப்பட்டது. அதன்படி வெள்ளை முட்டையொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும் சிவப்பு அல்லது கபில நிற முட்டையொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், நிர்ணய விலைக்கு மேல், முட்டைகளை விற்பனைச் செய்த, வர்த்தகர்களுக்கு எதிராகவே சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நுகர்வோர் விவகார சபை அறிவித்துள்ளது. /chat.whatsapp.com/FyPC9UcH70tBvVT4B8th3J from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/RqVWwTB via Kalasam

கிணற்றிலிருந்து 26 வயது இளைஞரின் சடலம் மீட்பு

Image
  வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் நேற்றையதினம் (24) கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த இளைஞரின் வீட்டின் கிணற்றிலிருந்தே இளைஞரின் சடலம் மீட்பட்டதுடன் இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெடுங்கேனி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  26 வயதுடைய சந்திரபாலசிங்கம் பிரதாபன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/QThVxY0 via Kalasam

இலங்கையின் இனவாத இயல்பே கடன்சுமையை அதிகரிக்க காரணம்- லண்டன் விரிவுரையாளர்

Image
இலங்கையின் அரசியல் மேலாதிக்கமே நாட்டின் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு போதுமான வருவாயை உருவாக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லண்டன் பல்கலைக்கழகத்தின் ஒப்பீட்டு அரசியலில் விரிவுரையாளர் மதுரிகா ராசரத்தினம் இதனை தெரிவித்துள்ளார். இணைத்தளம் ஒன்றுடன் இடம்பெற்ற நேர்காணலில் பங்கேற்ற அவர் இலங்கையில் கடன் பெருக்கத்துடன் கூடிய அரசின் தீவிர இராணுவமயமாக்கல் குறித்தும் கருத்துக்களை வெளியிட்டார். இலங்கையின் இராணுவம் உலகின் மிகப்பெரிய இராணுவங்களில் ஒன்றாகும். இலங்கை தற்போது இந்தியா. பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய இராச்சியத்தை விட அதிக தனிநபர் இராணுவத்தை கொண்டுள்ளது. இராணுவம் வடக்கு-கிழக்கை பிரதானமாக நிரப்பியுள்ளது என்று அவர் தெரிவித்தார். சிங்கள பௌத்த தேசியவாதத்தின் அண்மைய அவதாரங்களைப் பற்றி குறிப்பிட்ட அவர், ராஜபக்ச ஆட்சியின் எழுச்சிக்கு வழிவகுத்த அரசியல் மாற்றங்கள் மற்றும் அரசாங்கத்தின் இனவாத இயல்பு நாட்டின் மீதான கடன் சுமையை அதிகரித்தன என்று குறிப்பிட்டார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/UvEm7fK via Kalasam

மே 09 தாக்குதல்கள் – விசாரணைகள் நிறைவு

Image
  மே 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. சுமார் 35 அதிகாரிகளிடம் சாட்சிகளை பதிவு செய்ததாக குறித்த குழு தெரிவித்துள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஆகியோர் இவர்களுள் அடங்குகின்றனர். கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை தடுப்பதில் பாதுகாப்புப் படையினர் ஏதேனும் தவறிழைத்துள்ளார்களா என்பது குறித்தும் இந்த குழு ஆராய்கின்றது. இந்த அறிக்கை மிக விரைவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/m3WfbV5 via Kalasam

வடக்கு- கிழக்கு சமூகம் தொடர்பில் போதிய அறிவு ஹக்கீமுக்கு இல்லை : புத்திஜீவிகள், சமூக தலைவர்கள் ஹக்கீமுக்கு சமூகம் தொடர்பில் விளக்க முன்வரவேண்டும்- கிழக்கின் கேடயம்.

Image
  நூருல் ஹுதா உமர்  வடக்கு- கிழக்கின் பூர்விகம், நிலபுல எல்லைகள், கலாச்சாரம், இன நல்லிணக்கம் பற்றி எதுவும் தெரியாது கிழக்கு மக்களையும் வடக்கு மக்களையும் சண்டைக்கு மூட்டிவிடும் விதமாக  கருத்துக்களை வெளியிட்டு வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு வட- கிழக்கு மக்களின் அபிலாசைகளை முழுமையாக தெளிவுபடுத்த வடக்கு கிழக்கிலுள்ள சமூக தலைவர்கள், புத்திஜீவிகள் முன்வர வேண்டும் என கிழக்கின் கேடயம் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.   கிழக்கின் கேடயம் அமைப்பின் பிராதன ஒருங்கிணைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அந்த அறிக்கையில், ஒருகதையை திரும்ப திரும்ப சத்தம்போட்டு கூறினால் உண்மையாகிவிடும் என்பதை அறிந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் வடக்கு கிழக்கு தொடர்பில் தான் கொண்டுள்ள பிழையான எண்ணங்களை சமூகத்தின் அபிலாசைகளாக தொடர்ந்தும் பொதுவெளியில் முன்வைத்து வருகிறார். ஒரு சமூகத்தின் அதிக ஆதாரவாளர்களை கொண்ட தேசிய கட்சியொன்றின் த...

பலாங்கொட காஷ்யப்ப தேரர் கைது

Image
பிரதமர் அலுவலகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் கீழ் பலாங்கொட காஷ்யப்ப தேரர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Vxm3JbF via Kalasam

IMF பிரதிநிதிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை!

Image
சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள் மற்றும் நாட்டின் அதிகாரிகளுக்கு இடையிலான மற்றுமொரு பேச்சுவார்த்தை இன்று(24) ஆரம்பமாகவுள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நேற்று(23) நாட்டை வந்தடைந்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். நிதி அமைச்சு, மத்திய வங்கி உள்ளிட்ட சில நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்குபற்றவுள்ளனர். இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது. எனினும், இதன்போது இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் எவ்வித உடன்பாடுகளும் எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/BCLkInE via Kalasam

விலைகளை குறைத்தது சதொச

Image
12 வகையான அத்தியாவசியv பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக சதொசவின் தலைவர்   பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வெங்காயம், இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி,   நாட்டரிசி, பருப்பு, கடலை,  வெள்ளை அரிசி, வெள்ளை சீனி, வெள்ளைப்பூண்டு, நெத்தலி, காய்ந்த மிளகாய், உருளைகிழங்கு ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதனடிப்படையில் விலைகள் குறைக்கப்பட்ட பொருட்களுக்கான ஒரு கிலோகிராம் (கி.கி) விலைகளின் விபரம் 01. உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் (1கி.கி) :- 180.00 02.   சம்பா (1 கி.கி) :- 194.00 03.  நாட்டரிசி  (1 கி.கி) :- 198.00 04. பருப்பு (1 கி.கி) :- 460.00 05. கடலை (1 கி.கி)  :- 485.00 06. வெள்ளை அரிசி (1 கி.கி) :- 185.00 07. வெள்ளை சீனி (1 கி.கி) :- 298.00 08. சிவப்பு சீனி (1 கி.கி) :- 310.00 09. வெள்ளைப்பூண்டு (1 கி.கி) :- 650.0...

கப்பல் விபத்துகள் தொடர்பான செயற்பாடுகளை கையாள்வதற்கான புதிய விதிகள் - பிரசன்ன ரணதுங்க!

Image
  கப்பல் விபத்துக்களை கையாள்வதற்கான தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால் புதிய சட்டங்களை உருவாக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கினார். சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சின் அனுசரணையுடன் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எம்.வீ.எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் எரிந்து மூழ்கியதன் காரணமாக நாட்டின் கரையோரப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான இழப்பீடுகளை உடனடியாகப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார். பத்தரமுல்லை, செத்சிறிபாவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு உரையாற்றிய கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி திருமதி தர்ஷனி லஹந்தபுர கூறுகையில்,   "இலங்கை கடற்பரப்பில் எம்.வீ.எக்ஸ்பிரஸ் பேர்ல்...

பாவனைக்கு உதவாத 5,000 கிலோ கோதுமை மா பறிமுதல்

Image
மன்னார் மூர்வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உரிய அனுமதி இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாவனைக்கு உதவாத 50 கிலோ கிராம் நிறையுடைய 100க்கும் அதிகமான கோதுமை மா மூடைகள் மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களால் இன்றைய தினம் (23) மதியம் கைப்பற்றப்பட்டுள்ளது.  மன்னார் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவு மற்றும் DCDB பிரதேச குற்றபுலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மூர்வீதி பகுதி வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது பாவனைக்கு உதவாத உரிய முறையில் களஞ்சியப்படுத்தாத 100க்கும் மேற்பட்ட கோதுமை மா மூட்டைகள் கைப்பற்றப்பட்டது.  குறித்த கோதுமை மா மூட்டைகள் அனைத்தும் களஞ்சியப்பட்டிருந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதுடன், மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த மா மூடைகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நபருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.  குறித்த நபர் மன்னார் நகர் பகுதியில் வெதுப்பகம் ஒன்றை நடாத்தி வருவதுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாகவும் குறித்த வெதுப்பகத்தில் பாவனைக்கு உதவாத மா மூடைகள் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்த நி...

முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்துக்கு 30 லீற்றர் எரிபொருள் தேவைப்படுகிறது... அதனை வழங்காவிட்டால் அரசாங்ககத்தை வீழ்த்துவோம் ; முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம்

Image
-சி.எல்.சிசில்- முச்சக்கர வண்டித் தொழிலில் ஈடுபடுத்தப்படும் முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்துக்கு 30 லீற்றர் எரிபொருள் தேவைப்படுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. மேலதிக விவாதங்கள் தேவையற்றவை என அதன் தலைவர் குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அவ்வாறு செய்யாவிட்டால் அரசாங்கத்தை தூக்கி எறிந்து விடுவோம் எனவும் தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/lu4bLqD via Kalasam

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல், மற்றும் கொரோனா காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது... கோட்டபய ராஜபக்ஷ இன்னும் ஓரிரு நாட்களில் நாட்டை வந்தடைவார்.

Image
இராஜதுரை ஹஷான்) முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இன்னும் ஓரிரு நாட்களில் நாட்டை வந்தடைவார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் வரபிரசாதங்கள் கோட்டபய ராஜபக்ஷவிற்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் மற்றும் கொவிட் பெருந்தொற்று தாக்கம் ஆகிய காரணிகளினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பல செயற்திட்டங்களை செயற்படுத்தியது. பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்த ஒரு தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக பொருளாதார நெருக்கடியினை தீவிரப்படுத்தி,அரசாங்கத்திற்கு எதிரான மக்களின...

நிந்தவூர் கடல் அரிப்பை தடுக்க தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் தலைமையில் அதிகாரிகளுடன் உயர்மட்ட கூட்டம் இடம்பெற்றது!

Image
  நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுப்பதற்கான அதிகாரிகளுடனான உயர்மட்ட கூட்டம் நேற்று (22) நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது. நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ. அப்துல் லத்தீப், கரையோர வளம் பேணல் பாதுகாப்பு தினைக்களத்தின் பிரதம பொறியியலாளர், நிந்தவூர் பிரதேச சபையின் உப தவிசாளர் வை.எல். சுலைமாலெப்பை, நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியின் செயலாளர் எம்.எஸ்.எம். நிப்றாஸ் மற்றும் அதன் பிரதிகள் முதலானோர் கலந்து கொண்டனர். இதன் போது கடலரிப்பை தற்காலிகமாக தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து  கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் பொறியியலாளர் விளக்கமளித்தார்.  அத்துடன் இக்கடலரிப்பிற்கு உள்ளாகும் பிரதேசங்களையும் அங்குள்ள மக்களின் வாழ்வாதார தொழில் முயற்சிகளையும் மேலும் அழிவடையாத வண்ணம் பாதுகாத்து மீளக் கட்டி எழுப்ப வேண்டியதன் அவசியத்தை நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் அதிகாரிக...

நகை மற்றும் பணம் கொள்ளையில் ஈடுபற்ற குற்றத்தில் பொலீஸார் சிலர் கைது.

Image
மாலபே பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியில் வருகைத் தந்து தங்கச் சங்கிலி மற்றும் பணத்தை அபகரித்துச் சென்றதாக கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் மாலபே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வலஸ்முல்ல-கொக்கல்லான பகுதியில் வசித்துவரும் நபரே இவ்வாறு முறைப்பாட்டை வழங்கியுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/rxhQwEG via Kalasam

அம்பாறை கரையோரத்தை ஆட்கொள்ளும் கடல் : தடுப்பு நடவடிக்கைக்காக ஜனாதிபதி செயலாளரை சந்தித்த ஹரீஸ், பைசால் எம்.பிக்கள்.

Image
  நூருள் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் அண்மைய நாட்களாக ஏற்பட்டுள்ள தீவிர கடலரிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையை முன்னிறுத்தி அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசால் காசிம் ஆகியோர் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.  இந்த கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட ஒலுவில், பாலமுனை, நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை பிரதேச மக்கள் குறித்த கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட விதங்கள் தொடர்பில் விளக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன் மூலம் மக்களின் சொத்துக்கள் கடலலையில் காவு கொள்ளப்பட்டுள்ளதையும், இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ள விடயங்களையும் ஜனாதிபதி செயலாளருக்கு எடுத்துரைத்தனர். மேலும் இந்த அனர்த்தத்தின் அவசர நிலை கருதி அவசரமாக முன்னெடுக்கவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு ஆழமாக கலந்துரையாடப்பட்டது.  ஜனாதிபதி செயலாளருடன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் ...

ரணில் கையெழுத்திடுவது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும் - ஐநா விசேட அறிக்கையாளர்

Image
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை தடுத்து வைக்கும் உத்தரவில் கைச்சாத்திட வேண்டாம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகிய மூவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாக அவர் தெரிவித்துள்ளார். "மனித உரிமைப் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்மா தேரர் ஆகியோர் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன். அவர்களை தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவில் கையெழுத்திட வேண்டாம் என ஜனாதிபதி ரணிலிடம் கேட்டுக்கொள்கின்றேன், அவ்வாறு செய்வது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/nVCjtBv via Kalasam

மூன்று நாட்களுக்கு காய்ச்சல் நீடித்தால் இரத்தப் பரிசோதனை அவசியம்: வைத்தியர் சுதத் சமரவீர

Image
வாரம் ஒன்றுக்கு பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1500ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார். மேலும், இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 50,500 என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், கண்டி, காலி, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் கணிசமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டார். டெங்கு,கொரோனா மற்றும் இன்புளுவென்சா ஆகியவை இந்த நாட்களில் பரவி வரும் நிலையில், அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுமாறும் அவர் மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார். மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் முழுமையான இரத்தப் பரிசோதனையை மேற்கொள்வது அவசியம் எனவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/DtJiRp1 via Kalasam

"அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்தை பிரயோகிக்க வேண்டாம்" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கோரிக்கை"

Image
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவதற்கான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,  "கடந்த 30 வருட யுத்தத்தின் போது, யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மாத்திரமன்றி, அப்பாவி தமிழ் இளைஞர்கள் பலரும் இப்பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, எவ்வித விசாரணைகளுமின்றி அநியாயமாக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.  அதேபோன்று, ஈஸ்டர் தாக்குதலின் பிற்பாடு, அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள் என முஸ்லிம்களை குறிவைத்து இச்சட்டம் பிரயோகிக்கப்பட்டது.  தற்போது, நாட்டினை நாசமாக்கிய ஆட்சியாளருக்கு எதிராக போராடிய சிங்கள, தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் மீது இச்சட்டம் பிரயோகிக்கப்படுவதற்கான எத்தனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.  அப்பாவி தமிழ் இளைஞர்கள் மீ...

மாகாணங்களில் மட்டுமின்றி மத்தியிலும் சிறுபான்மையினருக்கு அதிகார பகிர்வும், அரசியல் அந்தஸ்தும் பெற தமிழ், முஸ்லிம் கட்சிகள் முன்வரவேண்டும் : எச்.எம்.எம். ஹரீஸ் எம்.பி

Image
  நூருல் ஹுதா உமர்  வரலாற்று தவறை தொடர்ந்தும் விடும் தரப்பாக தமிழ்- முஸ்லிம் சமூகம் இருந்து வருகின்றது. பிராந்திய பிரச்சினைகளையும், பிரதேச அதிகார பரவலாக்கம் பற்றி மட்டுமே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக இந்த நாடு பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளது. தெற்கிலுள்ள பெரும்பான்மையின மக்கள் தங்களின் தலைமைகளினால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப புலம் பெயர் தமிழ் மக்களினதும், மத்திய கிழக்கினதும் பங்களிப்பு மிகமுக்கியம் என்று உணர்கின்றனர். இதனால் தான் ஜனாதிபதி புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடையை நீக்கியுள்ளார். எனவே இந்த காலகட்டத்தில் தமிழ் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவ வேண்டிய தருணமிது. அதற்காக மத்தியிலும் அதிகார பரவலாக்க முறையை உருவாக்க வேண்டும். அதுதான் தமிழ்- முஸ்லிம் ஆகிய இரு சமூகத்திலிருந்தும் இரு உப ஜனாதிபதி பதவிகள். இந்த நிலைப்பாட்டை தான் முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எச்.எம். அஸ்ரப...

மண்ணெண்ணெய் விலை 87 ரூபாயில் இருந்து 340 ரூபாவாக உயர்த்தப்பட்டது.

Image
இலங்கை வரலாற்றில் முன்னேற்போதும் இல்லாத வகையில் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மண்ணெண்ணெய் விலை ரூ.87ல் இருந்து ரூ.340 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/qYGCQTf via Kalasam

முட்டை விநியோகம் இடைநிறுத்தம்

Image
முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடளாவிய ரீதியில் முட்டை விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழிப் பண்ணை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்தது. உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளமையால் நட்டத்தில் முட்டைகளை விநியோகிக்க முடியாது என்று சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர சுட்டிக்காட்டினார். வெள்ளிக்கிழமை (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாயாகவும் பழுப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.   இந்நிலையில், அகில இலங்கை கோழிப் பண்ணை வர்த்தகர்கள் சங்கத்துக்கும் வணிக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கும் இடையிலான சந்திப்பொன்று வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சில் நாளை (22) நடைபெறவுள்ளது.  from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/0pIBv8f via Kalasam

ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வாரம் விடுதலை

Image
சிறையில் வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வாரம் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் நீதி அமைச்சு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  இதன்படி ஜனாதிபதி ஆவணங்களில் கையொப்பமிட்டதன் பின்னர் ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்படுவார் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு சுதந்திரம் வழங்குவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டன, அதற்காக அவர் கடந்த 13 ஆம் திகதி சத்தியக் கடதாசியில் கையெழுத்திட்டிருந்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/NPDQRSK via Kalasam

எரிபொருள் பெற்றுக் கொள்ள 208 விமானங்கள் இந்தியாவிற்கு

Image
கடந்த 03 மாதங்களில் இலங்கையில் இருந்து 208 விமானங்கள் இந்தியாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு விமான எரிபொருளைப் பெற சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  கடந்த வெள்ளிக்கிழமை எரிபொருளைப் பெறுவதற்காக 04 விமானங்கள் குறித்த விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  அதன்படி கடந்த மே மாதம் 27 ஆம் திகதி முதல் தொடரும் விமான எரிபொருள் நெருக்கடி காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் உட்பட 208 விமானங்கள் எரிபொருளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/OeHDl7R via Kalasam

சந்தேக நபர்கள் 50 பேரை அடையாளம் காட்டுமாறு பொலிஸார் வேண்டுகோள் (PHOTOS)!

Image
ஜூலை 9 ஆம் திகதி அலரி மாளிகையினுள் நுழைந்து அதன் சொத்துக்களை சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 50 பேரை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிவிப்பு மற்றும் புகைப்படங்கள் கீழே. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/8SRM3N5 via Kalasam

மத வழிபாட்டுத்தளங்களின் மேம்பாடு குறித்தும் அவதானம் செலுத்துகிறோம்... அதன் மூலம் மியான்மார், தாய்லாந்து போன்ற பௌத்த நாடுகளிலிருந்து பெருமளவிலான மக்களை இந்நாட்டிற்கு அழைத்து வர முடியும் ; ஜனாதிபதி

Image
  (எம்.மனோசித்ரா) பெரும்போகத்திற்குத் தேவையான உரங்களை எந்தத் தாமதமும் இன்றி விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வடமத்திய மாகாண பிரதம சங்கநாயக கலாநிதி பல்லேகம சிறினிவாச தேரருடன் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் ஜய ஸ்ரீ மஹா போதியை வழிபட்டு ஆசி பெற்றதோடு, வடமத்திய மாகாண பிரதம சங்கநாயக கலாநிதி பல்லேகம சிறினிவாச தேரரை சந்தித்து கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். அங்கு, மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , பொருளாதாரத்தை மீட்பதற்கு முக்கிய காரணியாக விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தி பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். தேயிலை, இறப்பர், தென்னை போன்ற பயிர்களுக்கு உரம் வழங்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், சோளப் பயிர்ச்செய்கையை ஊக்கப்படுத்தினால், கோழிப்பண்ணை கைத்தொழிலை தொடர முடியும். சோளத்திற்கான விதை பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விரைவான நடவடிக்கைகளை எடுத...

ராஜபக்ஸவை விட “ரணில் ராஜபக்ஸ” மிகவும் ஆபத்தானவர்

Image
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று காலை 11.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார். விசாரணைகளுக்குப்பின் ஊடகங்களிடம் பேசிய அவர், விசாரணையின் தன்மை குறித்து தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்றார். அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது முயற்சித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவே மக்கள் போராட்டங்களின் பலனைப் பெற்று நாட்டின் ஜனாதிபதியானார் என்றும் மேலும் தெரிவித்தார். "ரணில் ராஜபக்ஸ" ராஜபக்ஸவை விட சர்வாதிகாரி என்றும் ஹிருணிகா மேலும் கூறினார்.  from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/lqZcYxm via Kalasam

பொது மக்களின் அமைதியைப் பேண, முப்படையினரையும் பணிக்கு அழைத்து ஜனாதிபதி ரணில் வர்த்தமாணி வெளியீடு.

Image
  நாட்டிலுள்ள சகல மாவட்டங்களிலும் பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் முப்படையினரை பணிக்கு அழைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (19) ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தல் (22) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவினால் எனக்குரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.` from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/yvNwB3C via Kalasam

ரஞ்சன் வெளிவரும் திகதியை நீதி அமைச்சர் அறிவித்தார்!!

Image
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் எம்.பி.யின் விடுதலை தொடர்பான அனைத்து பரிந்துரைகள் மற்றும் அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கடந்த வாரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாயக்கவும் தனது தவறுக்காக மன்னிப்பு கடிதத்தில் கையெழுத்திட்டார். நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/AyJ6zZC via Kalasam

வசதிபடைத்தவர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனி முனையம் திறப்பு

Image
  கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் பிரவேசிக்கும் அதிக வருமானம் ஈட்டும் விமான சேவைகளுக்காக ‘ரன் மாவத்தை’ என்ற பெயரில் புதிய சேவை முனையம் திறக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்தப் புதிய முனையத்தை நேற்று திறந்து வைத்தார். அதிக வருமானம் ஈட்டுபவர்கள் விமான நிலைய கடமைகளைச் செய்ய வரிசையில் நிற்காமல் இந்த ஓய்வறைக்கு வருகை தரலாம் மற்றும் அவர்களின் குடிவரவு மற்றும் சுங்க வரிகள், கேட்டரிங் மற்றும் தகவல் தொடர்பு தேவைகளை விரைவாக நிறைவேற்றலாம். அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்திலும் இது போன்ற விஐபி முனையம் ஒன்று உள்ளது. புதிய முனையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 200 அமெரிக்க டொலர் வசூலிக்கப்படும். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/qpUsdPN via Kalasam

அத்தியாவசிய பொருட்களின் விலையில் வீழ்ச்சி! எனினும் நுகர்வோருக்கு பயன் இல்லை!

Image
  அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும்; இதுவரையில் குறித்த நிவாரணத்தை நுகர்வோருக்கு வழங்குவதற்கு சில்லறை வர்த்தக நிலைய உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பருப்பின் மொத்த விலை தற்போது 420 ரூபா வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் 330 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் சீனியின் மொத்த விலை 270 ரூபாவாக குறைவடைந்துள்ளது. ஆயிரத்து 900 ரூபாவுக்கு விற்பனையான ஒரு கிலோகிராம் செத்தலின் விலை ஆயிரத்து 200 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் ஜே.தேவபிரான் தெரிவித்தார். ஒரு கிலோகிராம் வெள்ளைப் பூண்டின் விலை 400 ரூபா வரையிலும், உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 150 ரூபா வரையிலும் பெரிய வெங்காயம் 135 ரூபா வரையிலும் வீழ்ச்சியடைந்துள்ளன. நாணய கடிதங்களை விடுவிக்காமல் இறக்குமதியாளர்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை நேரடியாக இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளமையே விலை குறைப்புக...